Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ இருக்கிறீர்கள் 

 

எனக்குத்தெரியும்
நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்
கடைசியாக நீங்கள் வேலையால் வந்து
கழற்றிப்போட்ட ஆடைகள்
உங்களில் நான் கிறங்கும்
அதே வியர்வை மணத்துடன்
கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது..

அன்றிரவு அவர்கள் உங்களை
அடித்து இழுத்துச்சென்ற போது
நான்கதறிய கதறல்
இப்போது ஒவ்வொரு வீடாய்
கேட்கத்தொடங்கி இருக்கிறது

காலையில் எழுந்து
அப்பா எங்கே என மகன் கேட்டான்
எப்படித்தான் காணாமல் போனமை பற்றி
அவனுக்கு நான் விளக்க முடியும்..?
வருடங்கள் உருண்டோடி விட்டன
காலமும் மனிதர்களும்
எதுவுமே நடந்து விடாதது போல்
போய்க் கொண்டிருக்கிறார்கள்...!

உங்கள் நெஞ்சில் இருந்து
துள்ளுவது போலவே
நேற்றைக்கு மாலையும்
என் மார்பில் குதித்தபடி
அப்பா புராணம் பாடிக்கொண்டிருந்தான் மகன்,
பொறுக்க முடியாமையின் விளிம்பிலும்
காலநீட்சியின் விரக்தியிலும்
அப்பா அப்புச்சாமியிடம் போய்விட்டார்
எனச்சொல்ல வாயெடுப்பேன்
ஆனால் ஏதோ ஒன்று
உள்ளிருந்து தடுக்கும்

எத்தனையோ இரவுகள்
தலையணையைக்கட்டி அணைப்பதும்
வெறுங்காற்றில் காலைத்தூக்கிப் போடுவதுமாக
கழிந்துவிட்டன..
ஜோசியர்கள் சொன்னபடி
ஈசானமூலை, அக்கினிமூலை என
அத்தனை திசைகளிலும் உள்ள
இராணுவ முகாம்களிலும்,
நடுநிசியின் நாய்க்குரைப்பு
ஓசைகளைக் கிழித்தபடி
வாசலில் நின்று செல்லும்
வாகனங்களின் பின்னாலும்
பல ஆண்டுகளாக
ஓடிக்களைத்து விட்டேன்,
உண்மையில்
உங்களைத்தேடி நான் ஏறாத
வாசல்கள் இல்லை
சுவர்க்க வாசலைத்தவிர,

நான் உணர்ந்து கொள்கிறேன்
என்னுடைய இந்தப்பிறப்பின்
வாழ்க்கைக்காலத்தில்
இனி ஒருபோதும்
உங்களை நான் காணப்போவதில்லை..
ஆனாலும் இப்போது கூட
உள் மனசு சொல்கிறது
நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்...?

-திரு. திருக்குமரன் 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, திரு said:

நான் உணர்ந்து கொள்கிறேன்
என்னுடைய இந்தப்பிறப்பின்
வாழ்க்கைக்காலத்தில்
இனி ஒருபோதும்
உங்களை நான் காணப்போவதில்லை..
ஆனாலும் இப்போது கூட
உள் மனசு சொல்கிறது
நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்...?

வலி நிறைந்த வார்த்தைகள் .. 😢பகிர்வுற்கு நன்றி தோழர்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ சித்திரவதைக்கு ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் சிங்கள நாய்களின் பசிக்கு, சிங்களம் இதற்கு ஒருநாள் இதை அனுபவிக்கும், வாழ்கை ஒரு வட்டம். நன்றி திரு பகிர்வுக்கு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் உணர்ந்து கொள்கிறேன்
என்னுடைய இந்தப்பிறப்பின்
வாழ்க்கைக்காலத்தில்
இனி ஒருபோதும்
உங்களை நான் காணப்போவதில்லை..
ஆனாலும் இப்போது கூட
உள் மனசு சொல்கிறது
நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்...?

எத்தனையோ  தமிழ் உறவுகளின் கண்ணீரும் இது தான் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கனதியான கவிதை.
கவிதைக்கு பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் மேலான கருத்திற்கு  

நன்றி

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.