Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)

on August 30, 2020

 

spacer.png

 

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை செய்யவில்லை.

மகனைத் தேடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று களைத்துவிட்டார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியரும் கூற, படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதே முழுநேர வேலையாக மாறிவிட்டது அவருக்கு. இருந்தாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அந்த இடத்தில் ஆஜராகிவிடுவார்.

உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவரைப் பின்தொடர்ந்து பதிவுசெய்த காணொளியை இங்கு தருகிறோம்.

 

 

https://maatram.org/?p=8720

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லா இந்த அவல நிலைக்கும் எம்மினத்தவர்கள் தான் காரணம், கேடு கெட்ட இனம், காட்டிகொடுக்கவேன்றே பிறந்த ஈனப்பிறப்புகள்

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

 

எல்லா இந்த அவல நிலைக்கும் எம்மினத்தவர்கள் தான் காரணம், கேடு கெட்ட இனம், காட்டிகொடுக்கவேன்றே பிறந்த ஈனப்பிறப்புகள்

நியாயமான கோபம்.

கோபமும் வெறுப்பும் ஒருங்கே வந்தாலும் எனக்கான கடமை ஒன்று உண்டு என்ற உண்மைதான் இன்னமும் இந்த இனத்துடன் என்னை சேர்த்து வைக்கிறது. 😡

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை...

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை செய்யவில்லை.

மகனைத் தேடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று களைத்துவிட்டார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியரும் கூற, படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதே முழுநேர வேலையாக மாறிவிட்டது அவருக்கு. இருந்தாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அந்த இடத்தில் ஆஜராகிவிடுவார்.

உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவரைப் பின்தொடர்ந்து பதிவுசெய்த காணொளியை இங்கு தருகிறோம். 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாத சில விடயங்கள்...

சரணடையாமல், முள்ளு வேலி முகாம்களில் இருந்து பணம் கொடுத்து சிலர் வெளியேறினார்களா? 

உதாரணமாக லண்டனில் இருக்கும் பாலா மாஸ்டர்?

சிலர் எவ்வாறு தமிழகம் சென்றார்கள்? குறிப்பாக பத்திரிகையாளர் திருநாவுக்கரசு போன்றோர். (பின்னரும் போயிருக்கலாம்). ஒரு வன்னி புலிகளை பாடும் கவிஞர், பெண், ஒரு நாடக ஆசிரியர் ( பெயர் மறந்து விட்டது) தமிழகம் போய் திரும்பினார்...

தெரிந்து கொள்ளவே கேட்டேன். பதில் தருவது பொருத்தமில்லாது விடின் விட்டு விடுங்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.