Jump to content

Shakuntala Devi - Human Computer.(2020)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

E30047-B8-C0-F6-4389-B216-496-C59-FB98-A

Shakuntala Devi - Human Computer..

இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும்

தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 

2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறது. 

கடினமான கணித கேள்விகளை சகுந்தலா மிகமிக வேகமாக, நெடிப்பொழுதில் தீர்க்கும் திறமையை கண்ட அவரது தந்தை, சகுந்தலாவின் திறமையைப் பயன்படுத்த முடிவுசெய்து, "கணித நிகழ்ச்சிகளை" செய்ய முடிவு செய்கிறார், அங்கு சகுந்தலா தனது கணித கேள்விகள்/ சிக்கல்களை தீர்த்து மக்களை மகிழ்விப்பார். இதனால் அவர் மற்றைய பிள்ளைகள் போல பள்ளிக்கல்வியை கற்கமுடியாமல் போகிறது..சிறுமி சகுந்தலா அந்த வலியை மறந்து தொடர்ந்து கணித நிகழ்ச்சிகளைச் செய்து குடும்பத்திற்காக சம்பாதிக்கிறாள். சகுந்தலாவின் ஒரே ஒரு தோழியான உடல் சுகவீனமான சகோதரி இறந்தமைக்கான காரணம் தனது தந்தையின் பொறுப்பற்ற போக்கும், தாயின் கணவனை எதிர்த்து பேசாத நிலையும்தான் காரணம் என அறிந்து வேதனையும், தனது பெற்றோரின் மீது வெறுப்புகொள்கிறாள். 

836-BA0-E3-02-F8-4795-B8-CF-394-CB1-BA39

தனது முதல்காதல் போலியான ஒன்று என அறிந்து அந்த கடந்த காலத்திலிருந்து மீள்வதற்காக லண்டன் வருகிறாள், அங்கே அவள் maths showவிற்கு வாய்ப்புகளை கஷ்டப்பட்டு பெறும் அவளிற்கும், ஸ்பானிய கணிதவியாலாளருக்குமான உறவு அவளது வளர்ச்சியில் உச்சத்தை அடைய உதவுகிறது.. 

இதே சமயத்தில், அவளது தாயாரிடம் இருந்து வந்த கடிதத்தில் தனது சுகநலன்களை விசாரிக்காமல் தனியே பணத்தை மட்டும் கேட்டுவந்த கோபத்தில், அன்றிலிருந்து தனியே பணத்தை மட்டும் அனுப்பியபடி தனது பெற்றோருடனான தொடர்பை நிறுத்தும் சகுந்தலா,கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய நிர்வாக சேவையின் அதிகாரி பரிதோஷ் பானர்ஜி திருமணம் செய்தபோது கூட அழைக்கவில்லை.. பரிதோஷ் அதைப்பற்றி கேட்கும் போது 
“என் தந்தையிடமிருந்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை,எந்தப் பயனும் இல்லாதவர். ஆனால் என் அம்மா, அவள் அங்கே ஒரு சிலை போல நின்றாள். உதவியற்ற, பலவீனமான, ஊமையாக. அவள் ஒருபோதும் தனக்காக பேசுவதில்லை. குறைந்தபட்சம் தனது மகளை மரணத்திலிருந்து காப்பாற்றவாவது அவள் தனது வாயைத் திறந்திருக்கலாம்” என கூறும்பொழுது எவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் தனது தாயின் மீது கொண்டிருந்தாள் என்பதை உணரமுடியும்.. 

F132-B662-A610-4-A95-8-F5-F-6-BA63900-D8

இவர்கள் திருமணம் செய்து, அம்ரிதா எனும் பெண்குழந்தை பிறக்கிறது... அந்த பெண்குழந்தை தனக்கு மட்டுமே உரியவள் என்ற எண்ணம் இருந்தாலும், கணிதசிக்கல்களை தீர்க்கும் ஆர்வத்தில் மீண்டும் நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு பறக்கும் சகுந்தலா தனது குழந்தை, அவளது முதல் சொல்லாக “ daddy” எனக்கூறியதை பொறுக்கமுடியாமல், தனது மகளையும் தான் போகும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துசெல்ல விரும்புகிறாள், விளைவு பரிதோஷும் சகுந்தலாவும் விவாகரத்து செய்கிறார்கள்.. 

சிறுமி அம்ரிதா, வளர்ந்த பின்பு தாய் தன் மீது எடுத்துக்கொள்ளும்அதீத உரிமைகளால் வெறுப்பும், கணிதசிக்கல்களை தீர்க்கும் நிகழ்ச்சிகளுக்காக தனது சிறுவயது பிராயத்தை இழந்தமை, தனது தந்தையைபார்க்கவிடாமல் செய்தமை போன்ற காரணங்களுக்காக தாய் மீது கோபம்கொள்கிறாள்.

சகுந்தலாவிற்கும் அம்ரிதாவிற்கும் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது..இந்த விரிசல், அம்ரிதா இந்திய தொழிலதிபரான அஜயை காதலித்து திருமணசெய்யும் போது இன்னமும் அதிகமாகிறது.. இவர்களுக்கிடையிலான பிணைப்பு மீண்டும் எப்படி ஏற்பட்டது என்பதை படத்தை பார்த்தால் தெரிந்துகொள்ளமுடியும். 

F7937933-D49-D-4649-B180-E88-EED248-E71.

56-CC76-BB-6-FBC-486-F-A4-A4-E390-C26-F7

என்னை இந்தப்படம் கவர்ந்தமைக்கு சில  காரணங்கள்..

ஒரு மனித கணனி பற்றி அறியமுடிந்தமையால். சகுந்தலா தேவி பிரபல்யமான இந்திய கணிதவியாலாளர், எழுத்தாளர் மற்றும் ஜோதிடர் ஆவார். இவரது சிக்கலான கணித சிக்கல்களை விரைவாக தீர்ப்பதற்கான அவரது நம்பமுடியாத திறமையால், கணனியை விட வேகமாக கணிதசிக்கல்களை தீர்த்தமையால் “ மனித கணனி” என அழைக்கப்படுகிறார்..

வித்யா பாலன்.. தென்னிந்திய சினிமா தவறவிட்ட அற்புதமான நடிகை.. காட்சிகளில் மிகவும் பொருந்தியுள்ளார்.. அசத்தலான நடிப்பு.

4-A6-B298-C-2911-49-B0-BE0-B-CB049881949

கற்பனைகள் அதிகம் கலக்காத, ஆராவாரமில்லாத படம். 

ஒரு தாயுக்கும் மகளுக்குமான பிணைப்பு..நாங்கள் பெரும்பாலும் எங்களது அம்மாக்களை “ அம்மா” என்ற ரீதியில் மட்டுமே பார்த்திருப்போம், அம்மாவையும் ஒரு பெண் என்று பார்க்கும் பொழுதான் அம்மாவினது ஏக்கங்கள், விருப்பங்கள், உணர்வுகளை விளங்கமுடியும் என உணர்த்துவதால்

சகுந்தலா கூறும் ஒரு விடயம்” என் தாயின் மீதிருந்த கோபம் பின்பு வெறுப்பாக மாறியது அவளைப்போல நான் இருக்ககூடாது என நினைத்தேன், அதனால்தான் எனது உலகத்தை உன்னையும் என்னையும் உள்ளடக்கி மட்டுமே அமைத்துக் கொண்டேன்,ஆனால் அது தவறான ஒன்று கூறும்பொழுது, சகுந்தலா தேவியைப்போன்ற மனிதர்கள் நினைவில் வந்தார்கள்.. 

01-B775-DD-BB6-B-44-E1-AC2-A-0-ACDEB6-FC

Amazon Primeல் உள்ளது, subtitled ஆங்கிலத்தில் இருக்கிறது.


 

Link to comment
Share on other sites

நான் இன்னும் பார்க்கவில்லை  

இது பற்றி பாட்டையா என்று அழைக்கப்படும் பாரதி மணி முகநூலில் பகிர்ந்தவை கீழே 
 
 
வித்யா பாலன் நடிக்கும் சகுந்தலா தேவி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
நிஜ வாழ்க்கையில் சகுந்தலா தேவி தன் காதலன் திருமணத்துக்கு தடை சொல்லவே, ஒருநாள் அந்தக்காதலன் வேலைபார்த்து வந்த தில்லி ஷாஜஹான் ரோடு அலுவலகத்துக்குப்போய் அவரை துப்பாக்கியால் சுட்டார். மேசைக்கு கீழே அவர் காதலன் பதுங்கிவிட்டதால் தப்பித்தார்! 1950-களில் ராஜாஜி உள்துறை அமைச்சராக இருந்தபோது தலையிட்டு போலீஸ் கேசில்லாமலானது. இந்த சம்பவம் பற்றி சகுந்தலாவிடம் கேட்டாலே கோபம் அடைவார்.
அவர் தன் தந்தையை உளமாற வெறுத்தார். ஊரூராக பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இவரை அழைத்துப்போய் காசுக்காக கணக்குவித்தை காட்ட சொன்னதால் ஏற்பட்ட கோபம். தந்தைக்கு இவர் பொன்முட்டையிடும் ஒரு வாத்து. அந்தக்கோபம் இவர் சாகும்வரை இருந்தது.
சகுந்தலா தேவியின் காதலன் நாற்பதுகளில் தில்லி வந்து குமாஸ்தாவாக அரசுப்பணியில் சேர்ந்தவர். பெண்களை ஈர்க்கும் எந்த குணாதிசயங்களும் அறவே இல்லாதவர். சகுந்தலாதேவி ஏன் எப்படி இவரை தேர்ந்தெடுத்தாரென்பதே ஒரு புதிர். அவர் ஒரு அமெச்சூர் மேக்கப் நிபுணர். மற்றபடி பார்ப்பதற்கும் சுமார் தான். காதலுக்கு கண்ணில்லை என்று நிரூபணமான இன்னொரு கேஸ்.
அந்தக்காதலன் நான் தில்லி போகுமுன் அங்கே தமிழ்நாடக உலகில் அறியப்பட்டவர். என் நெருங்கிய நண்பர். பிற்காலத்தில் நண்பர்கள் அவரை கேலி செய்வோம்: 'யோவ்! நீர் அவளையே கல்யாணம் பண்ணியிருந்தா, இன்னிக்கு லண்டன், நாளைக்கு பாரிஸ்னு ஜாலியா இருக்கலாமேய்யா!.... விட்டுட்டியே!' என்று.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் படத்தில் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை.... பார்ப்போம்!
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அபராஜிதன் said:

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் படத்தில் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை.... பார்ப்போம்!

இந்த சம்பவமும் படத்தில் உள்ளது.. ஆனால் அந்த நபரைப்பற்றி, எப்படி அவரை விரும்பினார் என்றெல்லாம் இல்லை..

8 hours ago, அபராஜிதன் said:

அவர் தன் தந்தையை உளமாற வெறுத்தார். ஊரூராக பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இவரை அழைத்துப்போய் காசுக்காக கணக்குவித்தை காட்ட சொன்னதால் ஏற்பட்ட கோபம். தந்தைக்கு இவர் பொன்முட்டையிடும் ஒரு வாத்து. அந்தக்கோபம் இவர் சாகும்வரை இருந்தது.

சிறுவயதிலிருந்தே அந்த வெறுப்பு இருந்துள்ளது. அதைவிட தாயாரின் மேல்தான் கோபமும் வெறுப்பும் அதிகமாக இருந்ததாக படத்தின் இறுதியில் கூறுவார்...

வித்யா பாலன் showதான்.. அவரது திறமை இதிலும் நன்றாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  இன்னும் பார்க்கவில்லை , பார்க்கனும் போலிருக்கு, நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேஸனில் பார்த்தேன். வித்யா பாலனின் நடிப்பு நன்றாக இருந்தது.

மகளைத் தகப்பனின் கடிதங்களைப் பார்க்கவிடாமல் தனது உடைமையாகக் கருதியது உறுத்தலாக இருந்தது. 

சகுந்தலாதேவியின் சோதிட விளம்பரங்கள் 90களில் சிறுபெட்டி விளம்பரங்களாக இலண்டன் பத்திரிகைகளில் (தமிழ் இலவசப் பத்திரிகைகளிலும் வந்திருக்கலாம்) கண்டிருக்கின்றேன். நண்பன் ஒருவன் சோதிடம்/சாத்திரம் பார்க்கச் சென்றான். முதல் சந்திப்புக்கு £50 பவுண்ட்ஸ். பின்னர் ஏதோ தாயத்துக் கட்டவேண்டும்; £200 பவுண்ட்ஸ் செலவு வரும் என்று சொன்னதால் அவ்வளவு பணம் செலவழிக்க முடியாமல் சாத்திரத்தை விட்டுவிட்டான். அதிலிருந்து சகுந்தலாதேவி என்றால் சோதிடம்பார்த்து பணம் பார்க்கும் ஒருவர் என்பதுதான் மனதில் பதிந்துள்ளது. ஆனால் படத்தில் அவர் சோதிடம் பற்றி எழுதிய நூல் வந்ததே தவிர ஒரு காட்சியும் சோதிடம் பற்றி இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

அமேஸனில் பார்த்தேன். வித்யா பாலனின் நடிப்பு நன்றாக இருந்தது.

மகளைத் தகப்பனின் கடிதங்களைப் பார்க்கவிடாமல் தனது உடைமையாகக் கருதியது உறுத்தலாக இருந்தது. 

சகுந்தலாதேவியின் சோதிட விளம்பரங்கள் 90களில் சிறுபெட்டி விளம்பரங்களாக இலண்டன் பத்திரிகைகளில் (தமிழ் இலவசப் பத்திரிகைகளிலும் வந்திருக்கலாம்) கண்டிருக்கின்றேன். நண்பன் ஒருவன் சோதிடம்/சாத்திரம் பார்க்கச் சென்றான். முதல் சந்திப்புக்கு £50 பவுண்ட்ஸ். பின்னர் ஏதோ தாயத்துக் கட்டவேண்டும்; £200 பவுண்ட்ஸ் செலவு வரும் என்று சொன்னதால் அவ்வளவு பணம் செலவழிக்க முடியாமல் சாத்திரத்தை விட்டுவிட்டான். அதிலிருந்து சகுந்தலாதேவி என்றால் சோதிடம்பார்த்து பணம் பார்க்கும் ஒருவர் என்பதுதான் மனதில் பதிந்துள்ளது. ஆனால் படத்தில் அவர் சோதிடம் பற்றி எழுதிய நூல் வந்ததே தவிர ஒரு காட்சியும் சோதிடம் பற்றி இருக்கவில்லை.

ஓம்...மனித கணனி எனும் அளவுக்கான தன் கீர்த்தியை சாத்திரத்தில் இறங்கி குறைத்தார் என்றே நானும் எண்ணுகிறேன்.

லண்டனின் தமிழ் ரேடியோவிலும் வந்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, கிருபன் said:

அமேஸனில் பார்த்தேன். வித்யா பாலனின் நடிப்பு நன்றாக இருந்தது.

மகளைத் தகப்பனின் கடிதங்களைப் பார்க்கவிடாமல் தனது உடைமையாகக் கருதியது உறுத்தலாக இருந்தது. 

ஆனால் படத்தில் அவர் சோதிடம் பற்றி எழுதிய நூல் வந்ததே தவிர ஒரு காட்சியும் சோதிடம் பற்றி இருக்கவில்லை.

உண்மைதான்.. எனக்கும் அது கொஞ்சம் கவலையாகவே இருந்தது.. தான் நினைத்த வழியிலேயே எல்லாம் நடக்கவேண்டும் என்பதில் எவ்வளவு பிடிவாதம்.. 

சோதிட காட்சிகள் என இல்லாமல் மகளிடம் யார்யார் என்னவெல்லாம் அதிகம் கேட்பார்கள் என்று வருகிறதே!!

சோதிடம் பற்றிய நூலா? “ The World Of Homosexuals“ தானே வருகிறது.. 

அரசியலில் கூட போட்டியிட்டு இருக்கிறார்.. அரசியல்வாதியாகும் ஆசை பெருமளவான பிரபல்யங்களுக்கு ஏனோ வந்துவிடுகிறது.. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சோதிடம் பற்றிய நூலா? “ The World Of Homosexuals“ தானே வருகிறது..

சோதிடம் பற்றிய நூலைக் காட்டவில்லை. படம் பார்க்கும்போது விக்கிபீடியாவைப் பார்த்ததால் மாறி எழுதிவிட்டேன். 😯

எனினும் இறுதிக்காட்சியில் Astrologer என்று இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2020 at 23:56, கிருபன் said:

எனினும் இறுதிக்காட்சியில் Astrologer என்று இருந்தது

உண்மைதான்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.