Jump to content

'காணாமல் ஆக்கப்பட்டோர்' என எவரும் இலங்கையில் இல்லை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'காணாமல் ஆக்கப்பட்டோர்' என எவரும் இலங்கையில் இல்லை.!

1598850421_br%20(1)%20copy.jpg

"இலங்கையில் 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்' என்று எவரும் இல்லை. அப்படிக் கூறப்படுவோர் போரில் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்."

- இவ்வாறு ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று தமிழ்த் தரப்பினர் கூறும் விவகாரத்துடன் அரசுக்கும் இராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்களையும் புனர்வாழ்வின் பின்னர் அரசு விடுவித்துவிட்டது.

போர்க்களத்தில் காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள். அவர்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று எப்படிக் கூற முடியும்.?

போர் நடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம். அவர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று எப்படிக் கூற முடியும்?

அதேவேளை, தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கும் அரச படைகளுக்கும் எவ்வித தொடர்பு இல்லை" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/08/31/16147/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் படிச்ச படிப்புக்கு.. கற்றுக் கொண்டது எப்படி பொய் பித்தலாட்டம் செய்வது என்பது போல் இருக்கிறது. 

கொடுக்கிற பதவிக்கும் காசுக்கு நல்லா கூவிறாப்பா. 

32 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதேவேளை, தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கும் அரச படைகளுக்கும் எவ்வித தொடர்பு இல்லை" - என்றார்.

அப்ப உங்கட அரச படைகளை பாவிச்சு.. அந்த தனிநபர்களை இனங்கண்டு கைது செய்து.. பாதிக்கப்பட்ட மக்கள் சார்ப்பில் தண்டனையும்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதியும் வழங்கலாமே. நீங்கள் தானே அன்றும் இன்றும் ஆட்சியாளர்கள். உங்களுக்கு தெரியாமல்.. அந்த தனிநபர்கள் இயங்கினார்களா.. அப்படி என்றால்.. நீங்களா அவர்களா ஆட்சியாளர்கள்.. பாதுகாப்புப் பிரிவினர்..??! அவர்கள் இயங்க உங்கள் அரசும்.. அரச படைகளும் எப்படி இடமளித்தன.. இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண சர்வதேச விசாரணையும் அவசியம். எப்படி வசதி..???!

பெரிய புத்திசாலித்தனமாகக் கதைப்பது என்ற நினைப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting, people standing and outdoor

இந்த சீருடையில் நிற்பவர்கள் தான் அந்த தனிபர்களோ..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

பீரிஸ்ஸிடம் இதுக்கு பதில் இருக்கிறதா?

Amnesty International told Channel 4 News the new footage was important to revealing the truth.

30 Nov 2010

http://www.vivalanka.com/newspage/770672ai-what-happened-6000-persons-18-657-surrendered

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ் என்ற இனவாதப்பேயனுக்குப் பேராசிரியரென்று சொல்வதற்கே தகுதியில்லை.  ஆதாரங்களை ஏன் வெளியிலே தேடுவான். சரத்-சவீந்திர சில்வா-   கமால் குணரட்ன - கோத்தா என்று எல்லோரும் அருகிலேயே இருக்கிறார்கள். அவர்களிடமே கேட்கலாமே.

https://www.amnesty.org/en/latest/news/2012/03/new-report-exposes-ongoing-illegal-detention-sri-lanka/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹன விஜேவீராவின் மனைவியிடமும் ஒரு சொல்லு கேட்டு சொல்லுங்கோ, பீரிஸ் பெரிசு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.