Jump to content

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்…

August 31, 2020

Prabah-erik.jpg

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், அண்மையில் இந்த விபரத்தை ஐநா வெளியிட்டிருந்தது. 

அத்துடன் மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த உண்மை மறுக்க முடியாதது என அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் ..

ஆதவா ( செயற்பாடு தெரியாது)அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),

அம்பி ( செயற்பாடு தெரியாது)

அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),

ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),

பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),

V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),

பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)

பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)

இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )

இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)

இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

இசைபிரியா ( ஊடக பிரிவு)

ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

குயிலன் ( இராணுவ புலனாய்வு)

குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

மலரவன் (நிர்வாக சேவை )

மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)

மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)

மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )

மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )

மோகன் அங்கிள் (கடற்புலிகள் )

முகிலன் (இராணுவ புலனாய்வு)

முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

தி நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)

நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )

நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )

நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )

நேயன் (புலனாய்வு)

நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )

நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்

நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)

நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )

பஞ்சன் புலனாய்வு 

மகாதேவன் ஞானகரன் (முக்கியஸ்தர்களில் ஒருவர் ) 

பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)

Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)

Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)

பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)

புலித்தேவன் (சமாதான செயலகம்)

புலிமைந்தன் (யோகியின் சாரதி)

புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )

புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)

ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )

ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)

புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)

Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)

Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)

ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)

ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )

ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)

S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)

சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)

சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)

செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)

சின்னவன் (புலனாய்வு)

சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)

Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)

Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)

திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)

திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )

துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)

வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)

Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)

Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)

வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)

வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)

வினிதா (நடேசனின் மனைவி )

வீமன் (கட்டளை தளபதி)

விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)

யோகன் / சேமணன் (அரசியல் துறை)யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)
 

https://globaltamilnews.net/2020/149473/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டவை. மீண்டும் கிளறிவதில் ஏதோ சர்வதேச மறைமுக நோக்கம் இருக்கின்றன.

இலங்கை தொடர்பில் பின்கதவு பேச்சிவார்த்தைகள் தொடங்கி இருக்கலாம். அழுத்தங்களின் வடிவங்கள் மாறினாலும் இலக்கை அடைய , எப்போதும் தமிழரை வைத்தே இலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிக்கிறது.

சம்பந்தன் - அமெரிக்க தூதர் சந்திப்பு கூட உற்று நோக்க வேண்டி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முதல்வன் said:

இந்த விடயங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டவை. மீண்டும் கிளறிவதில் ஏதோ சர்வதேச மறைமுக நோக்கம் இருக்கின்றன.

இலங்கை தொடர்பில் பின்கதவு பேச்சிவார்த்தைகள் தொடங்கி இருக்கலாம். அழுத்தங்களின் வடிவங்கள் மாறினாலும் இலக்கை அடைய , எப்போதும் தமிழரை வைத்தே இலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிக்கிறது.

சம்பந்தன் - அமெரிக்க தூதர் சந்திப்பு கூட உற்று நோக்க வேண்டி இருக்கிறது.

துரதிஸ்டவசமாக இது புதிய இலங்கை அரசை தம் சார்பாக இழுக்கும் அழுத்தமாக அமையவே வாய்புகள் அதிகம் என்றே படுகிறது.

தாம் வேண்டுவதை இலங்கை கொடுத்ததும் எம்மை கிடப்பில் போட்டுவிடக்கூடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர்/ ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம், ஆவணப்படங்கள், தமிழ் கட்சிகளின் ஆதரவு போன்றவை கூட ஒரு நிகழ்ச்சி நிரலின் சங்கிலித்தொடர் நிகழ்ச்சிகள் போல கருதவேண்டி இருக்கின்றன.

விக்கியரின் உரை உட்பட. 

ஒன்றுமட்டும் உண்மை இப்போ சர்வதேச அரசியல் சூட்சுமங்கள் விளங்கிற அளவுக்கு முந்தி எங்களுக்கு விளக்கமில்லை. 

மெய்ப்பொருள் காண்பதறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

துரதிஸ்டவசமாக இது புதிய இலங்கை அரசை தம் சார்பாக இழுக்கும் அழுத்தமாக அமையவே வாய்புகள் அதிகம் என்றே படுகிறது.

தாம் வேண்டுவதை இலங்கை கொடுத்ததும் எம்மை கிடப்பில் போட்டுவிடக்கூடும்.

 

இது தானே காலகாலமாக நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை அடுத்த யுக சந்தி பிறக்கும் முன் வெளியிட்டினம் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:
2 hours ago, goshan_che said:

துரதிஸ்டவசமாக இது புதிய இலங்கை அரசை தம் சார்பாக இழுக்கும் அழுத்தமாக அமையவே வாய்புகள் அதிகம் என்றே படுகிறது.

தாம் வேண்டுவதை இலங்கை கொடுத்ததும் எம்மை கிடப்பில் போட்டுவிடக்கூடும்.

 

இது தானே காலகாலமாக நடக்கிறது

சர்வதேசத்துக்கு தேவை சின்னவீடே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

துரதிஸ்டவசமாக இது புதிய இலங்கை அரசை தம் சார்பாக இழுக்கும் அழுத்தமாக அமையவே வாய்புகள் அதிகம் என்றே படுகிறது.

தாம் வேண்டுவதை இலங்கை கொடுத்ததும் எம்மை கிடப்பில் போட்டுவிடக்கூடும்.

 

எமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் இந்தி, EU, US போன்றன இலங்கையில் தலையிட வழியில்லை. எனவே தமிழர் பிரச்சனை தீர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

எமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் இந்தி, EU, US போன்றன இலங்கையில் தலையிட வழியில்லை. எனவே தமிழர் பிரச்சனை தீர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ☹️

 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

இலங்கை முற்று முழுதாக சீனாவின் வட்டத்துக்குள் போகும் வரை, EU-US-IND எம்மை பயன்படுத்தி இலங்கையை தம் பக்கம் இழுக்க முயல்வார்களே ஒழிய முற்றாக பகைக்க மாட்டர்கள்.

இலங்கைக்கும் இது தெரியும் என்பதால் அவர்களும் போக்கு காட்டுவார்களே ஒழிய முற்றாக ஒரு பக்கம் சாய மாட்டர்கள்.

இந்த இராஜதந்திர கண்ணாமூச்சியில் நாம் இலவு காத்த கிளிகள்தானா?

ஏதோ ஒரு வகையில் - இரெண்டில் ஒரு பக்கத்துடன் தீர்க்கமாக சாயும் நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் வரை இந்த இராஜதந்திர கண்ணாமூச்சி தொடரவே செய்யும்.

அப்படி ஒரு நிர்பந்ததுக்கான ஏது நிலைகளும் இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

இலங்கை முற்று முழுதாக சீனாவின் வட்டத்துக்குள் போகும் வரை, EU-US-IND எம்மை பயன்படுத்தி இலங்கையை தம் பக்கம் இழுக்க முயல்வார்களே ஒழிய முற்றாக பகைக்க மாட்டர்கள்.

இலங்கைக்கும் இது தெரியும் என்பதால் அவர்களும் போக்கு காட்டுவார்களே ஒழிய முற்றாக ஒரு பக்கம் சாய மாட்டர்கள்.

இந்த இராஜதந்திர கண்ணாமூச்சியில் நாம் இலவு காத்த கிளிகள்தானா?

ஏதோ ஒரு வகையில் - இரெண்டில் ஒரு பக்கத்துடன் தீர்க்கமாக சாயும் நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் வரை இந்த இராஜதந்திர கண்ணாமூச்சி தொடரவே செய்யும்.

அப்படி ஒரு நிர்பந்ததுக்கான ஏது நிலைகளும் இருப்பதாக தெரியவில்லை.

சில வேளைகளில் இது அங்கஜனுக்கும் டக்ளஸிற்கும் தெரிந்திருக்குமோ. (சுமந்திரனுக்கும் 🤔 கூடவே. [ஏன் சும்மா இருப்பான். களம் சூடு பிடிக்கட்டும்])

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

சில வேளைகளில் இது அங்கஜனுக்கும் டக்ளஸிற்கும் தெரிந்திருக்குமோ. (சுமந்திரனுக்கும் 🤔 கூடவே. [ஏன் சும்மா இருப்பான். களம் சூடு பிடிக்கட்டும்])

😂😂

ஐயா,

நான் இந்த விளையாட்டிற்கு வரல்ல🤣

அங்கால இன்னொரு திரில ஓணம் ஸ்பெசல் வில்லுபாட்டு போய்டிருக்கு.

போய் 2010 வரைக்கும் தமிழக-ஈழத்தமிழர் ஒற்றுமையாதானே இருந்தாங்க, 2010க்கு பின், சமூகவலையில் ஆளைஆள் மிக மோசமா திட்டி எழுதும் அளவுக்கு உறவு மோசமானதுக்கு, ஏதும் புதிய அரசியல்வாதிகளின் வரவு காரணமா இருக்குமோ?

அப்டீன்னு ஒரு கேள்விய கேளுங்க - குபீர்ன்னு பத்திக்கும்.

இப்ப இத எழுதினதுக்கு இந்த திரிக்கு நெருப்பு பரவவும் கூடும்.

பிந்திய செய்தி

கிருபன் ஜி போய் வாண்டடாக தலையை கொடுத்து சிலதை சொல்லி விட்டார். 

உங்கள் சேவை தேவைப்படாது என்றே நினைக்கிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

இலங்கை முற்று முழுதாக சீனாவின் வட்டத்துக்குள் போகும் வரை, EU-US-IND எம்மை பயன்படுத்தி இலங்கையை தம் பக்கம் இழுக்க முயல்வார்களே ஒழிய முற்றாக பகைக்க மாட்டர்கள்.

இலங்கைக்கும் இது தெரியும் என்பதால் அவர்களும் போக்கு காட்டுவார்களே ஒழிய முற்றாக ஒரு பக்கம் சாய மாட்டர்கள்.

இந்த இராஜதந்திர கண்ணாமூச்சியில் நாம் இலவு காத்த கிளிகள்தானா?

ஏதோ ஒரு வகையில் - இரெண்டில் ஒரு பக்கத்துடன் தீர்க்கமாக சாயும் நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் வரை இந்த இராஜதந்திர கண்ணாமூச்சி தொடரவே செய்யும்.

 

 

நிலாந்தனின் அண்மைய கட்டுரையில் உள்ளது. ராஜபக்‌ஷேக்கள் எப்படி வெளியாரைக் கையாள்வது என்பதில் கைதேர்ந்தவர்கள். 2/3 அறுதிப்பெரும்பான்மை உள்ள அரசை மேற்குநாடுகள் அனுசரித்தே போகும். எனினும் இயன்றவரை தமது நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்திருக்க முயற்சிப்பார்கள். அதற்கு தமிழரின் அரசியல் அபிலாஷைகளை பலிகொடுக்கவேண்டி வந்தால் தயங்காமல் செய்வார்கள் (2009இல் புலிகளைப் பலிகொடுத்தது போல)

 

Quote

நிச்சயமாக “ராஜபக்சக்களின் நிலைமாறுகால நீதியில்” காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் காணாமல் ஆக்கியவர்களை எப்படியும் பாதுகாப்பார்கள். அதேசமயம் ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புக்களை தொடர்ந்தும் இயங்க விடுவதன் மூலம் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஒரு பொய்த் தோற்றத்தை காட்டுவார்கள். அதாவது அவர்கள் தங்களுக்கான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கக் கூடும். அது நிச்சயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது

 

Link to comment
Share on other sites

இலங்கை தீவில் காலூன்ற நினைக்கும் வெளி சாட்டு சக்திகள் ஏன் எப்பவும் சிங்களவனை போய் குஜால் படுத்துவதில் குறியாக உள்ளார்கள்; தமிழனுக்கு வடக்கு கிழக்கை தனி நாடாக பிரித்து கொடுத்து விட்டு அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தமது தேவைகளை பூர்த்தி செய்யலாமே...!! இங்க எழுதப்படுகிற கருத்துக்களைப் பார்த்தால் முழு உலகமுமே என்ன நடந்தாலும் பரவாயில்லை தமிழனுக்கு மட்டும் உரிமைகளோ விடுதலையோ கிடைக்க கூடாது என்று செயற்படுவது போல் அல்லவா உள்ளது. சிங்களவனுக்கு கைகட்டி நின்று சேவகம் செய்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழனுக்கு நன்மை நடக்கக் கூடாது என்பது தான் சர்வதேச சக்திகளின் கொள்கையா.....??????

இல்லாவிடில் இங்கு கருத்து எழுதும் சிலரின் ஆசையா......?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Dash said:

இலங்கை தீவில் காலூன்ற நினைக்கும் வெளி சாட்டு சக்திகள் ஏன் எப்பவும் சிங்களவனை போய் குஜால் படுத்துவதில் குறியாக உள்ளார்கள்; தமிழனுக்கு வடக்கு கிழக்கை தனி நாடாக பிரித்து கொடுத்து விட்டு அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தமது தேவைகளை பூர்த்தி செய்யலாமே...!! இங்க எழுதப்படுகிற கருத்துக்களைப் பார்த்தால் முழு உலகமுமே என்ன நடந்தாலும் பரவாயில்லை தமிழனுக்கு மட்டும் உரிமைகளோ விடுதலையோ கிடைக்க கூடாது என்று செயற்படுவது போல் அல்லவா உள்ளது. சிங்களவனுக்கு கைகட்டி நின்று சேவகம் செய்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழனுக்கு நன்மை நடக்கக் கூடாது என்பது தான் சர்வதேச சக்திகளின் கொள்கையா.....??????

இல்லாவிடில் இங்கு கருத்து எழுதும் சிலரின் ஆசையா......?????

ஐயா டாசு,

தயைகூர்ந்து, நான் மேலே தடித்த எழுத்தில் போட்ட உங்கள் சந்தேக புத்தியை ஒரு 5 நிமிடம் விலக்கி வைத்து விட்டு நான் எழுதுவதை படியுங்கள். 

என் பார்வையை சொல்கிறேன்.

இலங்கையில் இரு அரசுகள் அமைந்தால் ஏதாவது ஒன்று சீனாவின் வட்டத்துள் போகும்.

வட-கிழக்கில் தமிழர் தேசம் அமைய யார் உதவினாலும் அவர்களே இலங்கையின் புதிய எதிரி நெம்பர் 1.

உலக நாடுகள் தம் சுய நலனை முன்னிறுத்தியே இயங்கும்.

வடகிழக்கில் ஒரு தனி தமிழ் அரசை உருவாக்கினால் -அடுத்த நொடியே மிகுதி  இலங்கை சீனாவின் தளம் ஆகிவிடும்.

இப்போ தமிழரை, மனித உரிமைகளை காட்டி, முழு இலங்கையையும் சீனா பக்கம் சாயாமல் வைத்திருக்க முடியும்.

ஆகவே ஏன் மேற்கு நாடுகள் தமக்கு ஆபத்தான முடியும் ஒரு நகர்வை எடுத்து, வடகிழக்கில் தனிநாட்டை உருவாக்க வேண்டும்?

உலக நாடுகள் பெரிய இராணுவ வல்லமை உடையான என்பதெல்லாம் சரியே ஆனால் இலங்கையை ஆக்கிரமிக்க ஒரு வலுவான காரணம் இல்லை. அப்படி ஆக்கிரமித்து கட்டுபடுத்துவது இன்னொரு ஆப்கானிஸ்தான் போல ஆகும். ஆகவே அதுவும் ஒரு தெரிவல்ல.

ஆக, இலங்கை தானாக சீனாவின் வட்டத்துள் போகும் வரை இது தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள சீன நிறுவங்கள் மீதான தடை கூட இந்த கண் கொண்டுதான் பார்க்கவேண்டி இருக்கு. 

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை ஒண்டாக கொடுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2020 at 23:31, goshan_che said:

தாம் வேண்டுவதை இலங்கை கொடுத்ததும் எம்மை கிடப்பில் போட்டுவிடக்கூடும்.

இதுதான் 2015 இலும் நடந்தது. இப்போதும் இதுதான் நடக்கப்போகிறது. இன்னுமொருமுறை நம்பவைத்துக் கழுத்தறுக்கப்படப்போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

இதுதான் 2015 இலும் நடந்தது. இப்போதும் இதுதான் நடக்கப்போகிறது. இன்னுமொருமுறை நம்பவைத்துக் கழுத்தறுக்கப்படப்போகிறோம்.

நடந்த உன்மையும் நடக்கப்போகும் உன்மையும் இதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால பொருளாதார அரசியல் வேறு 
தற்போதைய உலக அரசியல் வேறு 

கடந்தகாலம் அமேரிக்கா சோவியத் யூனியன் என்ற இரு பெரும் 
உலக வல்லரசுகள் இடையே போட்டி இருந்தாலும் பொருளாதார வலுவில் 
சோவியத் யூனியன் ,மிக கீழ்கவே இருந்தது தன்னையே தக்கவைக்க முடியாத
ஒரு தளம்பல் நிலை அங்கு இருக்கும்போது மற்றைய தன சார்பு நாட்டு பொருளாதாரத்தை 
கட்டி மேம்படுத்த கூடிய சக்தி அங்கு இருக்கவில்லை.

இப்போதைய சீன- அமெரிக்க போட்டி என்பது முற்றிலும் மாறானது 
பொருளாதார ரீதியாக நேரே முகம் கொடுக்க கூடிய அளவில் சீனா வளர்ந்து இருக்கிறது 
ஆகவே இலங்கை போன்ற மூன்றாம்தர அல்லது முன்னேறும் நாடுகளுக்கு இங்கே தெரிவு இல்லை.
பொருளாதாரம் என்று வரும்போது தேடி சென்று வலையில் மாட்டும் மீனின் நிலைமைதான் இலங்கை போன்ற நாடுகளின் நிலைமை 

இனி இலங்கை விரும்பினாலும் அமெரிக்க இந்திய சார்பு நிலைகளை எடுக்க முடியாது 
இது அமெரிக்காவுக்கும் தெரியும் இந்தியாவுக்கும் தெரியும். இங்கே மிஞ்சியதை யார் பிய்த்து எடுப்பது 
என்பதுக்குத்தான் போட்டியே தவிர சீனாவுடன் போட்டி இல்லை. இலங்கை ஆப்ரிக்க போன்ற நாடுகள்  
இப்போ நேரடியாகவே அமெரிக்கவிற்கு கூறுகிறார்கள் ........ நீங்கள் பெரியண்ணையுடன் பேசுங்கள் என்றுதான். காரணம் கடன்.

இந்திய அமெரிக்க சொந்த நாடுகளிலேயே சீன இறக்குமதி என்பது வருடா வருடம் கூடிக்கொண்டுதான் போகிறது இதுக்கு அவர்களிடமே இன்று மாற்று இல்லை. 1970களில் (The Sleeping Dragon) ஸ்லீப்பிங் ட்ராகோன் என்று சீனாவை  சொல்லிவந்தார்கள். இன்று அது நூறுவீதம் உண்மையாய் போயிற்று ... அது எழுந்துவிட்டது  யாராலும்  கட்டுப்படுத்த முடியவில்லை. உலக நாடுகளுக்கு கடன் அள்ளி  கொடுப்பதில் முதலாவதாக  நிற்கிறது. அமெரிக்க (மேற்கு) அரசியல் பொருளாதார அழுத்தங்களை அப்படியே கொப்பி அடித்து  நடைமுறையில்  சாத்தியப்படுத்தி விட்டது ....... அமெரிக்கா எது செய்தததோ அதை யுத்தம் இன்றி இரண்டு மடங்கு  பெரிதாக செய்கிறது. தான் செய்வதை அவர்கள் செய்வதால் அமெரிக்க வாய் கட்டுப்பட்டு கிடக்கிறது.

துபாயை இன்று அமெரிக்கா எவ்வாறு வளர்கிறதோ அதுக்கு போட்டியாக இலங்கையை 
2050இல் சீனா வளர்ந்திருக்கும். அரசியல் அரங்கில் இனி தமிழருக்கு இடம் இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இல்லை . சிங்களவரிடமே மட்டுப்பட்டுதான் இருக்கும். ஆனால் ஒரு மாபெரும் பொருளாதார புரட்ச்சி செய்யக்கூடிய  அத்தனை வளமும் இன்று ஈழத்தமிழரிடம் உண்டு ...அதை தந்திரோபாயமாக கையாளக்கூடிய  அறிவு அவர்களிடம் உண்டா என்பதுதான் கேள்வி? 

 

China's global reach: lending more than the World Bank

By Steven DukeEditor, One Planet, BBC World Service
Chinese sign outside Lusaka Airport Image captionChinese advertising has its places at Zambia's Lusaka airport

European officials may have flown to Beijing with their begging bowl underarm, but for developing countries, China's cheque book comes to you.

Over the past few years, delegations from China's big banks have been criss-crossing the globe signing a plethora of billion dollar deals with some of the world's poorest nations.

"Last year China provided more loans to the developing world than even the World Bank," says Jamie Metzl from the US-based Asia Society. "The role of China is large, it's growing and it's critically important."

As the lender to go to for credit-poor governments, China's yuan is replacing World Bank dollars as the cash behind new roads, power stations, hospitals and other infrastructure.

Where to invest?

In 2010, the World Bank agreed $11.4bn worth of loans to some 36 African countries. China also agreed a host of loans to African governments. One of them, a loan facility to Ghana, reportedly is worth almost $13bn alone.

Lending to Africa 2010

World Bank v China's Export Import Bank*

  • Cameroon: WB $30m; China $743m
  • Rep. Congo: WB $25.5m; China $75.8m
  • Ghana: WB $313m; China $9.87bn
  • Nigeria: WB $890m; China $900m
  • Zambia: World Bank $95m; China $315m

(*data for Exim Bank are for specific reported loans; total amount of Chinese lending likely to be significantly higher)

But as Dr Zhao Changhui from China's Export Import Bank happily points out, his country has $3tn sat waiting to be spent. The nation's politics may be red, but the balance sheet is most definitely black.

So where to invest?

"Countries all across Latin America are surely the most eye catching in the last few years, but on top of that countries in Africa and Asia are also very pleasing," replies Dr Zhao.

Global investments

Those eye catching projects may include the vast hydro power dam being constructed in the Coca River in Ecuador. The project has been on the table for decades - seen as vital to helping improve the nation's energy supply. But cash was a problem.

"Because Ecuador has defaulted on its debt in the past, the international markets are not ready or willing to buy Ecuadorian debt," explains Quito-based economist Ramiro Crespo.

Coca River Image captionChina helps finance a hydro-electric project at Ecuador's Coca River

"Without international organisations, without foreign investment, without international markets, then you have to look for another source. That happens to be China, which has a lot of reserves and extra money," he points out.

The multi-billion dollar loan from China that's helped turn the hydro dam project into a reality is to be charged at an interest rate of 6.9%.

"The risk and the appetite for risk of Chinese companies is different to other companies," suggests Hannah Erdinger from the Johannesburg-based financial consultancy firm Frontier Advisory.

She has witnessed a swift and large push into Africa by Chinese banks. "Traditional partners of the continent such as those with colonial links or development partners have moved out of infrastructure financing and it's a gap that's been left and needs to be filled," says Ms Erdinger.

China has found the gap to its liking. In countries like Zambia and Angola, the activities of Chinese construction firms are hard to avoid. Billboards, road signs, even cash machines are now displaying Chinese symbols.

In Angola, China has been offering loans since 2003 when the nation emerged from civil war. To date, it has extended credit lines to Angola worth $15bn as Chinese companies come over and build new infrastructure in the country. In return, Angola sends China its oil.

China's circular cash

With the high rates of unemployment and destitution in the country, Zambians have looked to this high influx of Chinese into the country as an explanation to why they have some of the problems they have Chris Alden, China in Africa Project

But this particular arrangement has flaws, argues Chris Alden from the China in Africa Project.

"Essentially the money stays in China - it's focused on the project, rather than producing a knock-on effect to the economy. The point is the money doesn't circulate into Angola but rather stays within the Chinese project circles."

This belief - that much of the money stays within China - may explain some of the resentment rumbling against the Chinese in Africa, suggests Zambian civil society researcher Chilufya Chileshe.

"With the high rates of unemployment and destitution in the country, Zambians have looked to this high influx of Chinese into the country as an explanation to why they have some of the problems they have."

Those problems are acute. Two thirds of the population remain in poverty and only 10% have formal employment.

The perceived failure of China's cash to significantly boost development in credit-poor nations has led to accusations that the "condition-lite" loans are undermining the efforts of the World Bank.

Chinese international school, Lusaka Image captionThe Chinese International School in Lusaka

Billion dollar concerns

Jamie Metzl from the Asia Society is among those who believe that China is neglecting a moral duty to ensure its loans come with requirements that improve the long term health of a nation's economy.

"China needs to do much more to demonstrate its global responsibility and commitment to building an international system that benefits everybody," he claims. Mr Metzl wants to see China work with the World Bank to ensure loans come with tougher conditions on transparency, anti-corruption and human rights.

It is an argument Dr Zhao from China's Export Import Bank believes is unfair.

"These allegations have always been pushed forward by many in the West - but in reality things are much more complicated," he notes, suggesting China's willingness to deal with countries ostracised by Western nations - such as Zimbabwe - helps the people, and will reap benefits in the end.

No strings attached

The mind set has been influenced too much in one direction - the Western conception, the Western ideas, the Western way of doing business Dr Zhao Changhui, Export Import Bank, China

Whatever the eventually outcomes, it's clear China is reducing the influence of the World Bank, says Mr Metzl, who cites an example from a few years ago.

"Cambodia was considering a $600m loan from the World Bank that had conditions about transparency and anti-corruption and accountability. The Cambodians basically told the World Bank to go to hell and the next day they received a $601m loan from the Chinese with no conditions."

Despite the criticisms, Dr Zhao is not going to apologise for China's growing influence in the economies of the developing world.

"The mind set has been influenced too much in one direction - the Western conception, the Western ideas, the Western way of doing business," he argues. The world should not close its ears to China's philosophy and wisdom he suggests.

"So long as an economy is growing steadily, healthily, and the people can eventually benefit in a much better well-being, then these sort of models should at least be welcomed."

Additional reporting by Irene Caselli in Ecuador and Louise Redvers in Zambia.

'China: the world's sub-prime lender' can be heard on the BBC World Service's One Planet programme

https://www.bbc.com/news/business-16092634

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
    • ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும்  முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US   அனுப்பி இருக்கிறது Blinken ஐ  சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.           
    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
    • இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage  என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣   ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.