Jump to content

சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

சீமான்

கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் `நாம் தமிழர் கட்சி’ இந்த முறை என்ன செய்யப்போகிறது? தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆட்டங்களைத் தொடங்கிவிட்டன. பெரிய கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கலாம் என்பது முதல், தங்கள் கட்சிகளில் யாருக்கு சீட்டுக் கொடுக்கலாம் என்பதுவரை முதற்கட்ட முடிவுகளை எடுத்துவிட்டன. பெரிய கட்சிகளின் கூட்டணியில் அங்கம்வகிக்கும் சிறிய கட்சிகள், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன.

 

காங்கிரஸ், தே.மு.தி.க போன்ற கட்சிகளோ கூட்டணிக் கட்சிகளிடம் தங்களின் பலத்தைக் காண்பிக்க இப்போதே களத்தில் குதித்துவிட்டன. இதுதவிர, கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியை வைத்து மிகப்பெரிய கணக்கோடும் கனவோடும் காத்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் `நாம் தமிழர் கட்சி’ இந்தமுறை என்ன செய்யப்போகிறது, தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தேர்தல் பிரசாரம்
 
தேர்தல் பிரசாரம்

இயக்கமாகச் செயல்பட்டுவந்த நாம் தமிழர் அமைப்பு, தேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பரிணமித்தது 2010-ம் ஆண்டு. தொடர்ந்து நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமல், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போட்டிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம் எனத் தேர்தல் களத்தில் சில பங்களிப்புகளைச் செய்தது. முதன்முறையாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி, தனித்து தேர்தலைச் சந்தித்தது அந்தக் கட்சி. ஒட்டுமொத்தமாக, 4,58,104 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று, தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

 

தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சீமான். வட சென்னை தொகுதி வேட்பாளராகக் களமிறங்கிய காளியம்மாள், கட்சி தாண்டி பொதுவான செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றார். ஒட்டுமொத்தமாக, 16,45,185 வாக்குகள் பெற்றது அந்தக்கட்சி. வாக்கு சதவிகிதம் 1.07 லிருந்து 3.87 ஆக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், 16 தொகுதிகளில் 50,000-த்துக்கு மேல் வாக்குகளையும் ஏழு இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது அந்தக்கட்சி. தொடர்ந்து, கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றினர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.

மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
 
மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

2021 என்ன முடிவு?

கடந்த தேர்தல்களைப்போல இந்தமுறையும் தனித்துக் களமிறங்கவே முடிவுசெய்திருக்கிறார் சீமான். அவர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கும்கூட தனித்துப் போட்டியிடுவதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள்,``தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டுவதைவிட இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது. தொடர்ச்சியாகத் தோல்வியடைந்துகொண்டே வருவது தொண்டர்களுக்கு ஒருவித சோர்வைத் தந்துவிடும். குறைந்தது இரண்டு எம்.எல்.ஏ-க்களையாவது பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவதுதான் புத்திசாலித்தனம். ஒரு முறை உள்ளே நுழைந்து, நம் செயல்பாட்டை மக்கள் பார்த்துவிட்டால், அதற்குப் பிறகு வெற்றிபெறுவது சிரமமல்ல’’ என சீமானுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால்,``யாரோடு கூட்டணி வைக்குறது சொல்லுங்க. கூட்டணிவெச்சு ஜெயிச்சு, உளளே போய் என்ன பண்றது... சட்டை நிறைய சகதியை அள்ளிப் பூசிக்கிட்டு, `பிராண்டட்... 2,000 ரூபாய் சட்டை... ரொம்ப நல்ல சட்டை’னு சொன்னா எப்படி இருக்குமோ, அப்படித்தான் இங்கிருக்கும் கட்சிகளோட கூட்டணியில் சேர்ந்து ஜெயிச்சு உள்ளே போறதும். நம்ம நாட்டுல, பெரியாரியமும் மார்க்சியமும் வீழ்ந்துபோனதே அந்தக் கட்சிகள் அவர்களின் தனித்துவத்தை இழந்ததாலதானே!

நாட்டுல, மத்திய அரசின் எந்தக் கொடுமையான திட்டத்தையும் இன்று கம்யூனிஸ்ட்கள் எதிர்க்க முடியாத நிலைமையில இருக்காங்க. இந்தியைத் திணிச்சவங்க கூடவே திராவிடக் கட்சிகள் கூட்டணிவெச்சு, அவன் தடையின்றி முழுமையாகத் திணிச்சுட்டான். மாநில உரிமையைப் பறிச்சவன்கூட கூட்டணிவெச்சாங்க. அவன் மொத்தமாக அத்தனை உரிமைகளையும் பறிச்சுட்டுப் போயிட்டான். அதுமட்டுமில்லை, நான் என் கட்சி மேடையில் பிரபாகரன் படம்வெப்பேன். `என் தலைவன் பிரபாகரன்’னு சொல்லுவேன். எந்தக் கட்சி அதை ஏத்துக்கிட்டு என்கூட கூட்டணிவெப்பாங்க.

என்னுடைய தத்துவத்துக்கு, கருத்தியலுக்கு யாரோடும் கூட்டுச் சேர முடியாது. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதே என்னுடைய முதன்மையான கொள்கை. பிறகு நான் யாரோடு கூட்டணி வைக்குறது சொல்லுங்க. ஓட்டரசியலெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம்கூட இல்லை... நாலாம்பட்சம்தான். உரிமை அரசியல்தான் எனக்கு முக்கியம்'' எனக் கொந்தளித்திருக்கிறார் சீமான்.

வேட்பாளர் அறிமுகம்
 
வேட்பாளர் அறிமுகம்

அதனால், இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது முடிவாகிவிட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் என சரிக்குச் சமமாக வேட்பாளர்கள் களம்காண இருக்கிறார்கள். வேட்பாளர் தேர்வு முடிவு பெற்று, அவர்களிடம் அந்தத் தகவலும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. பொதுவான அறிவிப்பை தேர்தலையொட்டி சீமான் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தல்களைப்போலவே, இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு அனைவரும் வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள். பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளர், தொகுதியில் பெரும்பான்மையான மக்களைக்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவரல்லாத வேட்பாளர்கள், அரசியல்ரீதியாக இதுவரை உரிய பிரதிநிதித்துவங்களைப் பெறாத சமூகங்களிலிருந்து வேட்பாளர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு திருநங்கையை வேட்பாளராக நிறுத்தியதைப்போல இந்தத் தேர்தலிலும் பல அதிரடிகள் காத்திருக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், `எப்படியாவது எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாற வேண்டும்’ என்பதே நாம் தமிழர் கட்சியினரின் இலக்காக இருந்தது. சீமானும் நாற்பது தொகுதிகளுக்கும் சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். வட சென்னைத் தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள், ஒரேயொரு வீடியோ மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அவர் வெற்றி பெறுவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது என அந்தக் கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 60,000 வாக்குகள் பெற்று நான்காவது இடத்துக்குத்தான் அவரால் வர முடிந்தது. ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியும் நான்கு சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.

'நாம் தமிழர்' காளியம்மாள்
 
'நாம் தமிழர்' காளியம்மாள்

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வருகையால்தான் எங்களால் எட்டு சதவிகித வாக்குகளைப் பெற முடியவில்லை. அந்தக் கட்சி நான்கு சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட்டது. கிராமங்களில் நாங்கள் அதிகம் வாக்குகள் வாங்க, நகர, மாநகரங்களில் அந்தக் கட்சி வாக்குகள் வாங்கிவிட்டது. ஆனால், கடந்தமுறைபோல, இந்தமுறை விட்டுவிட மாட்டோம். எட்டு சதவிகித வாக்குகளை நிச்சயம் வாங்கி, அரசியல் அங்கீகாரம் பெறுவோம்.

கடந்தமுறை அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய தொகுதியான கடலூரில் நின்றார். ஆனால், அங்கு அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க மற்றும் மக்கள்நலக் கூட்டணி என ஐந்து முனைப் போட்டியாகிவிட்டது. அதனால்தான் அண்ணனால் 12,000 வாக்குகள் மட்டுமே வாங்க முடிந்தது. இந்தமுறை, அண்ணன் தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியில்தான் நிற்கப் போகிறார். எந்தத் தொகுதியில் அவர் எம்.எல்.ஏ ஆனாலும் எங்கள் கட்சி, தமிழகம் முழுமைக்கும்தான் போராடப்போகிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்தமுறை எட்டு சதவிகித வாக்குகளையும், எங்கள் அண்ணனை எம்.எல்.ஏ ஆக்காமலும் நிச்சயம் ஓய மாட்டோம்’’ என்கிறார் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

https://www.vikatan.com/news/politics/naam-tamilar-partys-election-strategies-for-2021-assembly-election

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .. 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.