Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மார்பக புற்றுநோய் செல்களை கொல்லும் "தேனீக்களின் விஷம்" - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.

ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவை, மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தேனீக்களின் விஷத்தில் மெலனோமா போன்ற சில புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான குணம் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம், நேச்சர் பிரசிஷன் ஆன்காலஜி என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது என்ன?

300க்கும் மேற்பட்ட தேனீக்கள் மற்றும் பெரு வண்டுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

"தேனீக்களில் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது தெரியவந்துள்ளது" என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய 25 வயது ஆய்வாளரான சியாரா டஃபி.

 

நஞ்சின் ஒரு செறிவு, வெறும் ஒரு மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவையாக இருந்தது. அதுவும் அவை மற்ற செல்களுக்கு பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நஞ்சு அதிக அளவில் கொடுக்கப்படும் போது, அதன் விஷத்தன்மை அதிகரித்தது.

மேலும் மெலிட்டின் என்ற பொருள், புற்று நோய் செல்கள் வளர்வதை தடுப்பதிலும், அவற்றை அழிக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையாவே தேனீக்களின் விஷத்தில், இந்த மெலிட்டின் காணப்படும் அல்லது அதனை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.

மார்பக புற்றுநோய்களில் மிகவும் மோசமானது ட்ரிப்பிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய். இதற்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இதனை பயன்படுத்தலாமா?

இந்த ஆய்வை "பிரமிக்கத்தக்கது" என்று விவரித்துள்ளார் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் பீட்டர் கிளின்கென்.

"புற்றுநோய் செல்கள் பரவி வளர்வதை மெலிட்டின் எப்படி தடுக்கிறது என்பதை இந்த ஆய்வு காண்பிக்கிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் எவ்வாறு மனித நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது" என்று பேராசிரியர் பீட்டர் தெரிவித்தார்.

ஆனால், இதனை பெரிய அளவில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிக்க உதவும் என்பது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/science-53999684

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று ஓர் ஆங்கில நாளிதழில் செய்தியாக வந்தது  இந்த தகவல்  அப்படி நடந்தால் மிக நல்லது சில நோய்களை கேள்விப்பட்டதும் இந்த நோயெல்லாம் மக்களுக்கு வருகிறதே என வியப்பாக இருக்கும் ஆனால் அதுவே பக்கத்து வீட்டுக்காரருக்கோ அல்லது சொந்தக்காரருக்கோ வரும் போது மனது வேதனையடைகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை இருக்கேக்கை இரண்டு மூண்டு தரம் குளவி குத்தியிருக்கு.....ஆகையால்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை இரண்டு மூண்டு தரம் குளவி குத்தியிருக்கு.....ஆகையால்

எனக்கு ஒருதரத்திலேயே 4 குளவி குத்தி இருக்கு 

ஒரு உயர்ந்த பனையில் குளவி கூடு இருந்தது 
சின்ன வயதில் ஒவ்வரு நாளும் தோடடத்தில் இருந்து வரும்போது 
ஊமால்கடசியால் எறிவேன் என்றோ ஒரு நாள் அவ்வளவு உயரத்துக்கு 
எறியவேண்டும் என்ற ஆசை இருந்தது 
ஒரு நாள் எனது அதிர்ஷ்ட்டமும் துரதிஷ்ட்டமும் கலந்த நாள் வந்தது 
ஊமல்காட்ச்சி போய் குளவிக்கூட்டிற்குள் இறங்கியது 
அப்படியே நேராக வந்து 4 குளவி குத்தியது 

ஆகையால் ...............
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

எனக்கு ஒருதரத்திலேயே 4 குளவி குத்தி இருக்கு 

ஒரு உயர்ந்த பனையில் குளவி கூடு இருந்தது 
சின்ன வயதில் ஒவ்வரு நாளும் தோடடத்தில் இருந்து வரும்போது 
ஊமால்கடசியால் எறிவேன் என்றோ ஒரு நாள் அவ்வளவு உயரத்துக்கு 
எறியவேண்டும் என்ற ஆசை இருந்தது 
ஒரு நாள் எனது அதிர்ஷ்ட்டமும் துரதிஷ்ட்டமும் கலந்த நாள் வந்தது 
ஊமல்காட்ச்சி போய் குளவிக்கூட்டிற்குள் இறங்கியது 
அப்படியே நேராக வந்து 4 குளவி குத்தியது 

ஆகையால் ...............
 

நான் ஒரு தடவை செவ்வரத்தம் பூ பறித்துக் கொண்டிருந்த வேளையில் ராணி குளவியே குத்தியிருக்கு....
ஆதலால்..........:cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதின எல்லோரையும் பார்த்து ஒன்று கேட்கவா  ? .😄

மார்பக புற்று அதிகம் பெண்களுக்கு தான் ஏற்படும்  ஏன் ஆண் சிங்கங்கள்  
மூக்கை நுழைக்கினம்.?குளவிக் குத்துவங்க ஆசைப்  படுகினம்

அக்கா நில்லா தீங்க  ஓடுங்கோ  🤣🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிலாமதி said:

மேலே எழுதின எல்லோரையும் பார்த்து ஒன்று கேட்கவா  ? .😄

மார்பக புற்று அதிகம் பெண்களுக்கு தான் ஏற்படும்  ஏன் ஆண் சிங்கங்கள்  
மூக்கை நுழைக்கினம்.?குளவிக் குத்துவங்க ஆசைப்  படுகினம்

அக்கா நில்லா தீங்க  ஓடுங்கோ  🤣🤣

நிலாமதி இது பெண்களுக்கு வந்தாலும் ஆண் வைத்தியர்கள் தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை இரண்டு மூண்டு தரம் குளவி குத்தியிருக்கு.....ஆகையால்

ம்........

(ஏன் வில்லங்கமாக யோசிப்பான்......🤔)

நமக்கேன் வம்பு என்று பேசாமல் போவோம் 😤😤

2 hours ago, குமாரசாமி said:

நான் ஒரு தடவை செவ்வரத்தம் பூ பறித்துக் கொண்டிருந்த வேளையில் ராணி குளவியே குத்தியிருக்கு....
ஆதலால்..........:cool:

இராணிக் குழவி பக்கத்து வீட்டில் இருந்து வந்ததோ அல்லது இராணித் தேனீ இருக்கும் இடமாய்ப் பார்த்து நீங்கள் போய் பறித்தீர்களோ (பூவை(யர்) 😂)

48 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி இது பெண்களுக்கு வந்தாலும் ஆண் வைத்தியர்கள் தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.

ஆண் குளவிதான் கொட்டவேண்டும் 😂

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.