Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.!

1599104536_br%20(1)%20-%20Copy%20copy.jp

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்) வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி காரியாலய திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

http://aruvi.com/article/tam/2020/09/03/16264/

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1599104536_br%20(1)%20-%20Copy%20copy.jp

இது கலியுகம், மனிதருக்கு ஒவ்வாத கெட்டன அதிகமாக நடைபெறும், கடவுளைக் காணமுடியாது என்றும் சாத்திரங்கள் தெரிவிப்பதைக் கேட்டும், படித்தும் அறிந்துள்ளேன். இவையெல்லாம் பொய்யென நிரூபித்து இங்கு கடவுளே காட்சி தருகிறார். ஐயனுக்கு அரோகரா.. 💐:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1599104536_br%20(1)%20-%20Copy%20copy.jp

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.

வடமராட்சி எண்டால் குடத்தனையிலா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வடமராட்சி எண்டால் குடத்தனையிலா???

ஏன் குடந்தனை உங்களுக்கு ஆகாதோ  ஆரும் உங்களையும் கட்டி வச்சி வெளுத்தவங்களோ🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் குடந்தனை உங்களுக்கு ஆகாதோ  ஆரும் உங்களையும் கட்டி வச்சி வெளுத்தவங்களோ🙂

பச்சை மட்டையாலை வெளுவை வாங்கினவை அங்கதான் இருக்கினம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்ல வைக்கப்பட்ட வேட்பாளர் பணியை தொடங்கிற்றார்!

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டமைப்பு இருக்காது, தமிழரசுக் கட்சி தனியாக போட்டியிடும். தலைமை அவராவோ (நல்ல வாக்கு (கள்ள வாக்கு என்று சொல்ல வழக்கு போட்டாலும்) அவருக்கு விசுவாசமான ஒருவரோ இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பச்சை மட்டையாலை வெளுவை வாங்கினவை அங்கதான் இருக்கினம்.😎

குடத்தனை எண்டதும் நியாபகம் வருகுது. ஒருக்கா நாகர்கோவில் ரோட்டால போகேக்க, மணல் கும்பிய பாக்க ஆசைபட்டு, குடத்தனைக்கே வண்டிய விட்டாச்சு.

சந்தியடில போய் கடற்கரை எவ்வளவு தூரம் எண்டு கேட்டா “ நடக்கிற தூரம்தான்” எண்டாங்கள். 

சரி எண்டு நடந்தால் ஒரு 3 கிலோ மீட்டர் இருக்கும். நடுப்பகல்.

இப்ப சுமந்திரன் செய்யிறத அப்பவே எனக்கு “செஞ்சிட்டாங்கள்”🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பாக்க கிட்ட மாதிரித்தான் இருக்கும் ..ஆனால் நடக்க நடக்க நடந்து கொண்டே இருக்கலாம்.....கடலும் கிட்ட மாதிரித்தான் தெரியும். அலை அடிக்கிற சத்தம் கூட கேக்கும்...😎

நடுப்பகல் எண்டு வேறை சொல்லுறியள்....  மணலுக்காலை நடக்க மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியிருக்குமே?

3 hours ago, goshan_che said:

இப்ப சுமந்திரன் செய்யிறத அப்பவே எனக்கு “செஞ்சிட்டாங்கள்”

விதி வலியது...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

பாக்க கிட்ட மாதிரித்தான் இருக்கும் ..ஆனால் நடக்க நடக்க நடந்து கொண்டே இருக்கலாம்.....கடலும் கிட்ட மாதிரித்தான் தெரியும். அலை அடிக்கிற சத்தம் கூட கேக்கும்...😎

நடுப்பகல் எண்டு வேறை சொல்லுறியள்....  மணலுக்காலை நடக்க மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியிருக்குமே?

விதி வலியது...:grin:

ஓமண்ணை, அந்த காலத்தில தண்ணி போத்தல் காவிற பழக்கமும் இல்லை. சீவன் போறகுறை😂.

கடவுள்மாரி ஒரு மனிசன் c50 ல வந்ததால வாறவழி ஓகே. போஸ்ட் ஒவிசடில வந்து ஒரு நெக்டோ அடிக்கத்தான் போன உயிர் திரும்பி வந்தது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சந்தியடில போய் கடற்கரை எவ்வளவு தூரம் எண்டு கேட்டா “ நடக்கிற தூரம்தான்” எண்டாங்கள். 

சரி எண்டு நடந்தால் ஒரு 3 கிலோ மீட்டர் இருக்கும். நடுப்பகல்.

உதுக்குத்தான் நான் அம்பன் குடத்தனையார்ரை கதையை நம்பிறேல்லை....😂

உப்பிடியான ஆக்களை பார்லிமென்ட் அனுப்பினால் என்ன நடக்குமெண்டு 
இப்ப தெரியுதெல்லே.... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

உதுக்குத்தான் நான் அம்பன் குடத்தனையார்ரை கதையை நம்பிறேல்லை....😂

உப்பிடியான ஆக்களை பார்லிமென்ட் அனுப்பினால் என்ன நடக்குமெண்டு 
இப்ப தெரியுதெல்லே.... 🤣

அவங்கள் சொன்னதும் சரிதான் அண்ண. அவையள் ஒவ்வொரு நாளும் நடக்கிற தூரம் தானே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.!

1599104536_br%20(1)%20-%20Copy%20copy.jp

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்) வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி காரியாலய திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

http://aruvi.com/article/tam/2020/09/03/16264/

மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. இப்போதே நான்கு பக்கமும் கமெராவும் பூட்டிவிட்டால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள்ள ஒரு புடுங்கப்பாடும் இல்லை,  நாங்கள் புதுமனை புகு விழா கொண்டாடுகிறோம். குடும்பத்தை சேர்ந்தவர்கள் வர நேரமில்லையாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.