Jump to content

ஒரு சாவும் அதன் சம்பிரதாயங்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு 
நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. 
சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். 

முதல் மரணம் - 
மனைவியின் சித்தப்பா 
எதிர்பாராத மாரடைப்பினால் கொரோனா உச்ச மாதங்களில் நிகழ்ந்த ஒன்று.
ஊரே கூடி அழுது, முடிவுக்கு வந்த வாழ்க்கை இறுதிப்பயணம் அதுவல்ல, மாறாக 10 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கு கொண்டு சொற்ப சம்பிரதாயங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஈமை கடன்.
இரண்டு மகள்கள், மனைவி மட்டுமே இருந்த குடும்பம் என்பதால் அதிக ஆர்ப்பாட்டம், கேள்விகள் இல்லாது முடிந்த நிகழ்வு. இதிலே அந்திமக்கடன்களை செய்யும் பொறுப்பில் விடப்பட்ட நிறுவனம் / முகவர் பெரும் தொகையை ஆட்டையை போட்டது வேறு ஒரு கதை.
எட்டுச்செலவு, பிண்டம் வைத்து, சாம்பல் கரைத்து, மூன்று அந்தணர்கள் வீட்டுக்கு வந்து துடக்கு கழித்து , விருந்தோம்பல் நடந்து ...இப்படி பல நிகழ்வுகள்.
எனக்கு பெரிதாக இவை குறித்த பின்னணியோ அல்லது தெளிவோ கிடையாது. 
இந்த படிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறன்.

சரி இனி இரண்டாவது மரணத்துக்கு வருவோம்.
நண்பரின் தாயார். ஊரிலே சாதாரணாமாய் இருந்த குடும்பம் (காரணத்தோடு தான் இதையும் சொல்லி வைக்கிறேன்), அன்னையார் புற்றுநோய் காரணாமாக 80 சொச்ச வயதில் இயற்கை எய்தி விட்டார்.
மிக நீண்ட காலமாகவே தேக ஆரோக்கியம் நல்லாய் இருக்க வில்லை. அடிக்கடி வைத்தியசாலையி, அவசரப்பிரிவு என்று தான் நாட்கள் ஓடியது.
அவரின் பிள்ளைகள் எனது நண்பர் உட்பட பெரிய பெரிய தொழில்களில் வசதியான வாழ்க்கை.
அன்னையாரின் மரணம் நிகழ்ந்தது 2 கிழமைகளுக்கு முன்னம். அவர்கள் அந்த மரணத்தை கையாண்ட விதம், மிகுதி உள்ள சடங்குககளை அவர்கள் கையாள எடுக்கும் முடிவுகள், உரையாடல்கள்  மனதை உருத்திக்கொண்டு இருக்கிறது. அதுவே இதை எழுத காரணமும்....

பொதுவாகவே இவர்கள் அதி உச்ச ஆங்கில மோகம் கொண்டவர்கள், குழந்தைகளின் பெயர்கள் முதல்கொண்டு வீட்டில் அன்றாடம் கதைக்கும் நுனிநாக்கு ஆங்கில உரையாடல் வரை.

அந்திம கிரிகைகள் குறித்து கார்ப்பரேட் மீட்டிங் ரேஞ்சில் தான் இவர்கள் உரையாடல்கள் முடிவுகள் அமைந்திருந்தன. 
இதோ அவர்களின் சில பரிந்துரைகளும் சிபாரிசுகளும் 
அம்மாவுக்கு மிகவும் பெறுமதி கூடிய "மஹோகணி" பலகையிலான ஒரு சவப்பெட்டி - $3,000
அம்மாவுக்கு பார்க்குமிடமெல்லாம் வனப்பில் ஆழ்த்தக்கூடிய மலர் வளைய அலங்காரங்கள் - $4,000
தேவாரம், திருவாசகம் ஓதுவார் இல்லாமல் பிள்ளைகளே பாடிய சிவ புராணம் 
இப்படி இதுவரையில் குறைசொல்லமுடியாத அளவிட்கு நேர்த்தியான ஏற்பாடுகள்.

அடுத்த கட்டமாக, அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைக்க தீர்மானம், இப்போதைக்கு இந்தியா போக முடியாது. ஆனால் அஸ்தியை கரைக்காமல் வீட்டில் துடக்கு கழிக்க முடியாது. . கொரோனா முடிந்தால் , நிலைமை சுமூகமாகினால் கங்கையில் அஸ்தி கறைக்கலாம், அது வரையிலும் நான் அம்மாவின் அஸ்தியை வீட்டில் வைத்திருக்கிறேன். இது அவர்களின் மூத்த மகனின் நிலைப்பாடு. இதற்கு சில  குடும்ப பெண்கள் போர்க்கொடி. காரணம் அம்மாவின் இறந்த நேரத்தின் பிரகாரம் சில "சம்பிரதாய சவால்கள்". 
பஞ்சாங்கம் பார்த்ததில் (நட்சத்திரம், ராசி, யோகம், கரணம், திதி ) 
"பஞ்சமியில் " இறப்பு நிகழ்ந்ததால் - அம்மாவின் ஆத்மா பூமியிலேயே தங்கி இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். அவர்கள் இறந்து விட்டோம் என்ற எண்ணமே இல்லாமல், அடுத்த நிலை நோக்கிய பயணம் இல்லாமல் அருவமாக வீட்டுக்குளேயே சுற்றி வருவார்கள் எனவும், இவர்களால் பல கஷ்டங்கள் குடும்பத்தாருக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் "சாஸ்திரம்" சொல்ல... வீட்டில் ஏகப்பட்ட 
தீர்க்கமில்லாத கலந்துரையாடல்களோடு நாட்கள் போய்க்கொண்டு இருக்கிறது.
சரி அப்படியென்றால், அம்மாவின் அஸ்தியை கனடாவில் சமுத்திரத்தோடு கலக்கும் ஒரு அருவியான செயின்ட். லாரன்ஸ் நதியில் கொண்டு சென்று காழ்ப்போம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
சுமார் 7, 8 மணித்தியால பயணம் அது. தவிர கொரோனா நிலவரங்களால் எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியாது.
அதோடு வந்தது இன்னும் ஒரு  யோசனை, டொரோண்டோ ஹார்பர் (f )பிரான்ட் அங்கு ஒரு பெரிய படகை வாடகைக்கு அமர்த்தி, அவர்களோடு பேசிக்கதைத்து , ஐயரையும் கூட்டிக்கொண்டு 2 மணித்தியால படகு பயணத்தில் "இன்னிஸ்வில்" தாண்டிய ஒரு ஏரியில் படகில் இருந்தே அஸ்தியை கலைக்கும் திட்டம்!!!
இதற்கான செலவு 6 ஆயிரம் மட்டில் வருமாம்.

இப்படியான யோசனைகளின் ஆதாரம் என்னவென்றால் மற்றைய சராசரி "தமிழர்களை" போல நாங்கள் காரியங்கள் செய்ய மாட்டோம். எமக்கென ஒரு அந்தஸ்து இருக்கிறது என்ற மனோநிலை மட்டுமே.
இதை அவர்கள் வாயாலேயே பல தடவைகள் சொல்லிவிட்டார்கள்.

பாவம் ஐயர், திக்கு முக்காடிப்போய் இருக்கிறார். அவரால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாது கேட்டு விட்டார்.
இப்படியான விசித்திரமான யோசனைகளை எல்லாம் யார் உங்களுக்கு தருகிறார்கள் என்று...

எப்படியோ இவர்கள் இறந்து போன அம்மாவுக்கு $$$$$ செலவு செய்து அவர்களின் அன்பையும், தங்களின் குடும்ப "அந்தஸ்தையும்" காட்ட நினைக்கிறார்கள்.
       
இந்த சம்பவங்களுக்கு இங்கே தான் ஒரு ட்வீஸ்ட்டு. 
கூடவே  ஒரு ஞானம்... வாட்சாப் குரூப்பில் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு கோரிக்கை, உங்களுக்கு தெரிந்த தாயக மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் சிலவற்றின் தொலைபேசிகளை தந்து உதவுங்கள் அம்மாவின் பெயரால் ஒரு அன்ன தானம் செய்யப் போகிறோம்.
இதுக்கு ஒதுக்கப்பட்ட நிதி  ஆயிரம் ($1,000) டாலர்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பில் இருக்கும்  ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், வன்னியில் இருக்கும் ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், இப்படி 3 தெரிவுகள் ... பல "வாட்ஸாப்" பதிவுகள்.
எதோ ஒரு நல்ல காரியம் செய்கிறார்கள் என்ற சந்தோசம் இருந்தாலும் நிறையவே பணத்தை "பந்தா" காட்டுவதில் வீணடிக்கிறார்களே என்ற விசனம். தவிர இருக்கும் போது அம்மாவுக்கு செய்யாததை அவர் இறந்த பின் செய்ய நினைக்கிறார்களா என்றும் கேள்வி?

சரி இதை எல்லாம் கடந்து, சரியான, பொதுவான ஈமைக்கிரிகை முறைகள் தான் எவை?
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் குறித்த முறைமைகள் தெரிந்தால் அதனை பதிவிடுங்களேன். 
தெரிந்து கொள்ளலாம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது!
எங்கட சனம் நினைச்சா வடக்கு கிழக்கில சனம் வறுமையின்றி வாழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

சரி இதை எல்லாம் கடந்து, சரியான, பொதுவான ஈமைக்கிரிகை முறைகள் தான் எவை?
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் குறித்த முறைமைகள் தெரிந்தால் அதனை பதிவிடுங்களேன். 
தெரிந்து கொள்ளலாம். 🙏

சடங்குகளுக்கு என்று ஒரு தேவை இருந்தது.
அதனால் பலர் வாழ்ந்தார்கள்.
இப்போ அதைப் பற்றிய கவலைகள் இல்லை.
ஊரிலேயே எல்லாம் குறிகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அற்பனுக்கு பவிசு வந்தால் .....அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் "  என்கிற கதை போல
ஓரளவு குறைந்த செலவில்  காரியத்தை முடித்து விட்டு  அதை  கஷ்ட படும் பிள்ளைகளை பராமரிக்கும் நிறுவங்களுக்கு கல்வி செலவுக்கு  அனுப்புவதே சிறந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சடங்குகளுக்கு என்று ஒரு தேவை இருந்தது.
அதனால் பலர் வாழ்ந்தார்கள்.
இப்போ அதைப் பற்றிய கவலைகள் இல்லை.
ஊரிலேயே எல்லாம் குறிகிவிட்டது.

இருந்தாலும் ஒரு சில வழமையான சடங்குகள் இன்னும் இருக்கின்றனவே .

Link to comment
Share on other sites

உங்கள் ஆதங்கம் புரிகிறது.  எதுவாக இருந்தாலும் ஒருவர் இறந்த பின் அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் செயல்களைப் பார்த்தால் எமக்கு கோபம், ஆதங்கம், கவலை என பல உணர்வுகள் எழுவது வழக்கம் தான். இதற்கு ஒரு வேளை  நாம் எல்லோருமே நாம்  இறந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு உயில் எழுதி வைத்தால் என்ன என்று தோன்றுகிறது.  என்னைக் கேட்டால் பெட்டியைத் திறந்து வைத்து ஆவடியம் காட்டாமல் மரியாதையாய் மிகக் குறைந்த செலவில் எல்லாவற்றையும் முடித்து விட்டால் ஒருவருக்கும் சிக்கல் இல்லை!  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தோழி said:

நல்ல கருத்து .. கையில் பச்சை இல்லை. 
நான் எனக்கு எழுதக்கூடிய உயில் :) ... 
எனக்கு பிடித்த தமிழ் இசையை தவழ விடுங்கள்.
என்னை சுற்றி வாழ்ந்த என் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு என் வாழ்க்கையை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு பெரிய தொரு நன்றி தெரிவியுங்கள். 
என் பெயரில் 100 மரங்கள் நடுங்கள். அது நல்ல படியாக வளர்வதை உறுதி செய்யுங்கள்.

முடிந்தால் தம்பட்டமில்லாமல் கொஞ்ச தான தர்மங்கள் ...அவர்களோடு சேர்ந்து வழங்கி மகிழுங்கள். 

முடியும் !!! 🙏

Link to comment
Share on other sites

14 minutes ago, Sasi_varnam said:

அற்புதம்! சிறப்பான சிந்தனை !  🙏

எனக்கும்   தொடர்ந்து தாயகத்தில் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இம்முறை போன சில பாடசாலைகளுக்கு மரங்கள் வாங்கிக் கொடுக்க முடிந்தது. நானும் இதை  உயிலில் சேர்த்துக் கொள்ளலாம்!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 17:13, Sasi_varnam said:

கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு 
நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. 
சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். 

சசிவர்ணம்... இப்படி ஒரு தலைப்பை, திறந்தமைக்கு பாராட்டுக்கள்.
பலரும் தொட விரும்பாத,  விடயம் என்றாலும்... 
இதில் உள்ள சந்தேகங்களும், தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளமை..
"காலம் செய்த கோலம்"  என்றுதான்... கருத வேண்டும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு... நான் வாழும் நகரத்தில்,
தமிழர் என்ற முறையில்... அறிமுகமான ஒருவர் இறந்து விட்டார்.   

இங்கு... தமிழரின் இறுதிச்  சடங்குகளுக்கு மட்டும்,  
அவர் நண்பராகவோ... உறவினராகவோ இருக்கா விட்டாலும்...
அந்த ஊரில் வசிக்கும், அனைவரும் செல்வர்.

இப்படியான... ஒரு இறுதிச் சடங்கிற்கு என்று, அந்த ஊர் நகரசபையே..
தரமான மண்டபங்களை வைத்திருந்த போதும்...
அவரின் உடலை... பிரத்தியேகமாக, ஒரு  மண்டபம் வாடகைக்கு எடுக்கப் பட்டு,
அந்த  இறுதிக் கிரியைகளை  நடத்தி முடித்த பின்... 
அவரின் உடல் இருந்த,  பெட்டி மூடப்பட்டு, கொண்டு சென்ற பின்...
ஒவ்வொருவராக... வீட்டிற்கு செல்ல முற்பட்ட  போது...

கொஞ்சம் பொறுங்கோ... சாப்பிட்டுட்டு,  போங்கோ... 
என்று, சிலர் அழைத்தார்கள்.
இதென்ன செத்த வீட்டில்... சாப்பாடா? என்று, மனதில்.. பெரிய கேள்வி எழுந்தாலும்,
நாசூக்காக.. மறுத்து விட்டு, சென்று விட்டோம்.

நான்..சொல்வதை, நம்பாவிடில்... பாஞ்ச் அண்ணை சாட்சி.
அவரும், அந்தச் சடங்கில் கலந்து கொண்ட ஒரு ஆள்.

பிற் குறிப்பு:  இங்கு... ஜேர்மன் ஆட்களின், மரணச்  சடங்குகள் முடிந்த பின்...
நெருங்கிய உறவினர்கள்.. ஒரு உணவு விடுதியில், சாப்பிடுவது ஒரு சம்பிரதாயம்.
அதனைப் பார்த்து,  இவர்கள் செய்தது... எனக்கு, மிகவும் மன உறுத்தலாக இருந்தது.

உங்கள் இடத்தில்... இப்படியான, சம்பவம் நடந்து இருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி தமிழ் சிறி அண்ணர்,
இங்கே கத்தோலிக்க நண்பர்கள் சிலரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளேன்.
அவர்களின் இறுதி சடங்குகள் முடிந்து,  மயானம் களைந்து சென்று, எல்லோரும் ஒரு இடத்தில் கூடி (மண்டபத்தில்) ஒரு நேர உணவை உண்ணுவது வழமை.  Funeral Lunch என்றும் இதை கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் செத்தவீட்டுக்கு போய் காட்டை(எரிக்கும் இடம்) போய் வந்தால் இறப்பு நிகழ்ந்த வீட்டில் உறவினர் மதிய உணவு வழங்குவர். இதனை வெச்சு குடித்தல்/சாப்பிடல் என்று சொல்றவை. கோவில் விரதகாறர் சாப்பிடமாட்டினம்.
இதில் பங்குபெறுபவர்களுக்கு தான் எட்டாக்கு/எட்டுச் செலவு சொல்லி செய்வினம். செத்த வீட்டை வந்த எல்லோருக்கும் அந்தியேட்டி சொல்லி செய்வினம். 

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

ஆம் இப்படி கனடாவில் ஒரு உறவினரின் செத்த வீட்டில் நடைபெற்றது. பிரேதம் எரிக்கப்பட்ட பின் நெருங்கிய உறவினர்கள் வீடு சென்று முழுகிய பின் செத்த வீடு நடைபெற்ற வீட்டில் சாப்பிடுவார்கள். உறவினர் யாராவது உணவை சமைத்தோ/ உணவைகத்தில் எடுத்தோ பரிமாறப்பட்டது. 
அந்தியேட்டி (31) மண்டபத்தில் செத்த வீட்டுக்கு வந்த அனைவருக்கும் சொல்லி செய்யப்பட்டது. ஊரிலும் இப்படி செய்ததாக தான் நினைவில் உள்ளது. 8இன் போது ஐயரின் கிரியை வீட்டில் நடைபெற்றதையும் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் கிறிஸ்தவர்கள் மையத்தை (பொடி) அடக்கம் செய்தபின் வந்து கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்குவார்கள். நானும் கலந்து கொண்டிருக்கிறேன்......!

முன்பு எமது வழக்கப்படி முதல்நாளே மேளமடிப்பவர்கள், அவரவரது குடும்ப சலவைத்தொழிலாளி,சவரத்தொழிலாளி, அறிவித்து மொந்தன் வாழை இரண்டு வாசலில் கட்டி மயானத்தில் இருப்பவரிடம் இன்னார் என்று அறிவித்து, விறகுகள் எல்லாம் கொண்டுபோய் குடுத்து விட்டு வருவார்கள்.அன்று சலவைத்தொழிலாளி வெள்ளை கட்ட, சவரத்தொழிலாளி கொல்லி போடுபவருக்கு மொட்டை அடிக்க அக்கம் பக்கத்து பெண்டுகள் பிள்ளைகள் எல்லாம் வெளியால எட்டி எட்டி பார்க்க செத்தவீடு களைகட்ட ஆரம்பித்து விடும்.   காலையில் ஐயர் வந்தாரெண்டால் ( இதற்கு தனியான ஐயர் இருக்கிறார்). பிணத்துக்கு உரிய கிரியைகள் செய்து பின் அரப்பெண்ணை வைத்து வாய்க்கரிசி போட்டு (இதை சவரத்தொழிலாளி செய்து வைப்பார்.அதில் வரும் வாய்க்கரிசி சில்லறை எல்லாம் அவருக்கு). தோயவாத்து சவப்பெட்டிக்குள் பிணத்தை வைத்து பின் சிவபுராணம் படித்து சுண்ணமிடித்து மேலும்பல சடங்குகள் செய்து, பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாம் நெய்ப்பந்தம் பிடித்து பெண்கள் எல்லாம் ஒப்பாரி வைத்து குளறி இழுபறிப்பட பெட்டியை மூடி பெரிய பெண்கள் அதை சுற்றி வந்து மாரடிச்சு பாடையில்  ஏற்றி தூக்க, கொள்ளி வைப்பவர் நெருப்புடன் கூடிய கொள்ளிப்பானையை எடுத்து கொண்டு முன்னே நடக்க வளவு வேலியை வெட்டி அந்த வழியால் பாடை/தண்டிகை  தெருவுக்கு வந்து சுடலை நோக்கி பிரயாணப்படும்.அநேகமாய் ஐந்து மணிநேரம் செல்லும். அந்நேரம் வசதியுள்ளவர்கள் சுடலைவரை நிலபாவாடை அதாவது பிணம் தூக்கி வருபவர்கள் நிலத்தில்  நடக்காமல் சலவைத்தொழிலாளி வெள்ளை வேட்டிகளை விரித்துகொண்டு வருவார். எதிர்ப்படும் சந்திகளில் நின்று பறைமேளம் பயங்கரமாய் அடிக்க தாறுமாறாய் வெடி கொளுத்துவார்கள்.....!

                                       இப்படியாகத்தானே  சென்று சுடலையை அடைந்ததும் அங்கு ஏற்கனவே தயாராய் இருக்கும் சிதையில் இடப்பக்கமாய் சுற்றிவந்து பெட்டியை வைத்து மூடியை திறந்து அங்கும் சில சடங்குகள் செய்து வாய்க்கரிசி எல்லாம் போட்டு கொள்ளி போடுபவர் நீர்ப்பாணையை தோளில் வைத்து சவரத்தொழிலாளியின் சொற்படி அதே இடப்பக்கமாய் மூன்றுதரம் சுத்த அவரும் ஒவ்வொரு சுத்துக்கும் கொடுவாக் கத்தியால் பானையை கொத்தி துவாரமிட்டு தண்ணீர் ஒழுக ஒழுக வந்து அதை பின்பக்கமாய் நிலத்தில் போட்டு உடைத்து விழுந்து வணங்கிய பின் கொள்ளியை (கொள்ளி பெரும்பாலும் சந்தனக்கட்டையாக இருக்கும்)  எடுத்து தலைமாட்டில் நெருப்பு வைத்து விட்டு திரும்பிப்பாராமல் சுடலையில் இருக்கும் மண்டபத்தில் வந்து இருப்பார். இப்பொழுது மயானம் காப்பவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு பெரிய மரக்குத்தியை பிணத்தின் மேல் நெஞ்சாங் கட்டையாக வைத்து கூடி நின்று கவனமாக ஏரிப்பார்கள்....!

                                         இந்நேரத்தில் மண்டபத்தில் வைத்து உரிமைக்காரர் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் எல்லோருக்கும் அவரவருக்கான பணத்தை கொடுத்து கணக்கு தீர்ப்பார்கள். அங்கு வைத்தே எட்டுச் சிலவு எல்லாத்தையும் அறிவிப்பார்கள். பின் எல்லோரும் களைந்து செல்ல அன்று அல்லது அடுத்தநாள் சவரத்தொழிலாளியின் வழிகாட்டலில் காடாத்து நடைபெறும்.....!

                                    வெளிநாடுகளில் அரைமணி நேரமோ, ஒருமணி நேரமோ குடுப்பார்கள் அதற்குள் சடங்குகள் செய்யுமாறு. அந்தந்த இடத்துக்கு ஏற்றவாறு சம்பிரதாயமாக செய்து முடிப்பார்கள். அதுவும் மிக சுத்தமான ஹோல்களில் நடப்பதால் அதை அசுத்தம் செய்யாது செய்யவேண்டிய கடப்பாடு உண்டு. சிலநேரங்களில் அந்திரட்டி வந்தாலும் மையம் எரித்த சாம்பல் கைக்கு வந்து சேராது.  நம் சமூகம் அதற்கும் தயாராக மாறி விட்டது.......! 

நல்லதொரு திரி சசி ....நன்றி....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணர்கள்/ஐயர்மார் செத்தவீடு செய்ய வரமாட்டினம், சைவக்குருக்கள் தான் வாறவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

 8இன் போது ஐயரின் கிரியை வீட்டில் நடைபெற்றதையும் சொல்ல வேண்டும்.

ஆம்... ஏராளான். பூணுல்  போட்ட  ஐயர், 31 அன்று... 
சாம்பலை, கீரிமலையில்  கரைத்த பின்தான், வீட்டுக்குள் வருவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கொஞ்சம் பொறுங்கோ... சாப்பிட்டுட்டு,  போங்கோ... 

என்று, சிலர் அழைத்தார்கள்.
இதென்ன செத்த வீட்டில்... சாப்பாடா? என்று, மனதில்.. பெரிய கேள்வி எழுந்தாலும்,
நாசூக்காக.. மறுத்து விட்டு, சென்று விட்டோம்.

நான்..சொல்வதை, நம்பாவிடில்... பாஞ்ச் அண்ணை சாட்சி.
அவரும், அந்தச் சடங்கில் கலந்து கொண்ட ஒரு ஆள்.

பிற் குறிப்பு:  இங்கு... ஜேர்மன் ஆட்களின், மரணச்  சடங்குகள் முடிந்த பின்...
நெருங்கிய உறவினர்கள்.. ஒரு உணவு விடுதியில், சாப்பிடுவது ஒரு சம்பிரதாயம்.
அதனைப் பார்த்து,  இவர்கள் செய்தது... எனக்கு, மிகவும் மன உறுத்தலாக இருந்தது.

உங்கள் இடத்தில்... இப்படியான, சம்பவம் நடந்து இருக்கா

பொதுவாக எரிக்கிற இடத்த்துக்கு போகிறவர்களை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போக சொல்வது இங்கு கனடாவில் வளமை.  எரிப்பதற்கான பட்டன் அமத்தியதும், வந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வெளிக்கிடும் போது சாப்பிட வருமாறு அழைப்பார்கள்.  நெருங்கிய உறவுகள் நண்பர்கள் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவது வளமை.
ஒரு தடவை வேறு ஒரு சிட்டியில் நடந்த நிகழ்வில் பல உறவுகள் வேறு சிட்டிகளில் இருந்து வந்து இருந்தனர் அதனால், பக்கத்தில் உள்ள அதற்க்கான மண்டபத்தில் சாப்பாடு கொடுத்தார்கள்.
சிலர் தோயாமல் சாப்பிட மாட்டார்கள்.  பலர் பழக்கப்படுத்தி விட்டார்கள்

சடங்குகளில் ஊருக்கு ஊர் சிறு சிறு வித்தியாசம் இருந்திருக்கும்.  இப்போது நாட்டுக்கு நாடும் சில வித்தியாசங்கள் (வசதிகளுக்கு ஏற்ற மாதிரி).  சில இடங்களில் இவை எல்லாம் குழப்பப்பட்டு சாம்பார் ஆகி விடுகிறது.  விஷயம் தெரிஞ்ச ஒராள் இல்லை எண்டால், 10  பேர் 10  மாதிரி சொல்லுவினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Sabesh said:

பொதுவாக எரிக்கிற இடத்த்துக்கு போகிறவர்களை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போக சொல்வது இங்கு கனடாவில் வளமை.  எரிப்பதற்கான பட்டன் அமத்தியதும், வந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வெளிக்கிடும் போது சாப்பிட வருமாறு அழைப்பார்கள்.  நெருங்கிய உறவுகள் நண்பர்கள் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவது வளமை.
ஒரு தடவை வேறு ஒரு சிட்டியில் நடந்த நிகழ்வில் பல உறவுகள் வேறு சிட்டிகளில் இருந்து வந்து இருந்தனர் அதனால், பக்கத்தில் உள்ள அதற்க்கான மண்டபத்தில் சாப்பாடு கொடுத்தார்கள்.
சிலர் தோயாமல் சாப்பிட மாட்டார்கள்.  பலர் பழக்கப்படுத்தி விட்டார்கள்

Dancing Pallbearers - Wikipedia

நான், வசிக்கும் இடத்தில் .... எரிக்கின்ற இடம், 
அந்த மண்டபத்தின் அருகில் இருந்தாலும்,
எப்போ.. எரிப்பார்கள், என்று சொல்ல மாட்டார்கள்.  
சாம்பலை... குறிப்பிட்ட ஒரு திகதியில் வந்து, வாங்கிச் செல்லுமாறு கூறுவார்கள்.  
ஜேர்மனியின், மற்ற மாகாணங்களில்... வேறு மாதிரி இருக்கலாம்.

சமயக் கிரியைகள் முடிந்த பின்பு...
கொள்ளி வைப்பவர், அந்த இடத்திலேயே.. 
சுவியர் சொன்னமாதிரி...  சடலத்தை சுற்றி வந்து, 
சம்பிரதாயங்களை முடித்த பின்...
ஒரு சாம்பிராணி குச்சியை.. அவர் கால் மாட்டில், மெல்ல தொட்டவுடன்...
திரும்பிப் பார்க்காமல், நகர வேண்டும்.

அதற்குப் பின் அந்த உடலை..... நான்கு ஊழியர்கள், பொறுப்பெடுத்து... 
பெட்டியை  மூடி, கொண்டு போனால்... 
திரும்ப... தலை குத்துக்கரணமாக,  நாங்கள் நின்றாலும்... அந்த உடலிருந்து,
சாம்பலைத் தவிர... வேறு எதுகும், திரும்பப் பெற முடியாது.
அது.. இறந்தவரை, அலங்கரிக்க வைத்திருந்த,   
தாலிக்கொடி   போன்ற.... தங்க நகைகளுக்கும் பொருந்தும்.

டிஸ்கி: படம் வேறு நாட்டில்... சுட்டது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இங்கை பெட்டி மூடும் போது கழட்ட வேண்டியது எல்லாம் கழட்டி விடுவார்கள்.  சமய சம்பிரதாயங்கள் முடிய, ஊழியர்கள் உள்ளே எடுத்து செல்லும் போது  3-4 பேரை உள்ளே அனுமதிப்பார்கள்.  எல்லாம் செட் ஆக்கினதும், கொல்லி வைக்கவேண்டியவரை எப்பிடி எந்த எந்த பட்டன் அமத்தனும் என்று சொல்லுவார்கள்.  அடுத்த நாளே சாம்பல் funeral  home  இல் போய் எடுக்கலாம்.  சிலர் அங்கேயே இருக்க விட்டு கரைக்கும் போது போய் எடுப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நயினார்... செத்தது... நல்லது,  நல்லது"

மரணச் சடங்கு தலைப்பில்... ஒரு இசை... இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 11:13, Sasi_varnam said:

கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு 
நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. 
சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். 

முதல் மரணம் - 
மனைவியின் சித்தப்பா 
எதிர்பாராத மாரடைப்பினால் கொரோனா உச்ச மாதங்களில் நிகழ்ந்த ஒன்று.
ஊரே கூடி அழுது, முடிவுக்கு வந்த வாழ்க்கை இறுதிப்பயணம் அதுவல்ல, மாறாக 10 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கு கொண்டு சொற்ப சம்பிரதாயங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஈமை கடன்.
இரண்டு மகள்கள், மனைவி மட்டுமே இருந்த குடும்பம் என்பதால் அதிக ஆர்ப்பாட்டம், கேள்விகள் இல்லாது முடிந்த நிகழ்வு. இதிலே அந்திமக்கடன்களை செய்யும் பொறுப்பில் விடப்பட்ட நிறுவனம் / முகவர் பெரும் தொகையை ஆட்டையை போட்டது வேறு ஒரு கதை.
எட்டுச்செலவு, பிண்டம் வைத்து, சாம்பல் கரைத்து, மூன்று அந்தணர்கள் வீட்டுக்கு வந்து துடக்கு கழித்து , விருந்தோம்பல் நடந்து ...இப்படி பல நிகழ்வுகள்.
எனக்கு பெரிதாக இவை குறித்த பின்னணியோ அல்லது தெளிவோ கிடையாது. 
இந்த படிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறன்.

சரி இனி இரண்டாவது மரணத்துக்கு வருவோம்.
நண்பரின் தாயார். ஊரிலே சாதாரணாமாய் இருந்த குடும்பம் (காரணத்தோடு தான் இதையும் சொல்லி வைக்கிறேன்), அன்னையார் புற்றுநோய் காரணாமாக 80 சொச்ச வயதில் இயற்கை எய்தி விட்டார்.
மிக நீண்ட காலமாகவே தேக ஆரோக்கியம் நல்லாய் இருக்க வில்லை. அடிக்கடி வைத்தியசாலையி, அவசரப்பிரிவு என்று தான் நாட்கள் ஓடியது.
அவரின் பிள்ளைகள் எனது நண்பர் உட்பட பெரிய பெரிய தொழில்களில் வசதியான வாழ்க்கை.
அன்னையாரின் மரணம் நிகழ்ந்தது 2 கிழமைகளுக்கு முன்னம். அவர்கள் அந்த மரணத்தை கையாண்ட விதம், மிகுதி உள்ள சடங்குககளை அவர்கள் கையாள எடுக்கும் முடிவுகள், உரையாடல்கள்  மனதை உருத்திக்கொண்டு இருக்கிறது. அதுவே இதை எழுத காரணமும்....

பொதுவாகவே இவர்கள் அதி உச்ச ஆங்கில மோகம் கொண்டவர்கள், குழந்தைகளின் பெயர்கள் முதல்கொண்டு வீட்டில் அன்றாடம் கதைக்கும் நுனிநாக்கு ஆங்கில உரையாடல் வரை.

அந்திம கிரிகைகள் குறித்து கார்ப்பரேட் மீட்டிங் ரேஞ்சில் தான் இவர்கள் உரையாடல்கள் முடிவுகள் அமைந்திருந்தன. 
இதோ அவர்களின் சில பரிந்துரைகளும் சிபாரிசுகளும் 
அம்மாவுக்கு மிகவும் பெறுமதி கூடிய "மஹோகணி" பலகையிலான ஒரு சவப்பெட்டி - $3,000
அம்மாவுக்கு பார்க்குமிடமெல்லாம் வனப்பில் ஆழ்த்தக்கூடிய மலர் வளைய அலங்காரங்கள் - $4,000
தேவாரம், திருவாசகம் ஓதுவார் இல்லாமல் பிள்ளைகளே பாடிய சிவ புராணம் 
இப்படி இதுவரையில் குறைசொல்லமுடியாத அளவிட்கு நேர்த்தியான ஏற்பாடுகள்.

அடுத்த கட்டமாக, அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைக்க தீர்மானம், இப்போதைக்கு இந்தியா போக முடியாது. ஆனால் அஸ்தியை கரைக்காமல் வீட்டில் துடக்கு கழிக்க முடியாது. . கொரோனா முடிந்தால் , நிலைமை சுமூகமாகினால் கங்கையில் அஸ்தி கறைக்கலாம், அது வரையிலும் நான் அம்மாவின் அஸ்தியை வீட்டில் வைத்திருக்கிறேன். இது அவர்களின் மூத்த மகனின் நிலைப்பாடு. இதற்கு சில  குடும்ப பெண்கள் போர்க்கொடி. காரணம் அம்மாவின் இறந்த நேரத்தின் பிரகாரம் சில "சம்பிரதாய சவால்கள்". 
பஞ்சாங்கம் பார்த்ததில் (நட்சத்திரம், ராசி, யோகம், கரணம், திதி ) 
"பஞ்சமியில் " இறப்பு நிகழ்ந்ததால் - அம்மாவின் ஆத்மா பூமியிலேயே தங்கி இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். அவர்கள் இறந்து விட்டோம் என்ற எண்ணமே இல்லாமல், அடுத்த நிலை நோக்கிய பயணம் இல்லாமல் அருவமாக வீட்டுக்குளேயே சுற்றி வருவார்கள் எனவும், இவர்களால் பல கஷ்டங்கள் குடும்பத்தாருக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் "சாஸ்திரம்" சொல்ல... வீட்டில் ஏகப்பட்ட 
தீர்க்கமில்லாத கலந்துரையாடல்களோடு நாட்கள் போய்க்கொண்டு இருக்கிறது.
சரி அப்படியென்றால், அம்மாவின் அஸ்தியை கனடாவில் சமுத்திரத்தோடு கலக்கும் ஒரு அருவியான செயின்ட். லாரன்ஸ் நதியில் கொண்டு சென்று காழ்ப்போம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
சுமார் 7, 8 மணித்தியால பயணம் அது. தவிர கொரோனா நிலவரங்களால் எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியாது.
அதோடு வந்தது இன்னும் ஒரு  யோசனை, டொரோண்டோ ஹார்பர் (f )பிரான்ட் அங்கு ஒரு பெரிய படகை வாடகைக்கு அமர்த்தி, அவர்களோடு பேசிக்கதைத்து , ஐயரையும் கூட்டிக்கொண்டு 2 மணித்தியால படகு பயணத்தில் "இன்னிஸ்வில்" தாண்டிய ஒரு ஏரியில் படகில் இருந்தே அஸ்தியை கலைக்கும் திட்டம்!!!
இதற்கான செலவு 6 ஆயிரம் மட்டில் வருமாம்.

இப்படியான யோசனைகளின் ஆதாரம் என்னவென்றால் மற்றைய சராசரி "தமிழர்களை" போல நாங்கள் காரியங்கள் செய்ய மாட்டோம். எமக்கென ஒரு அந்தஸ்து இருக்கிறது என்ற மனோநிலை மட்டுமே.
இதை அவர்கள் வாயாலேயே பல தடவைகள் சொல்லிவிட்டார்கள்.

பாவம் ஐயர், திக்கு முக்காடிப்போய் இருக்கிறார். அவரால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாது கேட்டு விட்டார்.
இப்படியான விசித்திரமான யோசனைகளை எல்லாம் யார் உங்களுக்கு தருகிறார்கள் என்று...

எப்படியோ இவர்கள் இறந்து போன அம்மாவுக்கு $$$$$ செலவு செய்து அவர்களின் அன்பையும், தங்களின் குடும்ப "அந்தஸ்தையும்" காட்ட நினைக்கிறார்கள்.
       
இந்த சம்பவங்களுக்கு இங்கே தான் ஒரு ட்வீஸ்ட்டு. 
கூடவே  ஒரு ஞானம்... வாட்சாப் குரூப்பில் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு கோரிக்கை, உங்களுக்கு தெரிந்த தாயக மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் சிலவற்றின் தொலைபேசிகளை தந்து உதவுங்கள் அம்மாவின் பெயரால் ஒரு அன்ன தானம் செய்யப் போகிறோம்.
இதுக்கு ஒதுக்கப்பட்ட நிதி  ஆயிரம் ($1,000) டாலர்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பில் இருக்கும்  ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், வன்னியில் இருக்கும் ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், இப்படி 3 தெரிவுகள் ... பல "வாட்ஸாப்" பதிவுகள்.
எதோ ஒரு நல்ல காரியம் செய்கிறார்கள் என்ற சந்தோசம் இருந்தாலும் நிறையவே பணத்தை "பந்தா" காட்டுவதில் வீணடிக்கிறார்களே என்ற விசனம். தவிர இருக்கும் போது அம்மாவுக்கு செய்யாததை அவர் இறந்த பின் செய்ய நினைக்கிறார்களா என்றும் கேள்வி?

சரி இதை எல்லாம் கடந்து, சரியான, பொதுவான ஈமைக்கிரிகை முறைகள் தான் எவை?
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் குறித்த முறைமைகள் தெரிந்தால் அதனை பதிவிடுங்களேன். 
தெரிந்து கொள்ளலாம். 🙏

ஏன் சசியண்ணா..சப்பல் றையிட்டில் ஓரளவுக்கு நியாயமான விலை கழிவில் தானே கொடுத்தார்கள்..

உண்மையில் பெற்றார் (அம்மாக்கள்) இருக்கும் போது பார்க்காதவர்கள் இல்லாத போது எடுப்பு காட்டுகிறது வழமையாக வந்துட்டு.

மற்றும் இந்த படகு பயண றாமாக்கள் எல்லாம் எங்கள் வீட்டிலும் ஆரம்பித்து கடசியில் எனது நலன் கருதி இடையில் விடு பட்டு விட்டது..ஆனால் அந்தணர்களின் கூத்து அது தொடர் நவீனம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி யாயினி,
நீங்கள் கூறுவதும் உண்மை தான். இருந்தாலும் வரும் வாடிக்கையாளர்களின் மனோ நிலை , அளப்பரை குறித்து அறிந்து கொண்டால் அவர்களும் இல்லாத பொல்லாத சில பண விரயமாகும்  "புதிய சடங்குகளை " அறிமுகப்படுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் அம்மாவின் செத்த வீட்டுக்கு வந்த தம்பியின் அலுவலக ஊழியர்கள் சுடலைக்கு போய் வந்து குளிக்காமலே சாப்பிட்டு விட்டு தான் போனார்கள் ....எனக்கும் அந்த நேரம் கொஞ்சம் அதிர்ச்சியாய்த் தான் இருந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இழப்புக்குரிய உறவின் விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து அதன் பிரகாரம் நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் நிறுத்தி இறுதி நிகழ்வை செய்வது சிறப்பானது.

முன்கூட்டிய விருப்பம் அறிதல் சாத்தியம் இல்லை என்றால் மிகவும் நெருங்கிய உறவு அல்லது உறவுகளின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுத்து (எதிர்காலத்தில் சட்டசிக்கல்களும் வராத வகையில்) இறுதி நிகழ்வை செய்யலாம்.

சாத்திரம், சம்பிரதாயம், இதர ஒழுங்குகள் எல்லாம் இதன் பின்னால் வரட்டும். மற்றும்படி எப்படி செய்யலாம் என்று கேட்டால் ஆளாளுக்கு தங்கள் நம்பிக்கைகள், சுய விருப்பங்கள், தேவைகள், திருப்தியின் அடிப்படையில் ஆயிரத்து எட்டு வழிவகைகள் கூறுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

அல்வாயன்... உங்களது, மகனின்...  இழப்பிற்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.  
தந்தை.. மகனை... இழப்பது, கொடுமையிலும், கொடுமை  என்று சொல்வார்கள்.

வருடங்கள் தான்... மன வேதனையை, ஆற்றும்.
அதிலிருந்து... நீங்கள், விரைவில் மீண்டு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.