Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஒரு சாவும் அதன் சம்பிரதாயங்களும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு 
நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. 
சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். 

முதல் மரணம் - 
மனைவியின் சித்தப்பா 
எதிர்பாராத மாரடைப்பினால் கொரோனா உச்ச மாதங்களில் நிகழ்ந்த ஒன்று.
ஊரே கூடி அழுது, முடிவுக்கு வந்த வாழ்க்கை இறுதிப்பயணம் அதுவல்ல, மாறாக 10 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கு கொண்டு சொற்ப சம்பிரதாயங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஈமை கடன்.
இரண்டு மகள்கள், மனைவி மட்டுமே இருந்த குடும்பம் என்பதால் அதிக ஆர்ப்பாட்டம், கேள்விகள் இல்லாது முடிந்த நிகழ்வு. இதிலே அந்திமக்கடன்களை செய்யும் பொறுப்பில் விடப்பட்ட நிறுவனம் / முகவர் பெரும் தொகையை ஆட்டையை போட்டது வேறு ஒரு கதை.
எட்டுச்செலவு, பிண்டம் வைத்து, சாம்பல் கரைத்து, மூன்று அந்தணர்கள் வீட்டுக்கு வந்து துடக்கு கழித்து , விருந்தோம்பல் நடந்து ...இப்படி பல நிகழ்வுகள்.
எனக்கு பெரிதாக இவை குறித்த பின்னணியோ அல்லது தெளிவோ கிடையாது. 
இந்த படிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறன்.

சரி இனி இரண்டாவது மரணத்துக்கு வருவோம்.
நண்பரின் தாயார். ஊரிலே சாதாரணாமாய் இருந்த குடும்பம் (காரணத்தோடு தான் இதையும் சொல்லி வைக்கிறேன்), அன்னையார் புற்றுநோய் காரணாமாக 80 சொச்ச வயதில் இயற்கை எய்தி விட்டார்.
மிக நீண்ட காலமாகவே தேக ஆரோக்கியம் நல்லாய் இருக்க வில்லை. அடிக்கடி வைத்தியசாலையி, அவசரப்பிரிவு என்று தான் நாட்கள் ஓடியது.
அவரின் பிள்ளைகள் எனது நண்பர் உட்பட பெரிய பெரிய தொழில்களில் வசதியான வாழ்க்கை.
அன்னையாரின் மரணம் நிகழ்ந்தது 2 கிழமைகளுக்கு முன்னம். அவர்கள் அந்த மரணத்தை கையாண்ட விதம், மிகுதி உள்ள சடங்குககளை அவர்கள் கையாள எடுக்கும் முடிவுகள், உரையாடல்கள்  மனதை உருத்திக்கொண்டு இருக்கிறது. அதுவே இதை எழுத காரணமும்....

பொதுவாகவே இவர்கள் அதி உச்ச ஆங்கில மோகம் கொண்டவர்கள், குழந்தைகளின் பெயர்கள் முதல்கொண்டு வீட்டில் அன்றாடம் கதைக்கும் நுனிநாக்கு ஆங்கில உரையாடல் வரை.

அந்திம கிரிகைகள் குறித்து கார்ப்பரேட் மீட்டிங் ரேஞ்சில் தான் இவர்கள் உரையாடல்கள் முடிவுகள் அமைந்திருந்தன. 
இதோ அவர்களின் சில பரிந்துரைகளும் சிபாரிசுகளும் 
அம்மாவுக்கு மிகவும் பெறுமதி கூடிய "மஹோகணி" பலகையிலான ஒரு சவப்பெட்டி - $3,000
அம்மாவுக்கு பார்க்குமிடமெல்லாம் வனப்பில் ஆழ்த்தக்கூடிய மலர் வளைய அலங்காரங்கள் - $4,000
தேவாரம், திருவாசகம் ஓதுவார் இல்லாமல் பிள்ளைகளே பாடிய சிவ புராணம் 
இப்படி இதுவரையில் குறைசொல்லமுடியாத அளவிட்கு நேர்த்தியான ஏற்பாடுகள்.

அடுத்த கட்டமாக, அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைக்க தீர்மானம், இப்போதைக்கு இந்தியா போக முடியாது. ஆனால் அஸ்தியை கரைக்காமல் வீட்டில் துடக்கு கழிக்க முடியாது. . கொரோனா முடிந்தால் , நிலைமை சுமூகமாகினால் கங்கையில் அஸ்தி கறைக்கலாம், அது வரையிலும் நான் அம்மாவின் அஸ்தியை வீட்டில் வைத்திருக்கிறேன். இது அவர்களின் மூத்த மகனின் நிலைப்பாடு. இதற்கு சில  குடும்ப பெண்கள் போர்க்கொடி. காரணம் அம்மாவின் இறந்த நேரத்தின் பிரகாரம் சில "சம்பிரதாய சவால்கள்". 
பஞ்சாங்கம் பார்த்ததில் (நட்சத்திரம், ராசி, யோகம், கரணம், திதி ) 
"பஞ்சமியில் " இறப்பு நிகழ்ந்ததால் - அம்மாவின் ஆத்மா பூமியிலேயே தங்கி இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். அவர்கள் இறந்து விட்டோம் என்ற எண்ணமே இல்லாமல், அடுத்த நிலை நோக்கிய பயணம் இல்லாமல் அருவமாக வீட்டுக்குளேயே சுற்றி வருவார்கள் எனவும், இவர்களால் பல கஷ்டங்கள் குடும்பத்தாருக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் "சாஸ்திரம்" சொல்ல... வீட்டில் ஏகப்பட்ட 
தீர்க்கமில்லாத கலந்துரையாடல்களோடு நாட்கள் போய்க்கொண்டு இருக்கிறது.
சரி அப்படியென்றால், அம்மாவின் அஸ்தியை கனடாவில் சமுத்திரத்தோடு கலக்கும் ஒரு அருவியான செயின்ட். லாரன்ஸ் நதியில் கொண்டு சென்று காழ்ப்போம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
சுமார் 7, 8 மணித்தியால பயணம் அது. தவிர கொரோனா நிலவரங்களால் எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியாது.
அதோடு வந்தது இன்னும் ஒரு  யோசனை, டொரோண்டோ ஹார்பர் (f )பிரான்ட் அங்கு ஒரு பெரிய படகை வாடகைக்கு அமர்த்தி, அவர்களோடு பேசிக்கதைத்து , ஐயரையும் கூட்டிக்கொண்டு 2 மணித்தியால படகு பயணத்தில் "இன்னிஸ்வில்" தாண்டிய ஒரு ஏரியில் படகில் இருந்தே அஸ்தியை கலைக்கும் திட்டம்!!!
இதற்கான செலவு 6 ஆயிரம் மட்டில் வருமாம்.

இப்படியான யோசனைகளின் ஆதாரம் என்னவென்றால் மற்றைய சராசரி "தமிழர்களை" போல நாங்கள் காரியங்கள் செய்ய மாட்டோம். எமக்கென ஒரு அந்தஸ்து இருக்கிறது என்ற மனோநிலை மட்டுமே.
இதை அவர்கள் வாயாலேயே பல தடவைகள் சொல்லிவிட்டார்கள்.

பாவம் ஐயர், திக்கு முக்காடிப்போய் இருக்கிறார். அவரால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாது கேட்டு விட்டார்.
இப்படியான விசித்திரமான யோசனைகளை எல்லாம் யார் உங்களுக்கு தருகிறார்கள் என்று...

எப்படியோ இவர்கள் இறந்து போன அம்மாவுக்கு $$$$$ செலவு செய்து அவர்களின் அன்பையும், தங்களின் குடும்ப "அந்தஸ்தையும்" காட்ட நினைக்கிறார்கள்.
       
இந்த சம்பவங்களுக்கு இங்கே தான் ஒரு ட்வீஸ்ட்டு. 
கூடவே  ஒரு ஞானம்... வாட்சாப் குரூப்பில் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு கோரிக்கை, உங்களுக்கு தெரிந்த தாயக மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் சிலவற்றின் தொலைபேசிகளை தந்து உதவுங்கள் அம்மாவின் பெயரால் ஒரு அன்ன தானம் செய்யப் போகிறோம்.
இதுக்கு ஒதுக்கப்பட்ட நிதி  ஆயிரம் ($1,000) டாலர்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பில் இருக்கும்  ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், வன்னியில் இருக்கும் ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், இப்படி 3 தெரிவுகள் ... பல "வாட்ஸாப்" பதிவுகள்.
எதோ ஒரு நல்ல காரியம் செய்கிறார்கள் என்ற சந்தோசம் இருந்தாலும் நிறையவே பணத்தை "பந்தா" காட்டுவதில் வீணடிக்கிறார்களே என்ற விசனம். தவிர இருக்கும் போது அம்மாவுக்கு செய்யாததை அவர் இறந்த பின் செய்ய நினைக்கிறார்களா என்றும் கேள்வி?

சரி இதை எல்லாம் கடந்து, சரியான, பொதுவான ஈமைக்கிரிகை முறைகள் தான் எவை?
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் குறித்த முறைமைகள் தெரிந்தால் அதனை பதிவிடுங்களேன். 
தெரிந்து கொள்ளலாம். 🙏

 • Like 3
 • Sad 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது!
எங்கட சனம் நினைச்சா வடக்கு கிழக்கில சனம் வறுமையின்றி வாழலாம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

சரி இதை எல்லாம் கடந்து, சரியான, பொதுவான ஈமைக்கிரிகை முறைகள் தான் எவை?
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் குறித்த முறைமைகள் தெரிந்தால் அதனை பதிவிடுங்களேன். 
தெரிந்து கொள்ளலாம். 🙏

சடங்குகளுக்கு என்று ஒரு தேவை இருந்தது.
அதனால் பலர் வாழ்ந்தார்கள்.
இப்போ அதைப் பற்றிய கவலைகள் இல்லை.
ஊரிலேயே எல்லாம் குறிகிவிட்டது.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"அற்பனுக்கு பவிசு வந்தால் .....அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் "  என்கிற கதை போல
ஓரளவு குறைந்த செலவில்  காரியத்தை முடித்து விட்டு  அதை  கஷ்ட படும் பிள்ளைகளை பராமரிக்கும் நிறுவங்களுக்கு கல்வி செலவுக்கு  அனுப்புவதே சிறந்தது .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சடங்குகளுக்கு என்று ஒரு தேவை இருந்தது.
அதனால் பலர் வாழ்ந்தார்கள்.
இப்போ அதைப் பற்றிய கவலைகள் இல்லை.
ஊரிலேயே எல்லாம் குறிகிவிட்டது.

இருந்தாலும் ஒரு சில வழமையான சடங்குகள் இன்னும் இருக்கின்றனவே .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகிறது.  எதுவாக இருந்தாலும் ஒருவர் இறந்த பின் அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் செயல்களைப் பார்த்தால் எமக்கு கோபம், ஆதங்கம், கவலை என பல உணர்வுகள் எழுவது வழக்கம் தான். இதற்கு ஒரு வேளை  நாம் எல்லோருமே நாம்  இறந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு உயில் எழுதி வைத்தால் என்ன என்று தோன்றுகிறது.  என்னைக் கேட்டால் பெட்டியைத் திறந்து வைத்து ஆவடியம் காட்டாமல் மரியாதையாய் மிகக் குறைந்த செலவில் எல்லாவற்றையும் முடித்து விட்டால் ஒருவருக்கும் சிக்கல் இல்லை!  😀

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தோழி said:

நல்ல கருத்து .. கையில் பச்சை இல்லை. 
நான் எனக்கு எழுதக்கூடிய உயில் :) ... 
எனக்கு பிடித்த தமிழ் இசையை தவழ விடுங்கள்.
என்னை சுற்றி வாழ்ந்த என் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு என் வாழ்க்கையை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு பெரிய தொரு நன்றி தெரிவியுங்கள். 
என் பெயரில் 100 மரங்கள் நடுங்கள். அது நல்ல படியாக வளர்வதை உறுதி செய்யுங்கள்.

முடிந்தால் தம்பட்டமில்லாமல் கொஞ்ச தான தர்மங்கள் ...அவர்களோடு சேர்ந்து வழங்கி மகிழுங்கள். 

முடியும் !!! 🙏

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

அற்புதம்! சிறப்பான சிந்தனை !  🙏

எனக்கும்   தொடர்ந்து தாயகத்தில் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இம்முறை போன சில பாடசாலைகளுக்கு மரங்கள் வாங்கிக் கொடுக்க முடிந்தது. நானும் இதை  உயிலில் சேர்த்துக் கொள்ளலாம்!:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 17:13, Sasi_varnam said:

கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு 
நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. 
சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். 

சசிவர்ணம்... இப்படி ஒரு தலைப்பை, திறந்தமைக்கு பாராட்டுக்கள்.
பலரும் தொட விரும்பாத,  விடயம் என்றாலும்... 
இதில் உள்ள சந்தேகங்களும், தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளமை..
"காலம் செய்த கோலம்"  என்றுதான்... கருத வேண்டும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு... நான் வாழும் நகரத்தில்,
தமிழர் என்ற முறையில்... அறிமுகமான ஒருவர் இறந்து விட்டார்.   

இங்கு... தமிழரின் இறுதிச்  சடங்குகளுக்கு மட்டும்,  
அவர் நண்பராகவோ... உறவினராகவோ இருக்கா விட்டாலும்...
அந்த ஊரில் வசிக்கும், அனைவரும் செல்வர்.

இப்படியான... ஒரு இறுதிச் சடங்கிற்கு என்று, அந்த ஊர் நகரசபையே..
தரமான மண்டபங்களை வைத்திருந்த போதும்...
அவரின் உடலை... பிரத்தியேகமாக, ஒரு  மண்டபம் வாடகைக்கு எடுக்கப் பட்டு,
அந்த  இறுதிக் கிரியைகளை  நடத்தி முடித்த பின்... 
அவரின் உடல் இருந்த,  பெட்டி மூடப்பட்டு, கொண்டு சென்ற பின்...
ஒவ்வொருவராக... வீட்டிற்கு செல்ல முற்பட்ட  போது...

கொஞ்சம் பொறுங்கோ... சாப்பிட்டுட்டு,  போங்கோ... 
என்று, சிலர் அழைத்தார்கள்.
இதென்ன செத்த வீட்டில்... சாப்பாடா? என்று, மனதில்.. பெரிய கேள்வி எழுந்தாலும்,
நாசூக்காக.. மறுத்து விட்டு, சென்று விட்டோம்.

நான்..சொல்வதை, நம்பாவிடில்... பாஞ்ச் அண்ணை சாட்சி.
அவரும், அந்தச் சடங்கில் கலந்து கொண்ட ஒரு ஆள்.

பிற் குறிப்பு:  இங்கு... ஜேர்மன் ஆட்களின், மரணச்  சடங்குகள் முடிந்த பின்...
நெருங்கிய உறவினர்கள்.. ஒரு உணவு விடுதியில், சாப்பிடுவது ஒரு சம்பிரதாயம்.
அதனைப் பார்த்து,  இவர்கள் செய்தது... எனக்கு, மிகவும் மன உறுத்தலாக இருந்தது.

உங்கள் இடத்தில்... இப்படியான, சம்பவம் நடந்து இருக்கா❓

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி தமிழ் சிறி அண்ணர்,
இங்கே கத்தோலிக்க நண்பர்கள் சிலரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளேன்.
அவர்களின் இறுதி சடங்குகள் முடிந்து,  மயானம் களைந்து சென்று, எல்லோரும் ஒரு இடத்தில் கூடி (மண்டபத்தில்) ஒரு நேர உணவை உண்ணுவது வழமை.  Funeral Lunch என்றும் இதை கூறுவார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊரில் செத்தவீட்டுக்கு போய் காட்டை(எரிக்கும் இடம்) போய் வந்தால் இறப்பு நிகழ்ந்த வீட்டில் உறவினர் மதிய உணவு வழங்குவர். இதனை வெச்சு குடித்தல்/சாப்பிடல் என்று சொல்றவை. கோவில் விரதகாறர் சாப்பிடமாட்டினம்.
இதில் பங்குபெறுபவர்களுக்கு தான் எட்டாக்கு/எட்டுச் செலவு சொல்லி செய்வினம். செத்த வீட்டை வந்த எல்லோருக்கும் அந்தியேட்டி சொல்லி செய்வினம். 

Link to post
Share on other sites
2 minutes ago, ஏராளன் said:

ஆம் இப்படி கனடாவில் ஒரு உறவினரின் செத்த வீட்டில் நடைபெற்றது. பிரேதம் எரிக்கப்பட்ட பின் நெருங்கிய உறவினர்கள் வீடு சென்று முழுகிய பின் செத்த வீடு நடைபெற்ற வீட்டில் சாப்பிடுவார்கள். உறவினர் யாராவது உணவை சமைத்தோ/ உணவைகத்தில் எடுத்தோ பரிமாறப்பட்டது. 
அந்தியேட்டி (31) மண்டபத்தில் செத்த வீட்டுக்கு வந்த அனைவருக்கும் சொல்லி செய்யப்பட்டது. ஊரிலும் இப்படி செய்ததாக தான் நினைவில் உள்ளது. 8இன் போது ஐயரின் கிரியை வீட்டில் நடைபெற்றதையும் சொல்ல வேண்டும்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் கிறிஸ்தவர்கள் மையத்தை (பொடி) அடக்கம் செய்தபின் வந்து கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்குவார்கள். நானும் கலந்து கொண்டிருக்கிறேன்......!

முன்பு எமது வழக்கப்படி முதல்நாளே மேளமடிப்பவர்கள், அவரவரது குடும்ப சலவைத்தொழிலாளி,சவரத்தொழிலாளி, அறிவித்து மொந்தன் வாழை இரண்டு வாசலில் கட்டி மயானத்தில் இருப்பவரிடம் இன்னார் என்று அறிவித்து, விறகுகள் எல்லாம் கொண்டுபோய் குடுத்து விட்டு வருவார்கள்.அன்று சலவைத்தொழிலாளி வெள்ளை கட்ட, சவரத்தொழிலாளி கொல்லி போடுபவருக்கு மொட்டை அடிக்க அக்கம் பக்கத்து பெண்டுகள் பிள்ளைகள் எல்லாம் வெளியால எட்டி எட்டி பார்க்க செத்தவீடு களைகட்ட ஆரம்பித்து விடும்.   காலையில் ஐயர் வந்தாரெண்டால் ( இதற்கு தனியான ஐயர் இருக்கிறார்). பிணத்துக்கு உரிய கிரியைகள் செய்து பின் அரப்பெண்ணை வைத்து வாய்க்கரிசி போட்டு (இதை சவரத்தொழிலாளி செய்து வைப்பார்.அதில் வரும் வாய்க்கரிசி சில்லறை எல்லாம் அவருக்கு). தோயவாத்து சவப்பெட்டிக்குள் பிணத்தை வைத்து பின் சிவபுராணம் படித்து சுண்ணமிடித்து மேலும்பல சடங்குகள் செய்து, பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாம் நெய்ப்பந்தம் பிடித்து பெண்கள் எல்லாம் ஒப்பாரி வைத்து குளறி இழுபறிப்பட பெட்டியை மூடி பெரிய பெண்கள் அதை சுற்றி வந்து மாரடிச்சு பாடையில்  ஏற்றி தூக்க, கொள்ளி வைப்பவர் நெருப்புடன் கூடிய கொள்ளிப்பானையை எடுத்து கொண்டு முன்னே நடக்க வளவு வேலியை வெட்டி அந்த வழியால் பாடை/தண்டிகை  தெருவுக்கு வந்து சுடலை நோக்கி பிரயாணப்படும்.அநேகமாய் ஐந்து மணிநேரம் செல்லும். அந்நேரம் வசதியுள்ளவர்கள் சுடலைவரை நிலபாவாடை அதாவது பிணம் தூக்கி வருபவர்கள் நிலத்தில்  நடக்காமல் சலவைத்தொழிலாளி வெள்ளை வேட்டிகளை விரித்துகொண்டு வருவார். எதிர்ப்படும் சந்திகளில் நின்று பறைமேளம் பயங்கரமாய் அடிக்க தாறுமாறாய் வெடி கொளுத்துவார்கள்.....!

                                       இப்படியாகத்தானே  சென்று சுடலையை அடைந்ததும் அங்கு ஏற்கனவே தயாராய் இருக்கும் சிதையில் இடப்பக்கமாய் சுற்றிவந்து பெட்டியை வைத்து மூடியை திறந்து அங்கும் சில சடங்குகள் செய்து வாய்க்கரிசி எல்லாம் போட்டு கொள்ளி போடுபவர் நீர்ப்பாணையை தோளில் வைத்து சவரத்தொழிலாளியின் சொற்படி அதே இடப்பக்கமாய் மூன்றுதரம் சுத்த அவரும் ஒவ்வொரு சுத்துக்கும் கொடுவாக் கத்தியால் பானையை கொத்தி துவாரமிட்டு தண்ணீர் ஒழுக ஒழுக வந்து அதை பின்பக்கமாய் நிலத்தில் போட்டு உடைத்து விழுந்து வணங்கிய பின் கொள்ளியை (கொள்ளி பெரும்பாலும் சந்தனக்கட்டையாக இருக்கும்)  எடுத்து தலைமாட்டில் நெருப்பு வைத்து விட்டு திரும்பிப்பாராமல் சுடலையில் இருக்கும் மண்டபத்தில் வந்து இருப்பார். இப்பொழுது மயானம் காப்பவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு பெரிய மரக்குத்தியை பிணத்தின் மேல் நெஞ்சாங் கட்டையாக வைத்து கூடி நின்று கவனமாக ஏரிப்பார்கள்....!

                                         இந்நேரத்தில் மண்டபத்தில் வைத்து உரிமைக்காரர் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் எல்லோருக்கும் அவரவருக்கான பணத்தை கொடுத்து கணக்கு தீர்ப்பார்கள். அங்கு வைத்தே எட்டுச் சிலவு எல்லாத்தையும் அறிவிப்பார்கள். பின் எல்லோரும் களைந்து செல்ல அன்று அல்லது அடுத்தநாள் சவரத்தொழிலாளியின் வழிகாட்டலில் காடாத்து நடைபெறும்.....!

                                    வெளிநாடுகளில் அரைமணி நேரமோ, ஒருமணி நேரமோ குடுப்பார்கள் அதற்குள் சடங்குகள் செய்யுமாறு. அந்தந்த இடத்துக்கு ஏற்றவாறு சம்பிரதாயமாக செய்து முடிப்பார்கள். அதுவும் மிக சுத்தமான ஹோல்களில் நடப்பதால் அதை அசுத்தம் செய்யாது செய்யவேண்டிய கடப்பாடு உண்டு. சிலநேரங்களில் அந்திரட்டி வந்தாலும் மையம் எரித்த சாம்பல் கைக்கு வந்து சேராது.  நம் சமூகம் அதற்கும் தயாராக மாறி விட்டது.......! 

நல்லதொரு திரி சசி ....நன்றி....!

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிராமணர்கள்/ஐயர்மார் செத்தவீடு செய்ய வரமாட்டினம், சைவக்குருக்கள் தான் வாறவை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

 8இன் போது ஐயரின் கிரியை வீட்டில் நடைபெற்றதையும் சொல்ல வேண்டும்.

ஆம்... ஏராளான். பூணுல்  போட்ட  ஐயர், 31 அன்று... 
சாம்பலை, கீரிமலையில்  கரைத்த பின்தான், வீட்டுக்குள் வருவார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

கொஞ்சம் பொறுங்கோ... சாப்பிட்டுட்டு,  போங்கோ... 

என்று, சிலர் அழைத்தார்கள்.
இதென்ன செத்த வீட்டில்... சாப்பாடா? என்று, மனதில்.. பெரிய கேள்வி எழுந்தாலும்,
நாசூக்காக.. மறுத்து விட்டு, சென்று விட்டோம்.

நான்..சொல்வதை, நம்பாவிடில்... பாஞ்ச் அண்ணை சாட்சி.
அவரும், அந்தச் சடங்கில் கலந்து கொண்ட ஒரு ஆள்.

பிற் குறிப்பு:  இங்கு... ஜேர்மன் ஆட்களின், மரணச்  சடங்குகள் முடிந்த பின்...
நெருங்கிய உறவினர்கள்.. ஒரு உணவு விடுதியில், சாப்பிடுவது ஒரு சம்பிரதாயம்.
அதனைப் பார்த்து,  இவர்கள் செய்தது... எனக்கு, மிகவும் மன உறுத்தலாக இருந்தது.

உங்கள் இடத்தில்... இப்படியான, சம்பவம் நடந்து இருக்கா❓

பொதுவாக எரிக்கிற இடத்த்துக்கு போகிறவர்களை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போக சொல்வது இங்கு கனடாவில் வளமை.  எரிப்பதற்கான பட்டன் அமத்தியதும், வந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வெளிக்கிடும் போது சாப்பிட வருமாறு அழைப்பார்கள்.  நெருங்கிய உறவுகள் நண்பர்கள் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவது வளமை.
ஒரு தடவை வேறு ஒரு சிட்டியில் நடந்த நிகழ்வில் பல உறவுகள் வேறு சிட்டிகளில் இருந்து வந்து இருந்தனர் அதனால், பக்கத்தில் உள்ள அதற்க்கான மண்டபத்தில் சாப்பாடு கொடுத்தார்கள்.
சிலர் தோயாமல் சாப்பிட மாட்டார்கள்.  பலர் பழக்கப்படுத்தி விட்டார்கள்

சடங்குகளில் ஊருக்கு ஊர் சிறு சிறு வித்தியாசம் இருந்திருக்கும்.  இப்போது நாட்டுக்கு நாடும் சில வித்தியாசங்கள் (வசதிகளுக்கு ஏற்ற மாதிரி).  சில இடங்களில் இவை எல்லாம் குழப்பப்பட்டு சாம்பார் ஆகி விடுகிறது.  விஷயம் தெரிஞ்ச ஒராள் இல்லை எண்டால், 10  பேர் 10  மாதிரி சொல்லுவினம். 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Sabesh said:

பொதுவாக எரிக்கிற இடத்த்துக்கு போகிறவர்களை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போக சொல்வது இங்கு கனடாவில் வளமை.  எரிப்பதற்கான பட்டன் அமத்தியதும், வந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வெளிக்கிடும் போது சாப்பிட வருமாறு அழைப்பார்கள்.  நெருங்கிய உறவுகள் நண்பர்கள் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவது வளமை.
ஒரு தடவை வேறு ஒரு சிட்டியில் நடந்த நிகழ்வில் பல உறவுகள் வேறு சிட்டிகளில் இருந்து வந்து இருந்தனர் அதனால், பக்கத்தில் உள்ள அதற்க்கான மண்டபத்தில் சாப்பாடு கொடுத்தார்கள்.
சிலர் தோயாமல் சாப்பிட மாட்டார்கள்.  பலர் பழக்கப்படுத்தி விட்டார்கள்

Dancing Pallbearers - Wikipedia

நான், வசிக்கும் இடத்தில் .... எரிக்கின்ற இடம், 
அந்த மண்டபத்தின் அருகில் இருந்தாலும்,
எப்போ.. எரிப்பார்கள், என்று சொல்ல மாட்டார்கள்.  
சாம்பலை... குறிப்பிட்ட ஒரு திகதியில் வந்து, வாங்கிச் செல்லுமாறு கூறுவார்கள்.  
ஜேர்மனியின், மற்ற மாகாணங்களில்... வேறு மாதிரி இருக்கலாம்.

சமயக் கிரியைகள் முடிந்த பின்பு...
கொள்ளி வைப்பவர், அந்த இடத்திலேயே.. 
சுவியர் சொன்னமாதிரி...  சடலத்தை சுற்றி வந்து, 
சம்பிரதாயங்களை முடித்த பின்...
ஒரு சாம்பிராணி குச்சியை.. அவர் கால் மாட்டில், மெல்ல தொட்டவுடன்...
திரும்பிப் பார்க்காமல், நகர வேண்டும்.

அதற்குப் பின் அந்த உடலை..... நான்கு ஊழியர்கள், பொறுப்பெடுத்து... 
பெட்டியை  மூடி, கொண்டு போனால்... 
திரும்ப... தலை குத்துக்கரணமாக,  நாங்கள் நின்றாலும்... அந்த உடலிருந்து,
சாம்பலைத் தவிர... வேறு எதுகும், திரும்பப் பெற முடியாது.
அது.. இறந்தவரை, அலங்கரிக்க வைத்திருந்த,   
தாலிக்கொடி   போன்ற.... தங்க நகைகளுக்கும் பொருந்தும்.

டிஸ்கி: படம் வேறு நாட்டில்... சுட்டது.  :grin:

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நான், வசிக்கும் இடத்தில் .... எரிக்கின்ற இடம், 
அந்த மண்டபத்தின் அருகில் இருந்தாலும்,
எப்போ.. எரிப்பார்கள், என்று சொல்ல மாட்டார்கள்.  
சாம்பலை... குறிப்பிட்ட ஒரு திகதியில் வந்து, வாங்கிச் செல்லுமாறு கூறுவார்கள்.  
ஜேர்மனியின், மற்ற மாகாணங்களில்... வேறு மாதிரி இருக்கலாம்.

சமயக் கிரியைகள் முடிந்த பின்பு...
கொள்ளி வைப்பவர், அந்த இடத்திலேயே.. 
சுவியர் சொன்னமாதிரி...  சடலத்தை சுற்றி வந்து, 
சம்பிரதாயங்களை முடித்த பின்...
ஒரு சாம்பிராணி குச்சியை.. அவர் கால் மாட்டில், மெல்ல தொட்டவுடன்...
திரும்பிப் பார்க்காமல், நகர வேண்டும்.

அதற்குப் பின் அந்த உடலை..... நான்கு ஊழியர்கள், பொறுப்பெடுத்து... 
பெட்டியை  மூடி, கொண்டு போனால்... 
திரும்ப... தலை குத்துக்கரணமாக,  நாங்கள் நின்றாலும்... அந்த உடலிருந்து,
சாம்பலைத் தவிர... வேறு எதுகும், திரும்பப் பெற முடியாது.
அது.. இறந்தவரை, அலங்கரிக்க வைத்திருந்த,   
தாலிக்கொடி   போன்ற.... தங்க நகைகளுக்கும் பொருந்தும்.

இங்கை பெட்டி மூடும் போது கழட்ட வேண்டியது எல்லாம் கழட்டி விடுவார்கள்.  சமய சம்பிரதாயங்கள் முடிய, ஊழியர்கள் உள்ளே எடுத்து செல்லும் போது  3-4 பேரை உள்ளே அனுமதிப்பார்கள்.  எல்லாம் செட் ஆக்கினதும், கொல்லி வைக்கவேண்டியவரை எப்பிடி எந்த எந்த பட்டன் அமத்தனும் என்று சொல்லுவார்கள்.  அடுத்த நாளே சாம்பல் funeral  home  இல் போய் எடுக்கலாம்.  சிலர் அங்கேயே இருக்க விட்டு கரைக்கும் போது போய் எடுப்பார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"நயினார்... செத்தது... நல்லது,  நல்லது"

மரணச் சடங்கு தலைப்பில்... ஒரு இசை... இருக்க வேண்டும். 

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 11:13, Sasi_varnam said:

கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு 
நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. 
சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். 

முதல் மரணம் - 
மனைவியின் சித்தப்பா 
எதிர்பாராத மாரடைப்பினால் கொரோனா உச்ச மாதங்களில் நிகழ்ந்த ஒன்று.
ஊரே கூடி அழுது, முடிவுக்கு வந்த வாழ்க்கை இறுதிப்பயணம் அதுவல்ல, மாறாக 10 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கு கொண்டு சொற்ப சம்பிரதாயங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஈமை கடன்.
இரண்டு மகள்கள், மனைவி மட்டுமே இருந்த குடும்பம் என்பதால் அதிக ஆர்ப்பாட்டம், கேள்விகள் இல்லாது முடிந்த நிகழ்வு. இதிலே அந்திமக்கடன்களை செய்யும் பொறுப்பில் விடப்பட்ட நிறுவனம் / முகவர் பெரும் தொகையை ஆட்டையை போட்டது வேறு ஒரு கதை.
எட்டுச்செலவு, பிண்டம் வைத்து, சாம்பல் கரைத்து, மூன்று அந்தணர்கள் வீட்டுக்கு வந்து துடக்கு கழித்து , விருந்தோம்பல் நடந்து ...இப்படி பல நிகழ்வுகள்.
எனக்கு பெரிதாக இவை குறித்த பின்னணியோ அல்லது தெளிவோ கிடையாது. 
இந்த படிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறன்.

சரி இனி இரண்டாவது மரணத்துக்கு வருவோம்.
நண்பரின் தாயார். ஊரிலே சாதாரணாமாய் இருந்த குடும்பம் (காரணத்தோடு தான் இதையும் சொல்லி வைக்கிறேன்), அன்னையார் புற்றுநோய் காரணாமாக 80 சொச்ச வயதில் இயற்கை எய்தி விட்டார்.
மிக நீண்ட காலமாகவே தேக ஆரோக்கியம் நல்லாய் இருக்க வில்லை. அடிக்கடி வைத்தியசாலையி, அவசரப்பிரிவு என்று தான் நாட்கள் ஓடியது.
அவரின் பிள்ளைகள் எனது நண்பர் உட்பட பெரிய பெரிய தொழில்களில் வசதியான வாழ்க்கை.
அன்னையாரின் மரணம் நிகழ்ந்தது 2 கிழமைகளுக்கு முன்னம். அவர்கள் அந்த மரணத்தை கையாண்ட விதம், மிகுதி உள்ள சடங்குககளை அவர்கள் கையாள எடுக்கும் முடிவுகள், உரையாடல்கள்  மனதை உருத்திக்கொண்டு இருக்கிறது. அதுவே இதை எழுத காரணமும்....

பொதுவாகவே இவர்கள் அதி உச்ச ஆங்கில மோகம் கொண்டவர்கள், குழந்தைகளின் பெயர்கள் முதல்கொண்டு வீட்டில் அன்றாடம் கதைக்கும் நுனிநாக்கு ஆங்கில உரையாடல் வரை.

அந்திம கிரிகைகள் குறித்து கார்ப்பரேட் மீட்டிங் ரேஞ்சில் தான் இவர்கள் உரையாடல்கள் முடிவுகள் அமைந்திருந்தன. 
இதோ அவர்களின் சில பரிந்துரைகளும் சிபாரிசுகளும் 
அம்மாவுக்கு மிகவும் பெறுமதி கூடிய "மஹோகணி" பலகையிலான ஒரு சவப்பெட்டி - $3,000
அம்மாவுக்கு பார்க்குமிடமெல்லாம் வனப்பில் ஆழ்த்தக்கூடிய மலர் வளைய அலங்காரங்கள் - $4,000
தேவாரம், திருவாசகம் ஓதுவார் இல்லாமல் பிள்ளைகளே பாடிய சிவ புராணம் 
இப்படி இதுவரையில் குறைசொல்லமுடியாத அளவிட்கு நேர்த்தியான ஏற்பாடுகள்.

அடுத்த கட்டமாக, அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைக்க தீர்மானம், இப்போதைக்கு இந்தியா போக முடியாது. ஆனால் அஸ்தியை கரைக்காமல் வீட்டில் துடக்கு கழிக்க முடியாது. . கொரோனா முடிந்தால் , நிலைமை சுமூகமாகினால் கங்கையில் அஸ்தி கறைக்கலாம், அது வரையிலும் நான் அம்மாவின் அஸ்தியை வீட்டில் வைத்திருக்கிறேன். இது அவர்களின் மூத்த மகனின் நிலைப்பாடு. இதற்கு சில  குடும்ப பெண்கள் போர்க்கொடி. காரணம் அம்மாவின் இறந்த நேரத்தின் பிரகாரம் சில "சம்பிரதாய சவால்கள்". 
பஞ்சாங்கம் பார்த்ததில் (நட்சத்திரம், ராசி, யோகம், கரணம், திதி ) 
"பஞ்சமியில் " இறப்பு நிகழ்ந்ததால் - அம்மாவின் ஆத்மா பூமியிலேயே தங்கி இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். அவர்கள் இறந்து விட்டோம் என்ற எண்ணமே இல்லாமல், அடுத்த நிலை நோக்கிய பயணம் இல்லாமல் அருவமாக வீட்டுக்குளேயே சுற்றி வருவார்கள் எனவும், இவர்களால் பல கஷ்டங்கள் குடும்பத்தாருக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் "சாஸ்திரம்" சொல்ல... வீட்டில் ஏகப்பட்ட 
தீர்க்கமில்லாத கலந்துரையாடல்களோடு நாட்கள் போய்க்கொண்டு இருக்கிறது.
சரி அப்படியென்றால், அம்மாவின் அஸ்தியை கனடாவில் சமுத்திரத்தோடு கலக்கும் ஒரு அருவியான செயின்ட். லாரன்ஸ் நதியில் கொண்டு சென்று காழ்ப்போம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
சுமார் 7, 8 மணித்தியால பயணம் அது. தவிர கொரோனா நிலவரங்களால் எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியாது.
அதோடு வந்தது இன்னும் ஒரு  யோசனை, டொரோண்டோ ஹார்பர் (f )பிரான்ட் அங்கு ஒரு பெரிய படகை வாடகைக்கு அமர்த்தி, அவர்களோடு பேசிக்கதைத்து , ஐயரையும் கூட்டிக்கொண்டு 2 மணித்தியால படகு பயணத்தில் "இன்னிஸ்வில்" தாண்டிய ஒரு ஏரியில் படகில் இருந்தே அஸ்தியை கலைக்கும் திட்டம்!!!
இதற்கான செலவு 6 ஆயிரம் மட்டில் வருமாம்.

இப்படியான யோசனைகளின் ஆதாரம் என்னவென்றால் மற்றைய சராசரி "தமிழர்களை" போல நாங்கள் காரியங்கள் செய்ய மாட்டோம். எமக்கென ஒரு அந்தஸ்து இருக்கிறது என்ற மனோநிலை மட்டுமே.
இதை அவர்கள் வாயாலேயே பல தடவைகள் சொல்லிவிட்டார்கள்.

பாவம் ஐயர், திக்கு முக்காடிப்போய் இருக்கிறார். அவரால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாது கேட்டு விட்டார்.
இப்படியான விசித்திரமான யோசனைகளை எல்லாம் யார் உங்களுக்கு தருகிறார்கள் என்று...

எப்படியோ இவர்கள் இறந்து போன அம்மாவுக்கு $$$$$ செலவு செய்து அவர்களின் அன்பையும், தங்களின் குடும்ப "அந்தஸ்தையும்" காட்ட நினைக்கிறார்கள்.
       
இந்த சம்பவங்களுக்கு இங்கே தான் ஒரு ட்வீஸ்ட்டு. 
கூடவே  ஒரு ஞானம்... வாட்சாப் குரூப்பில் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு கோரிக்கை, உங்களுக்கு தெரிந்த தாயக மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் சிலவற்றின் தொலைபேசிகளை தந்து உதவுங்கள் அம்மாவின் பெயரால் ஒரு அன்ன தானம் செய்யப் போகிறோம்.
இதுக்கு ஒதுக்கப்பட்ட நிதி  ஆயிரம் ($1,000) டாலர்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பில் இருக்கும்  ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், வன்னியில் இருக்கும் ஒரு அனாதை சிறுவர் இல்லத்துக்கு செய்கிறார்களாம், இப்படி 3 தெரிவுகள் ... பல "வாட்ஸாப்" பதிவுகள்.
எதோ ஒரு நல்ல காரியம் செய்கிறார்கள் என்ற சந்தோசம் இருந்தாலும் நிறையவே பணத்தை "பந்தா" காட்டுவதில் வீணடிக்கிறார்களே என்ற விசனம். தவிர இருக்கும் போது அம்மாவுக்கு செய்யாததை அவர் இறந்த பின் செய்ய நினைக்கிறார்களா என்றும் கேள்வி?

சரி இதை எல்லாம் கடந்து, சரியான, பொதுவான ஈமைக்கிரிகை முறைகள் தான் எவை?
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் குறித்த முறைமைகள் தெரிந்தால் அதனை பதிவிடுங்களேன். 
தெரிந்து கொள்ளலாம். 🙏

ஏன் சசியண்ணா..சப்பல் றையிட்டில் ஓரளவுக்கு நியாயமான விலை கழிவில் தானே கொடுத்தார்கள்..

உண்மையில் பெற்றார் (அம்மாக்கள்) இருக்கும் போது பார்க்காதவர்கள் இல்லாத போது எடுப்பு காட்டுகிறது வழமையாக வந்துட்டு.

மற்றும் இந்த படகு பயண றாமாக்கள் எல்லாம் எங்கள் வீட்டிலும் ஆரம்பித்து கடசியில் எனது நலன் கருதி இடையில் விடு பட்டு விட்டது..ஆனால் அந்தணர்களின் கூத்து அது தொடர் நவீனம் தான்.

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி யாயினி,
நீங்கள் கூறுவதும் உண்மை தான். இருந்தாலும் வரும் வாடிக்கையாளர்களின் மனோ நிலை , அளப்பரை குறித்து அறிந்து கொண்டால் அவர்களும் இல்லாத பொல்லாத சில பண விரயமாகும்  "புதிய சடங்குகளை " அறிமுகப்படுத்துவார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊரில் அம்மாவின் செத்த வீட்டுக்கு வந்த தம்பியின் அலுவலக ஊழியர்கள் சுடலைக்கு போய் வந்து குளிக்காமலே சாப்பிட்டு விட்டு தான் போனார்கள் ....எனக்கும் அந்த நேரம் கொஞ்சம் அதிர்ச்சியாய்த் தான் இருந்தது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

 • Sad 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எமது இழப்புக்குரிய உறவின் விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து அதன் பிரகாரம் நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் நிறுத்தி இறுதி நிகழ்வை செய்வது சிறப்பானது.

முன்கூட்டிய விருப்பம் அறிதல் சாத்தியம் இல்லை என்றால் மிகவும் நெருங்கிய உறவு அல்லது உறவுகளின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுத்து (எதிர்காலத்தில் சட்டசிக்கல்களும் வராத வகையில்) இறுதி நிகழ்வை செய்யலாம்.

சாத்திரம், சம்பிரதாயம், இதர ஒழுங்குகள் எல்லாம் இதன் பின்னால் வரட்டும். மற்றும்படி எப்படி செய்யலாம் என்று கேட்டால் ஆளாளுக்கு தங்கள் நம்பிக்கைகள், சுய விருப்பங்கள், தேவைகள், திருப்தியின் அடிப்படையில் ஆயிரத்து எட்டு வழிவகைகள் கூறுவார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

அல்வாயன்... உங்களது, மகனின்...  இழப்பிற்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.  
தந்தை.. மகனை... இழப்பது, கொடுமையிலும், கொடுமை  என்று சொல்வார்கள்.

வருடங்கள் தான்... மன வேதனையை, ஆற்றும்.
அதிலிருந்து... நீங்கள், விரைவில் மீண்டு வரவேண்டும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உழுதவன் கணக்கு பத்தா ஒலக்க கூட மிஞ்சல அப்பா பாட்டன் காலத்தில் எழுதி வச்சான்பாட்டுல  
  • முற்பிறவி பற்றி கதைத்த குழந்தைகள் ..💐  
  • அரச வைத்தியசாலையிலுள்ள அறிவித்தல் பலகையில் தவறான தமிழ் சொற்பிரயோகம்: அசௌகரியத்திற்குள்ளாகும் நோயாளர்கள்..! பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர். இவ்விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், ஊவாமாகாண ஆளுனர் ஏ.கே.எம். முசாம்மில்,? ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.  தொடர்ந்து அக்கடிதத்தில், “ ஊவாமாகாணத்தில் மிகப்பிரதானஅரசினர் மருத்துமனையாக இருந்து வருவது, பதுளை அரசினர் மருத்துவமனையாகும். இம் மருத்துமனையில் பெருமளவிலான நோயாளர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளைப் பெற்றுச் செல்லவும், கடினமான நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். அத்துடன் பதுளை மாவட்டமென்பது தமிழ் பேசும் மக்கள் கணிசமானளவில் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசமாகும். இம்மாவட்டம் பெருந்தோட்டங்கள் பலவற்றை சூழ்ந்திருப்பதினால், தமிழ் மக்கள் அநேகமானளவிலும் இருந்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு சிங்கள மொழியில் போதிய பரீச்சியமில்லை.  தமிழ் மொழியினை மட்டுமே, இம்மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே  இம்மருத்துவமனையில்  பல்வேறு வகையிலான சிகிச்சைகள், நோய்கள், நோயாளர்கள் அனுமதிக்கப்படும் விதிமுறைகள். மருந்துவகைகளைப் பெற்றுக்கொள்ளல், நோயாளர்கள் அமர்ந்திருக்கும் இடங்கள், மருத்துவமனையில் தங்கிசிகிச்சைப் பெறும் நோயாளர்களை பார்வையிடும் நேரங்கள் மற்றும் அது தொடர்பான சுகாதாரவிதி முறைகள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவைகள் தனிச்சிங்கள மொழி மூலமும், பெரும்பாலான அறிவுறுத்தல்  காட்சிப் பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியமொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சிங்கள மொழியில் மட்டும் சரியாகவும், தமிழ் மொழியில் முற்று முழுதாக தவறான வார்த்தைப் பிரயோகங்களினாலும், ஆங்கிலமொழி உச்சரிப்பிலும் பிழையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.  இதனால்,சிங்கள மொழி புரியாத தமிழ் மொழி மட்டும் தெரிந்தநோயாளர்கள் பல்வேறுஅசௌகரியங்களை எதிர்நோக்கியவண்ணமுள்ளனர்.  இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் வினவினாலும் உரியபதில் கிடைக்காமல், தமிழ் நோயாளர்கள் தரக்குறைவாக நடாத்தப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசபிரயாணிகள் தேவை கருதி, இம் மருத்துவமனையினை நாடினாலும் இதேநிலையினையே, அவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.  ஆகவே தயவுசெய்து மேற்படி விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். சகல நோயாளர்களும் பயன்பெறும் வகையில் இம் மருத்துவமனையை மாற்றியமைக்கும்படிகேட்டுக்கொள்கின்றேன்.  நோயாளர் காத்திருக்கும் பகுதி என குறிப்பிடுவதற்கு 'நாயாளர்கள்' பகுதி என்றவகையிலும் ,மலசலகூடத்தை நோக்கில்  ஆண்கள் என்பதற்கு பெண்கள் பகுதியென்றும், பெண்கள் என்பதற்கு ஆண்கள் பகுதியென்றும் மிகத் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருசிலவற்றை மட்டும் தங்களின் கவனத்திற்கு முன்வைக்கின்றேன்.    https://www.virakesari.lk/article/92625  
  • அபாயகரமான நிலையை எட்டியுள்ள இந்தியாவின் காற்றின் தரம் தலைநகர் டெல்லி மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்துள்ளமையினால் இந்தியாவில் காற்று மாசுபாடானது அபாயகரமான நிலையின‍ை எட்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு மிகவும் கவலையான செய்தி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளானர். காரணம் உலகெங்கிலும் பல ஆய்வுகளில் கொவிட்-19 நோயாளர்கள் உயிரிழப்பதற்கு காற்றின் தரக் குறைவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 8 சதவீதம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள், சுத்திகரிக்க முடியாத எரிபொருட்களை பயன்படுத்தும் போது வெளியாகும் புகைகள் மற்றும் வயல்களுக்கு தீ வைப்பதனால் உண்டாகும் புகைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் ஓசோன், நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளுக்கு நீண்டகாலம் ஆளாவதற்கும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமாவதற்கும் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இத்தகைய மாசுகள் மூச்சுக் குழாயை இலக்கு வைத்து பாதிக்கும் வைரஸ் தொற்றுக்களின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் அழற்சியை உண்டாக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அண்மைய வாரங்களில் டெல்லியின் காற்றில் உள்ள பி.எம் 2.5 துகள்களின் அளவு 180 முதல் 300 மைக்ரோகிராம் வரை உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு வரம்பை விட 12 மடங்கு அதிகம். முடக்க நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் வாகன போக்குவரத் மற்றும் தொழில் நடவடிக்கை எதுவும் இல்லாததால் அண்மைய மாதங்களாக டெல்லியில் குடியிருப்பவர்கள் மிகவும் தூய்மையான காற்றை சுவாசித்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.   https://www.virakesari.lk/article/92627
  • வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா? October 21, 2020   மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. கொறோனோ பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி எழுந்துள்ளது. மண்டைதீவில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவிருந்த காணிகள் பொது மக்களிடம் மீளவும் கையளிக்கப்படல் வேண்டும். பரந்தன் கொக்குளாய் பிரதான வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது சோதனைச் சாவடிக்களும் உடனடியாக அகற்றப்படல் வேண்டும். இந்த உயர்வான சபையில் வரிகளைக கூட்டுவதும் குறைப்பதும் தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வரிகளை கூட்டுவதும் குறைப்பதும் அனைத்துமே மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதனையும் பிரதான நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காகவே பெறுமதிமிக்க பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டு இந்த விடயங்கள் ஆழமாக விவாதிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் இந்த வரிகள் உயர்த்தப்படுவதன் ஊடாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றதா என்பது பற்றியும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் சுகாதாரம் என்பதும் மிகவும் அடிப்படையான ஒன்று. அனைத்து மக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவ்வாறிருக்கும் நிலையில் யாழ்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு என்னும் பிரதேசம் உள்ளது. அந்தப் பிரதேசம் ஒடுங்கிய நீண்ட ஒரு பிரதேசமாகும். ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் களப்பும் கொண்டதும் மூன்று கிலோ மீற்றர் அகலமும் 39 கிலோ மீற்றர் நீளமும் கொண்ட பிரதேசத்திலே 12130 அங்கத்தவர்களைக் கொண்ட 4458 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மக்களுடைய பிரதானமான ஜீவனோபாயம் கடற்தொழிலாகும், ஒரு பகுதியினர் விவசாயத்திலும் ஈடுபடுகின்றார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ளபோதும் கடற்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் எதுவும் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மாறாக அந்த மக்கள் தமது சொந்த முயற்சியினால் கடற்தொழிலில் ஈடுபடுகின்றபோது கடற்தொழில் அமைச்சினது அனுமதியுடனும், கடற்படையினரின் துணையுடனும், பொலிசாரின் ஒத்துழைப்புடனும் அங்கு அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட வருகின்ற தென்னிலங்கை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக தொடச்சியாக அழிக்கப்பட்டுவருகின்றது. இதனால் அவர்கள் வாழ வழிதெரியாது தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இப்பகுதியில் விவசாயத்தை ஜீவனோபாகமாகக் கொண்ட மக்களின் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆதனால் அங்குள்ள ஒட்டுமொத்த மக்களதும் வாழ்க்கைத்தரம் என்பது தொடர்ந்தும் அடிமட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட நிலையிலுள்ள இப்பிரதேசத்தில் ஒரே ஒரு வைத்தியசாலை மட்டுமே உள்ளது. இந்த வைத்தியசாலையை நம்பி 3500 மாணவர்கள் உள்ளடங்கலாக 12130 பொது மக்கள் வாழ்கின்றார்கள். இந்த வைத்தியசாலை கொறோனோ சிகிச்சைக்காகவென பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அந்த மக்களது தேவைக்கு ஏற்ப பொருத்தமான வைத்தியசாலைகள் எதுவும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை. அவசர அவசரமாக அந்த வைத்தியசாலைக்கு அருகிலுள்ள 100 நீளமான ஒரு கட்டடத்தில் வெளிநோயாளர் பிரிவை இயக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூறு அடி நீளமுள்ள அந்தக் கட்டடத்தில் 15 அடி அளவுள்ள இரண்டு அறைகளும், அறுபது அடி அளவுள்ள ஒரு மண்டபமும் மட்டுமேயுள்ளது. அந்த மண்டபம் புறா எச்சங்கள் நிறைந்த நிலையில் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய கட்டடத்தினுள் வைத்தியசாலையிலுள்ள அனைத்துப் பொருட்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டு நிறைக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்குரிய மருத்துவ வசதிகளை மறுத்து, அந்;த மக்களை திட்டமிட்டு அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கு அல்லது அந்த மக்களை கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு அரசு தள்ளுகின்றதா என்ற கேள்வி அந்தப் பிரதேசத்து மக்களிடம் எழுந்துள்ளது. அந்தப் பிரதேசத்து மக்கள் கொறோனோ வைத்தியசாலை அங்கு வந்தால் தமக்கு கொறோனோ தொற்றிவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். வடமராடசி கிழக்குப் பிரதேசம் முழுவதற்குமான மையமாக விளங்கும் மருதங்கேணிப் பகுதியில் வைத்தியசாலை உள்ளது, பிரதேச செயலகம் உள்ளது, பிரதேசசபை உள்ளது. தபாலகம் உள்ளது, கூட்டுறவுச் சங்கம் உள்ளது, கடற்தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் உள்ளது, பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் உள்ளது, இன்னும் பல முக்கிய நிலையங்கள் உள்ளன. இந்த இடத்திற்கு நாளாந்த பல ஆயிரம் பொது மக்கள் நாலாபுறமும் இருந்து வந்து செல்கின்றார்கள். இப்படிப்பட்ட மையமான இடத்தில் கொறோனோ சிகிச்சை நிலையத்தை அமைக்கும்போதும் அந்த மக்களுக்கு இயல்பாக ஏற்படக் கூடிய அச்சத்தைப் போக்குகின்ற வகையில் அந்த வைத்தியசாலையை கொறோனோ சிகிச்சைக்காக பொறுப்பேற்கும்போது அந்த மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. அத்தோடு அந்த மக்களுக்கு மாற்றான எந்த வைத்திய வசதிகளைப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. கடந்த 10 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் அந்தப் பிரதேச மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் வைத்தியசாலை விடுதியில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதில்லை என்று காரணம் கூறப்பட்டு அந்த வைத்தியசாலை பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக அங்கு வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அப்படியானால் இந்த மக்களின் கதி என்ன. அந்த கரையோரத்தை முழுமையாக கபளீகரம் செய்யும் நோக்கம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றதா. அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அங்கிருந்து தாமாக வெளியேற வேண்டுமென்று இந்த அரசு எதிர்பார்க்கின்றதா என்று கேள்வி எழுகின்றது. அடுத்து மண்டைதீவில் கடற்படையினருடைய தேவைக்காக காணிகளை சுவீகரிப்பதற்கு கடந்த 28.08.2020 அன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக பொது மக்கள் திரண்டு எதிர்ப்புப் போராட்டம் நடாத்தினார்கள். அதனால் சுவீகரிப்பு நடவடிக்கை அன்று நிறுத்தப்பட்டது. ஏனினும் இன்று வரை அந்தக் காணிகளை உரியவர்களிடம் கையளிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சோமசுந்தரம் குகதர்சன், தியாகராசா இராசேந்திரன், சுப்பிரமணியம் இராசையா ஆகிய மூவரதும் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவிருந்தது. அந்தக் காணிகள் அந்த மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். அத்துடன் பரந்தனில் இருந்து கொக்குளாய் செல்லும் 88 கிலோ மீற்றர் நீளமான வீதியில் ஒன்பது இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இச் சோதனை நடவடிக்கைகளால் மக்களது வாழ்க்கை வேண்டுமென்றே சீரழிக்கப்படுகின்றது. மேற்படி சோதனை சாவடிகளில் நீண்டநேரம் பொது மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நோயாளர் அம்புலன்ஸ் வண்டிகள் கூட அந்த இடங்களில் தாமதிக்கப்பட்டே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கற்பிணித்தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் என யார் சென்றாலும் படையினர் ஈவிரக்கமில்லாமல் அனைவரையும் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கியே அனுப்புகின்றனர். எனவே இந்த சோதனைச் சாவடிகள் அனைத்து உடனடியாக அகற்றப்படல் வேண்டுமென்பதனை இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன்.       https://globaltamilnews.net/2020/152106/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.