Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஒரு சாவும் அதன் சம்பிரதாயங்களும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள்

சமபிரதாயங்களோ இல்லை சில முறைளையோ சாவுநிகழ்வில் கடைப்பிடிக்கும் போது இறந்தவரை சரியான முறையில் வழிஅனுப்பிவிட்டோம் என்ற ஆறுதல் சம்மந்தப்பட்ட உறவுகளுக்கு கிடைக்கின்றது. இந்த ஆறுதலே பிரதானமானது.

ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் முறைகள் என அவரவருக்கு நாட்டாமை செய்து இந்த ஆறுதுல் கிடைக்காமல் போகும்  நிலையும் அதிக சாவு வீடுகளில் நடக்கின்றது. இந்த முறைகளை ஒரு வரயறையோடு காலத்துக்கேற்ப நெறிப்படுத்துவதும் அவசியமாகின்றது.

(புகையிலை மற்றும் சுருட்டு ஒருகாலத்தில் சாவு வீட்டில் அவசியமானது. அது ஒரு தொற்று நீக்கியாக இருந்த காலத்தில்.- இந்தக் காலத்தில் அது நோயை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது)

சிலர் சாவு நிகழ்வை  சமூக அந்தஸ்த்து போட்டியோடு இணைத்து செய்கின்றார்கள். தாம் இதை செய்தோம் இவ்வளவு செலவழித்தோம் என்று பெருமை தேடுவதுண்டு, இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

இறந்த உறவுகளின் திகதி திதிகளில் விளக்கு வைத்து உணவு படைத்து வணங்குவதை (யாரையும் அழைக்கவேணுமென்றில்லை) ஒரு பழக்கமாக வைத்திருப்பது ஆரோக்கியமானது. நல்ல உணர்வு கிடைக்கும். சித்திரை பௌணமி ஆடி அமவாசையை கடைப்பிடிப்பதும் இவ்வாறே நல்ல உணர்வு கிடைக்கும். 

இறந்தவர் சாம்பலை விழைநிலத்திலோ ஆற்றிலோ குளத்திலோ இல்லை கடலிலோ தூவலாம். கங்கையில்தான் என்பது அவரவர் தெரிவுகள். 

On 3/9/2020 at 15:31, Sasi_varnam said:

நல்ல கருத்து .. கையில் பச்சை இல்லை. 
நான் எனக்கு எழுதக்கூடிய உயில் :) ... 
எனக்கு பிடித்த தமிழ் இசையை தவழ விடுங்கள்.
என்னை சுற்றி வாழ்ந்த என் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு என் வாழ்க்கையை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு பெரிய தொரு நன்றி தெரிவியுங்கள். 
என் பெயரில் 100 மரங்கள் நடுங்கள். அது நல்ல படியாக வளர்வதை உறுதி செய்யுங்கள்.

முடிந்தால் தம்பட்டமில்லாமல் கொஞ்ச தான தர்மங்கள் ...அவர்களோடு சேர்ந்து வழங்கி மகிழுங்கள். 

முடியும் !!! 🙏

 

வன்னியில் இரண்டு வருடங்களுக்க முன்பு இறந்த எனது உறவினரின் ஒருவரின் அந்தியோட்டி நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவருக்கும்  மரக்கன்றுகள் கூடுதலாக தென்னங்கன்றுகள் கொடுத்து அனுப்பினார்கள்.  அந் நிகழ்வு மிக நிறைவைத் தந்தது. பலர் இதை இப்போது செய்கின்றார்கள். 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயன்... உங்களது, மகனின்...  இழப்பிற்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.  
தந்தை.. மகனை... இழப்பது, கொடுமையிலும், கொடுமை  என்று சொல்வார்கள்.

நன்றி தமிழ் சிறி...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இது என்னுடைய வீட்டில் நடந்தது...எனது 2 வது மகன் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார்..சனி  ஞயிறு என்று எதிர்பாராமல்...செவ்வாய் புதனில் காரியங்கள்  செய்யப்பட்டன..அய்யர் வந்தார்..கிரியை செய்து கொள்ளியும் மண்டபத்திலையே வைக்கப்பட்டது.(கொள்ளிக்கட்டைசம்பிரதாயமானது)பின்பு  தகனக்கிரியை மண்டபத்தில் பெட்டியின்மேல் கற்பூரம் கொழுத்தப்பட்டது..பின் தகன வாயினுள் செலுத்தப்பட்டது..அவ்விடமிருந்து..நெருங்கிய உறவுகளூ ம் வீட்டிர்கு வந்தவுடன் உறவினரால் உ ணவு வழங்கப்பட்டது..சிலர் குழித்துவிட்டு வந்தார்கல்..அப்படியேயும் சில்ர் சாப்ப்ட்டார்கள்..1 மாதம்வரை உறவுகள், நண்பர்களேணா 3  நேரமும் சாப்பாடு வந்தபடியே இருக்கும்..இதனை விட சரி 8 ம்நாள்.. காடாத்தும் 8ம் நாள் காரியமும் மாமிச உ ணவுகளுடன் படைத்தபின் அதனை ஒரு பொட்டலமாக கட்டி..ஒரு பாலத்தின் கீழ் ஓடும் னீரோடையில் கொண்டு சென்றூ  வைத்துவிட்டு வந்தோம்..31ம் நாள் 3  அய்யர்கள் ..அதில் ஒருவர் அதிகாலை 3 மணீக்கே தன்னுடைய இடத்துக்கு  வரச்சொல்லி முறைப்படி சடங்கு செய்த்து பிறிம்லி பீச்சில் உள்ள தண்ணீரில் போடச்சொல்லுவர்...எமது குடும்பத்துக்கு முதலில் இந்த அனுபவம் இருந்தபடியால் நானும் மனையும்..தம்பி ஒருவனும் சென்று அஸ்தியை கரைத்துவிட்டு வந்தோம்..பின்னர் 2 குருமார் வந்து பிட்டம் வைத்து தானம் செய்தபின் பந்தி நடந்தது...இது கனடாவென்றாலும் எமது பாரம் பரியத்தை கடைப்பிடிக்க வே ணும் என்பதனால் இவை அனத்தும் செய்யப்பட்டது..பெற்றவர் நாம்  கனடாவில் பிறந்த பிள்ளைக்காக இதனைசெய்து  எமது மனதை ஆற்றிக்கொண்டோம் ....ஆற்றீக் கொண்டிருக்கின்றோ...ம்..

உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை, மிகப்பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். 🙏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அல்வாயான்,

முதலில் உங்களின் மகனின் இழப்பிற்கு எனது அஞ்சலியையும் மன ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் இங்கே கனடாவில் தான் இருக்கிறீர்கள் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
யாழ் களம் ஊடாக கிடைத்த டொரோண்டோ நண்பர்கள் வட்டம் இன்னும் தோழமையோடு தொடர்பில் இருக்கிறது. சேர்ந்திருங்கள்.

நீங்கள் கூறி இருந்த அதே வழிமுறைகளை தான் எனது மனைவியின் சித்தப்பா இறந்த போது கடைப்பிடித்தார்கள்.
உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி. சாந்தி நிலவட்டும். 🙏

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சென்னை பட்டணம் பார்க்கப்போறய THE GANDHIGRAM RURAL INSTITUTE ( DEEMED UNIVERSITY ) GANDHIGRAM NATIONAL INTEGRATION YOUTH CAMP கலந்துகொண்டு  கருத்துரை வழங்கியதற்காக மக்கள் பாடகன் டாக்டர் மதுரை சந்திரன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு அற்புதமான விழிப்புணர்வு பாடலுடன் கேட்டு மகிழுங்கள் நன்றி அன்புடன் மக்கள் பாடகன் மதுரை சந்திரன்    
  • வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்   ????????????????????????????????????  25 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முக்கிய தேவை ஏதும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு  எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கான கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நேற்றுன் காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களும் காணப்படுகின்றது.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காணப்படும் வியாபார நிலையங்கள், தனியார் அலுவலகம் உட்பட்டவை அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதுடன், மீன் விற்பனை நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு காணப்படுகின்றது. அத்தோடு அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை பொலிஸார் மூடுமாறு பணிப்புரை விடுத்து வருகின்றனர்.   அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத வகையிலும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் உள்ளே வர முடியாத வகையிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   https://www.ilakku.org/வாழைச்சேனையில்-ஊரடங்கு/
  • மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்   புதுடெல்லி, மருத்துவ படிப்பில் அகில இந்திய  ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவித  இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்,   ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இந்த வழக்கின் முழு விவரம்:  மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள் கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதி ல் அளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு கடந்த 15-ந்தேதி மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனையடுத்து தமிழக அரசு, அ.தி.மு.க. மற்றும் கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் கடந்த 22-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/26122203/There-will-be-no-50-per-cent-reservation-for-OBC-this.vpf  
  • 26.10.1987 அன்று இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆசிரமப் படுகொலை அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீது இந்திய இராணுவத்தினரின் “முதலை” என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நடத்திய றொக்கேட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட பதினைந்து பேர் உயிரிழந்தனர். பன்னிரண்டு பேர் படுகாயமடைந்தனர். 26.10.1987 அன்று அளவெட்டி ஆசிரமப் படுகொலையில் கொல்லப்பட்டடோர் விபரம்:  இராசரத்தினம் கோமதி (வயது 15 – மாணவி) இராசரத்தினம் ஞானகணேசன் (வயது 21) குணசீலன் கோணேஸ்வரி (வயது 38 – மின்சார அத்தியட்சகர்) பத்மநாதன் செல்வச்சந்திரன் (வயது 12 – மாணவன்) தர்மலிங்கம் சிறீஸ்கந்தரா (வயது 25 – சாரதி) துரைசிங்கம் மதி (வயது 01 – குழந்தை) தம்பிராசா சிறீபவன் (வயது 12 – மாணவன்) அமிர்தநாதர் நேசம்மா (வயது 50) சின்னத்துரை தாங்கலிங்கம் (வயது 47 – வியாபாரம்) சின்னத்தம்பி தம்பிராசா (வயது 56 – தொலைபேசி இயக்குனர்) சின்னத்தம்பி இரத்தினம் (வயது 47 – வியாபாரம்) சின்னையா இராசரத்தினம் (வயது 62 – வியாபாரம்) சிவகுருநாதன் சிவபாக்கியநாதன் (வயது 41 – வியாபாரம்) விஜயரத்தினம் பத்மராணி (வயது 33 – குடும்பப்பெண்) வினாசித்தம்பி ஐயாத்துரை (வயது 80 – கமம்) குறிப்பு: இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.   மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.   https://www.thaarakam.com/news/730fadf4-e35f-4762-ba83-25e477d56589
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.