Jump to content

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jesus.jpg

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும் அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில், இலங்கைக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, “யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்மொழியை புறந்தள்ளும் ஆதரவு கருத்திற்கு கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து வலுச்சேர்ப்பதாகக் கருதப்படுகின்றது என்ற வகையில் யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகையில் 02.09.2020ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தை சுட்டிக்காட்டி மருத்துவர் சி.யமுனாநந்தா சில வரலாற்று விடயங்களை இன்று (வியாழக்கிழமை) முன்வைத்துள்ளார்.

உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில், “இலங்கையில் உள்ள இனம் மற்றும் மொழிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக்கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும். பிரச்சினைகள் என்னவோ இருக்க எந்த மொழி மூத்த மொழி என்று காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் நொந்துகொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள்தான் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன.

இவ்வாறிருக்கையில் கர்தினாலின் இந்தக் கருத்து அவரை கத்தோலிக்கம் சார்ந்த தலைவராக அல்லாது ஒரு சிங்களத் தலைவராகவே மீண்டும் அடையாளப்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் இனம் மற்றும் மொழிசார் கட்சிகள் இருப்பது தம் பின்புலத்தை தம்பட்டம் அடிப்பதற்காக அல்ல. தாம் சார்ந்த, தம் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவே.

இவ்வாறிருக்கையில் அந்தக் கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்று கர்தினால் விடுத்துள்ள கோரிக்கை எந்த வகையறா என்று புரியவில்லை. அத்துடன், அவரது அறிவிப்பு சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறைக்கு ஓர் உந்துசக்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவிக்கையில், “உண்மையில் எபிரேய மொழியும் இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன் குமரிக்கண்டத்தில் இருந்து கடல்கோளால் புலம்பெயர்ந்த ஆதித் தமிழர்களின் மொழியே ஆகும்.

இஸ்ரேல் என்பது ‘இசை அறா அல்’ அதாவது இசையுடன் பிரிக்க முடியாத இறைவன் எனும் தமிழ்சொல்லாகும். பைபிள் என்பது ‘பைம்புல்லில் எழுதிய ஏடு’ என்ற தமிழ்சொல்லாகும்.

‘யாக்கோம்’ என்பது ‘யா-தென்திசை கோ கடவுள்’, ‘தென்திசைக் கடவுள்’ என்ற தமிழ்சொல்லாகும். யேசு என்பது தமிழ்சொல்லாகும். யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல.

‘அல் ஓய் அல் ஓய் லாமா சாவைத்தா நீ’ என்பதில் ‘அல்’ என்றால் இறைவன் என்ற தமிழ்சொல்லாகும். ‘இறைவா சாவைத்தா’ என மன்றாடுகின்றார். மேலும் பாலஸ்தீனம் என்பதும் ‘பாலைத்தீ’ எனும் தமிழ் சொற்றொடரே.

அங்கு காணப்படுகின்ற பழைய ஆலயங்களில் சிவலிங்க வழிபாடே காணப்படுகின்றது. மேலும், பைபிளில் குறிப்பிடப்படும் ‘நோவா’ என்ற படகின் கருத்தும் ‘நாவாய்’ என்ற தமிழ் சொல்லே.

எனவே, தமிழின் தொன்மைக்கு, தமிழிற்கும் எபிரேய மொழிக்கும் இடையிலுள்ள தொடர்புகளை ஆதாரமாக எடுத்துக் கூறலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யேசுநாதரும்-ஓர்-இந்துத்/

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சைவத் துறவியாயிருந்தால் பெருமையே. 👍

(யாரப்பா இந்த புது ஆய்வாளர் 🤔)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணா தான் 
பின்பு கிறிஸ்து ஆனார் என்றும் 
கரே கிருஸ்ணா காரர்கள் எனக்கு சொல்லி இருக்கிறார்கள் 

(என்னுடைய கேள்வி உலகின் கடவுள் ஏன் 10 முறையும் மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே பிறந்தார்? வேறு நாடுகள் பற்றி அவருக்கு கவலை இல்லையா? எனும்போது இவாறு ஒரு பதில் தந்தார்கள்) 
 
அல்லா கிறிஸ்து கிருஷ்ணர் எல்லாரும் ஒருவரே என்பது அவர்கள் வாதம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் சி.யமுனானந்தா, சாவகச்சேரி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருந்தவர்! நங்கூரத்தில் வேலை செய்த போது இவரும் "சில துளிகள்" என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தவர்! 

ஒரு  மருத்துவரே கற்பனையில் உருவான குமரிக் கண்டத்தையும் phonetics ஐ வைத்து தமிழ் ஆய்வு செய்யும் அரை அவியல்களையும் நம்பி அறிக்கை விடுகிறார் என்றால் எங்கள் அறிவுடைமை என்ற தமிழ் தேசியத் தூண் கறையான் அரிக்க ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

ஒரு  மருத்துவரே கற்பனையில் உருவான குமரிக் கண்டத்தையும் phonetics ஐ வைத்து தமிழ் ஆய்வு செய்யும் அரை அவியல்களையும் நம்பி அறிக்கை விடுகிறார் என்றால் எங்கள் அறிவுடைமை என்ற தமிழ் தேசியத் தூண் கறையான் அரிக்க ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம்!  

எதை வைத்து குமரிக்கண்டம் கற்பனை என்று சொல்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

நான் கேட்பது வரலாறு இல்லை. விஞ்ஞான விளக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அப்படி சைவத் துறவியாயிருந்தால் பெருமையே. 👍

(யாரப்பா இந்த புது ஆய்வாளர் 🤔)

52 minutes ago, Maruthankerny said:

கிருஸ்ணா தான் 
பின்பு கிறிஸ்து ஆனார் என்றும் 
கரே கிருஸ்ணா காரர்கள் எனக்கு சொல்லி இருக்கிறார்கள் 

(என்னுடைய கேள்வி உலகின் கடவுள் ஏன் 10 முறையும் மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே பிறந்தார்? வேறு நாடுகள் பற்றி அவருக்கு கவலை இல்லையா? எனும்போது இவாறு ஒரு பதில் தந்தார்கள்) 
 
அல்லா கிறிஸ்து கிருஷ்ணர் எல்லாரும் ஒருவரே என்பது அவர்கள் வாதம் 

31 minutes ago, Justin said:

மருத்துவர் சி.யமுனானந்தா, சாவகச்சேரி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருந்தவர்! நங்கூரத்தில் வேலை செய்த போது இவரும் "சில துளிகள்" என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தவர்! 

ஒரு  மருத்துவரே கற்பனையில் உருவான குமரிக் கண்டத்தையும் phonetics ஐ வைத்து தமிழ் ஆய்வு செய்யும் அரை அவியல்களையும் நம்பி அறிக்கை விடுகிறார் என்றால் எங்கள் அறிவுடைமை என்ற தமிழ் தேசியத் தூண் கறையான் அரிக்க ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம்!  

இது சம்பந்தமாக Jesus lived in India என்று ஒரு ரஸ்யர் எழுதிய புத்தகம் படித்துள்ளேன்.

ஏற்று கொள்ளபட்ட வரலாறு இல்லைத்தான். ஆனால் யேசுவின் தகவல் இல்லாத இளமைகால 14 ஆண்டுகளை அவர்கள் கஸ்மீரில் இந்து சமய அனுஸ்டாங்களில் கழித்தார் எனவும், உயிர்த்த ஞாயிறுக்கு பின், கஸ்மீர் திரும்பி, வாழ்ந்து வயசாகி இறந்தார் எனவும் உள்ளூர் நம்பிக்கைகளை வைத்து எழுதி இருப்பார்.

சிலர் யேசுவின் கல்லறை காச்மீரில் இருப்பதாக நம்புகிறார்கள்

முஸ்லீம்களின் அஹமதியா பிரிவிலும் இதை ஒத்த நம்பிக்கை உண்டு.

காணாமல் போன “the lost tribe of Israelites” இந்தியாவில் தங்கியதாய் சொல்வோரும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

யேசு பிறந்தபோது அவரைத் தரிசிக்கச் சென்ற மூன்று ஞானிகளில் ஒருவர் இந்திய துணை கண்டத்திலிருந்து போனதாகக் கூறப்படுகிறது. 

இந்த நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகவே நடைபெற்றிருக்குமானால் ...

 கெளதம புத்தரும் யேசுநாதரும் பரிதாபத்துக்குரியவர்கள். இப்போது அழுதுகொண்டிருப்பார்கள். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எதை வைத்து குமரிக்கண்டம் கற்பனை என்று சொல்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

நான் கேட்பது வரலாறு இல்லை. விஞ்ஞான விளக்கம்..

இது pre historic எனும் வரலாற்றுக்கு முந்திய காலம் நாதம்ஸ். ஆகவே விஞ்ஞான ரீதியாக மட்டுமே விளங்க முடியும்.

1. இந்திய தீபகற்பத்தில் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித சஞ்சாரம் ஏற்பட்டதாக நம்ப படுகிறது( ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய 1st wave).

2. கடைசி பனி காலம் (last ice age) 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது. இதன் போது பனி உருகி ஓடி கடல் மட்டம் கணிசமாக உயர்ந்தது. இவ்வாறு உயரமுன், உலகின் பெரும்பகுதி துருவம் போல பனி மூடி இருந்தது (12 மாதமும்). Finchley Road Tube Station உள்ளதல்லவா? அந்த ரேகையில் உலகை சுற்றி கிழக்கு-மேற்காக ஒரு கோடு கீறினால் அந்த கோட்டுக்கு வடக்கே (மேலே) முழுவதும் பனிதான். தெற்கும் இப்படியே. இடையா ஒரு குறுகிய பகுதி மட்டுமே (sub tropical, topical and equatorial ) பனி இன்றி இருந்தது. அந்த காலத்தில் டோவரில் இருந்து பிரான்சுக்கு நடந்து போக முடியும்.  பிரித்தானியா ஒரு தீவே இல்லை. கடல் மட்டம் அவ்வளவு கீழே இருந்தது. இலங்கையை சூழ இந்தியாவுடன் தொடர்பு பட்டு ஒரு நிலம் இருந்தது. இது அவுஸ்ரேலியா வரை நீண்டு இருந்தது. இந்த நிலத்தை குமரி கண்டம் என அழைப்போம் (லெமூரியா).

 3. இந்த பனிக்காலத்தின் முடிவில், பனி உருகி ஓட, கடல் மட்டம் கூடியது. உருகி ஓடிய பனி Grand Canyon உட்பட பல கணவாய்கள், எரிகளை விட்டுச் சென்றது.  பிரித்தானியா தீவாகியது. இலங்கை தீவாகியது. குமரி கண்டம் அமிழ்ந்தது. 

4. இதுவரைக்கும் தியரி ஓக்கே. இதை தமிழர் நிலம் எனும் போதுதான் - ஆதாரக் கேடு ஏற்படுகிறது. ஏன்? கடைசி பனிகாலம் முடிந்து, நீர்மட்டம் உயர்ந்து பல நிலங்கள் அமிழ்ந்தது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். எஞ்சியுள்ள இந்தியாவிலோ எங்கேயுமோ 3000 ஆண்டுகளுக்கு அப்பால் தமிழர் தொன்மையை பின் தள்ளும் ஆதாரம் ஏதும் இல்லை. (கீழடி 2600).

5. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் விசித்திரமானது. மனித நாகரீகத்தின் முதல் பக்கம் எழுதப்பட்ட காலம். பல விசித்திர மிருகங்களுடம் இருந்த உலகம் அது. அதில் இப்போ எமக்கு தெரிந்த எந்த மொழியும் ( மொழி வழி வருவதே இனம்) இருந்ததாக ஆதாரம் இல்லை.

6. முடிவாக குமரி கண்டம் இருந்து, கடலில் அமிழ்ந்தது என்றாலும் அதில் வாழ்ந்தோர் தமிழர் என சொல்ல முடியாது. சகல இந்தியர்களினனும், இலங்கை, பர்மா, மலாய், இந்தோ-சைனா, சீனா. அவுஸ்ரேலியா வரை இப்போது வாழும் மனிதர்களின், இன கலாச்சார அடையாளங்கள் தோன்ற முன்னர் வாழ்ந்த ஒரு இனக் கூட்டமே அங்கே வாழ்ந்திருக்கும்.

இதுதான் எனது புரிதல் - தக்க தர்க்கம் இருந்தால் - தவறுகளை சுட்டி காட்டவும்.

மேலே  கோசான் சொன்ன காரணங்களோடு இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: 

 எழுதப் படாத வரலாற்றிற்கு முற்பட்ட காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் (prehistoric period). வரலாற்றிற்கு முந்திய காலத்தை தொல்லியல் (archaeology), தொல்லுயிரியல் (paleontology) போன்ற விஞ்ஞான வழிகளில் மட்டும் தான் ஆராய முடியும்! குமரிக்கண்டம் இருந்தது என்பதற்கான ஆதாரம் இந்த வழிகளில் இன்னும் கிடைக்கவில்லை! 

"இல்லை என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபி" என்று கேட்பது எனக்குப் புரியவில்லை! ஒருவர் ஒன்றை நிரூபிக்கப் புறப்படும் போது "இல்லை" என்ற null hypothesis ஓடு தான் ஆரம்பிக்க வேண்டும்! ஆய்வு முடிவுகள் null hypothesis ஐ பிழையென நிரூபித்தால் அதற்கு எதிரான alternative hypothesis சரியாக ஏற்றுக் கொள்ளப் படும்! இதைக் குமரிக் கண்ட விடயத்தில் பிரயோகித்தால், ஏதாவது தொல்லியல், தொல்லுயிரியல் சான்றுகள் கிடைத்தால் தான் null hypothesis தவறாகும்! குமரிக் கண்டம் இருந்தது என்பது (alternate hypothesis) சரியாகும்! 

மேலதிக தகவல்: குமரிக்கண்டம் அரசியலில் திராவிட மறுமலர்ச்சிக் காலத்தில்  பிரபலமானாலும், அதை முதலில் எடுகோளாகப் பிரேரித்தது ஒரு ஐரோப்பிய புவியியலாளர். அவர் விளக்க முனைந்த ஒரு விடயத்தை பின்னர்  நிறுவப் பட்ட plate tectonic theory விளக்கியதால்  குமரிக்கண்ட எடுகோள் கைவிடப்பட்டது! plate tectonic theory பிழை என்று யாரும் இது வரை நிறுவவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Finchley Road Tune Station என நீங்கள் குறிப்பிட்டது London Finchley Road Tube Station என்று வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vanangaamudi said:

Finchley Road Tune Station என நீங்கள் குறிப்பிட்டது London Finchley Road Tube Station என்று வரவேண்டும்.

நன்றி வணங்காமுடி. மாற்றுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

.

காணாமல் போன “the lost tribe of Israelites” இந்தியாவில் தங்கியதாய் சொல்வோரும் உண்டு.

இந்த தொலைந்து போன கோத்திரங்கள் சுவாரசியமான இன்னும் தொடரும் ஒரு கதை! இஸ்ராயேலர் வாக்களிக்கப் பட்ட பூமியில் இருந்து வெளியேறி கிழக்கு நோக்கி செல்கையில் சில கோத்திரங்கள் தொடர்ந்து நடந்து இந்திய உபகண்டம் வரை வந்திருக்கிறார்கள்! இந்திய மிசோராம் மானிலத்தில் ஆயிரக் கணக்கான யூத மதத்தைப் பின்பற்றும் மிசோரியர்கள் தாங்கள் மெனாஷே என்ற இஸ்ரேல் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல காலங்களாக இஸ்ரேலில் குடியேற முயன்று வந்தனர். பல வருடங்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்களின் மரபணுவைச் சோதித்து அதில் மத்திய கிழக்கின் தாய்வழி சிறுமணிகளின் டி.என்.ஏ (mitochondrial DNA) ஒரு குறிப்பிட்ட வீதம் இருப்பதாக கண்ட பின்னர், இஸ்ரேல் உயர் நீதிமன்றம் அவர்களைக் குடியேற்ற வேண்டும் என அரசுக்கு கட்டளையிட்டது! இன்று வரை சில ஆயிரம் யூத மிசோரியர்கள் இஸ்ரேலில் குடியேறியிருக்கின்றனர், இது இன்னும் தொடர்கின்றது! 

https://indianexpress.com/article/north-east-india/manipur/largest-exodus-of-benei-manashe-jews-underway-from-manipur-432-have-left-for-israel-so-far-this-year-5213828/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

உண்மையில் எங்களின் சிந்தனை முறையில் எங்கோ மிகப்பெரிய தவறிருக்கிறது.  ☹️

இல்லாவிடில் மூத்த மொழிகளுள் ஒன்றிற்குச் சொந்தக்காறறான நாங்கள் இன்னமும் எங்களுக்குள்ளேயே பிடுங்குப்பட்டுக்கொண்டிருப்போமா ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

உண்மையில் எங்களின் சிந்தனை முறையில் எங்கோ மிகப்பெரிய தவறிருக்கிறது.  ☹️

இல்லாவிடில் மூத்த மொழிகளுள் ஒன்றிற்குச் சொந்தக்காறறான நாங்கள் இன்னமும் எங்களுக்குள்ளேயே பிடுங்குப்பட்டுக்கொண்டிருப்போமா ☹️

கபிதான், இந்த குறைபாட்டைப் பற்றித் தான் பக்கம் பக்கமாக வேறு திரிகளில் விவாதிக்கும் போது ஒரு சிலர் சொல்லியிருக்கின்றனர்: நடைமுறைச் சாத்தியமான வழிகளாக தமிழையும் அறிவுடைமையையும் எங்கள் அடையாளமாக வரித்துக் கொண்டு முன்னோக்கி நகர முடியாமை தான் அது!

எல்லாப் பக்கமிருந்தும் இழுக்கிறார்கள் என்பதற்காக நாம் எல்லாப் பக்கம் நோக்கியும் நகர முடியாது! "பரிசில் கண்" வைத்தபடி முன் போகாமல் எட்டுத் திக்கில் இழுபட்டுக் கொண்டிருக்கிறோம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது pre historic எனும் வரலாற்றுக்கு முந்திய காலம் நாதம்ஸ். ஆகவே விஞ்ஞான ரீதியாக மட்டுமே விளங்க முடியும்.

1. இந்திய தீபகற்பத்தில் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித சஞ்சாரம் ஏற்பட்டதாக நம்ப படுகிறது( ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய 1st wave).

2. கடைசி பனி காலம் (last ice age) 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது. இதன் போது பனி உருகி ஓடி கடல் மட்டம் கணிசமாக உயர்ந்தது. இவ்வாறு உயரமுன், உலகின் பெரும்பகுதி துருவம் போல பனி மூடி இருந்தது (12 மாதமும்). Finchley Road Tube Station உள்ளதல்லவா? அந்த ரேகையில் உலகை சுற்றி கிழக்கு-மேற்காக ஒரு கோடு கீறினால் அந்த கோட்டுக்கு வடக்கே (மேலே) முழுவதும் பனிதான். தெற்கும் இப்படியே. இடையா ஒரு குறுகிய பகுதி மட்டுமே (sub tropical, topical and equatorial ) பனி இன்றி இருந்தது. அந்த காலத்தில் டோவரில் இருந்து பிரான்சுக்கு நடந்து போக முடியும்.  பிரித்தானியா ஒரு தீவே இல்லை. கடல் மட்டம் அவ்வளவு கீழே இருந்தது. இலங்கையை சூழ இந்தியாவுடன் தொடர்பு பட்டு ஒரு நிலம் இருந்தது. இது அவுஸ்ரேலியா வரை நீண்டு இருந்தது. இந்த நிலத்தை குமரி கண்டம் என அழைப்போம் (லெமூரியா).

 3. இந்த பனிக்காலத்தின் முடிவில், பனி உருகி ஓட, கடல் மட்டம் கூடியது. உருகி ஓடிய பனி Grand Canyon உட்பட பல கணவாய்கள், எரிகளை விட்டுச் சென்றது.  பிரித்தானியா தீவாகியது. இலங்கை தீவாகியது. குமரி கண்டம் அமிழ்ந்தது. 

4. இதுவரைக்கும் தியரி ஓக்கே. இதை தமிழர் நிலம் எனும் போதுதான் - ஆதாரக் கேடு ஏற்படுகிறது. ஏன்? கடைசி பனிகாலம் முடிந்து, நீர்மட்டம் உயர்ந்து பல நிலங்கள் அமிழ்ந்தது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். எஞ்சியுள்ள இந்தியாவிலோ எங்கேயுமோ 3000 ஆண்டுகளுக்கு அப்பால் தமிழர் தொன்மையை பின் தள்ளும் ஆதாரம் ஏதும் இல்லை. (கீழடி 2600).

5. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் விசித்திரமானது. மனித நாகரீகத்தின் முதல் பக்கம் எழுதப்பட்ட காலம். பல விசித்திர மிருகங்களுடம் இருந்த உலகம் அது. அதில் இப்போ எமக்கு தெரிந்த எந்த மொழியும் ( மொழி வழி வருவதே இனம்) இருந்ததாக ஆதாரம் இல்லை.

6. முடிவாக குமரி கண்டம் இருந்து, கடலில் அமிழ்ந்தது என்றாலும் அதில் வாழ்ந்தோர் தமிழர் என சொல்ல முடியாது. சகல இந்தியர்களினனும், இலங்கை, பர்மா, மலாய், இந்தோ-சைனா, சீனா. அவுஸ்ரேலியா வரை இப்போது வாழும் மனிதர்களின், இன கலாச்சார அடையாளங்கள் தோன்ற முன்னர் வாழ்ந்த ஒரு இனக் கூட்டமே அங்கே வாழ்ந்திருக்கும்.

இதுதான் எனது புரிதல் - தக்க தர்க்கம் இருந்தால் - தவறுகளை சுட்டி காட்டவும்.

1 hour ago, Justin said:

மேலே  கோசான் சொன்ன காரணங்களோடு இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: 

 எழுதப் படாத வரலாற்றிற்கு முற்பட்ட காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் (prehistoric period). வரலாற்றிற்கு முந்திய காலத்தை தொல்லியல் (archaeology), தொல்லுயிரியல் (paleontology) போன்ற விஞ்ஞான வழிகளில் மட்டும் தான் ஆராய முடியும்! குமரிக்கண்டம் இருந்தது என்பதற்கான ஆதாரம் இந்த வழிகளில் இன்னும் கிடைக்கவில்லை! 

"இல்லை என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபி" என்று கேட்பது எனக்குப் புரியவில்லை! ஒருவர் ஒன்றை நிரூபிக்கப் புறப்படும் போது "இல்லை" என்ற null hypothesis ஓடு தான் ஆரம்பிக்க வேண்டும்! ஆய்வு முடிவுகள் null hypothesis ஐ பிழையென நிரூபித்தால் அதற்கு எதிரான alternative hypothesis சரியாக ஏற்றுக் கொள்ளப் படும்! இதைக் குமரிக் கண்ட விடயத்தில் பிரயோகித்தால், ஏதாவது தொல்லியல், தொல்லுயிரியல் சான்றுகள் கிடைத்தால் தான் null hypothesis தவறாகும்! குமரிக் கண்டம் இருந்தது என்பது (alternate hypothesis) சரியாகும்! 

மேலதிக தகவல்: குமரிக்கண்டம் அரசியலில் திராவிட மறுமலர்ச்சிக் காலத்தில்  பிரபலமானாலும், அதை முதலில் எடுகோளாகப் பிரேரித்தது ஒரு ஐரோப்பிய புவியியலாளர். அவர் விளக்க முனைந்த ஒரு விடயத்தை பின்னர்  நிறுவப் பட்ட plate tectonic theory விளக்கியதால்  குமரிக்கண்ட எடுகோள் கைவிடப்பட்டது! plate tectonic theory பிழை என்று யாரும் இது வரை நிறுவவில்லை! 

நன்றி...

விஞ்ஞான விளக்கம் என்று கேட்டதன் காரணம், உங்கள் பதிவில் தெளிவாக உள்ளது. அதையே எதிர்பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

இந்த தொலைந்து போன கோத்திரங்கள் சுவாரசியமான இன்னும் தொடரும் ஒரு கதை! இஸ்ராயேலர் வாக்களிக்கப் பட்ட பூமியில் இருந்து வெளியேறி கிழக்கு நோக்கி செல்கையில் சில கோத்திரங்கள் தொடர்ந்து நடந்து இந்திய உபகண்டம் வரை வந்திருக்கிறார்கள்! இந்திய மிசோராம் மானிலத்தில் ஆயிரக் கணக்கான யூத மதத்தைப் பின்பற்றும் மிசோரியர்கள் தாங்கள் மெனாஷே என்ற இஸ்ரேல் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல காலங்களாக இஸ்ரேலில் குடியேற முயன்று வந்தனர். பல வருடங்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்களின் மரபணுவைச் சோதித்து அதில் மத்திய கிழக்கின் தாய்வழி சிறுமணிகளின் டி.என்.ஏ (mitochondrial DNA) ஒரு குறிப்பிட்ட வீதம் இருப்பதாக கண்ட பின்னர், இஸ்ரேல் உயர் நீதிமன்றம் அவர்களைக் குடியேற்ற வேண்டும் என அரசுக்கு கட்டளையிட்டது! இன்று வரை சில ஆயிரம் யூத மிசோரியர்கள் இஸ்ரேலில் குடியேறியிருக்கின்றனர், இது இன்னும் தொடர்கின்றது! 

https://indianexpress.com/article/north-east-india/manipur/largest-exodus-of-benei-manashe-jews-underway-from-manipur-432-have-left-for-israel-so-far-this-year-5213828/ 

ஓம், எனக்கு படிப்புத்த ஒரு நைஜீரிய கறுப்பரும் குல்லா போடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

4. இதுவரைக்கும் தியரி ஓக்கே. இதை தமிழர் நிலம் எனும் போதுதான் - ஆதாரக் கேடு ஏற்படுகிறது. ஏன்? கடைசி பனிகாலம் முடிந்து, நீர்மட்டம் உயர்ந்து பல நிலங்கள் அமிழ்ந்தது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். எஞ்சியுள்ள இந்தியாவிலோ எங்கேயுமோ 3000 ஆண்டுகளுக்கு அப்பால் தமிழர் தொன்மையை பின் தள்ளும் ஆதாரம் ஏதும் இல்லை

https://www.mpg.de/11987643/dravidian-language-family

"The consensus of the research community is that the Dravidians are natives of the Indian subcontinent and were present prior to the arrival of the Indo-Aryans (Indo-European speakers) in India around 3,500 years ago. It is likely that the Dravidian languages were much more widespread to the west in the past than they are today."

My contention 1: Obviously,  how long Dravidians had been present BEFORE the arrival of the Indo-Aryans around 3,500 years ago is another subject.  

My contention 2: Who the Dravidans actually were or are is another subject. Indications are that they were speaking a form (at that time) of Tamil. There was no what is now reconstructed as proto-Dravidian. 

https://www.forwardpress.in/2017/09/dr-ambedkar-on-asuras/#_edn8

"What is important here is that ‘Dravida’ is not an original word. It is the Sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’, when imported into Sanskrit, became ‘Damilla’ and later on Damilla became Dravida. The word ‘Dravida’ is the name of the language of the people and does not denote the race of the people.

Submerged ancient Indian harbour may have been design inspiration for Neapolis, Alexandria

https://jwp-nindia.public.springernature.app/en/nindia/article/10.1038/nindia.2020.133?WT.ec_id=NINDIA-20200901&sap-outbound-id=A85B4FF708D988619B60E97C915E3F731D15168C

"Researchers have discovered an ancient harbour-like structure under sea, buried at a depth of about 80 metres off the Bay of Bengal1.

The researchers from Bharathidasan University (BU) in Tiruchirappalli have traced the harbour – roughly 11 km long and 2 km wide – about 25km east of Poompuhar on the Tamil Nadu coast1.

The discovery of the nearly 15,000 year old structure points to a past of  bustling maritime trade in these parts, according to Somasundaram Ramasamy, a professor in the department of remote sensing at BU and coordinator of the project. The Rs 90-million project is part of India’s national mission to digitally reconstruct underwater heritage sites."

.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

5. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் விசித்திரமானது. மனித நாகரீகத்தின் முதல் பக்கம் எழுதப்பட்ட காலம். பல விசித்திர மிருகங்களுடம் இருந்த உலகம் அது. அதில் இப்போ எமக்கு தெரிந்த எந்த மொழியும் ( மொழி வழி வருவதே இனம்) இருந்ததாக ஆதாரம் இல்லை.

6. முடிவாக குமரி கண்டம் இருந்து, கடலில் அமிழ்ந்தது என்றாலும் அதில் வாழ்ந்தோர் தமிழர் என சொல்ல முடியாது. சகல இந்தியர்களினனும், இலங்கை, பர்மா, மலாய், இந்தோ-சைனா, சீனா. அவுஸ்ரேலியா வரை இப்போது வாழும் மனிதர்களின், இன கலாச்சார அடையாளங்கள் தோன்ற முன்னர் வாழ்ந்த ஒரு இனக் கூட்டமே அங்கே வாழ்ந்திருக்கும்.

இதுதான் எனது புரிதல் - தக்க தர்க்கம் இருந்தால் - தவறுகளை சுட்டி காட்டவும்.

முதல் பதிவில் உங்களின் புரிதலை ஆக்க குறைந்தது கேள்விக்கு உட்படுத்தக்கூடிய, மறுக்க முடியாத சான்றுகள், பல பௌதிக ஆதாரங்கள், விஞ்ஞான அடிப்படையில்.     

என்னிடம் அவ்வளவு நேரமில்லத் தான், ஆனால், முடியுமானவரை, ஆக குறைந்தது வாசிப்பாளராக இருக்கிறன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kadancha said:

https://www.mpg.de/11987643/dravidian-language-family

"The consensus of the research community is that the Dravidians are natives of the Indian subcontinent and were present prior to the arrival of the Indo-Aryans (Indo-European speakers) in India around 3,500 years ago. It is likely that the Dravidian languages were much more widespread to the west in the past than they are today."

My contention 1: Obviously,  how long Dravidians had been present BEFORE the arrival of the Indo-Aryans around 3,500 years ago is another subject.  

My contention 2: Who the Dravidans actually were or are is another subject. Indications are that they were speaking a form (at that time) of Tamil. There was no what is now reconstructed as proto-Dravidian. 

https://www.forwardpress.in/2017/09/dr-ambedkar-on-asuras/#_edn8

"What is important here is that ‘Dravida’ is not an original word. It is the Sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’, when imported into Sanskrit, became ‘Damilla’ and later on Damilla became Dravida. The word ‘Dravida’ is the name of the language of the people and does not denote the race of the people.

Submerged ancient Indian harbour may have been design inspiration for Neapolis, Alexandria

https://jwp-nindia.public.springernature.app/en/nindia/article/10.1038/nindia.2020.133?WT.ec_id=NINDIA-20200901&sap-outbound-id=A85B4FF708D988619B60E97C915E3F731D15168C

"Researchers have discovered an ancient harbour-like structure under sea, buried at a depth of about 80 metres off the Bay of Bengal1.

The researchers from Bharathidasan University (BU) in Tiruchirappalli have traced the harbour – roughly 11 km long and 2 km wide – about 25km east of Poompuhar on the Tamil Nadu coast1.

The discovery of the nearly 15,000 year old structure points to a past of  bustling maritime trade in these parts, according to Somasundaram Ramasamy, a professor in the department of remote sensing at BU and coordinator of the project. The Rs 90-million project is part of India’s national mission to digitally reconstruct underwater heritage sites."

.....

பகிர்வுக்கு நன்றி கடஞ்சா,

இரு அவதானிப்புகள்.

1. 65 ஆண்டுக்கு முன்பே ஆபிரிக்காவில் இருந்து மனிதர்கள் இந்தியா தீபகற்பத்தினுள் பிரவேசித்து விட்டார்கள். அவர்கள் ஏதோ ஒரு primitive language ஐ பேசியே இருப்பார்கள். இதையே proto Dravidian என்பர். Proto என்ற லத்தின் சொல்லின் அர்த்தம், primitive. அதாவது தொடக்க நிலை. Proto Dravidian என்றால் தொடக்க நிலை திராவிட மொழி. Proto Dravidian தான் தமிழ் என நாம் சொல்லலாம். ஆனால் - இது தமிழின் முப்பாட்டன் என்பதே உண்மை. தமிழை போலவே இன்னும் பல மொழிகளுக்கும் proto Dravidian தான் முப்பாட்டன். ஆகவே 65 ஆயிரம் வருடங்களுக்கு முன்ன்வந்தவர்கள் பேசியது தமிழ் என்பது சரியல்ல. தமிழின் தொன்மை இப்போதைக்கு 2600 ஆண்டுகளே. எதிர் காலத்தில் இது மீளாய்வு செய்யபடலாம்.

2. பூம்புகார் பற்றி நீங்கள் தந்த தரவு நம்பகமாக தெரியவில்லை. அந்த கட்டுரையோ, அந்த தளமோ அவ்வளவு பிரசித்தமானவையும் அல்ல. 15,000 வருடங்களுக்கு முன் துறைமுகம் கட்டும் அளவுக்கு மனித நாகரீகம் விருத்தி அடைந்திருந்தது என்பது - இதுவரை இருந்த மானிடவியல் விளக்கத்தை புரட்டி போடும் தியரி. இப்போதைக்கு 3500 ஆண்டுகள் பழமையான மெசபொதேமியா நாகரீகமே பழையதாக கொள்ளபடுகிறது. இல்லை பூம்புகார் 15000 வருடங்களுக்கு முன்பே இருந்தது என துறைசார் நிபுணர்கள் ஏற்கும் காலம் வந்தால்- நானும் என் புரிதலை மாற்றிக் கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயமும் கடஞ்சா,

நீங்கள்தந்த முதலாவது இணைப்பே proto Dravidian கூட 4500 ஆண்டுகள் பழமையானது என்றே சொல்கிறது. ஆகவே proto Dravidian தான் தமிழ் ( அப்படி இல்லை) என எடுத்தாலும் இதற்கும் பனிக்கால முடிவுக்கும் இடையில் பல ஆயிரம் ஆண்டுகள் (7) உளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, goshan_che said:

விஞ்ஞான ஆராய்வு உசாத்துணையின் எல்லோருக்கும் விளக்கமான மொழயில் பேராசிரியர் சொல்லிய விளக்கத்தை வைத்து,   ஓர் postulate (Alexandira etc.)   இணையம் சுருக்கமாக தந்து இருக்கிறது.  

1 hour ago, goshan_che said:

பூம்புகார் பற்றி நீங்கள் தந்த தரவு நம்பகமாக தெரியவில்லை. அந்த கட்டுரையோ, அந்த தளமோ அவ்வளவு பிரசித்தமானவையும் அல்ல.

அதன் கீழே உள்ள  உசாத்துணை இணைப்புக்கள், முழுமையான விஞ்ஞான ஆராய்ச்சி, தொல்பொருள் மானிடவியல் வரலாற்றை அறிவதற்கு. 

உங்களுடைய  அல்லது Justin அவர்களின் கேள்விகள், நம்பகத்த தன்மையின் மதீப்பீடு போன்றவற்றை நேரடியாக Department of Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India, National Institute of Ocean Technology, Velacherry–Tambaram Main Road Pallikaranai, Chennai 600 100, India, Centre for Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India கேளுங்கள்.

நேரடியாக இணைக்கிறேன்.

https://www.currentscience.ac.in/Volumes/119/03/0526.pdf

SM. Ramasamy 1,*, J. Saravanavel 1 , K. Palanivel1 , C. J. Kumanan 1 and D. Rajasekhar 2

1 Department of Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India

2 National Institute of Ocean Technology, Velacherry–Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100, India

Received 21 November 2019; revised accepted 18 May 2020 doi: 10.18520/cs/v119/i3/526-534

https://www.currentscience.ac.in/Volumes/112/06/1112.pdf

Received 5 March 2016; revised accepted 16 December 2016

SM. RAMASAMY* J. SARAVANAVEL C. J. KUMANAN S. GUNASEKARAN

Centre for Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India

*For correspondence. e-mail: smrsamy@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

விஞ்ஞான ஆராய்வு உசாத்துணையின் எல்லோருக்கும் விளக்கமான மொழயில் பேராசிரியர் சொல்லிய விளக்கத்தை வைத்து,   ஓர் postulate (Alexandira etc.)   இணையம் சுருக்கமாக தந்து இருக்கிறது.  

அதன் கீழே உள்ள  உசாத்துணை இணைப்புக்கள், முழுமையான விஞ்ஞான ஆராய்ச்சி, தொல்பொருள் மானிடவியல் வரலாற்றை அறிவதற்கு. 

உங்களுடைய  அல்லது Justin அவர்களின் கேள்விகள், நம்பகத்த தன்மையின் மதீப்பீடு போன்றவற்றை நேரடியாக Department of Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India, National Institute of Ocean Technology, Velacherry–Tambaram Main Road Pallikaranai, Chennai 600 100, India, Centre for Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India கேளுங்கள்.

நேரடியாக இணைக்கிறேன்.

https://www.currentscience.ac.in/Volumes/119/03/0526.pdf

SM. Ramasamy 1,*, J. Saravanavel 1 , K. Palanivel1 , C. J. Kumanan 1 and D. Rajasekhar 2

1 Department of Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India

2 National Institute of Ocean Technology, Velacherry–Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100, India

Received 21 November 2019; revised accepted 18 May 2020 doi: 10.18520/cs/v119/i3/526-534

https://www.currentscience.ac.in/Volumes/112/06/1112.pdf

Received 5 March 2016; revised accepted 16 December 2016

SM. RAMASAMY* J. SARAVANAVEL C. J. KUMANAN S. GUNASEKARAN

Centre for Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India

*For correspondence. e-mail: smrsamy@gmail.com

கடஞ்சா, உங்கள் பதிலுக்கு நன்றிகள்! நான் மேலே குறிப்பிட்டது போல, முதலில் null hypothesis ஐ வைத்துக் கொண்டு தரவுகள் சேகரிப்பது, அதன் அடிப்படையில் alternate hypothesis நிலைக்குமா என்று நிறுவுவது. இது தான் உலகளாவிய ரீதியில் விஞ்ஞான நடைமுறை. 

நீங்கள் தந்த  குறிப்பிட்ட இணைப்புகள் வேலை செய்யவில்லை எனக்கு, அதனால் உள்ளே செல்ல இயலவில்லை! ஆனால், இந்தியாவின் பாரதிதாசன் பல்கலையின் தராததரம் என்னவென்று எனக்குத் தெளிவில்லை! ஏன் சொல்கிறேன் என்றால், இப்படியான எடுகோள்களைப் பிரேரிக்கும் தனிநபர் கட்டுரைகளை குமரிக்கண்டம் போன்ற விடயங்களை alternate hypothesis இல் இருந்து பின்னோக்கி நிறுவ முயலும் தலைகீழான வேலையை சில இந்திய பல்கலை ஆய்வாளர்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்! இது இந்த ஆய்வாளர்களின் scientific integrity , இழந்த சமூகப் பார்வையால் ஈர்க்கப் பட்ட நிலை. எனவே இந்த ஆய்வறிக்கை குமரிக்கண்டத்தின் இருப்பை நிறுவும் ஒன்றல்ல!

மேலும், 12 - 15 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தான் மனிதன் ஒரு இடத்தில் வேரூன்றி விவசாயம் மூலம் உணவு தேடத் தொடங்கினான் என்று காட்டும் சான்றுகள் பல கண்டறியப் பட்டுள்ளன. அதன் பிறகு தான், கலைகள், மொழி போன்றவற்றை உருவாக்க மனிதனுக்கு ஓய்வு நேரமும் பாதுகாப்பும் கிடைத்தது என்கிறார்கள். அப்படி இருக்க, 15 000 ஆண்டுகளில் ஒரு துறைமுகம் இருந்ததை நான் நம்பவில்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

விஞ்ஞான ஆராய்வு உசாத்துணையின் எல்லோருக்கும் விளக்கமான மொழயில் பேராசிரியர் சொல்லிய விளக்கத்தை வைத்து,   ஓர் postulate (Alexandira etc.)   இணையம் சுருக்கமாக தந்து இருக்கிறது.  

அதன் கீழே உள்ள  உசாத்துணை இணைப்புக்கள், முழுமையான விஞ்ஞான ஆராய்ச்சி, தொல்பொருள் மானிடவியல் வரலாற்றை அறிவதற்கு. 

உங்களுடைய  அல்லது Justin அவர்களின் கேள்விகள், நம்பகத்த தன்மையின் மதீப்பீடு போன்றவற்றை நேரடியாக Department of Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India, National Institute of Ocean Technology, Velacherry–Tambaram Main Road Pallikaranai, Chennai 600 100, India, Centre for Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India கேளுங்கள்.

நேரடியாக இணைக்கிறேன்.

https://www.currentscience.ac.in/Volumes/119/03/0526.pdf

SM. Ramasamy 1,*, J. Saravanavel 1 , K. Palanivel1 , C. J. Kumanan 1 and D. Rajasekhar 2

1 Department of Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India

2 National Institute of Ocean Technology, Velacherry–Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100, India

Received 21 November 2019; revised accepted 18 May 2020 doi: 10.18520/cs/v119/i3/526-534

https://www.currentscience.ac.in/Volumes/112/06/1112.pdf

Received 5 March 2016; revised accepted 16 December 2016

SM. RAMASAMY* J. SARAVANAVEL C. J. KUMANAN S. GUNASEKARAN

Centre for Remote Sensing, Bharathidasan University, Tiruchirappalli 620 023, India

*For correspondence. e-mail: smrsamy@gmail.com

கடஞ்சா, 

இணைப்புக்கு நன்றி.

இணைப்புகள் எனக்கு வேலை செய்தன. விடயம் ஆராய்சி பற்றியது என்பதால் - coordinates தரவுகள் இருந்த இணைப்பை தவிர்த்து, ஆராய்சி கட்டுரை பற்றி சிலாகிக்கிறேன்.

1. இந்த கட்டுரை தனியே சில வகையான ஸ்கானிங் தொழிநுட்பத்தை கொண்டு தரங்கம்பாடி பகுதியில் இருந்து 30 கி மி அளவில் கடல் அடியில் சில அமைபுக்களை கண்டறிந்துளது. இதில் எந்தவைகயான actual field work உம் அல்லது ஏற்று கொள்ளபட்ட dating (carbon or other methods) மேற்கொள்ளபடவில்லை என்பது மிக முக்கியமானது.

2. அடுத்த முக்கிய விடயம், இங்கே கடல் அடியில் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லபடும்  அமைப்புகள் - மனிதன் உருவாக்கியதா, இயற்கையானதா? என்பதை இந்த கட்டுரை மிக, மிக மேலொட்டமாக அணுகுகிறது. சில எடுகோள்களை, ஒன்றுடன் ஒன்று சேர்த்து இது மனிதன் அமைத்தவையாக இருக்கலாம் என்று சொல்லும் கட்டுரை, அவை ஏன் இயற்கையானவை இல்லை என நிறுவவே இல்லை. கட்டுரையின் அத்தனை conclusion உம் may, may be என்று முடிகிறது. அதன் அர்த்தம் it May be man made it may not be.

3. இந்த ஸ்கானிங் அடிப்படையிலும், கடல் நீரோட்டம் (currents and shifting of sand patterns), மற்றும் கடல் மட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையிலும் இந்த அமைப்பு 15,000 வருடத்துக்கு முந்தியதாக இருக்கலாம் என, எந்த விளக்கமும் இல்லாமல் கட்டுரையின் கடைசி பந்தியில் ஒரு giant leap எடுக்கிறது இந்த கட்டுரை. கூடவே எனைய பண்டைய உலக துறைமுகங்கள் இதை பார்த்தே அமைந்தன என இன்னொரு ஆதாரமற்ற giant leap வேறு. என்னை பொறுத்தவரை இந்த கட்டுரை முழுக்க முழுக்க speculation அடிப்படியிலே எழுதபட்டுள்ளது.

4. இந்த கட்டுரையின் கனம். இது உண்மையாயின் - உலக செய்தி நிறுவனக்களில் எல்லாம் ஒரு கிழமைக்கு இதுதான் தலைப்பு செய்தியாய் இருக்கும்.ஆனால் இந்த கட்டுரை வெறும் 7 பக்கம். 2600 வருட கீழடிக்கே தமிழ்நாடு அரசு புத்தகம் வெளியிட்டது. இது 15,000 வருடம். 

5. உண்மை என்னவென்றால் இந்த கட்டுரையின் முடிவு வசனம் சொல்வது போல, இதை பற்றிய ஆராய்சியை இனித்தான் முன்னெடுக்க வேண்டும்.  இது ஒரு ஆராய்சியின் முடிவல்ல, சில ஆரம்ப சிந்தனைகள் (initial thoughts and an explorative opinion) மட்டுமே. 

6. முடிவாக - 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பனிக்காலத்தின் முடிவில் - கடல்கொண்ட மண்ணில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கோ, அப்போது தமிழ் உருவாகி விட்டிருந்தது என்பதற்கோ (இன்னும்) எந்த ஆதாரமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நன்றி, பார்க்கக் கிடைக்கா விட்டாலும் நான் ஊகித்தது சரி தான். சில இந்திய விஞ்ஞானிகள் இப்படி வெவ்வேறு மட்டங்களில் இருக்கிறார்கள் . சில ஆண்டுகள் முன்பு இந்தியப் பிரதமர் இருந்த மேடையில் ஓரிரு விஞ்ஞானிகள் மகாபாரதத்திலேயே அணுவாயுதம் பாவித்திருக்கிறார்கள் என்று பேசிப் பிரதமரை மெய்குளிர வைத்தார்கள். பலத்த எதிர்ப்பு இந்தியாவிலேயே வந்தாலும் அவர்கள் இன்னும் தங்கள் பதவியில் இருக்கிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நன்றி, பார்க்கக் கிடைக்கா விட்டாலும் நான் ஊகித்தது சரி தான். சில இந்திய விஞ்ஞானிகள் இப்படி வெவ்வேறு மட்டங்களில் இருக்கிறார்கள் . சில ஆண்டுகள் முன்பு இந்தியப் பிரதமர் இருந்த மேடையில் ஓரிரு விஞ்ஞானிகள் மகாபாரதத்திலேயே அணுவாயுதம் பாவித்திருக்கிறார்கள் என்று பேசிப் பிரதமரை மெய்குளிர வைத்தார்கள். பலத்த எதிர்ப்பு இந்தியாவிலேயே வந்தாலும் அவர்கள் இன்னும் தங்கள் பதவியில் இருக்கிறார்கள்!

எனது பதிலை எழுதி கொண்டிருக்கும் போதே உங்கள் பதில் வந்து வீழ்ந்தது.

15,000 வருடம் முன் என்றால் அவன் இடை-கற்கால மனிதன். கல்லானா ஆயுதங்களுடன், வேடுவர்களாக (hunter gatherers) அலைந்து திரிந்த காலம். மிகவும் அடிப்படையான உறையுள். நிலையான குடியிருப்பு இல்லை. 

15-12,000 வருடங்களுக்கு பின்னேதான் நிலையான குடியிருப்புகள் தோன்றுகின்றன. 

சில சமயங்களில் ஆராய்சிகளின் நோக்கம் ஆராய்சியல்ல வேறு எதுவோவாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.