Jump to content

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:

இப்போது கி மு 3000 ஆண்டளவிலான இலக்கிய சுவடு தமிழில் உண்டு 
அதுக்கு முந்திய ஒரு மொழி ஆதாரத்தை நீங்கள்தான் தரவேண்டும் 

கல்லில் பதிக்க பட்டிருக்கும் எழுத்துக்களே கி மு 400 வரையானவை 
இப்போதும் யுனெஸ்கோவின் கீழ் பாதுகாப்பில் உண்டு 
அதுக்கு முன்பு ஒரு வடிவத்துக்கு நீங்கள்தான் ஆதாரம் தரவேண்டும் 

இதுவரை இருக்கும் வரலாற்று தடங்கள் ஒன்றோடு ஒன்று முரணானவை 
எகிப்து பிரமிட்ட்டின் கால எல்லையை வைத்து முதல் நாகரீக மனிதர்கள் அங்குதான் 
இருந்தார்கள் என்ற போக்கில் தொடங்கியவை 
பின்பு அதே கால பகுதியில் மாயன்களின் சுவடுகளின் ஆதாரம் கிடைக்கும்போது 
இதில் இருந்து பின்வாங்கி இருக்கவேண்டும் .. அல்லது அதை ஒப்புக்கொண்டு இருக்கவேண்டும் 
யாரும் அதை செய்யவில்லை ... ஓகே அப்போ  மாயன்கள் இரண்டாவது 
என்ற முன் பின்  முரணான முடிவுகளைதான் முன் வைக்கிறார்கள் 

தமிழ் முதன்மை மொழி என்பது எனது வாதம் இல்லை 
அதுக்கு மூத்த மொழி என்ற ஒன்றுக்கு இன்னும் ஆதாரம் இல்லை என்பதுதான் 
இங்கு நான் கூறுவது 

மருதர், அப்படி ஆதாரமாக முதல் மொழி வடிவம் தமிழில் இருந்தால் இங்கே இணைப்பையாவது தாருங்கள். கி.மு 3000 இலக்கியம் என்கிறீர்கள், பின்னர் கி.மு 400 கல்வெட்டு என்கிறீர்கள். இருக்கிறது என்கிறீர்களா இல்லை என்கிறீர்களா?  
தமிழின் தொன்மை 2300 ஆண்டுகள் என்பது வரை இப்போதுள்ள ஆதாரங்களில் தெளிவானதல்லவா?  இதை விட எதைப் புதிதாக ஆதாரமாகக் காட்ட முனைகிறீர்கள் நான் அறியேன்! 

வழமை போலவே உங்களுடன் விஞ்ஞான  ரீதியாக விவாதிப்பது மண்டை காயும் வேலை தான்! 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kadancha said:

நான் சொன்னவற்றில் எது கற்பனை என்பதை சுட்டிக்காட்டினால், அதை மீட்டு பார்க்க முடியும் எதனால் கற்பனையாக இருக்கிறது  என்று. 

youtube இல் இருப்பதின் உண்மை தன்மையை தரம் பிரித்தறிந்தால், அறிவை அகட்டலாம், எல்லாவற்றையும் ஒதுக்கி விட முடியாது. 

இது மேற்கு பக்க ஆரம்ப  ஆய்வு. இப்படி கிழக்கு பக்கத்திலும் நடந்த ஆய்வுக்கான வீடியோ பார்த்த நினைவு, இப்பொது காணவில்லை. 

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1768109.stm

https://grahamhancock.com/archive-review6/

1. கிரஹாம் ஹன்கொக்: போலிவிஞ்ஞான தியரிகளை வெளியிட்டு அவை பற்றி நூல்கள் எழுதி விற்பவர். பத்திரிகையாளர், தொல்லியல் ஆய்வாளர் அல்ல! அவரது சில தியரிகள் நிரூபிக்கவே இயலாத கற்பனைகள்! உங்கள் கற்பனைகள் எவை எனக் கேட்டிருந்தீர்கள். இதோ ஒரு உதாரணம்!

2. பி.பி.சி செய்தியின் அந்த ஹரப்பா நகரம் காபன் டேற்றிங் மூலம் 10,000 ஆண்டுகள் முன்பு என்று உறுதி செய்யப் பட்டதா? இல்லையென்றே நம்புகிறேன். ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

3. இறுதியில், இந்த யுரியூப் வீடியோ ஒரு ஆதாரமே அல்ல! நகரத்தைப் பார்த்தேன் என்று ஒரு மீனவர் சுழியோடி சொல்வதெல்லாம் ஆதாரமல்ல! நீங்கள் உங்கள் தேடற்சொல்லைப் போட்டுத் தேடினால்  கூகிள் ஆண்டவர் தரும் "நீங்கள் கேட்ட வரம்" மட்டுமே இப்படியான வீடியோக்கள்! 

மொத்தத்தில் நான் நினைத்தது போல விஞ்ஞான ரீதியில் தரமான தகவல்களைக் கொண்டு உங்களால் நிறுவ இயலவில்லை! எனதும் உங்களதும் quality of sources மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. எனவே நேரம் வீணாக்க விருமப்வில்லை! நன்றி.

27 minutes ago, Maruthankerny said:

ஒன்றைக் குறித்து உங்களுக்குத் தேடலும் கேள்வியும் இருப்பின் அதைப் படித்தறிதல் அவசியம். குறிப்பாக தத்துவம் சார்ந்த சரியான கேள்வி கேட்கக் கூட அந்த தத்துவத்தைப் படிப்பது முன்நிபந்தனை! படிக்காமல் கேள்விகள் கேட்பது தகவல் சேகரிப்பே ஒழிய அறிவுத் தேடலுக்கு உதவாது

கேள்வியை நான் கேட்கவில்லை! உங்களிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னதால் கேட்டேன்! ஆதாரம் இல்லையென்றால் நான் படிப்பவனல்ல என்று நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது?

நான் இணையக் குப்பைககளைப் படிப்பவனல்ல என்பது உண்மையே! அது எனக்குப் பெருமையே ஒழிய குறைபாடல்ல! 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

மருதர், அப்படி ஆதாரமாக முதல் மொழி வடிவம் தமிழில் இருந்தால் இங்கே இணைப்பையாவது தாருங்கள். கி.மு 3000 இலக்கியம் என்கிறீர்கள், பின்னர் கி.மு 400 கல்வெட்டு என்கிறீர்கள். இருக்கிறது என்கிறீர்களா இல்லை என்கிறீர்களா?  
தமிழின் தொன்மை 2300 ஆண்டுகள் என்பது வரை இப்போதுள்ள ஆதாரங்களில் தெளிவானதல்லவா?  இதை விட எதைப் புதிதாக ஆதாரமாகக் காட்ட முனைகிறீர்கள் நான் அறியேன்! 

வழமை போலவே உங்களுடன் விஞ்ஞான  ரீதியாக விவாதிப்பது மண்டை காயும் வேலை தான்! 

தொல்காப்பியம் 2381 ஆண்டுகள் பழமையானது 
அதன் தொகுப்புகள் உள்ளடக்கியவை 300-400 வருடம் 
பழையானவை. ஆதலால்தான் தமிழ் அண்ணளவாக 3000 வருட 
இலக்கிய பின்னணியை கொண்டது என்ற முடிவுக்கு வருகிறார்கள் 

கல்லில் இப்போது நீங்கள் போய்  பார்க்க விரும்பினாலும் 
பார்க்க கூடியதாக கி மு 400 வருடம் பழமையான எழுத்துக்கள் உண்டு 
என்பதால் எழுதினேன் அது யுனெஸ்கோவின் பாதுகாப்பில் உண்டு. 

நீங்கள் என்ன  அப்படி பெரிய விஞ்ஞானம் பேசுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை 
எந்த ஒரு தேடலும் இல்லாமல் .... இது இல்லை அது இல்லை 
என்று விட்டு இருக்க 

நீங்களும் கோசானும் எதோ நீதிபதி மாதிரியும் 
நாங்கள் குற்றம்செய்துவிட்டு இல்லை என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் போலவும்தான் 
உங்கள் போக்கு. என்னை பொறுத்தவரை எனக்கு என் மொழி மீது இருக்கும் ஆர்வத்தால் இதை  
தேடி தேடி படித்து வருகிறேன் அவ்வாறு வேறு யாரும் செய்துகொண்டு இருப்பின் அவர்கள் அனுபவத்தையும் 
வாசிப்புகளையும் அறிய ஆவலாக இருக்கிறேன்  அவ்வளவே.

உங்களுக்கும் கோஷனுக்கும் நிரூபிக்க வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கு இல்லை 
மண்டை காய்ந்தால் ஈரமாக வைத்திருந்து ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது சிறப்பு என்றுதான் எண்ணுகிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

மருதர், நன்றி! எங்களுக்கு நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை! ஆனால் கற்பனையை விஞ்ஞானத் தரவு மாதிரி யாழில் பரப்பும் போது சுட்டிக் காட்ட வேண்டியது பொது இடத்தில் கடமை என எண்ணியதால் சுட்டினேன்! (உதாரணமாக தொல்காப்பியத்தின் வயது, இதற்கு என்ன ஆதாரம்? ஒன்றும் இல்லை. இதை ஒருவர் எழுதினாரா பலர் எழுதினரா என்பதே இன்னும் விவாதத்தில் இருக்கும் விடயம்!). 

மண்டை காயாமல் இருக்க இப்படி உங்கள் போன்ற ஆட்களின் தரவுகளில் இருக்கும் நம்பிக்கையின்மையை சுட்டிக் காடி விட்டு ஒதுங்கி விடுவது தான் ஒரே வழி! பிறகு வாசகர் தீர்ப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன்.

அதில் கதைத்தது எல்லாமே கற்பனையாக இருக்கட்டும். 

உள்ள பொருட்களின் dating ஆய்வை மறுக்கிறீர்களா? 

அவ்வளவு ஆழமமக, பரவலாக  தோண்டப்படவில்லை, கடல் கொண்ட இடம்  என்பதை கருத்தில் கொண்டால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பே சொன்னது போல இந்த திரி இப்போ வாழைப்பழ காமெடி ரேஞ்சுக்கு வந்து விட்டதால்....சொல்ல எதுவும் இல்லை.

புதிய வரலாறு படைப்போம் 😜

5 hours ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன். இப்படிக் கற்பனைகளை அடுத்த சந்ததியிடம் கடத்தினால், தமிழின் நிறுவப் பட்ட தொன்மையைக் கூட அவர்கள் நக்கலுடன் குப்பைக் கூடையில் வீசி விட்டு நகரும் நிலை வரும் என்பதே என் அச்சம்! 
 
நான் முன்பும் இதே போல் எழுதி விசுகு அண்ணாவும் தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

இங்கே பல தந்தைமார்- பிள்ளைகளுக்கு 12 வயசு வரை நாம் 20 ஆயிரம் ஆண்டுக்கு மேல் என்று கதை சொல்லி, பிள்ளையள் பள்ளிகூடம் போய் இது பேய்கதை என்பதை உணர்ந்து பின்னர் நாம் 2600 ஆண்டுகள் பழமையான உலகின் பழைய மொழிகளில் ஒன்று என்பதையும் சந்தேகமாக பார்ப்ப்தை நேரில் கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

கிரஹாம் ஹன்கொக்: போலிவிஞ்ஞான தியரிகளை வெளியிட்டு அவை பற்றி நூல்கள் எழுதி விற்பவர். பத்திரிகையாளர், தொல்லியல் ஆய்வாளர் அல்ல! அவரது சில தியரிகள் நிரூபிக்கவே இயலாத கற்பனைகள்! உங்கள் கற்பனைகள் எவை எனக் கேட்டிருந்தீர்கள். இதோ ஒரு உதாரணம்!

அதில் கதைத்தது எல்லாமே கற்பனையாக இருக்கட்டும். 

உள்ள பொருட்களின் 7500 dating ஆய்வை மறுக்கிறீர்களா?

அவ்வளவு ஆழமமக, பரவலாக  தோண்டப்படவில்லை, கடல் கொண்ட இடம்  என்பதை கருத்தில் கொண்டால்.

3 hours ago, Justin said:

2. பி.பி.சி செய்தியின் அந்த ஹரப்பா நகரம் காபன் டேற்றிங் மூலம் 10,000 ஆண்டுகள் முன்பு என்று உறுதி செய்யப் பட்டதா? இல்லையென்றே நம்புகிறேன். ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

3. இறுதியில், இந்த யுரியூப் வீடியோ ஒரு ஆதாரமே அல்ல! நகரத்தைப் பார்த்தேன் என்று ஒரு மீனவர் சுழியோடி சொல்வதெல்லாம் ஆதாரமல்ல! நீங்கள் உங்கள் தேடற்சொல்லைப் போட்டுத் தேடினால்  கூகிள் ஆண்டவர் தரும் "நீங்கள் கேட்ட வரம்" மட்டுமே இப்படியான வீடியோக்கள்! 

ஆரம்ப ஆய்வு என்று சொன்னதின் அர்த்தம். இதை ஆதாரம் என்று நான் எங்குமே சொல்லவில்லை.

ஆனால், அந்த இடத்தில் மேலதிகமாக ஆய்வு செய்யாமல், 5000 மட்டுமே என்று சாதிப்பது விஞ்ஞானம் என்று நான் அறியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

அதில் கதைத்தது எல்லாமே கற்பனையாக இருக்கட்டும். 

உள்ள பொருட்களின் 7500 dating ஆய்வை மறுக்கிறீர்களா?

அவ்வளவு ஆழமமக, பரவலாக  தோண்டப்படவில்லை, கடல் கொண்ட இடம்  என்பதை கருத்தில் கொண்டால்.

ஆரம்ப ஆய்வு என்று சொன்னதின் அர்த்தம். இதை ஆதாரம் என்று நான் எங்குமே சொல்லவில்லை.

ஆனால், அந்த இடத்தில் மேலதிகமாக ஆய்வு செய்யாமல், 5000 மட்டுமே என்று சாதிப்பது விஞ்ஞானம் என்று நான் அறியவில்லை. 

வேறெது விஞ்ஞானம் எண்டொருக்கா எனக்குச் சொல்லுங்கோவன்? ஆய்வு "எமக்கு விரும்பிய பதிலைத் தரும் வரை" 5000 இற்குக் கூடத் தான் இன்னும் கண்டு பிடிக்கவில்லை! என்று நம்பிக் கொண்டிருப்பதா? 

சரியான கொமெடியனாக இருக்கிறீர்கள் கடஞ்சா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

வேறெது விஞ்ஞானம் எண்டொருக்கா எனக்குச் சொல்லுங்கோவன்? ஆய்வு "எமக்கு விரும்பிய பதிலைத் தரும் வரை" 5000 இற்குக் கூடத் தான் இன்னும் கண்டு பிடிக்கவில்லை! என்று நம்பிக் கொண்டிருப்பதா? 

சரியான கொமெடியனாக இருக்கிறீர்கள் கடஞ்சா!

7500 வருட டேட்டிங் artefacts இருக்கிறது, மேலதிக ஆய்விலலை. அதனால் நான் அறிந்த 5000 அதற்கு வயது. 
 
அப்படியானல் , டேட்டிங் ஆய்வு 5000க்கு உள்ளே அல்லவா இருக்க வேண்டும். 

அவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லது dating analysis  பிழை. 

இதில் எது உண்மை? 

நீங்கள் சொல்வதின் படி, நான் அறிந்த 5000.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

அதில் ஏன் இலங்கைத் தீவில் இருக்கும் வேடராய் தவிர்த்தாலும்,  இதற்கான விளக்கம் இல்லை என்பது தெரியவில்லை.  

There is evidence that in the next 20,000 years, modern humans reached Sri Lanka [15]. 

https://www.sciencedirect.com/science/article/pii/S0960982209020685#bbib15

I. HabibPeople's History of India – Part I: Prehistory
Aligarh Historians Society and Tulika Books, Aligarh, India (2001)
 
இது இலங்கைத் தீவில் Dravidians ( ட்ராவிடின்ஸ் யார் என்ற வாதத்தையும் தவிர்ப்போம்) இந்த முதலாவது பிரசன்னம் (ஆக கொள்ளப்பபடுகிறது). 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

https://www.bbc.co.uk/news/world-asia-india-46616574

இதில் அவர் உறுதியாக சொல்ல முடியவில்லை. may rewrite history.

ஆனால் dna analysis ஐ நான் வரவேற்கிறேன். அவரின்  may rewrite history என்பது எதனால் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்று.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

அதில் ஏன் இலங்கைத் தீவில் இருக்கும் வேடராய் தவிர்த்தாலும்,  இதற்கான விளக்கம் இல்லை என்பது தெரியவில்லை.  

There is evidence that in the next 20,000 years, modern humans reached Sri Lanka [15]. 

https://www.sciencedirect.com/science/article/pii/S0960982209020685#bbib15

I. HabibPeople's History of India – Part I: Prehistory
Aligarh Historians Society and Tulika Books, Aligarh, India (2001)

திராவிடருக்கான தொடர்பை நீக்குகிறேன், ஏனெனில், அது 20, 000 வருடங்ளுக்கு முன்பு என்பதோடு தொடர்பு உள்ளது.

12 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன்.

13 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

நான் சொல்ல வந்தது, அது வேடுவர் ஆக தெரியவில்லை. வேடுவர் அவர்கள் சொல்வது போல 60000 வருடங்களுக்கு முன்பே இலங்கைத் தீவு என்ற இப்போதைய புவி அமைப்பை அடைந்து விட்டனர் (என நம்பப்படுகிறது). 

நான் சொல்ல வந்தது, 20, 000 வருடங்களுக்கு முதல் ஓர் மக்கள் கூட்டம் இலங்கை தீவு வந்து இப்போதைய வடக்கு, வட மேடற்கு இடங்களில் மையமாக  கொண்டது.

அந்த மக்கள் கூட்டம் திராவிடர் (அது யாராகிலும்) இன் முதல் பிரசன்னம் இலங்கை தீவில் (ஆக கருதப்படுகிறது).

ஏனெனில், நான் முன்பு சொல்லிய செட்டிகுளம், பெரியமடு குடியிருப்புகள் 20 000 வருடங்களுக்கு முற்பட்டவையாக கணிக்க பட்டு உள்ளது (அது வரைக்கும் சொறி சிங்களம் சென்றது). 

இவற்றை நான் நேரடியாக காணவில்லை. விடயம் தெரிந்த, கண்டறிந்தவைகளை பெரிதாகவோ அல்லது திரித்தோ சொல்ல தேவை இல்லாத, நம்பிக்கையானவர் மூலம் வாய் வழியாக அறிந்தது.   

இதை இங்கு சொல்வதற்கு காரணம், அவரவருக்கு வேண்டியதை மட்டும் விஞ்ஞான ஆய்வு செய்து விட்டு, இது தான் வரலாறு என்று சாதிப்பது (கிந்தியாவும், சிங்களமும்), பிழையான வரலாற்றில், புரிதல் மற்றும் இந்திய நிலப் பரப்பில் ஒருவரை ஒருத்தர் வீழ்த்த வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வரும்.  

கிந்தியாவுக்கும், சிங்களத்துக்கும் ஏன் அந்த தேவை உள்ளது என்றால், அவை கட்டப்பட்டு இருப்பது பொய்யான, புனைந்த கருத்தாக்கத்தில்.  

இதில் விஞ்சானம் இல்லை, அப்படி இருந்தாலும், நீங்கள் தாபிக்கப்பட்ட அளவுக்குள் வரவில்லை என்றால், கருத்தில் எடுக்க முடியாது என்பீர்கள்.  

முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த தகவலை இங்கே இணைத்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்..

நான் இதை இன்னமும் முழுமையாக(சில  links) வாசித்து முடியவில்லை ஆனாலும்  விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.. அதே நேரம் எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. ஆனாலும் இங்கே கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

முதலில் இந்த தகவலை இங்கே இணைத்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்..

நான் இதை இன்னமும் முழுமையாக(சில  links) வாசித்து முடியவில்லை ஆனாலும்  விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.. அதே நேரம் எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. ஆனாலும் இங்கே கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..

பிரபா சிதம்பரநாதன் அவர்களே.....
நீங்கள், எனக்கு நன்றி சொல்வதை.... அன்புடன் ஏற்றுக் கொண்டாலும்,

உண்மையில்... இந்தத் தலைப்பை,
உவத்தல், காய்த்தல்,  வெட்டுக்  கொத்து இன்றி...
பொறுமையாக...... கருத்துக்களை முன் வைத்த...

கபிதன், மருதங்கேணி, ஜஸ்ரின், நாதமுனி, கோசான், வணங்கா முடி,
கடஞ்சா, சண்டமாருதன், குமாரசாமி அண்ணா,  விளங்க நினைப்பவன்...
போன்றோர் தான்... முக்கியமானவர்கள்.

செய்தி திரட்டிப் பகுதியில் ...10 நாட்களுக்கு முன்பு, இணைக்கப் பட்ட  இந்தத் தலைப்பை...
இது வரை... அறுபத்தி மூன்று பதிவுகள் இடப் பட்டு,  இரண்டாயிரம் பேர் வரை வாசித்து, 
இருந்தமை...  வியக்க வைத்த நிகழ்வு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

விஞ்ஞானம் ஓர் பகுதியாக இருக்க முடியுமே தவிர, விஞ்ஞானம் மட்டும் முடிவை நிர்ணயிக்க முடியாது.

மற்றது, அவர் சொல்வது இப்போதைய வரலாற்று trend ஆக நம்பப்படுபவையை (உ.ம். ஆரியர் வருகை ) கேள்விக்கு உட்படுத்தும் விஞ்சான ஆய்வுகளுக்கு நிதி மறுக்கப்படுகிறது. இதை அவர் (1-2 மணி இடைவெளியில் சொல்கிறார்).

எனவே. நான் சொன்ன narrative  ஏற்கனவே கருத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

நீங்கள் சொன்னதின் படி, null hypothesis இல் இப்போதைக்கு ஒன்றுமே ஆய்வு செய்ய தயாரில்லை.   

DNA ஏன் decisive ஆக இருக்க முடியாது என்பதை சொல்கிறார்.

இவரை முன்பு அறிந்துளேன், இப்போதே  கிடைத்தது. 

https://indictales.com/2019/07/01/indian-civilization-the-untold-story-revisited-a-talk-by-raj-vedam/

மற்ற மொழிகளை விட்டாலும், கமரூன் இற்கும் தமிழிற்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன், 37-45 நிமிடங்களில் DNA ஐ பற்றி விளக்குகிறார்.

இதனாலேயே, அந்த Harvard DNA analysis, may rewrite என்கிறார்கள் என்று நினைக்கிறன்.   

அக்கறை உள்ளவர்கள், முழுவதையும் (Raj Vedam) பொறுமையாக பார்க்கவும்.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கு கேட்டு இருந்தேன் 'திராவிட' என்பது எங்கு முதலில் பயன்படுத்தப்பட்டது என்று.

இதுவரைக்கும் கிடைக்கக்கூடிய தரவுகளின் படி, மனு தர்மத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

http://oaks.nvg.org/manu-samhita.html#10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

மற்ற மொழிகளை விட்டாலும், கமரூன் இற்கும் தமிழிற்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.  

ஆனால் இவர்கள் பேசும் மொழியை “ Bantu language “ எனும் மொழியுடன் ஒப்பிடுகிறார்களோ. எது உண்மை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் இவர்கள் பேசும் மொழியை “ Bantu language “ எனும் மொழியுடன் ஒப்பிடுகிறார்களோ. எது உண்மை?

திராவிட மொழிகள் மாதிரி பாண்டு என்பது ஓர் மொழி குடும்பம்.

நான் இணைத்து, தொடர்பு இருக்கிறது என்பதை சொல்வதற்கு.

அது காலனித்துவதில் ஏற்றபட்டு இருக்க  கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
   
அப்படி ஆயின், தொடர்பு எப்படி வந்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

திராவிட மொழிகள் மாதிரி பாண்டு என்பது ஓர் மொழி குடும்பம்.

நான் இணைத்து, தொடர்பு இருக்கிறது என்பதை சொல்வதற்கு.

அது காலனித்துவதில் ஏற்றபட்டு இருக்க  கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
   
அப்படி ஆயின், தொடர்பு எப்படி வந்தது? 

இந்த videoவில் “Solam, pudi/பிடி?,  என்பவை நாங்கள் பேசும்சொற்களாக இருக்கிறது..மற்றைய சொற்களை தொடர்புபடுத்தும் விதம் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. 

மொழியியலோ.. தொல்பொருளராச்சியோ எனது துறையல்ல.. ஆனாலும்உண்மையில் இதுபற்றி மேலும் அறியும் ஆர்வம் வருகிறது..

இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த videoவில் “Solam, pudi/பிடி?,  என்பவை நாங்கள் பேசும்சொற்களாக இருக்கிறது..மற்றைய சொற்களை தொடர்புபடுத்தும் விதம் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. 

மொழியியலோ.. தொல்பொருளராச்சியோ எனது துறையல்ல.. ஆனாலும்உண்மையில் இதுபற்றி மேலும் அறியும் ஆர்வம் வருகிறது..

இணைப்பிற்கு நன்றி.

இணைத்ததின் காரணம், இத்தகைய கதைகளை (Raj Vedam) சொல்வது போல, விஞ்ஞானம் சொல்ல முடியாது என்பதை உதாரணம் மூலம் சொல்லவே .

மேலும் ஆய்வு தேவை என்பது உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.