Jump to content

கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு

September 3, 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் தவறி நிலத்தில் வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #கஜேந்திரகுமார் #பெரும்பான்மையின #தொழிலாளி #உயிரிழப்பு #தமிழ்தேசியமக்கள்முன்னணி
 

https://globaltamilnews.net/2020/149632/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில் (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப் பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் மதுபோதையில் இருந்தமையால் தடுமாறி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

https://www.tamilwin.com/community/01/255090?ref=home-imp-parsely

 

கதைக்கிற முழுக்க தமிழ்தேசியம். கூரை வேலைக்கு சிங்களவன் 🤣

இதுதான் சமஷ்டி என்று முதலே தெரியாமல் போச்சே அண்ணே.

இருந்தாலும் மரணித்தவருக்கு இரங்கல்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

கதைக்கிற முழுக்க தமிழ்தேசியம். கூரை வேலைக்கு சிங்களவன் 🤣

இதுதான் சமஷ்டி என்று முதலே தெரியாமல் போச்சே அண்ணே.

இருந்தாலும் மரணித்தவருக்கு இரங்கல்கள். 

 

Contractors bring their own people!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதியில் வேலைக்கு ஆட்கள் மகா தட்டுப்பாடு. அதிலும் கட்டட வேலைக்கு மகா மகா தட்டுப்பாடு. ☹️

எங்களின் ஆட்களின் வேலையில் தரமில்லை. ஒழுக்கம் Discipline இல்லை. நுட்பமும் இல்லை. ☹️ 

தென்பகுதி தொழிளாளிகள் திறமையாக உழைக்கிறார்கள். வியாபாரமும் அவர்களுக்குப் போகிறது. இதில் குறை சொல்ல ஒன்றுமேயில்லை 👍

குறை  எங்களில்தான் உள்ளது ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு பதினோரு மணிக்கு கட்டட வேலையில் ஈடுபடலாமா? உள்ளூர் ஆள் கிடைக்கவில்லை போல வேலைக்கு.

Link to comment
Share on other sites

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இரவு பதினோரு மணிக்கு கட்டட வேலையில் ஈடுபடலாமா? உள்ளூர் ஆள் கிடைக்கவில்லை போல வேலைக்கு.

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கள் அதிகம், ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. யாழ்ப்பாணத்தில்  வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை கொடுக்கும் சட்டத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தால் சிங்களவருக்கு பதிலாக தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கரை இறக்குமதி செய்யக்கூடியதாக இருக்கும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கள் அதிகம், ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. யாழ்ப்பாணத்தில்  வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை கொடுக்கும் சட்டத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தால் சிங்களவருக்கு பதிலாக தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கரை இறக்குமதி செய்யக்கூடியதாக இருக்கும். 😀

அதானே விடக்கூடாது யாழில் இனி நடக்கும் சம்பவமும் நக்கலும் நளினமும் ஆக இருக்கணும் இப்படி கட்பகதறு சொல்வதை பார்க்க ஊரில் ஒரு தென்னிலங்கை பயித்தியம் ஒன்றின் நினைவுக்கு வருது .விடிந்தால் காணும் திட்ட தொடங்கிவிடுவார் வயித்து வலியை  நம்பினாலும் வடக்கனை நம்பக்கூடாது அதிலும் யாழ்பாணத்தவனை நம்ப கூடாது இப்படி உளறிக்கொண்டே யாழ்க்கும் மாலுசந்திப்பக்கமும் வாகனம்களில் மேல் கூரைகளில் இலவச பயணம் அத்துடன் யாழ்ப்பாணத்தவனுக்கும் திட்டும் விழும் மதியமானால் நிறுத்திவிடுவார் சாப்பாட்டுக்கடைகளில் ஒரு பாசல்  வாங்கி சனம்  வாங்கி கொடுத்து விட்டு தன்கடை வேலையை பார்க்கும்கள் மறுபடியும் பின்னேரம் தொடங்குவார் சனம்  கண்டு கொள்வதேயில்லை .நன்றி பழைய நினைவுகளை கொண்டு வந்ததுக்கு  கட்பகதறு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.