Jump to content

இயற்கையை காப்போம்


Recommended Posts

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் இரண்டரை ஏக்கரில் நடக்கூடிய 1000 மரங்களை 
வெறும் 220சதுரமீட்டரில் 1100 மரங்கள் வளர்த்து சாதனை செய்திருக்கிறார் மேலும் இவர் 1100 மரங்களை எப்படி நட்டார் இதனால் என்ன பயன் சொல்கிறார் 

 

சென்னைக்கு அருகில் ஒரு தனி மனிதன் உருவாக்கிய காடு...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று லட்சம் மரங்களை உருவாக்கும் யானை / பல்லுயிர் பெருக்கம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் புது காடு உருவாகிறது உங்களுக்கு தெரியுமா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பள்ளிக்கூடமே அனுப்பாத தந்தை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடி நீர்மட்டம் உயர கடந்த 4வருடங்களில் 30 ஏரிகளை தூர்வாரிய MLA (நாம் தமிழரல்ல😊)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அரிய மூலிகைகளை வளர்க்கும் இயற்கை விவசாயி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவினாசி  – மரக்கன்று நடும் நிகழ்வு

அவினாசி தொகுதி - மரக்கன்று நடும் நிகழ்வு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை வளம் மீள் உருவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்- வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

 
1-3-1-696x522.jpg
 36 Views

‘பனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்’ என யாழ்.வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களின் வாழ்வியலில் பனை வளம், மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அவ் வகையில், பனை வளத்தினைக் காக்கும் அதேவேளை மீள் உருவாக்கம் செய்யம் பொறுப்பினை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1-1-2.jpg

மேலும் எமது மக்களின் பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு என சகல மட்டங்களிலும் பனை மரங்கள் முக்கியத்துவமுடையன. கற்பக தருவின் பயன்கள் பற்றி எமது மக்களிடத்தில் விளங்கப்படுத்தப் படவேண்டிய அவசியம் கிடையாது.

எமது கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய வளங்களில் ஒன்று. அப்படியான சூழ் நிலையில், காணப்படுகின்ற பனை மரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் யுத்தினால் அழிக்கப்பட்ட பனை மரங்களை எவ்வாறு மீளுறுவாக்கம் செய்யப் போகின்றோம் என்பதும் சவாலான காரியமாகவே உள்ளது.

1-4-1.jpg

பனைகளை தறிப்பது தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதும் சட்டத்திற்கு முரணாக பனைகளை அழிக்கும் போக்குகள் காணப்படுகின்றன. எங்கள் மண்ணின் மிகச் சிறந்த வளம் அழியக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக சட்டத்திற்குப் புறம்பாக பனைகள் அழிக்கப்படும் போது அதற்கு எதிராக சகலரும் வெளிப்படுத்த வேண்டும்.

பனைகள் அருகிவரும் நிலையில் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு உலோகங்களையும் மாற்று வளங்களையும் பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்கது. மேலும் யுத்தத்தின் போது காப்பரண்களை அமைப்பதற்காக ஏராளமான பனைகள் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன. எரிகணை வீச்சிலும் யுத்த எல்லைகளில் பனைகள் அழிக்கப்பட்டுவிட்டன.

1-5-1.jpg

இவ்வாறாக அழிக்கப்பட்ட பனை வளத்தினை மீளுருவாக்கம் செய்வதற்கு பாரிய செயற்றிட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும். எனினும் அது பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை.

இந் நிலையில் உள்ளுராட்சி மன்றங்களான எமக்கும் பொறுப்புள்ளது. அப் பொறுப்பினை உணர்ந்தே கடந்த அவைக்கூட்டத்தில் முடிவு எடுத்து இச் செயற்றிட்டத்தினை முதற்கட்டமாக வல்லையில் ஆரம்பித்துள்ளோம்.

தொடர்ந்து பாவனையற்று காணப்படும் அரச காணிகளில் இச் செயற்றிட்டம் தொடரும். எதிர்வரும் காலங்களில் இவ்விடயத்துடன் தொடர்புடைய அரச, கூட்டுறவு, அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒன்றிணைத்து பயணிக்கவுள்ளோம்”  என்றார்.

 

https://www.ilakku.org/பனை-வளம்-மீள்-உருவாக்கத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியை காப்பாற்றுங்கள்

 

எப்படி ஒரு ஏரியை இல்லாமல் செய்வது

Pradeep John (Tamil Nadu Weatherman) on Twitter: "Such a sad state, 20  years ago, i used to go every week to Kolathur to buy feed fish for my  Flower Horn Fish. I

மரம் தங்கசாமி ஒரு சகாப்தம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

 

புதுடெல்லி,

இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு பல லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரப பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நம் நாட்டின் தலைநகரமான டெல்லி காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாநில எல்லை பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அடைகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

டெல்லிக்கு தான் அந்த நிலைமை என்றால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. மத்திய அரசு காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகம் மாசு அடையும் என்பதால் பாரம்பரிய வெடிகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மொத்தமாக ரூ.2,200 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான முதல் தவணையாக 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களுக்கு இந்த தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மராடிய மாநிலத்துக்கு மட்டும் 396.5 கோடியும், குறைந்தபட்சமாக அரியானா மாநிலத்திற்கு 24 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.116.5 கோடி விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு ரூ.90.5 கோடியும், மதுரைக்கு ரூ.15.5 கோடியும், திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/India/2020/11/03002030/Govt-releases-Rs-2200-crore-to-15-states-towards-measures.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.