Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பவளப்பாறைகள் இல்லையென்றால் நம் நிலைமை என்ன தெரியுமா? 

 

செயற்கை பவளப்பாறை: தமிழகத்தின் முன்னோடி திட்டம் 

 

ஆஸ்திரேலியாவில் உள்ள உலக அதிசயத்தில் ஒன்றான பெருந் தடுப்புப் பவளத்திட்டு

 

Link to post
Share on other sites
 • Replies 134
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இயற்கையை காப்போம்🙏   'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் து

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

100 ஏக்கர் காடு     

 • கருத்துக்கள உறவுகள்

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

நன்றி சுவைப்பிரியன் கருத்திற்கு 

பேரழிவாக மாறக்கூடிய கப்பலின் தற்போதைய நிலை

118768040_3319991388083046_4861951248474837008_o-960x640.jpg?189db0&189db0

 

அம்பாறை – சங்கமன் கந்த கடற்பகுதியில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் விபத்து உள்ளாகி தீப்பற்றிய கப்பலில் இருந்து தீப்பரவல் காரணமாக இலங்கை கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள அபாய நிலை இதுவரை நீங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று 38 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தாலும், கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளதால், கப்பல் மிதந்தவாறு இலங்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தற்போது 22 கடல் மைல் தொலைவில் கப்பல் உள்ளதென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கப்பல் மிக மெதுவாக தெற்கு நோக்கி மிதந்து செல்வதாகவும் கப்பல் 60 அடி ஆழத்தில் உள்ளதாகவும் கப்பலில் இருந்த 23 பேரில் தற்போது 19 பேர் கடற்படையினருடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

இக்கப்பலினால் நாட்டின் கடல் எல்லைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர விளக்கமளிக்கையில்,

“நமது கடல் எல்லைக்கு அப்பால் கப்பலைத் தள்ளிச்செல்ல முடியுமாக இருந்தால், அதனை செய்வதே எமது முதலாவது முயற்சி. கப்பலில் இருக்கும் 2,000,72 தொன் மசகு எண்ணெய் கடலில் கலப்பதுதான் இரண்டாவதாக நாம் அடையாளம் கண்டுள்ள பாரதூரமான நிலைமை. அப்படி நடந்தால் அது நமது கடற்பரப்பில் மாத்திரமல்ல முழு உலகத்தையும் பாதிக்கச் செய்யும். அதனை எதிர்கொள்வதற்கு நாடென்ற ரீதியில் எமக்கு இருக்கும் வளங்களும் சக்தியும் குறைவானது. எனவே, எமக்கு இருக்கும் வளங்களின் மூலம் கடல்வாழ் உயிரிழனங்களை எம்மால் பாதுகாக்க முடியாது. அந்த கடல்வாழ் உயிரினங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொண்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிப்பதற்காக மேல் நோக்கி வரும்போது மசகு எண்ணெய்யை அவை உட்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்” – என்றார்.

இதேவேளை குறித்த கப்பலானது கப்பலின் உரிமையாளர்களால் சர்வதேச காப்பு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனக் குழு ஒன்று 7ம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/பேரழிவாக-மாறக்கூடிய-கப்ப/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காடு வளர்ப்பு பற்றி நம்மாழ்வார் கூறியது

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்களோடு இணைந்து காடுகளை வளர்ப்பது எப்படி?-நம்மாழ்வார்-பகுதி 2

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

15 ஏக்கரில் குறுங்காடு... வழி காட்டிய நம்மாழ்வார்!

நமக்குப் பேரரணாக இருந்த காடுகளை அழித்தோம்; இயற்கையைச் சிதைத்தோம்; புயல், மழை, வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற வடிவங்களில், இயற்கையின் கோபத்தைச் சம்பாதித்தோம். ‘இப்போதாவது இயற்கையைச் சீரமைக்காவிட்டால், நாம் இன்னும் நிறைய இயற்கைப் பேராபத்துகளைச் சந்திக்க நேரிடும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு விதையை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார். அப்படி நம்மாழ்வாரின் சீடராக இருந்து, அவருடைய அறிவுரைப்படி 15 ஏக்கர் நிலத்தில் சூழலியல் காக்கும் அடர் வனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன். அந்தச் சூழலியல் காக்கும் அடர் வனத்துக்குள் 500 வாழைகளும், கிராம்பும் சாகுபடி செய்து, தற்சார்பு வாழ்வியல் முறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் குணசேகரன்.  

நிருபர் -  துரை.வேம்பையன்
வீடியோ -  நா.ராஜமுருகன்
ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

இயற்கை காடுகள் எல்லாம்,  கான்கிரீட் காடுகளாக 
மாற்றிக்கொண்டே போவதால், மழையின்மை, பருவநிலையில் 
மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை மீண்டும் பழைய நிலைக்கு 
மாற்றவேண்டுமானால் இழந்த காடுகளை  மீட்க வேண்டும். 
குறுகிய காலத்தில் அடர் காடுகளை வளர்க்க உதவும்

 

புதிய காடுகளை உருவாக்குவோம் 

 ஒருபோதும் காடாக இருந்திராத நிலத்தில் விதைகளை விதைப்பதோ அல்லது மரங்களை நடுவதோ காடு வளர்ப்பு ஆகும். மீண்டும் காடாக்குதல் என்பது முற்றிலுமாக அழிந்து போன, உதாரணமாக மரங்கள் வெட்டப்பட்ட காட்டை மீண்டும் உருவாக்குவதாகும். நூறாண்டு காலமாக பல்வேறு நாடுகள் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்கொண்டு வருகின்றன. காடுகளை மீண்டும் உருவாக்கவும் உயிரியற் பல்வகைமை வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் உதவவும் அரசாங்கங்களும் அரசு சாரா அமைப்புகளும் காடு வளர்ப்பு திட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றன. (இங்கிலாந்தில் காடு வளர்ப்பு என்பது நிலத்தை சட்ட ரீதியாக அரசு காடாக மாற்றுவதைக் குறிக்கப்படும்.) காடுகளின் வளத்தைப் பெருக்க நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

நேர்மறை வினைகள் - மரம் நடுவது, காடு வளர்ப்பது மற்றும் காட்டின் பயனை விளம்பரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது
எதிர்மறை வினைகள் - வனப்பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் மூலம் காடுகளை அழிப்பதைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது
இவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் காடு வளர்ப்பது என்ற நேர்மறை வினையாகும்.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

7000 சதுர அடியில் அமைந்துள்ள குறுங்காடு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Permaculture instructor Andrew Millison journeys to India to film the epic work of the Paani Foundation’s Water Cup Competition. We tour the village of Garavadi, in Maharashtra, who competed in the 2019 competition to install the most amount of water harvesting structures in a 45 day period. Guided by Paani Foundation’s chief advisor, Dr. Avinash Pol, we visit the work and see the effects of a watershed-scale groundwater restoration project that has dramatically improved the lives, economy, ecology and stability of this village, all in 45 days!

பானி அறக்கட்டளையின் நீர் கோப்பை போட்டியின் காவியப் படத்தை படமாக்க பெர்மாகல்ச்சர் பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரூ மில்லிசன் இந்தியா செல்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள காரவாடி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்கிறோம், அவர் 2019 போட்டியில் 45 நாள் காலகட்டத்தில் அதிக அளவு நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவ போட்டியிட்டார். பானி அறக்கட்டளையின் தலைமை ஆலோசகர் டாக்டர் அவினாஷ் பொல் அவர்களால் வழிநடத்தப்பட்டு, இந்த கிராமத்தின் வாழ்க்கை, பொருளாதாரம், சூழலியல் மற்றும் ஸ்திரத்தன்மையை 45 நாட்களில் வியத்தகு முறையில் மேம்படுத்திய நீர்நிலை அளவிலான நிலத்தடி நீர் மறுசீரமைப்பு திட்டத்தின் விளைவுகளை நாங்கள் காண்கிறோம்!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மியவாகி முறை பற்றி திரு ராஜ சுந்தர் அவர்களின் தெளிவான விளக்கம்|Part 1

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்களை இணைக்கும் உடையாருக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பஞ்சமே வராது இவரை போல் அனைவரும் செய்தால்

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீர்பற்றாக்குறையால் விவசாயத்தைக் கைவிடும் நிலையில் மூதூர் விவசாயிகள்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கே கன்பராவிலும் The National Arboretum ஒன்று உள்ளது.. உலகிலும் அவுஸ்ரேலியாவிலும் அருகி வரும் மர இனங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட வனமாகும்

2003 ஆண்டில் கன்பராவில் ஏற்பட்ட காட்டு தீயிற்கு பின் இந்த காட்டுதிட்டம் உருவாக்கப்பட்டது..அதைப்பற்றிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போதனா மருத்துவமனைக் கழிவுகளை மயானத்தில் கொட்டியதால் போராட்டம்!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை செம்மணியில் புதைப்பதற்கு எதிர்ப்பு

 
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் செம்மணி சிந்துபாத்தி இந்து மயாணத்திற்குள் புதைக்கும் செயற்பாடு பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள் , வெற்றுப் போத்தல்கள் , என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் 3 தினங்களிற்கு முன்னர் ஏற்றிச் செல்லப்பட்டு குறித்த மயாணத்தில் ஜே.சி.பி்இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு அக் குழியிலே கழிவுகளை கொட்டப்பட்டுள்ளன

இவ்வாறு கொட்டிய கழிவுகளை நல்லூர்ப் பிரதேச சபையினர் அவதானித்து போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் அவ்வாறு பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதவேண்டாம் என அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு குழியில் கொண்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை மூடுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் நால்வர் மயானத்தில் நின்ற சமயம் பிரதேச்சபை உறுப்பினர்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது, இந்த கழிவுகளை மூடுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டோம் எனக் கூறியுள்ளனர்.

தமது சபையின் ஆளுகைக்குட்பட்ட விவசாய நிலத்தை அண்டியுள்ள மயாணத்தில் இவ்வாறு சுகாதாரத்திற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் திருட்டுத்தனமாக கொட்டி ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெரும் அழிவிற்கு காரணமாக செயல்படும் இச் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த விடயத்தை கண்டித்து நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த மயானத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இடம்பெற்ற சமயம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசார் சம்ப இடத்திற்கு வந்து வீதி தடையை விலக்கி போக்குவரத்துக்கு ஒத்துழைத்ததோடு இவ் விடயம் தொடர்பில் உரிய தீர்வை எட்டுமாறும் கூறினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில. விதிமுறையை மீறிய வகையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய்க் கழிவுகளும் அதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் இரகசியமாக எரியூட்டப்பட்டமை , பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் அதிகளவான மருந்துகள் குடியிருப்பின் மத்தியில் இரகசியமாக தீ இட்டு எரித்தமை போன்ற சம்பவங்கள் வெளிவந்தமை போன்று தற்போது 3வது சம்பவமும் வெளிவந்துள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

 

http://www.ilakku.org/வைத்தியசாலையின்-மருத்து/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ

அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ

 

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம் குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதிவு: செப்டம்பர் 14,  2020 05:24 AM
வாஷிங்டன், 

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒருமாதமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 30 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன.


மேலும் பெரும் தீ காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் தவித்து வருகின்றனர். கொளுந்து விட்டு எரியும் நெருப்பு காரணமாக கலிபோர்னியாவின் பெரும்பகுதியில் வெப்பநிலை உயர்ந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் 28 இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கலிபோர்னியாவில் பற்றிய நெருப்பு அங்கிருந்து ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களுக்கும் பரவியுள்ளது. ஒரேகான் மாகாணத்தில் இதுவரை 10 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளது.

ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீயால் 5 சிறிய நகரங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் கேட் பிரவுன் தெரிவித்துள்ளார்.மேலும் நெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று வாஷிங்டன் மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் சுமார் 2 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசமாகிவிட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.காட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாகாணத்தில் மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

இதனிடையே ஒரேகான் மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே ஒருவர் காட்டுத்தீக்கு பலியான நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் வாஷிங்டன் மாகாணத்தில் நேற்று முன்தினம் 1 வயதான பச்சிளம் குழந்தை காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதன் மூலம் மேற்குத் கடற்கரையோர மாகாணங்களில் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர ஆயிரக்கணக் கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/World/2020/09/14052454/Crews-search-for-survivors-as-wildfires-in-western.vpf

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Today, 26 November, is the 66th birth anniversary of Velupillai Pirapakaran [and tomorrow is Maha Veerar Naal]. I was moved to revisit ‘Reflections of the Leader - Quotes by Veluppillai Pirapakaran’, published by Uppasala University, Sweden in 2007. Some quotes that have stayed with me during the past several years….. “…இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி..Nature is my friend. Life is my teacher. History is my guide - History is not a divine force outside man. It is not the meaning of an aphorism that determines the fate of man. History is an expression of the dynamism of man. Man creates history. Man also determines his own fate; - Simplicity is born as the highest fruit of wisdom; simplicity appears devoid of selfishness and pride. This simplicity makes one a handsome man; a cultured man; - நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.Whether we like it or not, (our) struggle has become our life and (our) life has become our struggle; - சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.Peace I wish from the depths of my soul. My spiritual aim is that my people should have calmness, peace and honour in their lives… "நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம். "We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity." அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு….. ” I am reminded again of the words of N Barney Pityana, Vice Chancellor. University of South Africa, in The Martin Luther King, Jr Memorial Lecture, 2004 "...Movements for justice throughout the world and throughout history always begin with and are sustained by a moral statement, a value idea...Movements are sustained when there are enough people whose imagination is captivated by a vision that lifts them beyond wherever they may be and which encourages them to have a better idea of themselves and their history into what they might or could become...Values are the essential principles of life without which life would be without meaning things would fall apart, and the centre cannot hold. They are agents of social cohesion... in (Martin Luther King's) words 'people cannot devote themselves to a great cause without finding someone who becomes the personification of the cause'..." Ten years after his death in 2009, Velupillai Pirapakaran continues to remain as the personification of the Tamil Eelam struggle for freedom. https://tamilnation.org/.../schalk_reflections_of_a_leader also in Tamil - https://tamilnation.org/ltte/vp/quotes.htm            
  • குருதிக்கொடை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு | தலைவர் பிறந்தநாள் | சிவகங்கை  
  • பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா.     பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!! உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை. ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள். இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார். இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார் புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார். பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகர னை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா. தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார் எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத் திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும். https://www.eegarai.net/t97326-topic#941037  
  • நன்றி. பைசர் சொல்லி, ஒருவாரத்தில் மொடோனாவும் பூர்வாங்க முடிவை சொல்கியது. ஆனால் பைசர் சமர்பித்து ஒரு வாரம் ஆகியும் இவர்கள் இன்னும் சமர்பிக்கவில்லை. நாளைக்கு சமர்பிக்க கூடும். ஆக்போர்ட்-அஸ்ராசெனிக்கா, அரைடோஸ் கொடுத்தது தவறுதலாய், அந்த குழுவில் இருந்தவர் எல்லாரும் இளவயதினர் என்பதால் 90% மீதான நம்பகதன்மை கேள்விகுறியாகியுள்ளது.  அக்ஸ்போர்ட்டில் நடந்த குளறுபடியை பார்க்க, மொடோர்னா காலம் தாழ்துவதிலும் சந்தேகம் வருகிறது. சுவை, வரும். மிக அரிதாக சிலருக்கு 2 தரம் வந்துள்ளது.  2ம் பாதிப்பு கடுமையானதாயும் தெரிகிறது. அண்மையில் UCL செய்த ஆய்வு, கொரோனா இயற்கையாக வந்த பின் ஏற்படும் antibodies (நோயெதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பன) 6 மாதங்களில் பலருக்கு குறைய தொடங்குவதாய் காட்டுகிறது. ஆனால் இன்னொரு வகையாக T Cells மூலம் வரும் நோயெதிர்ப்பு அதிக காலம் தாக்கு பிடிக்க முடியும் என்றும் வாசித்தேன்.  பாப்போம் ஜஸ்டின் அண்ணா பூரண விளக்கத்தை தருவார்.
  • ஜென் துளிகள்: பயிற்சிக்குத் துயரம் அவசியம்   சமூக நீதிக்காகவும் வன்முறையற்ற அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பணியாற்றிவரும் வியட்நாமிய பௌத்த குருவான திக் நியட் ஹான், தனது 94-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். சமூக நீதி, அக அமைதி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டவை இவரது போதனைகள். 1960-களில் வியட்நாமில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தால் சேதமுற்ற பள்ளிகளைக் கட்டியதோடு அமெரிக்காவுக்குச் சென்று அகிம்சை இயக்கத்தையும் மேற்கொண்டவர். 1967-ம் ஆண்டில் மார்டின் லூதர் கிங் ஜூனியர், இவருக்கு நோபல் பரிசைப் பரிந்துரைத்தார். பிரான்ஸ் நாட்டில் 1982-ம் ஆண்டு ப்ளம் வில்லேஜ் என்ற மடாலயத்தை உருவாக்கினார். 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் வியட்நாமுக்குத் திரும்பினார். மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்துவரும் திக் நியட் ஹான் தனது பிறந்தநாளை முன்னிட்டு கொடுத்த நேர்காணலிலிருந்து சில துளிகள்… * * *       சமூக மாற்றத்துக்கான பணியும் ஆன்மிக வளர்ச்சிக்கான காரியமும் வேறு வேறல்ல. ஒருவன் சாதகத்தில் ஈடுபடும்போது உள்ளே உள்ள துயர், சுற்றியுள்ள துயர் இரண்டையுமேதான் எதிர்கொண்டாக வேண்டும். மலைக்குச் சென்று தனியாகப் பயிற்சி மேற்கொள்ளும்போது உள்ளே உள்ள கோபம், பொறாமை, விரக்தி ஆகியவற்றை அறியவே முடியாது. அப்படியான மனநிலை நம்மிடம் உருவெடுப்பதைப் பார்ப்பதற்கு நாம் மக்களுடன் பழகவேண்டியது அவசியம். அதனால்தான் ஆன்மிகப் பயிற்சிக்கு துயரம் என்பது மிக அவசியமாக உள்ளது. * * * கோபத்தை அரவணைப்பதற்கு புத்தரால் பல பயிற்சிகள் பரிந்து ரைக்கப்பட்டுள்ளன. கோபத்தை வெளியிடுவது அறிவார்த்தமானது அல்ல. ஏனெனில், கோபத்தின் அடிப்படையும் கோபத்தின் விதையும் நம்முள் உள்ளவை என்கிற உண்மையை அது புறக்கணிக்கிறது. அந்தக் கோபத்தின் விதை பெற்றோர் களாலோ மூதாதையோர்களோ நம்மிடம் கடத்தப்பட்டிருக்கலாம். அதை சமூகமும் தொடர்ந்து வளர்த்துவந்திருக்கிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போது நமது அமைப்பிலிருந்து வெளிக்கொண்டு வருவதாக நினைக்கி றோம். வார்த்தைகளாலோ உடல் அசைவுகள் வழி யாகவோ கோபத்தை வெளிப்படுத்தும் போது, கோபம் வலுப்படவே செய்கிறது. அதனால் அது அபாய கரமான வழிமுறையாகும். கோபத்தின் விதையை அங்கீகரிப் பதும், புரிதல் - பரிவின் ஆற்றலால் அதை மட்டுப்படுத்துவதுமே கோபத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி. கோபத்தின் விதை நம்மிடம்தான் உள்ளது. அது உருவமெடுக்காத நிலையில் நாம் சிரிப்பதற்கும் நிறைவாக இருப்பதற்குமான திறனைக் கொண்டவர்கள்தான். அதனாலேயே கோபத்தின் விதை நம்மிடம் இல்லை என்பது அர்த்தமில்லை. யாராவது எதையாவது சொல்லும்போதோ செய்யும்போதோ அந்த விதைக்குத் தண்ணீர்விடுகிறார். அப்போது அது சிலிர்த்தெழுந்துவிடுகிறது. கோபத்தின் விதை எப்போது உருவமெடுக்கிறது என்பதைக் கவனித்து, அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்வது அவசியமானது. * * * உணவில்லாமல் எதுவும் உயிர்த்தி ருக்காது என்று புத்தர் கூறினார். மெய்யறிவு, நிறைவு, கவலை, அல்லல் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மெய்யறிவு என்றால் வேறொன்றும் அல்ல. நீங்கள் ஒரு தேநீரைப் பருகும்போது, தேநீரைப் பருகுகிறோம் என்கிற விழிப்புணர்வு மட்டுமே. அந்த மனம்நிறை கவனம், அந்த விழிப்புணர்வுதான் மெய்யறிவு. நீங்கள் ஏற்கெனவே பல முறை தேநீர் அருந்தியிருக்கிறீர்கள். ஆனால், அதைப் பருகுவதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவே யில்லை. எதிர்காலம், இறந்த காலம் தொடர்பிலான கவலைகளில் நீங்கள் ஆழ்ந்து இருந்திருக்கிறீர்கள். தேநீர் குடிக்கும் செயலில் உங்கள் மனத்தைக் குவித்தால் கொஞ்சம் தேநீரைப் பருகும்போதும் ஆனந்தம் தானாகவே வரும். * * * புத்தர் ஏற்கெனவே இங்கிருக் கிறார். நீங்கள் மனம்நிறை கவனத்துடன் இருந்தால் எதிலும் புத்தரைக் காணமுடியும், குறிப்பாக சமூகத்திலும். இருபதாம் நூற்றாண்டு என்பது தனிமனித வாதத்துக்கானது. ஆனால், இனியும் அது அவசியமில்லை. மனிதர்கள் - உயிர்கள் சேர்ந்த சமூகமாகவே வாழ முயல வேண்டும். ஒரு துளி நீராக அல்ல, நதியாகப் பொழிய விரும்புவோம். அப்படியாகத்தான் இங்கே, இப்போதே புத்தரின் இருப்பை நம்மால் உணர்வது சாத்தியமாகிறது. ஒவ்வொரு எட்டிலும், ஒவ்வொரு மூச்சிலும், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் புத்தர் உருவமெடுக்கிறார். புத்தரை வேறெங்கும் தேடவேண்டாம். தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மனம்நிறை கவனத்துடன் வாழும் கலை அது.   https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/605391-zen-quotes-2.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.