Jump to content

இயற்கையை காப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் வேகமாக உருவாக்கப்படும் Miyawaki காடுகள்

 

Link to post
Share on other sites
  • Replies 152
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இயற்கையை காப்போம்🙏   'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் து

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

100 ஏக்கர் காடு     

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

 

புதுடெல்லி,

இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு பல லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரப பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நம் நாட்டின் தலைநகரமான டெல்லி காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாநில எல்லை பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அடைகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

டெல்லிக்கு தான் அந்த நிலைமை என்றால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. மத்திய அரசு காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகம் மாசு அடையும் என்பதால் பாரம்பரிய வெடிகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மொத்தமாக ரூ.2,200 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான முதல் தவணையாக 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களுக்கு இந்த தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மராடிய மாநிலத்துக்கு மட்டும் 396.5 கோடியும், குறைந்தபட்சமாக அரியானா மாநிலத்திற்கு 24 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.116.5 கோடி விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு ரூ.90.5 கோடியும், மதுரைக்கு ரூ.15.5 கோடியும், திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/India/2020/11/03002030/Govt-releases-Rs-2200-crore-to-15-states-towards-measures.vpf

 

காற்றை மாசு படுதலை தடுக்க 2200C😂 

இதைதான் நாம் தமிழர் கட்சி சொல்கின்றார் வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்று. விளங்கினாதானே

 

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரத்தை வெட்டினால், மற்ற மரங்கள் அழுமா?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

2ஏக்கரை முழுமையாக பயன்படுத்திய இளம் இயற்கை விவசாயி

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
இந்த நவீன உலகத்தில் மக்கள் எல்லோரும் பணத்துக்கு பின்னால் சென்று விட்டார்கள். அதனால் கடவுள் கொடுத்த இயற்கை வரங்களை கொண்டாட தெரியவில்லை. அரசாங்கமும் வாக்கு அரசியலுக்காக கிராம புறத்து மக்களை அவர்களுடைய பண அரசியலுக்காக அவர்களுடைய சுயமரியாதை இழந்து அரசுகளிடம் பிச்சை எடுக்கிறார்கள். இந்த காணொலி மக்களிடம் சென்றடைந்தால் நகர்புறத்து மோகம் போய் கிராமத்தில் உள்ள நன்மைகளை அறிவார்கள் .என்னுடைய பெற்றோர்கள் கிராமத்தில் பிறந்தாலும் அவர்கள் கிராமத்துக்கு செல்ல பயப்படுகிறார்கள்.ஏன் என்றால் அங்கு படிப்பு மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதில்லை.கிராமத்தில் இந்த வசதி வாய்ப்புக்கள் வந்தால் கிராமம் போல சொர்க்கம் வேறு எதுவும் இல்லை என்பதற்கு இந்த கண்ணொளி நல்ல சாட்சி இதை தயாரித்து என்னை போன்ற மக்களிடம் கொண்டு சென்றவர்களுக்கு மிக்க நன்றி.
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

16 மாதங்களின் பின்

மியாவாக்கி காடுகள் - கேரளா அரசின் நடவடிக்கை; 

இதே மாதிரி காடுகளை ஈழத்தில் தன்னலவர்கள் உருவாக்க வேண்டும், 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குமரிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

குமரிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

 

நாகர்கோவில்:

அடர்ந்த காடுகள், நன்னீர்நிலைகள், கடல் பகுதிகள், காயல் பகுதிகள் மற்றும் மலைகளை கொண்டது குமரி மாவட்டம். அதோடு ஆண்டுக்கு இரு பருவமழை பொழிவதால் இயற்கையாகவே குமரி மாவட்டம் பசுமையாக காட்சி அளிக்கிறது. எனவே குமரி மாவட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் படையெடுப்பது வழக்கம். அவ்வாறு வரும் வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள குளங்கள், காயல்கள் மற்றும் காட்டு பகுதிகளில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு செல்லும்.

 
குமரி மாவட்டத்துக்கு வெளிநாட்டு பறவைகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வரும். பின்னர் நவம்பர் மாத இறுதியில் பறவைகள் இங்கிருந்து புறப்பட்டு விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலம் மாறி பெய்து வருகிறது. இதன் காரணமாக பறவைகளும் தாமதமாக வந்து தாமதமாகவே செல்கின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. பறவைகள் வசிக்கும் பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் பறவைகள் வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்துக்கு பறவைகள் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது செங்கால் உள்ளான், சதுப்பு மணல் உள்ளான், பைங்கால் உள்ளான், சாதா டேர்ன், கிருதா டேர்ன், பெரிய கொண்டை டேர்ன் மற்றும் பூநாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான பறவைகள் மணக்குடி காயலில் வசித்து வருகின்றன. மேலும் சுசீந்திரம் குளத்திலும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது.

மணக்குடி காயலில் வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் இரை தேடி தண்ணீரில் நீந்தி செல்லும் காட்சி கண்களை கவரும் விதமாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலையில் அப்பகுதி மக்கள் மணக்குடி பாலத்தில் நின்றபடி பறவைகளை பார்த்து ரசிக்கிறார்கள். அதோடு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தில் வந்து விதவிதமான மற்றும் வண்ணமயமான பறவைகளை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார்கள்.

இதுபற்றி பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் குறைவான வெளிநாட்டு பறவைகள் மட்டுமே வந்தன. ஆனால் தற்போது பறவைகள் வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மேலும் எண்ணற்ற வகை பறவைகள் வர வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வரும் பறவைகளை பொதுமக்கள் அச்சுறுத்த கூடாது. அவற்றை வேட்டையாடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/07073929/2049831/Foreign-birds-inflow-increased-at-Kumari-District.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாலையில் வீசப்பட்ட குப்பை... 80 கி.மீ பயணம் - திரும்ப வந்து எடுக்கவைத்த கர்நாடக அதிகாரிகள்!

பீட்ஸா

பீட்ஸா ( Representational Image )

அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு திரும்பச் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள்.

சுற்றுலா தலங்களில் வீசியெறியப்படும் குப்பைகள், இயற்கை அழகை மாசுபடுத்தும். இதைத் தவிர்த்த அரசுகளும், இயற்கை ஆர்வலர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பல மாநில அரசுகள் தண்டனை விதிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளன. அந்தவகையில், கர்நாடகா மாநிலம் மடிகேரியில் உள்ளூர்வாசிகள், அதிகாரிகளின் அறிவுரையால், இரண்டு சுற்றுலாப் பயணிகள் தாங்கள் சாலையில் வீசிச் சென்ற பீட்சா பெட்டிகளை 80 கி.மீ பயணித்து வந்து அப்புறப்படுத்திய சம்பவம் நடந்திருக்கிறது.

கர்நாடகா மாநிலம் மடிகேரிக்குச் சுற்றுலா வந்த இரண்டு பேர், பீட்ஸா பெட்டிகளை சாலையிலேயே வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள். அது குடகு மாவட்ட சுற்றுலாத் துறை பொதுச்செயலாளர் மடேதிரா திம்மையா (Madetira Thimmaiah) உள்பட அப்பகுதிவாசிகள் கண்ணில்பட்டிருக்கிறது.

கார் - சுற்றுலா
 
கார் - சுற்றுலா Representational Image

அதன்பிறகு நடந்தவற்றை விளக்கிய மடேதிரா திம்மையா, ``மலைகிராமப் பகுதியான இந்த சுற்றுலாத் தலத்தில் பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தடை செய்திருக்கிறோம். தடையை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்தப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க கடகடாலு (Kadagadalu) ஊராட்சிப் பணியாளர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை முதல் ஊராட்சிப் பணியாளர்களுடன் சேர்ந்து எங்கள் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தோம்.

அதன்பின் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான், அந்த பீட்ஸா பெட்டிகளைப் பார்த்தேன். நாங்கள், இந்த மலைப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் பெட்டிகளை பார்த்ததும் எங்கள் முயற்சி அனைத்தும் வீணானது போல உணர்ந்தேன். பின்னர்தான், அந்தப் பெட்டிகளைத் திறந்து பார்க்க முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக அதற்குள் செல்போன் நம்பருடன் கூடிய ஒரு பில் இருந்தது.

 
 

நான் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு அழைத்து அவருடன் பேசினேன். குப்பைகளை வீசிச் சென்றதற்காக அவர் மன்னிப்புக் கேட்டார். அவரைத் திரும்ப வந்து, பீட்ஸா பெட்டிகளை எடுத்துச் செல்லும்படி கேட்டேன். ஆனால், அவர் குடகு மாவட்டத்தை விட்டுச் சென்றுவிட்டதால், திரும்பி வர மறுத்துவிட்டார்.

அதன்பின், நான் உள்ளூர் காவல்துறையினரை உதவிக்கு அழைத்தேன். காவல்துறை உதவி ஆய்வாளர் பேசியபின்பும் அவர்கள் வர மறுத்தனர். அதன்பின்னர் தான் நாங்கள் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டோம்.

அவர்களின் செல்போன் நம்பரும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு திரும்பச் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள். பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மாலை 3.45 மணி அளவில் இருவரும் 80 கி.மீ பயணம் செய்து வந்து, குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர். இதற்காக அவர்கள் மிகவும் வெட்கப்பட்டனர்’’ என்றார்.

 

https://www.vikatan.com/social-affairs/miscellaneous/karnataka-travellers-who-dumped-pizza-boxes-on-road-made-to-go-back-80-kms-to-pick-up-trash

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் காற்று மாசு பாடு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசு பாடு தொடர்ந்து அதிகரிப்பு

 

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. 

காற்று மாசுபாட்டை குறைக்க அரசு விழிப்புணர்வு மூலமாகவும் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டெல்லியின் அண்டை மாநிலங்களில் நிகழும் குண்டு வெடிப்பு போன்றவையும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைகிறது.

டெல்லி என்சிஆர் பகுதி தொடர்ந்து அதிக அளவு மாசுபாட்டை பதிவுசெய்தது கவலையைத் உண்டாக்குகிறது. இந்நிலையில் நேற்று காற்று மாசுபாட்டின் தரம் ( AQI)  தொடர்ந்து 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டின் தரம் 385 உடன் 'மிகவும் மோசமான' வகையிலும், நொய்டாவில் மாசு அளவு 486 என்ற மட்டத்துடன் 'கடுமையான' பிரிவிலும், குர்கானில் காற்று மாசுபாடு 350 உடன் 'மிகவும் மோசமாக' இருந்ததாக தரவுகளின்படி கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் டெல்லியில் ஒட்டுமொத்த காற்று மாசு அளவு 486 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

காற்று அளவு ( 0 - 50 ) - நல்லது , ( 51 - 100 ) - திருப்திகரமானது, ( 101 - 200 ) - மிதமானது , ( 201 - 300 ) - மோசமாக, ( 301 - 400 ) - மிகவும் மோசமாக, மற்றும் ( 401 - 500 ) - கடுமையானது என்று கருதப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/08103015/Delhi-Pollutants-continue-to-affect-the-qualilty-of.vpf

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்

அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்

 

அழிவின் விளிம்பில் இருந்த ஐரோப்பாவின் அரிய வகை மீன்களில் ஒன்றான ஆஸ்பிரீட்டை சமீபத்தில் கண்டுபிடித்து உள்ளனர். 31 வயதான மீன் உயிரியலாளரான டோகோ, 6.5 கோடி ஆண்டுகள் பழமையான மீன் இனமான  ஆஸ்பிரீட்டின் 12 மாதிரிகளை அக்டோபர் பிற்பகுதியில் வால்சன் ஆற்றில் கண்டுபிடித்து உள்ளார்.


எங்கள் கண்களுக்கு முன்னால் ஒரு ஆஸ்பிரீட் இருப்பது அருமையாக இருந்தது.இது ஒரு புல உயிரியலாளர் பெறக்கூடிய மிகப்பெரிய வெகுமதிகளில் ஒன்றாகும் என பிபிசிக்கு அளித்த பேட்ட்டியில் கூறி உள்ளார்.

ஆஸ்பிரீட் முதன்முதலில் ஒரு உயிரியல் மாணவரால் 1956 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது இது அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

அரிய மீன்களின் தொகை சுமார் 10-15 என்று கூறுகின்றன, இது 2000 களின் முற்பகுதியில் சுமார் 200 ஆக உயர்ந்தது.

விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் ஒன்று கூடி 6.5 ஆண்டுகள் பழமையான மீன்களைக் காப்பாற்றிவருகிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/India/2020/11/09180424/Scientists-conservationists-get-together-to-save-65millionyearold.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  இயற்கை சூழல் பள்ளி , மிகச் சிறந்த பள்ளி மரங்களுடன், ஒரு கரும்பலகையும், படிப்பிக்க ஆசிரியரும் மாணவர்களும் இருந்தால் பள்ளி தொடங்கலாம், கட்டிடம் தேவையில்லை

 

Edited by உடையார்
எழுத்து பிழை
  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்

ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்
 

தெகுசிகால்பா,

கடல்வாழ் உயிரினங்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் மைக்கி சார்டரிஸ்.  ஹோண்டுராஸ் நாட்டின் ரோவாடன் தீவில் பல ஆண்டுகளாக ஆழ்கடலுக்குள் சென்று பல்வேறு உயிரினங்களை கண்டு படங்களாகவும் வீடியோ பதிவு செய்து வருகிறார்.


இதில் ஆச்சரியப்படும் வகையில் மீன் ஒன்று நீந்தி செல்வதற்கு பதிலாக தனது துடுப்புகளை கால்களை போல் பயன்படுத்தி கடலின் அடிப்பரப்பில் தரையில் நடந்து சென்றுள்ளது.

பேட்பிஷ் என்றழைக்கப்படும் இந்த மீனின் அடிவாய் பகுதி நன்க சிவந்து காணப்படுகிறது. தலையில் ஒற்றை கொம்பு காணப்படுகிறது.  நண்டுகளை போன்று மெதுவாக நடந்து சென்று இரையை தேடுகிறது.  பார்ப்பதற்கு சற்று அகோர வடிவுடன் காணப்படுகிறது.

இந்த வகை மீன்களுக்கு நீந்துவதற்கான சவ்வு இல்லை.  அதனால் அவை நீரின் அடிப்பரப்பிலேயே வசிக்கின்றன.  எனினும், தூண்டி விட்டால் தனது வாலை பயன்படுத்தி அவை நீந்தும்.  நடந்து செல்ல கூடிய ஒரு சில மீன்களில் இதுவும் ஒன்றாகும்.

இதுவரை பார்த்த உயிரினங்களிலேயே வித்தியாசம் நிறைந்த ஒன்றாக இந்த பேட்பிஷ் உள்ளது.  இதுபற்றி முன்பே கேள்விபட்டிருக்கிறேன்.  ஆனால், முதன்முறையாக இதனை படம் பிடித்துள்ளேன் என மைக்கி கூறுகிறார்.

தினமும் நீங்கள் ஆய்விற்காக ஆழ்கடலுக்குள் உள்ளே செல்லும்பொழுது, அரிதாக பவள பாறைகளில் இருந்து வெளிவரும் இந்த மீன்களை எப்பொழுதேனும் காணலாம் என அவர் கூறுகிறார்.  ஆழ்கடலில் ஆயிரம் அதிசயங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/13033757/Deep-sea-miracle-Different-fish-that-walked-using.vpf

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

48 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத வேட்டங்குடி கிராமம்... இனிப்பு வழங்கி வாழ்த்திய கலெக்டர்!

இனிப்பு வழங்கிய ஆட்சியர்

இனிப்பு வழங்கிய ஆட்சியர்

வேட்டங்குடி, கொள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த விசேஷங்களுக்கோ, ஊர் திருவிழாவிற்கோ பட்டாசு வெடிக்க மாட்டார்கள்.

பறவையின் நலனுக்காக வெடிபோடாமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்களுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது வேட்டங்குடி. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 217 வகையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்லும்.

வேட்டங்குடியில் பறவைகள்
 
வேட்டங்குடியில் பறவைகள்

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்துச் செல்லும். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பால் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரளி, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிகளவு வேட்டங்குடியில் காண முடியும்.

 
 

இந்நிலையில் சரணாலயம் அருகே உள்ள வேட்டங்குடி, கொள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த விசேஷங்களுக்கோ, ஊர் திருவிழாவிற்கோ பட்டாசு வெடிக்க மாட்டார்கள். அதேபோல் பறவைகளுக்கு தொந்தரவு செய்யும் விதமாக மேள தாளங்களோ, ஒலி பெருக்கியோ வைப்பதில்லை.

இதனால் வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் இயல்பாக வந்து செல்கின்றன. இப்பகுதி மக்கள் தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்காமல் அமைதியான முறையில் புத்தாடைகள் உடுத்தியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது வழக்கம்.

பறவைகள்
 
பறவைகள்

இதைப் பாராட்டும் விதமாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் இப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரன், வனச்சரக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

தொடர்ந்து வனத்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 3-ம் இடம் பிடித்த கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சத்தியபிரியாவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-collector-appreciated-the-vettangudi-people-for-their-support-for-birds

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாசையும் ஒலி மாசையும் தவிர்க்கும் மக்களுக்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 07:40, உடையார் said:
ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்

ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்
 

 

ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி

தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. 

நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று டெல்லியில் தடை மீறி பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டெல்லி நகரத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறித்த ஆய்வில் டெல்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.

டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை தாண்டியதால் டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/15062255/Fireworks-explode-in-violation-of-the-ban-Air-quality.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வவ்வால்களை நேசிக்கும் கிராமம்: பட்டாசு வெடிக்காத மக்கள்!

வவ்வால்களை நேசிக்கும் கிராமம்: பட்டாசு வெடிக்காத மக்கள்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 500 பேர் வசித்து வருகிறார்கள். கிராமத்தின் மைய பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரையோரத்தில் மா மரங்கள் உள்ளன. 

இதில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கருதும் கொளதாசபுரம் மக்கள், வெகுகாலமாக வவ்வால்களை துன்புறுத்தாமல் நேசித்துக்கொண்டிருக்கிறார்கள். வவ்வால்களும் கிராமத்திற்குள் சென்று மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

இப்படி மனிதர்களுக்கும்-வவ்வால்களுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் பலனாக தீபாவளி நாட்களில் கொளதாசபுரம் கிராம மக்கள் வவ்வால்களை பயமுறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் வவ்வால்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக, மா மரங்களில் ஏறி மாங்கனிகளையும் பறிப்பதில்லை. 

மேலும் அதே மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் வனப்பகுதியையொட்டி உள்ள உரிகம், தொட்டமஞ்சி போன்ற கிராம மக்களும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். வன விலங்குகள் மிரண்டு ஓடும் என்பதால் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து எளிமையாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/State/2020/11/14201735/People-do-not-explode-fireworks.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த அரிய வகை வல்லூறு இன பறவை

மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த அரிய வகை வல்லூறு இன பறவை

புதுச்சேரி, 

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதையொட்டி புதுவையிலும் பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டின் கணக்கெடுப்பில் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை 2-ம் ஆண்டு மாணவர் டாக்டர் விக்னேஷ்வரன், இளங்கலை 4-ம் ஆண்டு மாணவர் பூஷன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது அவர்களது பார்வையில் அமூர் வல்லூறு என்ற அரியவகை பறவை சிக்கியது. மரப்பாலம் சந்திப்பு அருகே மின் உயர் மின் அழுத்த கம்பியில் அமர்ந்திருந்த அந்த பறவையை அவர்கள் புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த அரிய வகை பறவை குறித்து டாக்டர் விக்னேஷ் வரன் கூறியதாவது:-

வேட்டையாடும் குணம்

அமூர் வல்லூறு வேட்டையாடி உண்ணும் குடும்பத்தை சேர்ந்ததாகும். நீண்டதூரம் இடம்பெயரும் ஆற்றல் பெற்று இருப்பது இதன் தனிச்சிறப்பு. தெற்கு சைபீரியா மற்றும் வடக்கு சீன பகுதிகளில் இடம்பெயர்ந்து பனிக்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும்.

அவ்வாறு இடம்பெயரும் போது இந்தியா, இலங்கை, மொரீஷியஸ் தீவுகளில் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் தனது பயணத்தை தொடரும். இந்தியாவில் இந்த பறவைகள் நாகலாந்து மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். நாகலாந்து தவிர வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் தென் தமிழகத்திலும் இதை காணலாம்.

32 ஆண்டுகளில் முதல்முறை

சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 2 அமூர் வல்லூறுகள் 29 ஆயிரம் கிலோ மீட்டர் இடம்பெயர்ந்து சென்றது கண்டறியப்பட்டது. அத்தகைய அமூர் வல்லூறு புதுவையில் முதல் முறையாக காணப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் புதுவையில் இந்த பறவை காணப்பட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/Puducherry/2020/11/14033759/Rare-bird-found-by-medical-students.vpf

 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு வந்த விருந்தாளிப் பறவைகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விளைநிலத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த காட்டு யானை - 2 பேரிடம் விசாரணை

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயலின் 2-ம் ஆண்டு: கொத்தமங்கலத்தில் 1000 பனை விதைகளை விதைத்த பனைமரக் காதலர்கள்

2nd-year-of-gajah-storm-palm-lovers-sow-1000-palm-seeds-in-kothamangalam புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் குளத்தின் கரையோரத்தில் பனை விதைகளை விதைக்கும் இளைஞர்கள்.

புதுக்கோட்டை

கஜா புயலடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 1,000 பனை விதைகளை இளைஞர்கள் இன்று (நவ.16) விதைத்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவ.16-ம் தேதி சுழற்றியடித்த கஜா புயலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. எனினும், பனைமரங்கள் அப்படியே நின்றன. இதையடுத்து, பனையின் மகத்துவத்தை அறிந்த கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் 'பனைமரக் காதலர்கள்' எனும் அமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களிலும் அவ்வப்போது பனை விதைகளை விதைத்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலடித்த 2-ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக கொத்தமங்கலம் பெரியகுளம் பகுதியில் இன்று மாலை 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து, ஏராளமான மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி க.பிரபாகரன் கூறியபோது, “கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏராளமான விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. பனைமரங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/602155-2nd-year-of-gajah-storm-palm-lovers-sow-1000-palm-seeds-in-kothamangalam.html

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கு பதில் செடி சூலூர் அருகே கல்லூரி மாணவர்கள் பொது மக்களுடன் இணைந்து மரம் நடுவிழா

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டு- போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் போராட்டம்    20 Views மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும், கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் தாதியர்கள் ஈடுபட்டனர். மேலும் அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள், தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள், தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும்  எச்சரித்தனர்.   https://www.ilakku.org/?p=39760
    • 180 சுற்றுலாப் பயணிகளால் 42 மில்லியன்கள் அதாவது 4 கோடியே 20 இலட்சம் வருமானம் என்றால்  42,000,000/180= 233,333/=   வருடாந்தம் 2 மில்லியன்கள் சுற்றிலாப்பயணிகளின் வருகையை கொண்ட சிறீலங்காவின் வருடாந்த வருமானம் எவ்வளவு??? இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது? 2,000,000 x 233,333= 466,666,666,666/=    
    • வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்"  என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க பாராளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், ட்ரம்ப் தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணொளியில் தனது உரையை வெளியிட்ட மெலானியா மேலும் குறிப்பிடுகையில்,  கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, "தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் " நன்றி தெரிவித்தார். பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     https://www.virakesari.lk/article/98749
    • வாக்குறுதி நிறைவேறுமா? -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?”  போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது?   முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது.     வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை  சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார்.     அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார்? போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? ஆனையிறவில், பலாலியில், கிளிநொச்சியில், முள்ளிவாய்க்காலில் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் தமிழ்ப் பகுதிகளில்- ஆக்கிரமிப்பின் சின்னமாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் எதுவும் சட்டபூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் அனுமதிகளுடன் கட்டப்பட்டவையல்ல. பல்கலைக்கழத்தில் அகற்றப்பட்டது போல, சட்டபூர்வமற்ற கட்டடங்களை அகற்றுவதாயின், உள்ளூராட்சி சபைகளும் இந்த நினைவுச் சின்னங்களை அகற்றியிருக்க முடியும். போர் நினைவுச் சின்னங்களை அழிப்பதும், வரலாற்றை அழிப்பதும் ஒன்று தான். இலங்கை அரசாங்கம்  தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்து நினைவுகூரல்களைத் தடுக்கும் அராஜகத்தையே அரங்கேற்றியது. இப்போதும் அதே விதமாகத் தான் முள்ளிவாய்க்கல் நினைவுத் தூபியை அழித்திருக்கிறது, இது இந்தளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விளைவுகள் விபரீதமாகும் என்ற அச்சத்தினால் தான், இடித்தவர்களே அதனை மீள அமைக்க இணங்கினார்கள். இந்தச் செயலுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது, சில பௌத்த பிக்குகள், நியாயமாக சிந்திக்கும் சிங்கள மக்களும் கூட எதிர்த்தார்கள். பல வெளிநாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகையாளிகளாக நினைக்கும் அரசாங்கம் ஏன், போரில் கொல்லப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும், சின்னத்தை அகற்ற முனைந்தது என்பது தான் கேள்வி. பெளத்த பிக்கு ஒருவர் தனது முகநூலில், இந்த நாட்டுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெளிநாட்டவர்களின் நினைவுச் சின்னங்களையே அகற்றாத போது, இதனை மட்டும் ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்தின் நியாயம், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையாளர்களுக்கு புரியவில்லை. நினைவுச் சின்னங்களை பேணுவது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு வழிமுறை என்பதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்கள். “போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம். இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் குறிப்பிட்டிருந்தார். நினைவுச் சின்னத்தை அழிப்பது, ஐ.நா மனித உரிமைகள் கோட்பாட்டை மீறுகின்ற செயல் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். ஆனாலும் இலங்கை அரசுக்கு இதுபோன்ற விடயங்கள் எதுவுமே மீறல்களாகத் தெரிவதில்லை. அதனால் தான், திரும்பத் திரும்ப தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட, அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைப்பது என்பது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அழிக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் இன்னும் தீவிரமாக அதனை எதிர்ப்பார்கள். இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு நினைவுத் தூபி இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தவர்கள் கூட இப்போது அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, இனவாதிகளும், பேரினவாத சிந்தனையாளர்களும், இன்னும் தீவிரமாகவே அதனை எதிர்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பையும், அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பும் கனவுடன் உள்ள மானியங்கள் ஆணைக்குழுவினது நிலைப்பாட்டையும் மீறி துணைவேந்தர் எவ்வாறு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி. எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்கு சூட்டோடு சூடாக தீர்வு காண்பது தான் பொருத்தமானது. இதனை ஆறப் போட்டால், அது நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளின் மூலம், அரசாங்கம் தனது காரியத்தை சாதித்து விடும் ஆபத்து உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே, பெயருடனும், வடிவத்துடனும், பல்கலைக்கழத்தில் நாட்டப்படுவது மட்டும் தான் இதற்கான பரிகார நீதி. அந்தப் பரிகார நீதியை துணைவேந்தர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதில் தான் வரலாறு அவரை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தும்.   https://www.virakesari.lk/article/98748  
    • கிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.   அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன. இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது. கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது. எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது. தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது. 49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம். அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது. இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம். கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது. இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெய்சங்கர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம்.  புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை. இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி,  இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை. அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது. அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது. அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான். இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை.  அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இந்தியா பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது. இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது, இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன. அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன. அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது. இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும். இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது.    https://www.virakesari.lk/article/98746
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.