Jump to content

இயற்கையை காப்போம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சலிம் அலி பிறந்த நாள் விழா மற்றும் வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கம்

 

Link to post
Share on other sites
 • Replies 152
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இயற்கையை காப்போம்🙏   'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் து

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

100 ஏக்கர் காடு     

 • கருத்துக்கள உறவுகள்

அழிவை எதிர் நோக்கும் அரியவகை மான்கள்!

கனடாவில் அரியவகை வெள்ளை மூஸ் மான்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் அதன் இனம் அழிவை எதிர் நோக்கியுள்ளதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன.

moose.jpg

மான் இனத்திலேயே மிகப் பெரியதான மூஸ் மான்களில் வெள்ளை நிறத்தில் இருப்பது அரியதாகும். இவை கனடாவின் அண்டாரியோவிலுள்ள  டிம்மின்ஸ் பகுதியில் காணப்படுகின்றன.

இந் நிலையில் அப்பகுதியிலுள்ள உள்ளுர் மக்கள் மற்றும் வேட்டையாடிகளால் வெள்ளை மூஸ்கள் அதிகம் கொல்லப்படுவது தெரியவந்துள்ளது.

White_Moose_Sweden.jpg

இதனால் இதன் இனமே அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூஸ்களை வேட்டையாடுவதைத் தடுக்க கனடா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

https://thinakkural.lk/article/89913

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பருவநிலை மாற்றம் கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

 
602391.jpg
 34 Views

கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். இதற்குத் தடுப்பூசிகள் கிடையாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஜெபக் சாப்பகெய்ன் இன்று செய்தியாளர்கள் பங்குபற்றிய மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ”1960களில் இருந்து உலகம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிடர்களை சந்தித்து விட்டது. இதில் பெரும்பாலானவை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டவையே. இதனால் 5கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்போது கோவிட் – 19 வைரஸ் இருப்பது உண்மை தான். அது நம் குடும்பத்தை, உறவினர்களை, நண்பர்களைப் பாதிக்கிறது. இதனால் உலகம் தற்போது கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. இதனால் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

இருந்தும் தடுப்பூசி வந்த பின்னர் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் பருவநிலை மாற்றம் அப்படிப்பட்டதல்ல. துரதிஸ்டவசமாக இதற்கு தடுப்பூசி இல்லை.

தொடர்ச்சியான வானிலை மற்றும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளின் தீவிரம், சமீபகாலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2019இல் மட்டும் உலகத்தில் 308 இயற்கையான பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் வானிலை அல்லது பருவநிலை சம்பந்தப்பட்டவை. இதனால் 24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதம் 1990இல் இருந்ததைவிட தற்போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று ஜெகன் சாப்பகெய்ன் தெரிவித்தார்.

https://www.ilakku.org/பருவநிலை-மாற்றம்-கொரோனாவ/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் மழை..! நச்சுகழிவுகள் வெளியேற்றம்!! சென்னைக்கு பேராபத்து? 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – பொ.ஐங்கரநேசன்

 
1-4.png
 25 Views

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தினம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

மாவீரர்கள் எமது மண்ணின் காவலர்கள். இந்த மண்ணையும் மக்களையும் அளவுக்கு அதிகமாக நேசித்ததன் காரணமாகத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். தங்கள் குடும்ப உறவுகளைக் கடந்து மொத்தத் தமிழினத்தினதும் வலிகளைத் தங்கள் தோள்மேல் சுமந்தவர்கள். ஈகைக்கு உவமை வேறு இல்லாத அளவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்த தியாக சீலர்கள்.

உக்கிரமான போர் நகர்வுகளின்போதுகூடப் படையினரின் நினைவு நடுகற்களைப் பாதுகாத்த முன்னுதாரணர்கள். போர் மரபுகளை மீறி இவர்களது நினைவு நடுகற்களைப் படையினர் சிதைத்து அழித்தாலும், இவர்தம் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்தாலும் எம் ஆழ்மனதில் நீங்காத நினைவுகளாக இடம்பெற்றிருப்பவர்கள். இவர்தம் வித்துடலணுக்கள் நிலம், நீர், காற்று என்று அரூபமாக வியாபித்திருந்தாலும் நினைக்கும்தோறும் சோதிப் பெருவெளிச்சமாய் முகம் காட்டுபவர்கள். திக்கற்றுத் தவிக்கும் தமிழ்மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக ஒளிவீசிக் கொண்டிருப்பவர்கள்.

தமிழர்கள் விக்கிரக வழிபாட்டுக்கு முன்னர் மரங்களை வளர்த்து இறைவனாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள். இப்போதும் ஆலயங்களில் தலவிருட்சங்களாக மரங்களை வளர்த்து வழிபடும் மரபைக் கடைப்பிடிப்பவர்கள். மாண்டவர்கள் நினைவாக நடுகற்களை நிறுவுவதற்கு முன்னர் மரங்களை உயிருள்ள நினைவுச் சின்னங்களாக நட்டுப் பராமரிக்கும் மரபைக் கொண்டிருந்தவர்கள். அந்தவகையில் மாவீரர் புகழ் பாடி, அவர்களின் நினைவு நாளில் இல்லங்கள்தோறும் சுடரேற்றி அஞ்சலிக்கும் நாம் அவர்களின் நினைவாக மரமொன்றையும் நட்டுவைப்போம்.

மாவீரர்களைப் போன்றே மரங்களும் இந்த மண்ணின் பாதுகாவலர்கள். இவை வேறு எந்த உயிரினத்தையும்விட மண்மீது கூடுதலான நேசிப்பும் பிடிமானமும் கொண்டவை. தங்கள் இனத்தையும் கடந்து புவிக்கோளின் ஒட்டுமொத்த உயிர்ப்பல்வகைமையையும் தாங்கி நிற்பவை. எமது எதிர்காலச் சந்ததி இந்த மண்ணில் வளமாக வாழ்வதற்கான உத்தரவாதமும் இவையே. மாவீரர்தம் இலட்சியக் கனவுகளும் இம்மண்ணில் எமது மக்களின் வளமான சுதந்திரமான நீடித்த வாழ்வை உறுதி செய்வதாகத்தான் இருந்தன.

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ilakku.org/

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குப்பை மேட்டை கிளறி உணவு தேடும் யானைக்கூட்டம் பரிதாபக்காட்சி

குப்பை மேட்டை கிளறி உணவு தேடும் யானைக்கூட்டம் பரிதாபக்காட்சி

 

இலங்கையில் சமீபகாலமாக காடு அழிப்பு நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளதால், காட்டு யானைகள் தங்கலது  வாழ்விடங்களை இழந்து உணவு கிடைக்காமல் சுற்றி திரியும் புகைப்படங்கள் அடிக்கடி செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
 
 
இந்தநிலையில் காட்டில் வாழும் யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து உணவை தேடி குப்பை மேட்டிற்கு சென்று அழுகிய காய்கறிகளுடன் ஆபத்து நிறைந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் ஆகியவற்றையும் உண்பது போன்ற காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவப்பட்டு வருகின்றது.
 
காட்டு யானைகள் பன்றிகள் போல குப்பை மேட்டைக் கிளறி உண்ணும் காட்சி பார்ப்போரை வேதனையடைய செய்வதாக உள்ளது.
 
அதிலும் குப்பைக் மேட்டில் யானைகள் சாப்பிடும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் துகள்கள், அழுக்குகளை உண்பதால் யானைகள் நோய்வாய்ப்பட்டு அதிகளவில் மடிந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.மேலும் இலங்கையில், 2019 ம் ஆண்டில் மட்டும் 361 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகின் தனிமையான யானைக்கு கிடைத்த விடுதலை

the-world-s-loneliest-elephant  

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்டு வந்த கவான் யானை பலவருட தனிமைக்குப் பிறகு புதிய வாழ்கைக்கு செல்ல இருக்கிறது.

பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்தில் கடந்த பத்து வருடங்களாக தனியாக தவித்து வந்த கவான் யானை விடுதலை செய்யப்பட உள்ளது

1985 ஆம் ஆண்டு கவான் யானை பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்துக்கு அழைத்து வரப்பட்டது. இலங்கையிடமிருந்து அன்பு பரிசாக அளிக்கப்பட்டதுதான் இந்த கவான் யானை. சரணலாயத்தில் தனியாக இருந்த கவான் யானைக்கு துணையாக இருந்த சாஹிலி என்ற யானை 1990 ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலவும் தட்ப வெப்ப நிலைக் காரணமாக சாஹிலி யானை 2012 ஆண்டு மரணமடைந்தது. இதனைத் தொடர்ந்து கவான் யானை தனிமையில் இருந்து வந்தது. தனிமையின் காரணமாக கவானுக்கு அடிக்கடி மதமும் பிடித்து வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள விலங்கு நல ஆரவலர்கள் கவானை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சிக்கர செய்தியாக கவான் விடுதலை செய்யப்பட உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவுக்கு கவான் அனுப்பப்பட உள்ளது.

இச்செய்தியை விலங்கு நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் மர்காசர் சரணாலயம் கவானின் பிரிவு எங்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

https://www.hindutamil.in/news/world/606164-the-world-s-loneliest-elephant-1.html

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யானைக் காவலன்’ அஜய் தேசாய்

elephant-guard  

யானை பாதுகாப்பில் அக்கறை உள்ள அனைவருக்கும் பெரும் துயரமளிக்கும் செய்தி கடந்த வாரம் வந்துசேர்ந்தது. உலகப் புகழ்பெற்ற ஆசிய யானைகள் ஆய்வாளர் அஜய் தேசாய் (62) மாரடைப்பால் காலமானதுதான் அந்தச் செய்தி. யானை அறிவியலையும் அஜய் தேசாயையும் அறிந்தவர்கள், அவரின் மரணம் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர்வார்கள்.

1980-களில் ஆப்பிரிக்க யானை களைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஆசிய யானைகள் குறித்த ஆய்வுகள் அரிதாகவே இருந்தன. அப்போது, ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்’ (BNHS) யானைகள் பற்றிய ஆய்வுப் பணி ஒன்றைத் தொடங்கியது. ஜே.சி. டேனியல் தலைமையில் ஏ.ஜே.டி. ஜான்சிங் போன்றவர்களால் தொடங்கப்பட்ட அந்த ஆய்வு முதுமலை, பந்திபூர், நாகரஹொலே பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்காக இளம் ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்றபோது கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த அஜய் தேசாய், தமிழகத்தைச் சேர்ந்த சிவகணேசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டார்கள்.

தமது கல்வித் தகுதி, காட்டுயிர் ஆய்வில் கொண்டிருந்த ஆர்வம் ஆகியவற்றுடன் மாணவப் பருவத்தில் கால்பந்து, ஓட்டப்பந்தயம் ஆகிய வற்றில் பரிசு வென்றிருந்ததும் தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்று அவரே கூறியுள்ளார். ஏனென்றால், காட்டு யானைகள் குறித்த ஆய்வுக்கு உடல்தகுதி அவசியம் என்று தேர்வுக்குழு அறிவுறுத்தியிருந்தது.

நவீன அடிப்படை ஆய்வு

கடல் உயிரின ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த அஜய் தேசாய், 1982 ஆம் ஆண்டு யானை ஆய்வுப் பணியைத் தொடங்கினார். காட்டு யானைகளை ஆய்வுசெய்ய நேரடியாக அவர் அனுப்பப்படவில்லை. தென்தமிழகத்தில் களக்காடு சரணாலயப் பகுதியில் அப்போது நடைபெற்ற பணிகளுக்கு உதவ ஆனைமலையிலிருந்து 4 வளர்ப்பு யானைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை நடத்திவந்த ஏ.ஜே.டி. ஜான்சிங்கின் வழிகாட்டுதலில் வளர்ப்பு யானை களைக் கண்காணித்து, அவற்றின் நடவடிக்கைகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யும் பணியை சிவகணேசனுடன் இணைந்து அஜய் தேசாய் தொடங்கினார்.

பின்னர் இருவரும் முதுமலை வந்தனர். அங்கே 10 ஆண்டுகள்வரை யானைகள் குறித்த பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்தனர். மேல்கார்குடி பகுதியில் இருந்த ‘கரடி பங்களா’ என அழைக்கப்பட்ட பழைய கட்டடம் ஒன்றைச் சீரமைத்து, அங்கே தங்கியிருந்து ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வுதான் நவீன காட்டுயிர் அறிவியல் முறையான ‘ரேடியோ காலர்' முறையில் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு. ஆசிய யானைகள் பற்றி இன்று நாம் அறிந்திருக்கும் வாழிடம், வலசை, உணவுமுறை எனப் பல்வேறு தகவல்களை தந்த முன்னோடி ஆய்வு அது.

அப்போது பெற்ற அறிவும் அனுபவமும் தொடர்ந்து யானைகள் குறித்த ஆய்வில் அவரை ஈடுபடவைத்தது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, வியட்நாம், மலேசியா உள்பட ஆசிய யானைகள் வாழும் பல்வேறு நாடுகளில் அவருடைய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய ஆய்வுப் பணி தொய்வின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது.

16065330192006.jpg

வல்லமை மிகுந்த ஆலோசகர்

யானை - மனித எதிர்கொள்ளல் அதிகரிக்கத் தொடங்கியது கடந்த 25 ஆண்டுகளாகத்தான். எனவே, அந்த விவகாரத்தை மேலாண்மைசெய்ய ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அறிவியல் தரவுகள் தேவைப்பட்டன. அவற்றைத் தரும் வல்லமை பெற்றவராக அஜய் இருந்தார்.

உலக இயற்கை நிதியத்தின் (WWF) ஆசிய யானை சார்ந்த செயல் பாடுகளுக்கான ஆலோசகர், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானைகள் சிறப்புக் குழுவின் தலைவர், உறுப்பினர், மத்திய அரசு அமைத்த யானை சிறப்புச் செயல்பாட்டுக் குழு (Elephant Task Force) உறுப்பினர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை அஜய் தேசாய் வகித்துள்ளார்.

காட்டில் யானைகள் வாழும் எல்லா இந்திய மாநிலங்களிலும் பல்வேறு மேலாண்மைப் பணிகளுக்கு ஆலோசகராக இருந்துவந்தார். டேராடூன் இந்தியக் காட்டுயிர் நிறுவனம் (WII) பல்வேறு ஆய்வுப் பணிகளுக்கும் மேலாண்மைப் பணிகளுக்கும் அவரை ஆலோசகராக நியமித்திருந்தது.

அவரின் ஆய்வுகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டதால், நமது காடுகளை நன்கு அறிந்தவராக இருந்தார். யானைகள் மேலாண்மை குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் பல்வேறு முடிவுகள் அஜய் தேசாயின் ஆலோசனை யைப் பெற்றே இறுதி செய்யப்பட்டு வந்துள்ளன. அன்மையில் கோவை வனக் கோட்டத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த யானைகள் மரணம் பற்றி அறிய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார்.

வலசை பாதை பாதுகாப்பு

இந்தியாவில் யானைகள் பயன்படுத்தும் குறுகிய வலசைப் பாதைகளைக் (Elephant corridors) காப்பாற்றும் பெருமுயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், தனியார் நிலத்தில் இருக்கும் யானைகளின் வலசைப் பாதைகளுக்கு எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை. நீலகிரியில் உள்ள சீகூர் யானை வலசைப் பாதை குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பு சார்ந்த மேல்முறையீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

மசினகுடி பகுதியில் யானை வலசைப் பாதையை மறித்து இயங்கிவரும் கேளிக்கை விடுதிகளை மூடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கி யிருந்தது. அதற்குத் தமிழக வனத்துறை தந்த அறிவியல் தரவுகள் முக்கியக் காரணம். அந்த அறிவியல் தரவுகளுக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் அஜய் தேசாய். அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

பல உயிரியலாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் நூல்கள் எழுதுவதிலும் வல்லவராக இருப்பார்கள். ஆனால், கள ஆய்வை யும் அனுபவத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் நகரத்தில் இருந்துகொண்டு கல்விப்புல அறிவைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் மேலாண்மைப் பரிந்துரைகள் பெரும்பாலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையாகவும் குறிப்பிட்ட பகுதிக்குப் பொருந்தாதவையாகவும் இருக்கும்.

ஆனால், 38 ஆண்டுகள் தொடர்ந்து கள ஆய்வு செய்பவராக இருந்த அஜய் தேசாய் தரும் ஆலோசனைகள் நடைமுறையில் சாத்தியப்படக்கூடியவையாகவே இருந்தன. அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவையாகவும் இருந்தன. அத்துடன் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் யானைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு அரங்குகளில் அஜய் தேசாயின் குரல் வலிமையாக ஒலித்துள்ளது.

16065330392006.jpg

யானைக் காவலன்

அவரது ‘The Indian elephant: endangered in the land of Lord Ganesha’ (1997) எனும் நூல் யானைகளைப் பற்றிய அடிப்படை அறிவியலை அறிய உதவும் முக்கிய நூல்.

உலகின் முன்னணி ஆய்வாள ராகவும் அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோரிடம் நெருக்க மானவராகவும் இருந்திருந்தாலும் எந்த மகுடங்களையும் சூட்டிக்கொள்ளாத எளிய மனிதராக அவர் இருந்துவந்தார். தம்மை நாடி வரும் இளம் ஆய்வாளர் களை அரவணைத்து வழிநடத்தும் உயர்ந்த பண்பைக் கொண்டிருந்தார்.

யானைகள் குறித்த ஆய்வுகளிலும் மேலாண்மை நடவடிக்கைகளிலும் பெரும் பங்காற்றிய தலைச்சிறந்த அறிவியலாளரை இழந்துள்ளோம். இது ஒரு பெரும் வெற்றிடம். ஆசிய யானைகள் பெரும் காவலனை இழந்திருக்கின்றன.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: pasumaiosai@gmail.com

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/606065-elephant-guard-5.html

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திடீரென வைகையில் பொங்கிய நுரை... அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

நுரை பொங்கிய வைகை

நுரை பொங்கிய வைகை

ரசாயனக் கழிவுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வைகை நதி.

மதுரையில் பெய்த மழையின் விளைவால் நகருக்குள் ஓடும் வைகை ஆற்றிலும் செல்லூர் கண்மாயிலும் 10 அடி உயரத்துக்கு நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து நுரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வைகை ஆறு
 
வைகை ஆறு

ஏற்கனவே மதுரைக்குள் ஓடும் வைகை ஆற்றுப் பாதையிலும், அதை சார்ந்த கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், வீடுகள், தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றில்தான் கலந்து வருகின்றன.

 
 

இதற்கிடையே நகர வளர்ச்சிக்காக கரையோரங்கள் குறுக்கப்பட்டு இருபக்கமும் இரட்டை வழி சாலை போடப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை வைகை செல்லும் பாதை அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் புகார் எழுப்பி வருகிறார்கள். வைகையை பாதுகாக்க உயர்நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

வைகை ஆறு
 
வைகை ஆறு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பெய்த மழையின் விளைவால் நேற்று வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நீர் செல்லூர் கண்மாயில் சேரும் இடத்திலும், மீனாட்சிபுரம் பாலத்திலும் 10 அடி உயரத்துக்கு வெண்ணிற நுரை எழும்பியதால் அப்பகுதி முழுவதும் சின்ன பனிமலை போல் காட்சி அளித்தது. இதைப் பார்க்க மக்கள் கூட ஆரம்பித்தார்கள்.

 

பின்பு தீயணைப்புத் துறையினர் வந்து நுரையை கலைக்கும் வகையில் நீரை பீய்ச்சி அடித்தார்கள். வைகை ஆற்றையும் கண்மாய்களையும் ஒட்டியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவு நீர் வைகையாற்றில் கலப்பதால்தான் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து வைகையின் நீரோட்டத்தை தடுத்ததால் தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோட ஆரம்பித்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பார்வையிட்ட செல்லூர் ராஜூ
 
பார்வையிட்ட செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பகுதிக்கு வந்து ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். வைகை ஆற்றில் அபாயத்தை உண்டாக்கும் ரசாயன கழிவுநீரைத் தடுக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

https://www.vikatan.com/social-affairs/environment/toxic-foam-forms-in-vaigai-river-due-to-industrial-pollution

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்துல்கலாமின் நினைவாக தொடர்ந்து 275ஆவது வாரமாக மரக்கன்று நடவு செய்த இளைஞர்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செயற்கை மழை பொழியும் `மழை மரம்...' வித்தியாசமான விழிப்புணர்வில் அசத்தும் கரூர் விவசாயி!

மழை மரம்

 

சும்மா, 'மரம் வளர்த்தால், மழை பெய்யும்'னு சொன்னா, மக்களுக்கு அது அவ்வளவு தீவிரத்தை ஏற்படுத்தாது. அதனால், மரம் மூலம் மழைபொழிய வைத்து, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு நினைச்சேன்.

வேலம் மரக்கிளைகளில் பிளாஸ்டிக் குழாய் மூலம் கனெக்ஷன் ஏற்படுத்தி, சென்சார் முறையில் மழை பொழிவதுபோல் அமைப்பை செய்து, மரங்களின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர்.

வேலம் மரத்தில் சென்சார்
 
வேலம் மரத்தில் சென்சார் நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது கணக்குப் பிள்ளைபுதூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வீட்டைச் சுற்றி இயற்கைச் சூழலை செம்மைப்படுத்தியிருக்கிறார். அதோடு, வீட்டைச் சுற்றி மூலிகைச் செடிகள், தேனி வளர்ப்பு, சிறிய அளவிலான உணவுக்காடு என்று ஒரு மாடல் பண்ணைபோல் அமைத்துள்ளார். இதைப் பார்க்க, பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் எனப் பலரும் வருகை தருகின்றனர்.

 

அப்படி, தனது பண்ணையைப் பார்க்க வருகைதரும் மாணவர்களுக்கு, மழை வழங்குவதில் மரங்களின் அவசியம் குறித்து உணர்த்த, வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார். தனது வீட்டின் அருகில் உள்ள, 25 ஆண்டுகள் பழைமையான வேலம் மரக்கிளைகளில், பிளாஸ்டிக் குழாய்களை அமைத்திருக்கிறார். அதோடு, மரத்தின் மேற்கு பக்கம் சென்சார் ஒன்றையும் அமைத்திருக்கிறார்.

மரக்கிளைகளில் பிளாஸ்டிக் டியூப்,
 
மரக்கிளைகளில் பிளாஸ்டிக் டியூப், நா.ராஜமுருகன்

மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை, தண்ணீர் டேங்கில் இணைத்துள்ளார். மாணவர்கள் அந்த மரத்தில் இருக்கும் சென்சாரை கிராஸ் செய்யும்போது, ஆட்டோமேட்டிக்காக டேங்கில் இருந்து பம்ப் ஆகும் தண்ணீர், மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் வழி சென்று, அந்த குழாய்களில் போடப்பட்ட நுண்ணிய துளைகளின் வழியாக, மழைபெய்வதுபோல் கீழே விழுகிறது.

மாணவர்கள் சென்சாரைவிட்டு அகன்றாலும், 10 நொடிகள் வரை தண்ணீர் மழைபோல் கீழே பொழிகிறது. அந்த மரத்தைச் சுற்றி வெய்யில் அடிக்க, மரத்தின் அடியில் மட்டும் திடீரென மழை பெய்வதால், ஒருகணம் மாணவர்கள் நிஜ மழையோ என்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறார்கள். இதன்மூலம், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துவதாக செல்லமுத்து சொல்கிறார்.

 

இதுகுறித்து, செல்லமுத்துவிடம் பேசினோம்.

"நான் 30 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக க.பரமத்தி பகுதியே வறட்சியான பகுதியா மாற ஆரம்பித்து, இப்போது 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் அளவுக்கு கொடுமையான வறட்சி பகுதியா மாறிடுச்சு. கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியா, க.பரமத்தி பகுதி மாறிடுச்சு. மழையும் இங்கு அதிகம் பெய்யாது. அதற்கு காரணம், இங்கு அதிகமாக கல்குவாரிகள் இயங்கி வருவதும் மரங்களின் அளவு குறைந்துபோனதும்தான். அதனால், என் பண்ணையைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்த நினைத்தேன். சும்மா, 'மரம் வளர்த்தால், மழை பெய்யும்'னு சொன்னா, அவங்களுக்கு அது அவ்வளவு தீவிரத்தை ஏற்படுத்தாது.

நட்சத்திர மரங்கள் முன்பு செல்லமுத்து
 
நட்சத்திர மரங்கள் முன்பு செல்லமுத்து நா.ராஜமுருகன்

அதனால், மரம் மூலம் மழை பொழிய வைத்து, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு நினைச்சேன். அதற்காகத்தான், வேலம் மரத்தில் இந்த ஏற்பாட்டை செய்தேன். உண்மையில் மாணவர்களிடம் இது பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கு. 'நாங்க எங்க பள்ளி, வீட்டு வளாகங்களில் மரங்களை வளர்க்கப்போறோம்'னு சொல்லிட்டுப் போறாங்க. அதேபோல், இந்த வேலம் மரத்தைச் சுற்றி, புல்லை நட்சத்திர வடிவில் அமைச்சு, மரத்தைச் சுற்றி அரசு, வன்னி, ஈட்டி, கருங்காலி, சக்கைபலானு 27 நட்சத்திர மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறேன். இதைச் சுற்றி வந்தால், 27 நட்சத்திரங்களையும் சுற்றிய பலன் கிடைக்கும்னு சொல்றாங்க. இப்படி, பல்வேறு வகையில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திட்டு வர்றேன்" என்றார்.

 

https://www.vikatan.com/news/environment/karur-farmer-spreads-awareness-by-creating-artificial-rain-in-a-tree

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றும் திட்டம்; நிழல் மரக்கன்றுகள் நடுகை ஆரம்பம்

 

(மன்னார் நிருபர்)

மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்று நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வழிகாட்டலில் ‘குணரத்தினம் பவுண்டேசனின்’ அனுசரணையுடன் மாவட்ட ரீதியில் 3 அயிரம் நிழல் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

IMG-20201130-WA0010-300x225.jpg IMG-20201130-WA0012-300x229.jpg IMG-20201130-WA0013-300x249.jpg  IMG-20201130-WA0019-300x247.jpg
மாவட்டத்திலுள்ள பாடசாலைகள்,பொது இடங்கள் உள்ளடங்கலாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருகின்றன.

IMG-20201130-WA0015.jpg
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை(30) மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் குறித்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மடு வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட பலர் பலந்து கொண்டனர்.

குறித்த திட்டத்தின் ஊடாக இது வரை 2500 நிழல் கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/94375

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருப்பத்தூரில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு அகற்றி மறுநடவு: ஆட்சியரின் முயற்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு

tree-transplanting-in-tirupathur மரங்களை மறுநடவு செய்யும் பணியை பூஜை போட்டு ஆட்சியர் சிவன் அருள் தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதால், அங்குள்ள மரங்களை வேரோடு அகற்றி, மறுநடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகக் கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளத்துடன் 7 மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு ரூ.109.71 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 
 

இதைத் தொடர்ந்து, வனச்சரகர் அலுவலகத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இடம் அளவீடு செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் அமையவுள்ள இடத்தில் பழமை வாய்ந்த மரங்கள் நூற்றுக்கணக்கில் இருந்ததால் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையறிந்த, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மரங்களை வெட்டாமல் வேருடன் அகற்றி, மற்றொரு இடத்தில் மரங்களை மறுநடவு செய்யப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு இடையூறாக உள்ள மரங்கள் வேருடன் அகற்றி வேறு இடத்தில், மரங்கள் மறுநடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (டிச.4) தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ட்ரீ டிரான்ஸ் பிளான்ட்டிங்' முறையில் மரங்கள் மறுநடவு செய்யப்படுகிறது. இதற்காக பிரத்யேக வாகனத்தை அம்மாநிலத்தவர்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கு நிறைய செலவும் ஆகிறது.

அதற்கு மாறாக, மணல் அள்ளும் இயந்திரம், கிரேன் மூலம் மரங்களை மறுநடவு செய்தால் குறைந்த செலவாகும் என்பதால், திருப்பத்தூரில் புதிய முயற்சியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சில ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, மரங்களைச் சுற்றி இடைவெளி விட்டு குழி தோண்டி, பெரிய வேர்கள், மரக்கிளைகளை அகற்றிவிட்டு மீதமுள்ள வேர்களில் மண் ஒட்டி இருக்கும்படி மரங்களை வேரோடு தோண்டி எடுத்து, வேறு இடத்தில் 5 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட குழியில் மரங்களை மறுநடவு செய்து, அந்தக் குழிக்குள் இயற்கை உரம், மருந்துக் கரைசலைத் தெளித்தால் மரங்களின் வேர்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள உரத்தால் சில நாட்களில் மரங்கள் துளிர்த்து வளரத் தொடங்கிவிடும்.

இதுபோன்ற முயற்சி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது முதன்முறையாக செய்யத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மரத்துக்கும் மறு உயிர் கொடுக்கும் முயற்சியை எடுக்கும்படி ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகள் முடிய ஓரிரு வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இங்கிருந்து அகற்றப்படும் மரங்களைப் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பயணியர் விடுதி வளாகத்தில் மறுநடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். சில மரங்கள் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகே ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளின் 'மரங்கள் மறுநடவு' ஆலோசனைக்கு சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/608184-tree-transplanting-in-tirupathur-2.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுழற்றி அடிக்கும் புயல்களும் காலநிலை மாற்றமும்: பூமிக்கு அடிக்கும் எச்சரிக்கை மணியா?

cyclones-and-climate-change-earth-is-giving-warning  

கடந்த சில வாரங்களாக நாம் அதிகம் கேட்கும், பார்க்கும், உச்சரிக்கும் வார்த்தைகள் புயல்.. கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு... மக்கள் அவதி என்பதாகவே இருக்கின்றன. தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ளும் இயற்கை, புயல், மழை, வெள்ளம் என்ற இயல்புச் சங்கிலியிலும் மாற்றத்தைக் காண்பித்து வருகிறது..

கடலில் புயல் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும் தற்போது உருவாகும் புயல்களின் எண்ணிக்கையும் அவற்றின் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே வருவது சூழலியாளர்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பு வரை அபூர்வமாய் ஏற்பட்ட புயல், இப்போது ஆண்டுதோறும் ஒரு புயல் என மாற்றிக்கொண்டு விட்டது.

2005-ல் ஃபர்னூஸ் புயல், 2008-ல் நிஷா புயல், 2010-ல் ஜல், 2011-ல் தானே, 2016-ல் வர்தா, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒக்கி, கஜா, 2020-ல் நிவர், புரெவி எனத் தொடர்ச்சியான புயல்கள் தமிழகத்தைச் சுழற்றி அடிக்கின்றன.

இதற்குக் காலநிலை மாற்றம் முக்கியமான, பிரதானக் காரணம் என்கிறார் ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து அவர் விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

16071728142484.jpg பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

’’பொதுவாகக் கடலில் புயல்கள் உருவாக முக்கியக் காரணங்கள் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம். மனிதர்கள் பசுமை இல்ல வாயுக்களை எரித்து வெளியிடக்கூடிய கார்பனைப் பெருங்கடல்கள் கிரகித்துக் கொள்கின்றன. இதனால் கடல் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த அதிகரிப்பால், அதிலுள்ள நீர் ஆவியாகி மேலே செல்கிறது. இதனால் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இவற்றால் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, புயலாக மாறுகிறது.

புயல்கள் உருவாகக் காலநிலை மாற்றத்துக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டாலும் புயல்களின் தீவிரத்தன்மை, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிப்பு மற்றும் கணிக்க முடியாத தன்மைக்குக் காலநிலை மாற்றமே முக்கியக் காரணம். உதாரணத்துடன் விளக்கினால், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் வழக்கமாக 4 முதல் 7 நாட்களுக்குள் கரையைக் கடந்துவிடும். ஆனால் ஃபானே புயல் 11 நாட்களை எடுத்துக் கொண்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாற 40 மணி நேரம் ஆகும். ஆனால் ஒக்கி புயல் வெறும் 6 முதல் 9 மணி நேரத்தில் புயலாக மாறியது நினைவிருக்கலாம்.

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் இயற்கைக்கு எதிரான செயல்கள் அங்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. பல்வேறு இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள், அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. பேரிடர், பாதிப்பு, நிவாரணம், புயலுக்குப் பிந்தைய வறட்சி, அதற்கான நிவாரணம் எனத் தொடர் சங்கிலியாகச் சென்று கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

16071732402484.jpg

உண்மையில் சுற்றுச்சூழலால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. சூழலைப் பாதுகாப்பதன் மூலமே நீடித்த, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்’’ என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் நீரியல் சுழற்சியில் ஏற்படும் இடையூறே புயல்களின் தீவிரத்தன்மைக்குக் காரணம் என்கிறார் நீரியல் துறை பேராசிரியர் ஜனகராஜன்.

அவர் மேலும் கூறும்போது, ’’நீரியல் சுழற்சி (நிலத்தில் இருந்து தண்ணீர் கடலுக்குச் சென்று, நீராவியாக மாறி, மழையாக மீண்டும் நிலத்தை அடையும் தொடர்ச்சியான நிகழ்வு) தொடர்ந்து சீராக நடக்கும் வரையில் வட கிழக்குப் பருவமழை, தென் மேற்குப் பருவமழை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புயல் என்பது வழக்கமாக இருந்தது. அதில் இடையூறு ஏற்படும்போதுதான் திடீர் புயல், வெயில், குறைவான நேரத்தில் பெருமழை, வரலாறு காணாத வறட்சி ஏற்படுகிறது. இவையனைத்தும் முன்பே ஏற்பட்டிருந்தாலும் அதன் தீவிரம் தற்போதுதான் அதிகரித்து வருகிறது.

பூமியின் வெப்பநிலை உயர்வாலும் லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிப்பதாலும் நீரியல் சுழற்சியில் இடையூறு ஏற்படுகிறது.

16071727982484.jpg எஸ்.ஜனகராஜன், நீரியல் துறை முன்னாள் பேராசிரியர், எம்ஐடிஎஸ்

கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, தொழிற்சாலை வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவற்றால் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தண்ணீர் நீராவியாகும் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில இடங்களில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக மாறலாம். அதேநேரத்தில், கடற்கரையைத் தவிர்த்த பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வறட்சி ஏற்படவும் சாத்தியமுள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஆய்வாளர் சுஜாதா பைரவன், காலநிலை மாற்றம்

’’வழக்கமாகப் புயல் ஒரே இடத்தில் நிலைகொண்டு இன்னும் வலிமை பெற்றதாக உருமாறும். ஆனால் கடந்த மாதத்தில் உருவான நிவர் புயல் புதன்கிழமை கரையைக் கடக்கும், வியாழக்கிழமை காலையில், மாலையில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டு என நள்ளிரவில் வலிமை பெற்ற புயலாக மாறி கரையைக் கடந்தது. இதற்கு முக்கியக் காரணம் வெப்பநிலை உயர்வே. இந்த உயர்வு கடல் நீரோட்டங்கள், ஆற்றல் சுழற்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புயல்கள் ஏற்படுகின்றன.

16071730532484.jpg

புயலுக்குப் பிறகான வறட்சி

காலநிலை மாற்றம் பருவ மழைப் பொழிவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதைச் சேமித்து வைக்க நாம் முறையான வசதிகளை மேற்கொள்ளாததால் அனைத்து நீரும் வீணாகி விடுகிறது. மீண்டும் பருவ மழை பெய்யாது என்பதால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, வறட்சி சூழல் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.’’

மேலும் இவற்றைத் தடுக்கஎன்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சுஜாதா பைரவன் கூறும்போது, ’’மழைநீர் சேகரிப்பு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரல் ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும். அதேபோல உரங்கள் தவிர்த்த இயற்கை விவசாயத்தை (natural farming- உரங்கள் தவிர்த்து ஒரே நிலத்தில் மரங்கள், பயிர்கள், காய்கறிகள் பயிரிடப்படும் முறை)நோக்கி மக்கள் நகர அரசு ஊக்குவிக்க வேண்டும்.

16071731032484.jpgஆய்வாளர் சுஜாதா பைரவன்

காலநிலை மாற்றத்திற்கான தேசிய, மாநிலச் செயல் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றைத் தனியாக மேற்கொள்ளாமல், பொதுவான வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும். அரசுகள் புறம்போக்கு நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. பதிலாக அந்த நிலங்களில் நகர்ப்புற விவசாயம், காய்கறி பயிரிடல், மியாவாக்கி வன உருவாக்கம் ஆகியவற்றைச் மேற்கொள்ளலாம்.

இவற்றை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் நீட்டித்து கடற்கரை வரை ஒருங்கிணைத்து, பசுமை மண்டலமாக உருவாக்கலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பும் உருவாகும். கரியமில வாயு வெளியேற்றப்படுவதும் குறையும். இவற்றில் தமிழகத்தைக் காட்டிலும் மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

16071730382484.jpg

பூவுலகு சுந்தர்ராஜன் கூறும்போது,

* புதிதாக அணுமின் நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ள அணுமின் நிலையங்களையும் மூடத் திட்டமிட வேண்டும்.

* பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.

* கடல், கடற்கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும்.

* சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களை அதிகரிக்க வேண்டும்..

* வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

பொதுவாகக் கூற வேண்டுமெனில் நீடித்த, நிலைத்து நிற்கக் கூடிய வளர்ச்சி என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அரசுகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வேறு வகையில் நமக்கே திரும்பி வரும். இந்தப் புயல்களையும் அதற்கான எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு இனியாவது மானுட சமூகம் விழித்துக்கொள்வது நமக்கு நல்லது, இயற்கைக்கும் அவசியமானது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

https://www.hindutamil.in/news/tamilnadu/608560-cyclones-and-climate-change-earth-is-giving-warning-7.html

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

``குறைவே நிறைவு''! ஒரு தேவதையின் ‘பழைய பாசம்’!

குறைவே நிறைவு

குறைவே நிறைவு

#Entertainment

பிரீமியம் ஸ்டோரி

‘குறைவே நிறைவு!’ - என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு வெற்றிகரமான யூடியூபராக மட்டுமல்ல; தன் கொள்கைகளால் வாழ்க்கையையும் வென்றிருக்கிறார் இந்த இளம்பெண். வடக்கு அட்லான்டிக் பகுதியின் செழிப்பான தீவான அயர்லாந்தில் வசிக்கிறார். இவரது சேனலின் பெயர் ஃபேரிலேண்டு காட்டேஜ் (Fairyland cottage). நாம் ஒவ்வொருவரும் வாழ ஆசைப்படும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத் தேடி அமைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.

“இந்தப் பூமியிடமிருந்து வளங்களைப் பறித்துக்கொள்வதற்குப் பதில் அதன் காயங்களைக் குணப்படுத்துகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வேளாண் மக்களோடு வாழ்ந்தபோது நிலைத்த வேளாண்மை (Permaculture) என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.

மினிமலிசம், ஸீரோ வேஸ்ட், இயற்கையோடு வாழ்க்கை போன்றவற்றில் ஈடுபாடு அதிக மாகவே கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் என் குடும்பத்துக்குச் சொந்தமான, அவர்கள் பயன்படுத்தாமல் விட்டிருந்த நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்யத் திட்டமிட்டேன். அந்த நிலத்தைப் பண்படுத்தி இயற்கை முறையில் பழங்கள், காய்கறிகள் பயிரிட்டு சோலையாக மாற்றியிருக்கிறேன். இந்த அழகான வாழ்க்கையை அனைவருக்கும் பயனுள்ளதாக்கவே இந்தச் சேனலைத் தொடங்கினேன்” என்பவர் 2012-ம் ஆண்டு முதல் இதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்தப் பெண்ணின் பெயரை எங்கு தேடினாலும் கண்டறிய முடியாது. உலகம் முழுமைக்கும் `ஃபேரிலேண்டு காட்டேஜ்' என்ற அவரது வீட்டின் பெயரிலேயே அறியப்படுகிறார். வீடியோவில் முகம்காட்டிப் பேசுபவர் பெயரை மட்டும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

``குறைவே நிறைவு''! ஒரு தேவதையின் ‘பழைய பாசம்’!
 

“நகர்ப்புறத்தில் வாழ்ந்தபோது என் வாழ்க்கையை வாழ நான் அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தக் கிராமப்பகுதிக்கு வந்த பிறகுதான் ஏற்கெனவே என்னிடம் நிறைய இருக்கிறது; அதற்கு மேல் வாங்கிக் குவிப்பது வீண் என்ற தெளிவு ஏற்பட்டது. இந்தக் கிராமத்தில் இயற்கையின் மடியில் கிடைக்கும் செல்வங்களை நம்பி வாழ ஆரம்பித்த பிறகு, வாழ்க்கைத் தரம் அதிகரித்து, வாங்கும் செலவு குறைந்தது” என்பவர் எந்தப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை அதிகமாக வெளியிட்டிருக்கிறார்.

“இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத் ததுக்குப் பிறகு, பல பொருள்களை வாங்கு வதை அடியோடு நிறுத்திவிட்டேன். உதாரணத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெட், ஜாம், சாஸ், பட்டர், டீ பேக் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். என் செல்போன் இணைப் பைக்கூட ப்ரீபெய்டாக மாற்றிவிட்டேன். தேவை ஏற்பட்டால் மட்டும் ரீசார்ஜ் செய்கிறேன். ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தையும் செகண்டு ஹேண்டில்தான் வாங்கிப் பயன்படுத்துகிறேன்” என்பவர் அவருக் கான அழகு சாதனப் பொருள்களான டியோடரண்ட், டூத்பேஸ்ட், சோப்பு என அனைத்தையும் சமையல் அறை பொருள்களைப் பயன்படுத்தியே தயாரித் துக்கொள்கிறார்.

வீடு, கழிவறையைச் சுத்தம் செய் வதற்கான திரவங்களையும் அவரே இயற்கை முறையில் தயாரிக்கிறார்.

தனது ஹவுஸ் டூர் தொடங்கி, ஆரோக்கியமான ரெசிப்பிகள், அழகுக் குறிப்புகள், செலவுகளைக் குறைப் பதற்கான வழிமுறைகள், தோட்டமிடல் என அனைத்தையும் வீடி யோக்களின் மூலம் நம் கண்களுக்கு விருந் தாக்குகிறார். ஒவ்வொரு வீடியோவுக்கும் மில்லியன் கணக்கில் வியூஸ் கிடைப்பதில் ஆச்சர்யமில்லை.

வீடியோக்களுக்கு இவர் அளிக்கும் வாய்ஸ் ஓவர், அதில் தெரி விக்கும் தகவல்கள் என அனைத்தையும் கேட் பவர்கள் அவரைப் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஓர் அடியாவது முன்னே எடுத்து வைப் பார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புதிய வீடியோக்களை வெளியிடுகிறார்.

“எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. இந்த நிலத்தின் ஆரோக்கிய வாழ்வைத் திரும்பக்கொண்டு வர வேண்டும். இந்த உலகத்தை அனைவரும் வாழ உகந்த இடமாக மாற்ற வேண்டும்” என்று சிரிக்கிறார்.

உண்மையாகவே அது தேவதையின் வீடுதான்.

 

https://cinema.vikatan.com/women/fairyland-cottage-youtube-channel

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

18 ஆண்டுகளில் ஸ்பெயினின் மொத்த பரப்பளவை விட அதிக அளவில் அமேசான் காடுகள் அழிப்பு.

18 ஆண்டுகளில் ஸ்பெயினின் மொத்த பரப்பளவை விட அதிக அளவில் அமேசான் காடுகள் அழிப்பு..

காடுகள் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. ஆனால் மனிதர்களின் தேவை பெருகவே காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டன. 
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா ஆகிய நாடுகளில் அமேசான் மழைக்காடுகள் பரவியுள்ளது.

ஆனாலும், அமேசானின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளது. அதிக அளவில் ஆக்சிஜனையும் மழைப்பொழிவையும் தரும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. 


 
அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அரியவகை வன உயிரினங்கள், மரங்கள் ஆகியவை அழிந்தன. 

அமேசான் மழைக்காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் போல்சனரோ தலைமையிலான அரசு, காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும்,  காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், 2000 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசானில் காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களை அமேசான் அட்லஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 2000 முதல் 2018 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இவை காட்டுத்தீ, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் காடுகள் அழிப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் நிகழ்ந்துள்ளது.

5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகம் ஆகும். ஸ்பெயினின் மொத்த பரப்பளவு 5 லட்சத்து 5 ஆயிரத்து 990 கிலோமீட்டர்கள் ஆகும்.

2000 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவில் 8 சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது என்பது 
தெரியவந்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/10041905/2147669/Tamil-News-Amazon-Deforestation-Data-Released.vpf

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் இறப்புக்கள்!

 
1-72-696x452.jpg
 23 Views

உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித-யானை மோதலை சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தகவல்கள் குறித்து அரசாங்கக் கணக்குக் பற்றி அறியும் கோபா  குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

மனித – யானை மோதலால் இலங்கையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழப்பதாக கூறப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு மாத்திரம் அந்த எண்ணிக்கை 407 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இப் பிரச்சினை காரணமாக ஆண்டுதோறும் சரசாரியாக 85 நபர்கள் உயிரிழப்பதாகவும் கடந்த ஆண்டு 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-3/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கரூர்: 25 சென்ட் நிலம், 11 வகையான காய்கறிகள்... ஊர் மக்களுக்காக சமுதாய காய்கறித் தோட்டம்!

சமுதாயக் காய்கறித் தோட்டம்

சமுதாயக் காய்கறித் தோட்டம்

இந்த கிராமத்தில்தான் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு வழங்கி வருகிறார்கள்

தங்கள் கிராமத்தில் வசிக்கும், வாழ்வாதாரத்துக்கே சிரமப்படும் 25 குடும்பங்களுக்குச் சத்தான இயற்கை காய்கறிகளை இலவசமாக வழங்க ஏதுவாக, 25 சென்ட் இடத்தில் 12 பெண்கள் சேர்ந்து இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்திருப்பது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

சமுதாயக் காய்கறித் தோட்டம்
 
சமுதாயக் காய்கறித் தோட்டம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது கருப்பத்தூர். இந்த ஊராட்சியில் உள்ள சிறிய ஊர், வேங்காம்பட்டி. இந்த கிராமத்தில்தான் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்கள் பெண்கள். கருப்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ரெங்கம்மாள்தான், 11 பெண்களை ஒன்றிணைத்து இந்த அற்புதப் பணியைச் செய்துவருகிறார். அருகிலுள்ள வீடுகளில் உள்ள கழிவுநீரைக் கொண்டு, இயற்கை முறையில் இந்த காய்கறித் தோட்டத்தை பராமரித்து வருகிறார்கள்.

 

மிளகாய், தக்காளி, கொத்தவரை, வெண்டை, சுரைக்காய், செடி அவரை, பீர்க்கன், பாகல், புளிச்சக்கீரை, தண்டுக்கீரை உள்ளிட்ட காய்கறி, கீரை வகைகளை இங்கே பயிர் செய்திருக்கிறார்கள். 12 பெண்களும், காய்கறித் தோட்டத்தை தினமும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை நடக்கும் காய்கறி, கீரை அறுவடைக்குப் பின், அதை 25 பங்குகளாகப் பிரித்து, அந்தக் குடும்பங்களுக்கு வழங்கிவருகிறார்கள்.

அதோடு, வேப்பங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 'பசுமைக்குடி' என்ற இயற்கை தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழங்கிய துணிப் பைகளையும் மக்களுக்கு வழங்கி, ப்ளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

துணி பை பிரசாரம்
 
துணி பை பிரசாரம்

இந்த நல்ல முயற்சி பற்றி, கருப்பத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் ரெங்கம்மாளிடம் பேசினோம்.

"நான் ஊராட்சிமன்றத் தலைவராவதற்கு முன்புவரை, ஒரு என்.ஜி.ஓவில் பணிபுரிந்து வந்தேன். அந்த வகையில், புழுதேரியில் உள்ள கே.வி.கே-வோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது.

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற ஆசை இருந்ததால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், கருப்பத்தூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றேன். என்னை நம்பி ஜெயிக்க வைத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தேன். நஞ்சான உணவை, நஞ்சான காய்கறிகளை உண்பதால், மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுது. அதைத் தடுக்க மக்களை இயற்கை விவசாயத்துக்கு திருப்ப முடியுமா என்று யோசித்து வந்தேன்.

 

இந்த நிலையில்தான், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, கே.வி.கே, ஏதாவது ஓர் ஊரில், மக்களுக்கு பொதுவாக பயன்படும் வகையில் சமுதாய காய்கறித் தோட்டம் அமைக்க முயல்வதாக சொன்னாங்க. உடனே நான், 'அதை எங்க ஊருல அமைக்கிறோம்' என்று சொன்னேன். வேப்பங்குடியில் ஏற்கனவே 'பசுமைக்குடி' அமைப்பு, தமிழகத்திலேயே முதன்முறையாக இப்படி ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைச்சாங்க.

அதைப்பார்த்துட்டுதான், கே.வி.கே சார்பில், ஊராட்சிகளில் சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைக்க வெள்ளோட்டம் பார்ப்பதாக சொன்னாங்க. எங்க கிராமத்துல அமைக்க சம்மதம் சொன்னதால், கே.வி.கே-வில் இருந்து எல்லா விதைகளையும் கொடுத்தாங்க.

சமுதாயக் காய்கறித் தோட்டம்
 
சமுதாயக் காய்கறித் தோட்டம்

அதோடு, விதை நேர்த்தி செய்வது, விதைப்பது, தோட்டத்தைப் பராமரிப்பது, உரம் இடுவது என்று பல விசயங்களையும் எங்க 12 பேருக்கும் சொல்லிக்கொடுத்தாங்க. கடட்த ஆகஸ்ட் மாதம் காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். குறைந்த இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டுள்ளதால், ஊராட்சியில் உள்ள மொத்த மக்களுக்கும் கொடுக்க முடியாது என்று நினைத்தோம்.

அதனால், மனக்கஷ்டம் ஏற்படும் என்று நினைத்தோம். அதனால், ஊரில் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ள ஏழை குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டும் வழங்கி வருகிறோம். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்துகிறோம். அடுத்த முயற்சியாக, ஊரில் விவசாயம் செய்யாமல் விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களில் பெரிய அளவில் காய்கறித் தோட்டத்தை அமைக்கப் போகிறோம். இதன்மூலம், ஊர் பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற இருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக!.

வாழ்த்துகள் சகோதரி!

 

https://www.vikatan.com/health/women/karuppathur-panchayat-chairman-rengammal-set-up-an-organic-garden-for-poor-people

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மரங்கள் வெட்டுவதைத் தடுக்க மோடி உருவத்தை வரையும் ஒடிசா கலைஞர்

odisha-artist-carves-pm-s-portrait-on-trees-urging-him-to-take-note-illegal-tree-cutting மரத்தில் மோடி உருவத்தை வரையும் ஒடிசா கலைஞர் சமரேந்திர பெஹெரா.
 

வனத்தில் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரங்களில் மோடி உருவத்தை ஒடிசா கலைஞர் ஒருவர் வரைந்து வருவது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கலைஞர் சமரேந்திர பெஹெரா. இவர் தனது சித்திரங்கள் மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவைச் சேர்ந்த மரங்களில் அண்மைக் காலத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் ஒடிசா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிமிலிபால் வனத்திற்குள்ளும் வெளியேயும் உள்ள மரங்களில் இவர் பல்வேறு சித்திரங்களை வரைந்துள்ளார்.

இதுகுறித்து பெஹெரா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''இந்த உருவப்படத்தின் மூலம் இந்த வனத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைக் கவனத்தில் கொள்ளுமாறு மோடிஜிக்கு ஒரு கோரிக்கையை அனுப்ப விரும்புகிறேன்.

நான் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கலைஞன். எனது மேன்மைமிக்க பிரதமரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

நாட்டின் சுகாதார மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அதனால்தான் நான் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தில் அவரது உருவத்தை வரைகிறேன். அத்துடன் நமது சூழலைக் காப்பாற்ற, சட்டவிரோதமாக மரங்களை வெட்ட வேண்டாம் என்ற ஒரு விழிப்புணர்வுச் செய்தியையும் அனுப்ப முயல்கிறேன்''.

இவ்வாறு சமரேந்திர பெஹெரா தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/611033-odisha-artist-carves-pm-s-portrait-on-trees-urging-him-to-take-note-illegal-tree-cutting-1.html

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

23 சென்ட் நிலத்தில் பழமையான சோலைக்காடு.. சாதித்த தனிஒருவன்!

பல் மருத்துவரான தருண்சாப்ரா, மேற்கு தொடர்ச்சி மலைகள் மீதும், தோடர் பழங்குடிகள் மீதும் அளவற்ற ஈர்ப்பினைக் கொண்டவர். தோடர் பழங்குடிகளின் வாழ்வியலோடு இணைந்த தாவர வகைகள் அருகிவரும் நிலையில், ஊட்டியில் தனக்குச் சொந்தமான 23 சென்ட் நிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பூர்வீக தாவர வகைகளை நடவு செய்து, 300 ஆண்டுகளுக்கு முந்தைய சோலை மரக்காட்டையே உருவாக்கி அசத்தியுள்ளார்.
 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.