Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி

September 4, 2020

wes.png

 

கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த இலங்கைகொன் பல்லவநம்பி (46வயது) என்பவர் மிகவும் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

 

சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக பொலிஸாரும், மருத்துவ அவசரஉதவியும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதாகவும், மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. படகு கரையிலிருந்து புறப்பட்டு 5 நிமிட இடைவெளியிலேயே இந்த விபத்து நடைபெற்றதாகவும் படகின் அதிவேகமே விபத்துக்கான காரணமென விபத்தினை பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இதேவேளை ரொரன்ரோ பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://thinakkural.lk/article/66283

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயிற்கு ஒரே பிள்ளை, சிறு வயதிலே தந்தையில்லாமல் வளர்ந்தவர், மிக நல்ல குணம் உள்ளவர். 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்......!  

Link to post
Share on other sites

என் மிக நெருக்கமான நண்பனது மச்சான் தான் இறந்தவர். படகின் மோட்டாரில் ஏதோ பிரச்சனை இருந்திருக்கின்றது. ஸ்ரார்ட் பண்ணியவுடனே அதி வேகமாக புறப்பட்டுள்ளது. படகை இயக்கியவரது சொந்த படகு என்பதால் நல்ல பரிச்சயமானவர். ஆயினும் அவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. படகைச் செலுத்தியவர் படுகாயமடைந்து உள்ளார், ஆனால் உயிருக்கு ஆபத்தில்லையாம். 

படகு வேகமாக பாறையில் மோதிய போது இறந்தவரது நெஞ்சில் பலமான அடி ஏற்பட்டு இருக்கு. அதனால் தான் இறந்திருக்கலாம். நேற்று முந்தினம் தான் அவர் தன் 47 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியிருக்கின்றார். 15,11,8 வயதுகளில் பிள்ளைகள் உள்ளனர் என்கின்றனர்.

இறந்தவரை சிறு வயதில் கண்டிருக்கின்றேன். கொழும்பில் இருக்கும் போது என் நண்பனது வீட்டில் இருந்து தான் பாடசாலைக்கு சென்றவர். சரியாக 3 தினங்களுக்கு முன்னர் எம் வட்ஸப் குறுப்பில் என் நண்பன் இவரது படத்தை போட்டு "இவனை நினைவிருக்கின்றதா" எனக் கேட்டு இருந்தான். இரண்டு நாட்களில் இறப்பு செய்தி வருகின்றது. 

கிருபனுக்கும் பெருமாளுக்கும் இவரைத் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

 • Sad 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சில இறப்புக்கள் மிகவும் அவலமும் அகாலமும் . மிஞ்சி உள்ளவர்களுக்கு கடவுள் தான்  துணை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சென்ற படகு பாறைகளில் மோதுவதற்கு முன்பும் அதன் பின்பும் எடுக்கப்பட்ட வீடியோ :(

https://www.cp24.com/video?clipId=2028646&jwsource=cl

Edited by தமிழினி
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...அவருடைய பேரே வித்தியாசமாய் இருக்கிறது ...அவர் பல்லவர் என்று சொல்லி கொஞ்ச பேர் வர போயினம் 
 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

அவர்கள் சென்ற படகு பாறைகளில் மோதுவதற்கு முன்பும் அதன் பின்பும் எடுக்கப்பட்ட வீடியோ :(

https://www.cp24.com/video?clipId=2028646&jwsource=cl

காணெளி இணைப்புக்கு நன்றி தமிழினி.
இன்னும் கொஞ்சம் விலகி வந்திருந்தால் குளித்துக் கொண்டிருந்தவர்களை பதம் பார்த்திருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. October 25, 2020 இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார். ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது 199 பேருக்கான நியமனங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறாக ஐந்து பேர் வீதம் உள்வாங்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொலிசாரின் பாதுகாப்பு குறித்த அலுவலகத்தைச் சுற்றி அதிகரித்து காணப்பட்டது. குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட நியமனதாரிகளும் அவர்களது பெற்றோரும் குறித்த நியமனம் கிடைத்தமையினையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அத்தோடு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் தமது மனப்பூர்வமான நன்றிகளை இதன்போது தெரிவித்தனர்.   https://www.meenagam.com/?p=16055  
  • இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்தார் பொம்பியோ…. October 26, 2020 1 Min Read இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ரிச்சர்ட் பொம்பியோ நாளை (27.10.20) இலங்கைக்கு செல்லவுள்ளார். இந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இந்த பயணத்தின் போதான கலந்துரையாடல்களில் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பயணிக்கும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.  இந்தப் பயணம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை ருவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளதோடு, இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளுக்கான, சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என மைக்பொம்பியோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் இருப்பதாக JVP தெரிவிப்பு…. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் உள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என அவர் கோரியுள்ளார். இலங்கை கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். யுத்தம் மற்றும் ஏனைய அவசரமானவிடயங்களின் போது மாத்திரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விஜயங்களை மேற்கொள்வது வழமை எனக் குறிப்பிட்ட பிமல் ரட்ணாயக்கா மைக்பொம்பியோவின் இந்த விஜயத்தின் போது எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராயப்படும் என கருதுவதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அவசியமான கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது, இலங்கையில் எம்.சி.சி உடன்படிக்கை குறித்த அலுவலகத்தை அமெரிக்கா தொடர்ந்தும் வைத்திருக்கின்றது எனவும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.   https://globaltamilnews.net/2020/152341/  
  • மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் எழரிசி ஓவியமே  
  • 53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன். October 25, 2020 வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாளர்களிடமிருந்தும் அந்த நாடுகளில் பாவனையில் இருக்கும் தீப்பெட்டிகளை கோரிப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாக கொண்டபோதும் அநுராதபுரம் மிகிந்தலையை சொந்த இடமாக கொண்டவர். என்பதனால் 1977 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களிற்கு வழிகாட்டியாக தொழில் புரிந்துள்ளார். இவ்வாறு தொழில் புரியும் காலத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்தில் இருந்து அவர்களது நாட்டின் தீப்பெட்டி ஒன்றை நினைவாக பெற்றுக்கொண்டு அதனை சேகரித்துள்ளார். இந்த நிலையில் இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் உச்சம் பெற்றதோடு முழுமையாக யாழ்ப்பாணம் கோண்டாவிலிலேயே வாழ்கின்றார். இவ்வாறு கோண்டாவிலிற்கு கொண்டுவந்த சகல நாட்டின் தீப்பெட்டிகளையும் பேணிப் பாதுகாக்கும் அதேநேரம் 1995 ஆம் ஆண்டு யாழில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று வன்னியிலும் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த சமயம் வன்னியில் 1997 ஆம் 98 ஆம் ஆண்டு காலத்தில் சாதாரணமாக தீப்பெட்டி 2 ரூபாவாக இருந்தபோதும் தடையின் காரணமாக 15 ரூபா முதல் 20 ரூபா வரை சென்றபோதும் இந்த தீப்பெட்டிகளை பாவனைக்கு எடுக்கவே இல்லை என தனது பழைய நினைவுகளை மீட்டுகின்றார். இவ்வாறு 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரையில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்தபோதும் பல இடப்பெயர்வுகள் , மழை , தண்ணியென அனைத்திலும் அகப்படாது பாதுகாத்த நிலையில் இன்றும் 53 நாடுகளின் தீப்பெட்டிகளை முழுமையாகவும் மேலும் சில தீப்பெட்டிகள் சேதமடைந்த நிலையிலும் பராமரிக்கின்றார். இவ்வாறு பேணிவரும் தீப்பெட்டிகளை ஏதொ ஒரு வகையில் பேணி பராமரிப்பது மட்டுமன்றி இதனை தொடர என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புவதோடு இவற்றினை நீண்டகாலமாக பாதுகாத்து வரும் விடயம் அறிந்த சிலர் ஆச்சரியமாக பார்த்தாலும் மேலும் சிலர் எள்ளி நகையாடியவர்களும் உண்டு என்கின்றார். இவ்வாறு ஓர் வித்தியாசமான சிந்தனையுடன் இருப்பவரிடம் பெயர் , முகவரி , வயதினைக் கேட்டபோது எனது முயற்சி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று விரும்புகின்றேனே அன்றி இதனால் நான் பெயர் எடுக்க விரும்பவில்லை எனது வாழ் நாளில் இழந்தவை அதிகம் இதன் மூலம் எதனையும் பெற விரும்பவில்லை எனத் தெரிவித்ததோடு தீப்பெட்டிகளை நேர்த்தியாக படமாக்குங்கள் ஆனால் என்னை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்ததோடு இது அடுத்த தலைமுறை மாணவர்களிற்கு ஏதோ ஒரு வழியில் பயன்படுமாக இருந்தால் நான் இவ்வளவு காலமும் பாதுகாத்த ஒன்றிற்கு பெறுமதி கிடைத்ததாக கருதுவேன். எனக்கு பிற்காலத்தில் என்னால் சேகரிக்கப்பட்ட இப் பொருட்களை உள்ளூரில் உள்ள ஓர் பொது அருங்காட்சியங்கள் ஒன்றில் அல்லது பொதுவான இடத்தில் பார்வைக்கு உகந்த்தாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை அதற்கும் முயற்சிப்பேன் . என்றார்.   https://globaltamilnews.net/2020/152332/
  • மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!  3 Views மட்டக்களப்பில் மேலும் 16பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் மேலும் 16பேர்  கொரோனா தாக்கத்திற்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாக தெரிவிக்கப்படும் 65பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 11பேர் இனங்காணப்பட்டதுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை மூலம் 16பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. அனைவரையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அநாவசியமாக வெளியில் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது   https://www.ilakku.org/மட்டக்களப்பில்-அதிகரிக்/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.