Jump to content

பாலியல் சுதந்திரம் தரும் நிர்வாண விடுதி கொரோனா மையமாக மாறியது - பிரான்சில் சோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கிரிஸ் போக்மேன்
  • கேப் டி ஏக்டே, தெற்கு பிரான்ஸ்

 

கடந்த சில நாட்களாக பிரான்சில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதியான ஹெரால்ட் மற்றும் கேப் டி ஏக்டேவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

இந்த இரண்டுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை உல்லாசப் போக்கிடமாகும். இயற்கையுடன் ஒன்றி இன்பத்தை அனுபவிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம்.

ஆனால், தற்போது இது அதிகளவில் கொரோனா பரவும் இடமாக மாறி வருகிறது.

இப்பகுதிகளில் எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை அமைத்திருக்கிறார்கள். அங்கு வரும் சுமார் 800 பேரில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

'இங்கு ஏன் வருகிறோம் என்று தெரியும்'

"வில்லேஜ் நேச்சரிஸ்ட்" என்று அழைக்கப்படும் இந்த ரிசார்ட், பாலியல் உறவுக்கான கிளப்கள், சானா எனப்படும் வெப்பம் காய்வதற்கான இடங்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நைட் கிளப்புகள் சூழ இருக்கிறது.

"Village naturiste"
 

வெட்டவெளியில் மரம் செடிகளின் நடுவே பாலுறவு கொள்வோரும் உண்டு.

ஆனால், அங்கு வரும் அனைவரும் பாலுறவு கொள்ள மட்டுமே வருபவர்கள் என்றோ, எல்லோருமே இணைகளை மாற்றிக் கொள்பவர்களோ இல்லை. பலர் அந்த அமைதியான ஊரக சூழலில் தங்கி ரசிக்கவும் அங்கு செல்வதும் உண்டு.

ஆனால், கேப் டி ஏக்டேவுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வருவது வேறு ஒரு காரணத்திற்காக.

கொரோனா வைரஸின் மையமாக மாறிய பிரான்ஸின் நிர்வாண விடுதி
 

"அனைவரும் இங்கு ஒருவருக்கு ஒருவர் இணைந்து நெருக்கமான தொடர்புடனே இருப்பார்கள். அதுவும் நிர்வாணமாக" என அங்கு வந்த தம்பதியினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இவர்கள் அதாவது பாலியல் இணைகளை பரிமாற்றிக் கொள்பவர்கள்.

"நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று நம் அனைவருக்கும் தெரியும். குடும்பத்துடன் செல்ல இந்த கடற்கரை ஓரங்களில் செக்ஸ் கிளப்கள் இல்லாத பல இடங்கள் இருக்கின்றன" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மிதமான கோடைக் காலத்தில் இந்த கிராமத்துக்கு ஒரு நாளில் 45,000 பேர் வருவது உண்டு. பெரும்பாலானவர்கள் பேபிலான், க்யூபிட் அல்லது ஈடன் போன்ற தங்குமிடங்களில் வாடகைக்கு அறைகள் எடுத்து தங்குவார்கள். சிலர் வார இறுதியில் அல்லது ஒரே ஒரு நாளுக்கு மட்டும் வந்து செல்வார்கள்.

கொரோனா வைரஸின் மையமாக மாறிய பிரான்ஸின் நிர்வாண விடுதி
 

ஆனால், இதெல்லாம் கோவிட் 19 பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு.

கொரோனா பரவல்

ஆகஸ்ட் மாத இறுதியில், அந்த கிராமத்தின் ஹோட்டல் ஒன்றில் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அந்த ஹோட்டலின் மாடியில் பார்ட்டி நடந்ததாகவும், சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் பின்னர் அந்த ஹோட்டல் உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

"இங்கு தாக்கம் இரு மடங்கு இருக்கிறது" என்கிறார் "வில்லேஜ் நேச்சரிஸ்ட்" ரிசார்ட்டின் மேலாளர் டேவிட் மசெல்லா.

டேவிட் மசெல்லா.
 
படக்குறிப்பு,

டேவிட் மசெல்லா

"இங்கு வருகை தரும் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள். பெரும்பாலும் நெதர்லாந்து, ஜெர்மனியில் இருந்தும், அதை தொடர்ந்து இத்தாலி மற்றும் பிரிட்டனில் இருந்தும் இங்கு அதிகம் பேர் வருவார்கள்."

"கொரோனா பெருந்தொற்றால் எப்போதும் வரும் வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டு வரவில்லை. இங்கேயும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த கிராமத்தில் மட்டுமே 10,000 கேம்ப் இடங்கள் (வெட்ட வெளியில் கேம்ப் அமைத்து அதில் தங்கிக் கொள்வது), 15,000 படுக்கைகள் உள்ளன. அருகில் இருக்கும் நகரத்தை விட இங்கு மக்கள் தொகை அடர்த்தி ஏழு மடங்கு அதிகம்" என்று அவர் கூறுகிறார்.

உள்ளூர் அதிகாரிகள் என்ன செய்தனர்?

கேப் டி ஏக்டேவில் இருக்கும் நடமாடும் பரிசோதனை மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டும் கொரோனா பாதிப்பு விகிதம், அதனை சுற்றியுள்ள பகுதிகளைவிட நான்கு மடங்கு அதிகம் என பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், யாருக்கும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கை வேண்டிய நிலை இல்லை என்றும் மருத்துவப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

ஏக்டேவின் மற்ற பகுதிகளில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்றவை கட்டாயம்தான். ஆனால், இந்த கிராமத்துக்கு அதுபோன்ற எந்த விதிகளும் ஒத்துவராது.

கொரோனா வைரஸின் மையமாக மாறிய பிரான்ஸின் நிர்வாண விடுதி
 

நான் அங்கு இரண்டு இணையர்களை சந்தித்தேன். அவர்கள் ஆண்டு முழுவதும் அந்த கிராமத்தில்தான் வாழ்கிறார்கள்.

தங்கள் 40களில் இருக்கும் ஜிரோம் மற்றும் நடேகே இருவரும் பாலியல் இணைகளை பரிமாற்றிக் கொள்ளும் கிளப் ஒன்றில் சந்தித்து, சில ஆண்டுகளுக்கு முன் இங்கு குடிபெயர்ந்தார்கள்.

"ஒரே இரவில் இந்த இடம் இப்படி மாறிவிட்டது. நாம் அனைவரும் பல ஆபத்துகளை சந்தித்து இருக்கிறோம். ஆனால், இந்த ஊரடங்கு மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் நலனும் முக்கியமாகப்பட்டது" என்று நடேகே தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் மையமாக மாறிய விடுதி

ஆலன் மற்றும் அவரது மனைவி என் எதிரே எந்த உடையும் இல்லாமல் நிர்வாணமாக வந்து அமர்ந்தார்கள்.

இருவருக்குமே 60 வயதுக்கு மேல் இருக்கும்.

"எங்கள் வயதிற்கு நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். எங்கே செல்கிறோம். யாருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்றெல்லாம் எச்சரிக்கையுடன் பார்க்கிறோம். இளைஞர்கள்தான் துணிந்து அதிக இடர்களை எடுக்கிறார்கள். அது இங்கு மட்டுமல்ல. நாட்டில் எங்கெல்லாம் இளைஞர்கள் அதிகம் கூடுகிறார்களோ, அங்கு தொற்று அதிகமாக இருக்கிறது"

தொற்று பரவல் தொடங்கியதுமே, அப்பகுதியின் மூத்த பிரதிநிதி உடனடியாக கிளப்புகள் மற்றும் பார்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸின் மையமாக மாறிய பிரான்ஸின் நிர்வாண விடுதி
 

அதில் ஒன்று வைக்கி கடற்கரை விடுதி.

"நான் 22 பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டேன். இந்த ஆண்டு அவ்வளவுதான். எங்கள் கிளப், நீச்சல் குள விருந்துகளுக்குப் பெயர் போனது. அதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்" என்கிறார் அதன் இயக்குநர் கரீம் இஸர்டெல்.

இங்கு இருக்கும் மற்றொரு பிரபலமான இடம் லெ கிளாமர் நைட் கிளப். நிர்வாண நடக்கும் நடக்கும் இந்த இடத்தில் சுமார் 1000 பேர் கூடி மகிழ்வார்கள். ஆனால், கடந்த மார்ச் மாதம் இதனை மூட உத்தரவிடப்பட்டது.

கரீம் இஸர்டெல்
 
படக்குறிப்பு,

கரீம் இஸர்டெல்

'யாரும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் இல்லை'

விதவிதமான செக்ஸி ஆடைகள் விற்கும் கடையை அங்கு 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் பிலிப்பி பேரூ.

"உள்ளூர் பொருளாதாரத்தில் எங்கள் வியாபாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. 800 பணியாளர்களில் 300 பேர் இங்கு வேலையிழந்துள்ளனர். என் வியாபாரம் 80 சதவீதம் முடங்கிவிட்டது. இப்படி பாதிக்கப்பட்டது நான் மட்டுமல்ல. ஆண்டின் இந்த பருவத்தில் வழக்கமாக இங்கு 25,000 பேர் இருப்பார்கள். தற்போது இங்கு வெறும் 5000 பேர்தான் இருக்கிறார்கள். யாரும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் இல்லை" என்கிறார் அவர்.

பிலிப்பி பேரூ
 
படக்குறிப்பு,

பிலிப்பி பேரூ

ஆனால், அந்த நோக்கத்தில் அங்கு இருக்கும் பலருக்கு, தங்கள் பாலியல் வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது என்பது போல இல்லை.

பலரும் அங்கு நிர்வாணமாக சுற்றுவதாக என்னிடம் சொன்னார்கள்.

கடற்கரையில், பெண்கள் கழுத்தில் வெறும் சங்கிலி மட்டும் அணிந்து நிர்வாணமாக இருப்பதை பார்க்க முடிந்தது. ஆண்களும் அப்படியே வலம் வந்தார்கள்.

மாலையில் பலரும் சிறு உடைகள் அணிந்து, கடற்கைரையில் இருக்கும் திறந்த வெளி பார்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்கிறார்கள்.

சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள், இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

கிராமத்தில் இருந்து தங்கள் ஊர்களுக்கு திரும்பவர்கள், அங்கு தொற்றை பரப்பாமல் இருக்க, பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிரிஸ் போக்மேன் பிரான்சின் தென் மேற்கு பகுதியில் உள்ள எழுத்தாளர்.https://www.bbc.com/tamil/global-54013069

Link to comment
Share on other sites

எங்கட விசுகர் விடுமுறைக்கு எங்கேயோ போகப் போகிறேன் என்று சொன்னவர் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 17:13, நிழலி said:

எங்கட விசுகர் விடுமுறைக்கு எங்கேயோ போகப் போகிறேன் என்று சொன்னவர் அல்லவா?

நமக்கும் ஒரு எல்லை இருக்கல்லோ 😋 அதை இது தாண்டுவதால்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.