Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

September 6, 2020

IMG_2985-1024x768.jpg

அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06)  காலை இடம்பெற்றது.

இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலாம் தவணை கொடுப்பனவுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். #அனைவருக்கும்வீடு #வேலைத்திட்டம் #யாழ்ப்பாணம் #வருமானம் #அங்கஜன்

IMG_2960-1024x768.jpgIMG_2967-768x1024.jpgIMG_2970-1024x768.jpgIMG_2981-1024x768.jpgIMG_2983-916x1024.jpg

https://globaltamilnews.net/2020/149703/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். இந்தியா வீடு கட்டி கொடுக்கின்றது என்று காலத்துக்கு காலம் சொல்லி ஆசை காட்டினார்கள்.

வெளிநாட்டு உதவி இல்லாமல் அல்லது நல்ல வரும்படி இல்லாமல் சாதாரண நிலை குடும்பங்கள் வீடு கட்டுவது பெரும்பாடு. அனைத்தையும் அடகு வைத்தும், கடன்வாங்கியும் வீடு கட்ட தொடங்கி கடைசியில் வட்டியும் கட்டமுடியாமல் நாளாந்த வாழ்க்கையையும் ஓட்ட முடியாமல் அல்லலுறும் குடும்பங்கள் பல.

அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட பெரிய திட்டங்களை அரசு பாகுபாடின்றி செயல்படுத்துமா பார்ப்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சூழ்ச்சிகளோ கபடஅரசியல் நரித்தனங்கள் மூலம் மக்களை ஏமாற்றாவிடில் எவர் குற்றியும் அரிசி ஆனால் சரி  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

வீட்டிற்காக அவர்ககள் கடனாளிகளாகக் கூடாது...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்கிறார் போல்  தெரிகின்றது.  உளமார செய்தால் வரவேற்பு என்றும் உண்டு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

6 இலட்சத்தில் வீடா..??! கொட்டில் போடவும் காணாதே..??! 

காசைக் கொடுக்காமல்... வீட்டை இவர்களே பூரணமாகக் கட்டி குடியேறக் கூடிய வசதிகளுடன்.. கொடுக்கலாமே..!! 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

Edited by Dash
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

யார்...பெரியவன் என்று,  இரண்டு பேரும்... முறுகல் நிலையில் உள்ளார்கள்.
அங்கஜனுக்கு.... மேலிடத்து செல்வாக்கு, அதிகம் உள்ளதால், 
டக்ளஸ்... பம்மிக் கொண்டு இருக்கிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

6 இலட்சத்தில் வீடா..??! கொட்டில் போடவும் காணாதே..??! 

காசைக் கொடுக்காமல்... வீட்டை இவர்களே பூரணமாகக் கட்டி குடியேறக் கூடிய வசதிகளுடன்.. கொடுக்கலாமே..!! 

இராணுவம் கட்டிக்கொடுக்கும் பரவாயில்லையா

8 hours ago, சுவைப்பிரியன் said:

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

அதுதான் ஆனால் குறைந்த வருவாய் பெறும் குடும்பம் அதிகம் 

அண்மையில் இராணுவம் கட்டிய வீடு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டது 

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்

10 hours ago, MEERA said:

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

முடியாது ஆனால் அடுத்த முயற்சியில் அவர்கள் இறங்கினால் வீடு முழுமையாகும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இராணுவம் கட்டிக்கொடுக்கும் பரவாயில்லையா

மன்னாரில்.. வவுனியாவில்.. திருமலையில்.. நாவற்குழியில்.. சிங்கள மாதிரிக் கிராமங்களை அமைத்து.. வாழக் கூடிய குடிமனைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. 

அப்படி இருக்க தீவகம் உட்பட பல பகுதிகளில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தான வீடமைப்புத் திட்டங்கள் சுவர் எழுந்து கூரையாக முடியாத நிலையில்.. பூண்டும் செடியும் கொடியும் படரும் இடங்களாக உள்ளனவே தவிர.. டக்கிளஸின் அடியாட்கள் வாழும் பகுதிகளில் மட்டும்.. கூரை எழுந்து நிற்கிறது.. மற்றைய இடங்களில் எல்லாம்.. என் கண்கண்ட சாட்சியமாக இதுவே நிலை.

வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கான இந்தத் திட்டத்தில் 6 இலட்சத்தை வீட்டைக் கட்டு என்று கொடுத்தால்.. கூலி யார் கொடுப்பார்.. மின்சார இணைப்பு யார் கொடுப்பார்.. பள்ளக் காணிகளை.. மற்றும் சுற்றயல் காணிகளை திருத்தி அமைக்க யார் கொடுப்பார்...??!

ஆனால்.. இராணுவத்திற்கு கடற்படைக்கு..  நீச்சல் தடாகங்கள்.. மாடி மனைகள்.. பூஞ்சோலைகள்.. விளையாட்டுத்திடல்களுடன் கூடிய பாரிய நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் செலவாகிற பணத்தை.. ஏன் முழுமையான வீட்டுத் திட்டமொன்றை சிங்களவர்களுக்கும் சிங்களப் படைகளுக்கும் அமைத்துக் கொடுப்பது போல்.. தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லை..??! இதனை எது தடுக்கிறது..??! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உறவுகள் எத்தனை பேர் உண்மையாக வீடு கட்டப் போகினம்..தங்களின் பிற தேவைகளுக்கு எடுத்துட்டு மீளவும் ஒன்றுமேயில்லை என்று சொல்ல மாட்டார்களா..?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

இதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உறவுகள் எத்தனை பேர் உண்மையாக வீடு கட்டப் போகினம்..தங்களின் பிற தேவைகளுக்கு எடுத்துட்டு மீளவும் ஒன்றுமேயில்லை என்று சொல்ல மாட்டார்களா..?

இல்லை.அப்படி செய்ய முடியாது.ஒவ்வரு கட்ட வீடு கட்டுமானத்தை பொறுத்து தான் காசு கொடுப்பார்கள்.மேலதிகமாக நீங்கள் ஏதாவது வசதி வீட்டுக்கு செய்தால் அது உரிமையாளரின் செலவு.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 00:37, nedukkalapoovan said:

மன்னாரில்.. வவுனியாவில்.. திருமலையில்.. நாவற்குழியில்.. சிங்கள மாதிரிக் கிராமங்களை அமைத்து.. வாழக் கூடிய குடிமனைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. 

அப்படி இருக்க தீவகம் உட்பட பல பகுதிகளில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தான வீடமைப்புத் திட்டங்கள் சுவர் எழுந்து கூரையாக முடியாத நிலையில்.. பூண்டும் செடியும் கொடியும் படரும் இடங்களாக உள்ளனவே தவிர.. டக்கிளஸின் அடியாட்கள் வாழும் பகுதிகளில் மட்டும்.. கூரை எழுந்து நிற்கிறது.. மற்றைய இடங்களில் எல்லாம்.. என் கண்கண்ட சாட்சியமாக இதுவே நிலை.

வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கான இந்தத் திட்டத்தில் 6 இலட்சத்தை வீட்டைக் கட்டு என்று கொடுத்தால்.. கூலி யார் கொடுப்பார்.. மின்சார இணைப்பு யார் கொடுப்பார்.. பள்ளக் காணிகளை.. மற்றும் சுற்றயல் காணிகளை திருத்தி அமைக்க யார் கொடுப்பார்...??!

ஆனால்.. இராணுவத்திற்கு கடற்படைக்கு..  நீச்சல் தடாகங்கள்.. மாடி மனைகள்.. பூஞ்சோலைகள்.. விளையாட்டுத்திடல்களுடன் கூடிய பாரிய நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் செலவாகிற பணத்தை.. ஏன் முழுமையான வீட்டுத் திட்டமொன்றை சிங்களவர்களுக்கும் சிங்களப் படைகளுக்கும் அமைத்துக் கொடுப்பது போல்.. தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லை..??! இதனை எது தடுக்கிறது..??! 

எது தடுக்கும் யார் தடுப்பார்கள் என நீங்கள் ஊகிக்கிறீர்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எது தடுக்கும் யார் தடுப்பார்கள் என நீங்கள் ஊகிக்கிறீர்கள்

இன்னும் சிங்களவனையும் சிங்கள அடிவருடிகளையும் நம்பி இருப்பது தான் எமது வறுமைக்கு முதன்மைக் காரணம். நீங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்.. இந்தக் கூட்டம்.. எதுவும் செய்யாது. வேடிக்கை மட்டும் பார்க்கும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 22:45, nedukkalapoovan said:

இன்னும் சிங்களவனையும் சிங்கள அடிவருடிகளையும் நம்பி இருப்பது தான் எமது வறுமைக்கு முதன்மைக் காரணம். நீங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்.. இந்தக் கூட்டம்.. எதுவும் செய்யாது. வேடிக்கை மட்டும் பார்க்கும். 

தவறு  கொரானாவால் பாதித்த காலத்தில் வறிய சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 10000 அரசாால் வழங்கி வைக்கப்பட்டது 

அதை கூட கொடுக்க மறுத்த நம்ம சமுர்த்தி ஊழியர்கள் இங்கே உண்டு 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • படித்தத்தைப் பகிர்தல் - அரசஞ் சண்முகனார் & வள்ளல் பாண்டித்துரைத் தேவர்  
  • மன்னார் நானாட்டானில் மற்றொரு தொகுதி தொல்லியல் எச்சங்கள் மீட்பு.!   மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளிக் கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புரதான பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சிறீஸ்கந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வாழ் உயிரினம் சிற்பி வடிவிலானது மற்றும் உலோகத்துண்டுகள், மட்பாண்ட எச்சங்கள் என்பன காணப்பட்டுள்ளதையடுத்து பிரதானமாகக் காணப்பட்ட நான்கு பொருட்களையும் மீட்டு குறித்த தினத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எம். சிறிஸ்கந்தகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பொருட்கள் தொடர்பாக மன்னார் தொல்பொருள் தினைக்களத்திற்கு பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த திணைக்களத்தினர் திங்கட்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் குறித்த பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் அதை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மற்றும் குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார். இதே வேளை நானாட்டான் பிரதேச பகுதியில் கடந்த மாதம் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாணயங்கள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/10/21/18222 டிஸ்கி :  பழைய மன்னார்ஸ்தான் , மகேந்திரன் பல் என்டு ஆரம்பிப்பதற்குள் ஆராய்ச்சிய முடிங்கப்பா ..👍
  • படித்தத்தைப் பகிர்தல் - மழை தந்த புலவர்  
  • யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் – விசாரணைகள் ஆரம்பம்! October 21, 2020   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர். மறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது. இதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட – மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது. இதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின. விசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. எனினும் இன்று  முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.     https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழக-கலைப்ப/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.