Jump to content

தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி? #தமிழர் பெருமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி? #தமிழர் பெருமை

6 செப்டெம்பர் 2020
  • அபர்ணா ராமமூர்த்தி
  • பிபிசி தமிழ்
சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.

adoc-photos / Getty

 

சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.

தேவதாசிகள். இந்த சொல்லின் அர்த்தம் இன்று வேறாக இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக விளங்கும் பரதக் கலைக்கு அவர்கள்தான் முன்னோடிகள்.

தமிழ்நாட்டின் பெருமைமிக்க கலாசாரமாக அறியப்படும் பரதநாட்டியத்தை, இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பலர் இந்த நடனத்தை கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தளவிற்கு தமிழகத்தின் முகமாக இருக்கும் பரதநாட்டியத்தின் தொடக்க வடிவமான சதிர் நடனம் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. 

சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.

சதிர் நடனம், அதன் வரலாறு, இந்த கலை, பரதநாட்டியமாக மாறியது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

 

தேவதாசிகளின் சதிர் நடனம்

 

தேவ என்றால் 'கடவுள்'. தாசி என்பதற்கு அர்த்தம் 'சேவகர்'. இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தேவதாசிகள். 

தேவரடியார்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள், ஆடல், பாடல் என பல கலைகளில் வித்தகர்களாக இருந்தார்கள். இறைவனை திருமணம் செய்து கொள்ளும் இவர்களின் பணி, இறைவனுக்காக மட்டுமே இருக்கும். 

spacer.png

Christopher Pillitz /Getty

இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சாகித்யா, சங்கீத, சாஷ்திரா ஆகிய மூன்றையுமே கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும் அவர்களின் சதிர் நடனம் என்பது கடவுள் வழிபாட்டின் ஒரு வடிவமாக இருந்தது என்கிறார் நாட்டிய ஆய்வாளர் ஆஷிஷ் மோகன் கோகர். 

சதிர் நடனம் குறித்தும், அது பிற்காலத்தில் பரதநாட்டியமாக எவ்வாறு வடிவம் பெற்றது என்பது குறித்தும் பல ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த நூற்றாண்டில்தான் சதிர் நடனம், பரதநாட்டியமாக உறுபெற்றது என்று அவர் கூறுகிறார். 

 

தமிழ் வரலாற்றில் நாட்டியம்

 

தமிழில் நடனக்கலையை நாட்டியம், கூத்து, ஆடல், நர்த்தனம் என்று பல வகைகளாக அழைத்து வந்துள்ளனர்.

சங்கம மருவிய காலத்திலேயே பரதநாட்டிய முறை இருந்தது என்பதை சிலப்பதிகாரம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நூலில் இந்நாட்டிய முறை குறித்த கருத்துகள் மிகுதியாக காணப்படுகின்றன. 

தேவதாசி மரபு கொண்ட சித்தராபதியின் மகளான மாதவி, தனது 5 வயதிலேயே நாட்டியம் கற்க தொடங்கி, பின்னர் 12 வயதில் தலைசிறந்த நடனக்கலைஞராக, காவேரி பூம்பட்டினத்தில் நடந்த இந்திர திருவிழாவில் மன்னர் முன் நடனமாடினார். மனம் மகிழ்ந்து போன சோழ மன்னன் மாதவிக்கு 1008 பொற்காசுகளையும், தலைகோல் பட்டத்தை வழங்கி கௌரவித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 

 

உயர்ந்த நிலையில் இருந்த சதிர் நடனக் கலைஞர்கள்

 

கடவுளுக்கு மட்டுமே சேவை செய்ய தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தேவதாசிகளுக்கு சோழர் காலத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் தரப்பட்டதாக கூறுகிறார் வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன். 

spacer.png

IndiaPictures

"கோவிலில் பணிபுரிந்த இவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். பல கோயில்களுக்கு தானம் செய்திருக்கிறார்கள். எந்த விதத்திலும் அவர் தாழ்வாக நடத்தப்படவில்லை. சோழர் காலத்தில் எந்த சதிர் நடனக்கலைஞரும் மன்னரின் அரண்மனையிலோ, அந்தப்புரத்திலோ ஆடியதாக வரலாற்றில் இல்லை. கவின் கலைகள் அனைத்தும் கோயில்களில் மட்டுமே அரங்கேற்றப்பட்டன. அவர்களுக்கு தலைமை கடவுள் மட்டுமே" என்று அவர் கூறுகிறார்.

"உதாரணமாக தஞ்சை பெரிய கோயில். 400க்கும் மேற்பட்ட தேவதாசிகள் அங்கு இருந்தார்கள். தேவாரம் பாடுபவர்கள் 50 பேர், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் கோயில் கஜானாவில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கோயில் நிர்வாகத்தில் பணிபுரிபவர்களுக்கு அரச கஜானாவில் இருந்து ஊதியம் வழங்கப்படும். அரச கஜானாவில் இருந்து தேவரடியார்களுக்கு நிதி சென்றால், அது மன்னருக்கு அடிமை என்ற பொருள் ஆகிவிடும் என்பதால், அவர்களுக்கு கோயில் கஜானாவில் இருந்து வழங்கப்பட்டது. அதாவது அவர்கள் கடவுளுக்கு மட்டுமே அடிமை என்று அர்த்தம். இவை அனைத்தும் கல்வெட்டுகளில் இருக்கிறது."

10ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல தேவதாசிகளும் செல்வந்தர்களாக இருந்ததற்கான சான்று இருப்பதாக நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷிஷ் மோகன் எழுதியிருக்கிறார்.

முக்கியமாக 9 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையேயான சோழர் காலத்தில் அவர்கள் செல்வ செழிப்பாக இருந்துள்ளனர்.

மன்னர்கள் சிலர் தேவதாசிகளின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, கிராமங்களுக்கு அவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்கள் என்று எழுதியுள்ள ஆஷிஷ், செல்வம் மிகுந்து இருந்த தேவதாசிகள் கோயில் சேவைகளுக்காக தங்க நகைகள், விலக்குகள், தட்டுகள், எல்லாம் வழங்கியது உண்டு என்கிறார். 

"நாயக்க மன்னர்களில் காலத்தில் அவர்கள் ஆடல் மகளிராக மட்டுமில்லை. இன்று எப்படி ராஜீய ரீதியான அதிகாரிகள் நிலை இருக்கிறதோ, அதற்கு நிகரான இடத்தில் இருந்தவர்கள் தேவதாசிகள். அவர்களில் கலை கேளிக்கைக்கானது கிடையாது," என்கிறார் நாட்டியக் கலைஞரும், நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஸ்வர்ணமால்யா. 

சோழ, பாண்டிய காலம் முடிந்து 14 - 15ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து முஸ்லிம் படை தமிழகத்திற்கு வந்தபோது இந்த நிலை மாறியது என்று குறிப்பிடும் குடவாயில் சுப்பிரமணியம், அவர்கள் கோயில்கள் மற்றும் அவற்றின் வளங்களை சூறையாடியதோடு, இந்த நடனக்கலைஞர்களை போகப்பொருளாக பயன்படுத்தினார்கள் என்கிறார். அதைத் தொடர்ந்து வந்த விஜயநகர பேரரசும், இவர்களை சரியாக நடத்தவில்லை என்பதால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார். 

 

ஆதரவை இழந்த சதிர் நடனக் கலைஞர்கள்

 

சதிர் நடனம் என்பது பரதநாட்டியமாக மாறியது குறித்து நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷின் மோகன் கூறுகையில், "தேவதாசிகளின் நடனம் என்பது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கிற்காக இருக்கவில்லை. அவர்களின் நடனம் இறை வழிபாட்டின் ஒருமுறை. கலை, இசை, நடனம் எல்லாம் கோயில்களுக்கானது.

பண்டைய காலத்தில் ஒரு கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு கோயில்களுக்கு உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் அது இருந்தது. அங்கு தேவதாசிகள் நடனம் ஆடுவதை பக்தர்கள் பார்ப்பார்கள். அவர்களுக்கு சம்ஸ்கிருதம், கீர்த்தனை எதுவும் தெரியாது என்றாலும் அவர்கள் அதனை கண்டு களிப்பார்கள். 

கோயில் சமூகத்தில் முக்கிய பங்கு வகித்தது. 

பின்னர் 1880களில் பிரிட்டிஷ் காலத்தில் கோயில்களில் நடனம் ஆடும் வழக்கத்திற்கு தடை விதித்தார்கள். அவர்களின் ஆட்சியில் மன்னர்கள், ஜமீன்தார்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோயில்களும், வளங்களும் பாதிக்கப்பட்டன. அதனால் கோயிலுக்கு சொந்தமான தேவதாசிகளும் நேரடியாக பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் படையால் கிராம பொருளாதாரம் அடிபட கோயில்களிலேயே இருந்து வணங்கி சேவை செய்து கொண்டிருந்தவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்."

spacer.png

Archive Photos / Getty

ஆனால், வடக்கில் இருந்த முஸ்லிம், முகலாய மற்றும் பாரசீக படையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறும் ஆஷீஷ் மோகன், பிரிட்டிஷ் விதித்த தடையே 18,19ஆம் நூற்றாண்டுகளில் தேவதாசிகள் சிதறிப்போக காரணமாக அமைந்ததாக கூறுகிறார். 

"18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, வளங்கள் பொருளாதாரம் சிதைந்து போக, மன்னர்களின் ஆதரவும் இல்லை. அதனால் சிறு கோயில்களால் தேவதாசிகளுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதனால் அவர்களின் கலையும் பாதிப்புக்குள்ளானது. இந்த காரணத்தால் வேறு தொழில் தேடி அவர்கள் பயணிக்க ஆரம்பித்தனர்."

ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட தேவதாசிகள் பலர், பிழைப்பு தேடி மெட்ராஸ், மைசூர் போன்ற பெரும் மாகாணங்களுக்கு செல்லத் தொடங்கினர். 

 

தேவதாசி முறை ஒழிப்பு

 

நெருக்கடி காரணத்தினால் தேவதாசிகள் அப்போதைய மெட்ராசில் விலைமாதர்களாக ஆனார்கள், இல்லை அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றன.

இந்நிலையில், தேவதாசிகள் முறை என்பது பெண்களை முன்னிலைப்படுத்துவது என்பதால், இந்த ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் நடத்தை கேள்விக்குறியாகவே இருந்தது என்று கூறுகிறார் ஸ்வர்ணமால்யா. 

இப்படி இருக்கும்போது 1882ல் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இந்துக் கோயில்களில், பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் முறைக்கு தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி மற்றும் கலாசாரத்தை நிர்வாகத்தில் இருந்து தனியே பிரிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது என்கிறார் ஆஷிஷ் கோக்கர்.

பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சமூக சீர்த்திருத்தவாதிகள், தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். பெண்கள் கோயில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும், கோயில்களில் நடனம் போன்ற கலைகளை வெளிப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா முன்மொழியப்பட்டது. 

spacer.png

Getty Images

 

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)

இதற்கு சில இந்துக்களும் தேவதாசி சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதனால் தற்காலிகமாக எந்த முன்னேற்றமும் காணாத இந்த மசோதாவை 1928ல் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் எம்எல்ஏவான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். 

தனது தாய் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டதே, இந்த சட்டத்தை கொண்டுவர முத்துலட்சுமிக்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படுகிறது. 

1947ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டம் மெட்ராஸில் கொண்டுவரப்பட்டது. 

"கோயில்கள், மத இடங்கள், இந்து கடவுள்களுக்கு முன், கோவில் திருவிழாக்களில் பெண்கள் நடனமாவது சட்டவிரோதம் என அறிவிக்கப்படுகிறது" என்றது அச்சட்டம்.

"இதை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதையும் மீறி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி செய்யும் பெண், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததாக எண்ணப்படும்."

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 35,000 கோயில்களில், பெண் நாட்டிய கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

 

பரதநாட்டியமான சதிர் நடனம்

 

தேவதாசிகள் முறை ஒழிய, நடனக் கலையை காக்க வேண்டும் என்று சில படிப்பறிவு மிக்க புத்திஜீவிகள் முடிவு செய்தனர்.

இந்தியாவின் பாரம்பரிய கலைகள், அறிவியல், தத்துவங்கள் ஆகியவற்றை காக்க முடிவு செய்த அடையாறில் உள்ள தியோசபிகல் சொசைட்டியும் இதில் முக்கிய பங்கு வகித்தது.

ருக்மினி தேவி அருண்டேல் மற்றும் கிருஷ்ண ஐயர் ஆகியோரை குறிப்பிடாமல் பரதநாட்டியம் என்ற ஒரு கலை இன்று இருந்திருக்காது. 

spacer.png

The India Today Group

கடவுள்களுக்கு முன்பு ஆடப்பட்ட நடனக்கலையை இன்று இருக்கும் பரதநாட்டியமாக மாற்றி அமைத்தவர் ருக்மினி தேவி அருண்டேல். 

இதனை மக்களுக்கான கலையாகவும், பொது இடத்தில் ஆடுவதற்கு ஏற்பவும், மாற்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 

தேவதாசி சமூகத்தை சேர்ந்த தஞ்சாவூர் பாலசரஸ்வதி போன்றோரும், இதனை பொதுமக்கள் முன்பு ஆடும் கலையாக்க வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்க, இதுபோன்ற கலைகளை வளர்க்க ருக்மினி, சென்னையில் கலாக்ஷேத்திரா என்ற அமைப்பை தொடங்கினார்.

முத்துலட்சுமியின் தேவதாசி ஒழிப்பு முறையை கடுமையான எதிர்த்த கிருஷ்ண ஐயர், நடனக்கலைக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தனிர்.

1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கிய அவர், இந்த சதிர் நடனத்தை பரதநாட்டியம் என்று பெயர் மாற்ற வேண்டும் என முன்மொழிந்தார். 

இந்த கலையின் பெருமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தேவதாசிகள் என்ற சொல் மரியாதை இழக்க, அதில் இருந்து இக்கலையை மீட்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார். 

spacer.png

The India Today Group

 

1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கினார் கிருஷ்ண ஐயர்

இந்நிலையில், இதற்கான ஆடை, அலங்காரங்கள், அணிகலன்கள், மேடைகள் போன்றவற்றை உட்புகுத்தி பக்தியை பிரதானமாக வைத்து, அரங்கேற்றம் செய்தார் ருக்மினி. கதையோடு நடனம் என்ற அம்சத்தையும் அவர் கொண்டு வந்தார். 

இமேத இருராலுமே, சதிர் நடனக்கலை, பரதநாட்டியமாக மாறி பெரும் வளர்ச்சியை பெற்றது. 

ஆனால், 16-17ஆம் நூற்றாண்டுகளிலேயே சதிர் நடனம் எல்லா தரப்பு மக்களுக்காகவும், எல்லா கலையையும் உள்வாங்கிய பரவலான கலையாக இருந்தது தனது ஆய்வில் தெரிய வந்ததாக ஸ்வர்ணமால்யா கூறுகிறார். அந்தக் கலையின் எச்சம்தான் பரதநாட்டியம் என்கிறார் அவர். 

ஸ்வர்ணமால்யா, விராலிமலை முத்துக்கண்ணம்மாள் என்ற தேவதாசி மரபு பெண்ணிடம் தான் சதிர் நடனத்தை கற்றுக் கொண்டதாக கூறுகிறார். அவரது மாணவர்களுக்கும் இந்த நாட்டியத்தை சதிர் நடனமாகவே கற்றுக்கொடுப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

''அரசாங்கம் தேவரடியார் முறையை ஒழித்துவிட்டது. ஆனால் பரம்பரை பரம்பரையாக கோயில் சேவகம் செய்த எங்களின் நலனில் அக்கறை காட்டாமல் போய்விட்டார்கள். கோயில் சடங்குகளில் இருந்த முக்கியத்துவமும் குறைந்துவிட்டதால், சமூக அந்தஸ்தும் இல்லாமல், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்'' என முத்துக்கண்ணம்மாள் பிபிசி தமிழிடம் அளித்த பேட்டியில் ஒரு முறை தெரிவித்திருந்தார். 

நவீன கால பரத நாட்டியத்திற்கும், சதிர் நடனத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய அவர், ''சதிர் நடனத்தில் நாங்கள் பாடிக்கொண்டே ஆடுவோம். நம் நடனத்திற்கு ஏற்றவாறு நாமே பாடவேண்டும் என்பது அடிப்படை பயிற்சி. ஒரு பாடலை புரிந்துகொண்டு ஆடுவது என்பதைத் தாண்டி, அந்த பாடலே நாமாக மாறிக்கொண்டு, முகபாவங்களைக் கொண்டும், உடல் அசைவுகளைக் கொண்டும் இயல்பாக நாங்கள் ஆடுவோம். பாடிக்கொண்டே ஆடுவது என்பது சதிர் நடனத்தின் முக்கிய அங்கம். சதிர் நடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பரதநாட்டியத்தில் நட்டுவனார் என்ற கலைஞர் பாட, நடனம் ஆடுபவர், முத்திரையுடன் ஆடுவது என்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது,'' என்று விளக்கினார்.

உலகில் அதிகளவில் கற்றுக் கொள்ளப்படும் தனிக்கலையாக பரதநாட்டியம் இருக்கிறது என்கிறார் ஆஷிக்ஷ் ஷோகர். 

சதிர் நடனத்தில் இருந்து உருவெடுத்தாலும், இன்று பரதநாட்டியம் என்றே உலகளவில் இந்த நடனக் கலை அறியப்படுகிறது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 18:50, கிருபன் said:

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)

இதற்கு சில இந்துக்களும் தேவதாசி சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதனால் தற்காலிகமாக எந்த முன்னேற்றமும் காணாத இந்த மசோதாவை 1928ல் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் எம்எல்ஏவான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். 

தனது தாய் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டதே, இந்த சட்டத்தை கொண்டுவர முத்துலட்சுமிக்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படுகிறது. 

1947ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டம் மெட்ராஸில் கொண்டுவரப்பட்டது

“ தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது என்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச்செயல்” என்றும் கூறி போராடியவர் இந்த Dr முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ..

BBC தமிழ் இணையத்தில் நவீன இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட 10 இந்தியப்பெண்களின் கதைகளை இணைத்துள்ளது. இன்றைய தேதியில் 7 பெண்களைப்பற்றிய கதைகளை நீங்கள் வாசிக்கலாம்.. அவர்களில் ஒருவர் இந்த Dr முத்துலட்சுமி ரெட்டி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.