Jump to content

கால்நடைகளை படுகொலை செய்ய தடை விதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கால்நடைகளை படுகொலை செய்வதற்கு தடை விதிக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார்.

ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

.https://www.virakesari.lk/article/89490

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள மாடு ஆடு  பிடித்து அடித்து உண்ணும் கூட்டம் இனி என்ன செய்யப்போறாங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு பிரதானி ஒருவர் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல். உணவுக்காக மாட்டைக் கொல்லுதல் மட்டும்தான் தடையாம். உண்ணத் தடை இல்லையாம். ஆடு கோழி போன்றவற்றைக் கொல்லத் தடை இல்லை என்கிறது பட்சி. 🤥

இறைச்சிப் பிரியர்கள் தங்களைச்  சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இது யார் சொன்னது உங்களுக்கு ?...இந்தியாவில் மாட்டுறைச்சி வெட்டுவதை எப்பவோ தடை செய்து விட்டார்கள் அல்லவா 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிபீர் மூலம் ஆடு மாடுகளை கூட விட்டு வைக்காமல் கொன்றதுகளுக்கும் பரிகாரம் தேடுவினமோ..

ஊரில இடம்பெயர்ந்த மக்கள் விட்டுவிட்டு வந்த கால்நடைகள் காணாமல் போகடிக்கப்பட்டதுக்கு.. ஏதாவது பரிகாரம்..

ஓ.. அதெல்லாம்.. நாறல் வாய் காலம். இது நல்ல வாய் காலம் என்பார்களோ..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடுகளை இறைச்சியாக்கும் தடை சட்டத்தை அமுலாக்குதல் ஒத்திவைப்பு!

Share0
Beef-Cattle-2-960x638.jpg?189db0&189db0

கால்நடைகளை (மாடுகள்) படுகொலை செய்து இறைச்சியாக்குவதை தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

அது தொடர்பில் விரிவான ஆலோசனைகள் நடத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/மாடுகளை-இறைச்சியாக்கும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

இது யார் சொன்னது உங்களுக்கு ?...இந்தியாவில் மாட்டுறைச்சி வெட்டுவதை எப்பவோ தடை செய்து விட்டார்கள் அல்லவா 
 
இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளூர் பாவனைக்கு வெட்டதடை( கேரளா தமிழ்நாட்டில் இல்லை).

ஆனா நாடுமுழுவதும் export எனும் ஏற்றுமதிக்கு மாடுவெட்ட தடை இல்லை.

இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளூர் பாவனைக்கு வெட்டதடை( கேரளா தமிழ்நாட்டில் இல்லை).

ஆனா நாடுமுழுவதும் export எனும் ஏற்றுமதிக்கு மாடுவெட்ட தடை இல்லை.

இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்.

கோசான், இதற்கு நீங்கள் கட்டாயம் ஆதாரத்தை காட்ட வேண்டும். நன்கு கற்றறிந்த உயர்தர பொறியியளாளர்களாக இருக்கும் எனது இந்திய நண்பர்கள் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருமித்த கருத்தாக சொல்வது, இந்தியாவில் மாட்டை கொல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடையில் போய் மாட்டிறைச்சி கேட்டால் சில மாநிலங்களில் மரணதண்டனைக்குரிய குற்றம். இந்தியா நீங்கள் சொல்வது போல, “இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்” ஆக இருக்கும் சாத்தியம் மிக அரிது. பிரேசில் அல்லது நியூசிலாந்து அந்த இடத்தை பல ஆண்டுகளுக்கு முன் கொண்டிருந்ததாக நினைவு. உங்கள் ஆதாரத்தை இணையுங்கள் - நன்றி.

Link to comment
Share on other sites

28 minutes ago, கற்பகதரு said:

நன்கு கற்றறிந்து பொறியிலாளர்களாக இருக்கும் உங்கள் நண்பர்கள் தவறான தகவலை உங்களுக்கு சொல்லியிருக்கின்றார்கள். இந்தியாவில் இன்னும் பல மானிலங்களில் மாட்டு இறைச்சியை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கு. முக்கியமாக தமிழகம், கேரளா போன்ற மானிலங்களில் தாரளமாக Fresh  மாட்டு இறைச்சி வாங்க முடியும். அத்துடன் எந்த மானிலத்திலும் மாட்டு இறைச்சியை கேட்டால் மரண தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறியர்கள் தான் தலித்துகளை மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக / மாட்டை அறுத்து கொன்றதற்காக வெட்டிக் கொன்று இருக்கின்றார்கள் சில இடங்களில்.

அத்துடன் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் எப்போதும் முதல் 3 இடங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.
 
https://www.worldatlas.com/articles/the-world-s-largest-exporters-of-beef.html

https://www.statista.com/chart/19122/biggest-exporters-of-beef/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:

இந்தியர்கள் உண்மை பேசுவார்கள் என நம்புவதைப்போல கொடுமை ......

தாங்கமுடியல.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளூர் பாவனைக்கு வெட்டதடை( கேரளா தமிழ்நாட்டில் இல்லை).

ஆனா நாடுமுழுவதும் export எனும் ஏற்றுமதிக்கு மாடுவெட்ட தடை இல்லை.

இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்.

Below are the 15 countries that exported the highest dollar value worth of beef regardless of whether fresh, chilled or frozen during 2019.

  1. Australia: US$7.6 billion (14.8% of total beef exports)
  2. United States of America: $6.9 billion (13.4%)
  3. Brazil: $6.5 billion (12.6%)
  4. Netherlands: $3.2 billion (6.1%)
  5. India: $3.1 billion (6%)
  6. Argentina: $3.1 billion (6%)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நன்கு கற்றறிந்து பொறியிலாளர்களாக இருக்கும் உங்கள் நண்பர்கள் தவறான தகவலை உங்களுக்கு சொல்லியிருக்கின்றார்கள். இந்தியாவில் இன்னும் பல மானிலங்களில் மாட்டு இறைச்சியை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கு. முக்கியமாக தமிழகம், கேரளா போன்ற மானிலங்களில் தாரளமாக Fresh  மாட்டு இறைச்சி வாங்க முடியும். அத்துடன் எந்த மானிலத்திலும் மாட்டு இறைச்சியை கேட்டால் மரண தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறியர்கள் தான் தலித்துகளை மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக / மாட்டை அறுத்து கொன்றதற்காக வெட்டிக் கொன்று இருக்கின்றார்கள் சில இடங்களில்.

அத்துடன் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் எப்போதும் முதல் 3 இடங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.
 
https://www.worldatlas.com/articles/the-world-s-largest-exporters-of-beef.html

https://www.statista.com/chart/19122/biggest-exporters-of-beef/

அத்துடன் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் எப்போதும் முதல் 3 இடங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.
இதுதான் உண்மை

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளூர் பாவனைக்கு வெட்டதடை( கேரளா தமிழ்நாட்டில் இல்லை).

ஆனா நாடுமுழுவதும் export எனும் ஏற்றுமதிக்கு மாடுவெட்ட தடை இல்லை.

இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்.

29 minutes ago, சுவைப்பிரியன் said:

அத்துடன் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் எப்போதும் முதல் 3 இடங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.
இதுதான் உண்மை

India is an equally large global beef exporter, exporting 1,850,000 metric tons in 2016. The country ranks fifth globally in terms of beef production and seventh in domestic consumption. Despite a ban on cow slaughter, as the animal is considered sacred in the Hindu religion, the country's export figures have remained high due to water buffalo meat, also known as carabeef. Carabeef constitutes the greatest portion of the beef trade in India, enabling India to become the world's second largest exporter, accounting for nearly 20% of world beef exports.

https://www.worldatlas.com/articles/the-world-s-largest-exporters-of-beef.html

இந்தியா ஏற்றுமதி செய்வது எருமை இறைச்சி. அதற்கு இந்தியாவில் தடை இல்லை.

19122.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

கோசான், இதற்கு நீங்கள் கட்டாயம் ஆதாரத்தை காட்ட வேண்டும். நன்கு கற்றறிந்த உயர்தர பொறியியளாளர்களாக இருக்கும் எனது இந்திய நண்பர்கள் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருமித்த கருத்தாக சொல்வது, இந்தியாவில் மாட்டை கொல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடையில் போய் மாட்டிறைச்சி கேட்டால் சில மாநிலங்களில் மரணதண்டனைக்குரிய குற்றம். இந்தியா நீங்கள் சொல்வது போல, “இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்” ஆக இருக்கும் சாத்தியம் மிக அரிது. பிரேசில் அல்லது நியூசிலாந்து அந்த இடத்தை பல ஆண்டுகளுக்கு முன் கொண்டிருந்ததாக நினைவு. உங்கள் ஆதாரத்தை இணையுங்கள் - நன்றி.

கண்ணே, மணியே, கற்பகமே,

இது ஜோக்கா இல்ல சீரியசா என்று கூட தெரியாத அளவுக்கு சுத்தல்ல விடுறீங்களே ராசா இது நியாயமா😀

சரிதான் அடுத்து, நிழலி,எபொத , தொடர்ந்து நீங்கள் எல்லாரும் சீரியசாவே எழுதியுள்ளதால் நானும் சீரியசாவே பதில் போடுறேன் (எல்லாரும் கூட்டமா சேர்ந்து என்னை கலாய்கிறாங்களோ😀).

நம்பர் 1 எண்டது தவறுதான் நம்பர் 3 தான் சரி (அப்பாடா).

மிச்சம் எல்லாம் நான் எழுதினது சரிதானே?

தமிழ் நாட்டில் கிட்டடில சாப்பிட்ட பீப் சுக்கா இப்பவும் நாக்கில உறைக்குதே?

மரண தண்டனை குற்றம்? அதுவும் கடைல போய் கேட்டதுக்கே🤣

நான் கேள்விபட்டவரை பீப் என்ற நினைத்தாலே சிரச்சேதமாம்🤪

பிகு: என்னமோ போங்கோ எது ஜோக் எது சீரியஸ் எண்டு தெரியாம குழப்ப்பி அடிச்சு இப்படி தனியா புலம்ப விடுறது நியாயமில்ல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

முட்டையில மசிர் பிடுங்க வெளிக்கிட்டா(அது யார் யார் பிடுங்கினதெண்டு எண்டு நான் சொல்லப் போவதில்லை. தொப்பி யாருக்கெல்லாம் அளவோ அவங்கள் போட்டுக் கொள்ளலாம் 😜) தலைய பிக்கவேண்டித்தான் வரும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளூர் பாவனைக்கு வெட்டதடை( கேரளா தமிழ்நாட்டில் இல்லை).

ஆனா நாடுமுழுவதும் export எனும் ஏற்றுமதிக்கு மாடுவெட்ட தடை இல்லை.

இந்தியாதான் உலகின் நம்பர்1 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்.

நன்றி ...புது செய்தி எனக்கு 

Link to comment
Share on other sites

38 minutes ago, goshan_che said:

கண்ணே, மணியே, கற்பகமே,

இது ஜோக்கா இல்ல சீரியசா என்று கூட தெரியாத அளவுக்கு சுத்தல்ல விடுறீங்களே ராசா இது நியாயமா😀

சரிதான் அடுத்து, நிழலி,எபொத , தொடர்ந்து நீங்கள் எல்லாரும் சீரியசாவே எழுதியுள்ளதால் நானும் சீரியசாவே பதில் போடுறேன் (எல்லாரும் கூட்டமா சேர்ந்து என்னை கலாய்கிறாங்களோ😀).

நம்பர் 1 எண்டது தவறுதான் நம்பர் 3 தான் சரி (அப்பாடா).

மிச்சம் எல்லாம் நான் எழுதினது சரிதானே?

தமிழ் நாட்டில் கிட்டடில சாப்பிட்ட பீப் சுக்கா இப்பவும் நாக்கில உறைக்குதே?

மரண தண்டனை குற்றம்? அதுவும் கடைல போய் கேட்டதுக்கே🤣

நான் கேள்விபட்டவரை பீப் என்ற நினைத்தாலே சிரச்சேதமாம்🤪

பிகு: என்னமோ போங்கோ எது ஜோக் எது சீரியஸ் எண்டு தெரியாம குழப்ப்பி அடிச்சு இப்படி தனியா புலம்ப விடுறது நியாயமில்ல🤣.

எருமை இறைச்சி நல்ல சுவையானது தான். வட அமெரிக்காவில் மாட்டிறைச்சியை விட பல மடங்கு விலையானது எருமை இறைச்சி. 

வன்னியில் தொங்குமானும் சாப்பிட்டு “நல்ல மானிறைச்சி” என்று புழகாங்கிதம் அடைந்திருப்பீர்களே?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

முட்டையில மசிர் பிடுங்க வெளிக்கிட்டா(அது யார் யார் பிடுங்கினதெண்டு எண்டு நான் சொல்லப் போவதில்லை. தொப்பி யாருக்கெல்லாம் அளவோ அவங்கள் போட்டுக் கொள்ளலாம் 😜) தலைய பிக்கவேண்டித்தான் வரும் 😂

இன்னும் பீப் பிரச்சனையே முடியல இதுக்க முட்டை வேறயா🤣

39 minutes ago, ரதி said:

நன்றி ...புது செய்தி எனக்கு 

நன்றி அக்காச்சி. 

11 minutes ago, கற்பகதரு said:

எருமை இறைச்சி நல்ல சுவையானது தான். வட அமெரிக்காவில் மாட்டிறைச்சியை விட பல மடங்கு விலையானது எருமை இறைச்சி. 

வன்னியில் தொங்குமானும் சாப்பிட்டு “நல்ல மானிறைச்சி” என்று புழகாங்கிதம் அடைந்திருப்பீர்களே?😂

எனக்கு இறைச்சி எண்டு பேப்ர்ல எழுதி வச்சாலே 2 பிளேட் சாப்பிடுவன். வன்னியில் தொங்குமான் ( ஆன்சநேயா மன்னிப்பாயாக), கலைமான் (மரை) எல்லாம் சாப்பிட்டு இருக்கன். ஆனால் சீமான் (அடதாங்க ஆமை) மட்டும் சாப்பிடவே இல்லை.

பிகு: மக்களே ஒரு நகைசுவைக்காக எழுதினது, ஆமை இறைச்சி பற்றி எழுதி திரியை திசை திருப்பும் எண்ணம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வௌவால் சாப்பிட்டு இருக்கிறீங்களா .??

கொக்கு இறைச்சி மாதிரி இருக்கும்.

பிறகு கொக்கே சாப்பிடவில்லை என்று சொல்லக்கூடாது அழுதிடுவேன்.🤣

உக்கிளானும் நல்லா இருக்கும். என்ன பழைய கதைகள் சொல்லி நாக்கில் எச்சில் வந்ததது தான் மிச்சம். நான் டயட்டில் இருக்கிறேனாக்கும் 🤣

கொஞ்சம் பொறுங்கோ தலதா மாளிகை அடிச்ச படம் போகுது பார்த்திட்டு வாறன் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, முதல்வன் said:

🤣

வெளால் பிடிக்க வலை போடுறவரை சின்னதில் விடுப்பு பார்திருக்கன். தொய்வுக்கு நல்லம் என வீட்டில் சொல்வார்கள்.

கொக்கு இல்லை ஆனல் காடை இந்தியாவில் சாப்பிட்டேன். 

அதென்ன உக்கிளான்? எனக்கு குப்பிளாந்தான் தெரியும்🤣
 
இப்ப இதை சாபிட்டு டயட் இருக்குறதானே பேமஸ்? பேலியோ டயட் எண்டு கிலோ கணக்கில இறைச்சிய சாப்பிட்டு, ஸ்டோன் கணக்கில வெயிட் குறைக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சருகுமான் எண்டும் சொல்லுவினம். உக்கிழான் இறைச்சி அந்த மாதிரி இருக்கும். 

🤣🤣🤣

1589288322.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முதல்வன் said:

சருகுமான் எண்டும் சொல்லுவினம். உக்கிழான் இறைச்சி அந்த மாதிரி இருக்கும். 

🤣🤣🤣

1589288322.jpg

நன்றி.

பாதி அரிய வகை உயிரினம் உங்கட வயித்துள்ளதான் போல 🤣

அடுத்த முறை போகும் போது தேடிப் பாப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுக் கதை…

இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. இது குறைந்த அளவிலான கணக்குதான்.

ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுப்பது நிறுத்தப்பட்டால் (5000 X 30) 150,000 மாடுகள் மாதாந்தம் அறுக்கப்படாமல் மிஞ்ச ஆரம்பிக்கும். ஒரு வருடத்திற்கு இதனால் மாடுகளின் எண்ணிக்கை 150,000 X 12 = 18000000 இனால் அதிகரிக்கும்.

சுமார் பத்து வருடங்களுக்கு மாடுகளை அறுக்காவிட்டால் ஒரு கோடியே என்பது இலட்சமாக (18000000) மாடுகள் பெருகும். அறுக்கப்படாத மாடுகள் ஈன்றெடுக்கும் குட்டிகளையும் கணக்கெடுத்தால் பத்து வருடத்தில் ஒரு இலங்கைப் பிரஜைக்கு ஒரு மாடு எனும் அளவுக்கு மாடுகள் பெருகும்.

முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெறுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் அதிகம் குட்டி ஈனும் மாடுகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய நேரிடலாம்.

உணவு, தண்ணீர் தட்டுப்பாடு:

தண்ணீர் தட்டுப்பாட்டின் விபரீதத்தை இலங்கை மக்கள் அண்மையில் ஏற்பட்ட கோடையில் அறிந்திருப்பர். மனிதர்களின் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆறு, குளம் எல்லாம் வற்றி வரண்டு போனது. மாடுகள் அறுப்பு தடுக்கப்பட்டால் இது உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டை பாரிய அளவில் ஏற்படுத்தும்.

உதாரணமாக ஒரு மாடு சுமாராக ஒரு நாளைக்கு 5 லீட்டர் தண்ணீர் குடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வழமையாக அறுக்கப்படும் 5000 மாடுகள் அறுக்கப்படாததினால் (5000 X 5 = 25000) லீட்டர் தண்ணீர் மேலதிகமாக செலவாகும். அடுத்த நாளும் மாடு அறுக்கப்படாததினால் மேலதிகமாக இன்னும் தண்ணீரின் அளவு 50000 லீட்டராக அதிகரிக்கும். அதற்கு அடுத்த நாளும் அறுக்கப்படாததினால் 75000 லீட்டராக அது உயரும். ஒரு நாளைக்கு 25000 லீட்டர் வீதம் அதிகரித்துச் சென்றால் மாதம் வருடமாக மாறும் போது கோடான கோடி லீட்டர் தண்ணீர் மேலதிமாக செலவாக மாறும். இதே வேளை கோடையின் கோரமுகம் தென்பட்டால் தண்ணீருக்காக மக்கள் மாட்டோடு போராட வேண்டி ஏற்படலாம்.

ஒரு மாடு ஒரு நாளைக்கு 1Kg புல்லு உண்பதாக வைத்துக் கொண்டால் தினமும் மாடு அறுக்கப்படாமல் விடப்படும் போது ஒரு நாளைக்கு 5000kg புல்லு இரண்டாம் நாள் 10000kg புல்லு, மூன்றாம் நாள் 15000kg புல்லு.. என கோடிக்கணக்கான அளவில் புல் தேவைப்படும்.

இதற்கான சரியான மேய்ச்சல் நிலங்கள் இல்லாத போது மக்களது கைகளில் உள்ள பொதிகளை மாடுகள் பறித்து உண்ணும் நிலை ஏற்படலாம். ஒரு வருடம் மாடு அறுப்பது நிறுத்தப்பட்டாலே இந்த விபரீதத்தை எம்மால் கண்களால் காணலாம்.

உணவுக்காக மாடுகள் கடைகளை நாடும் விளைச்சல் நிலங்களை அழிக்கும் பாதையில் மரக்கறி போன்ற பொருட்களை கைகளில் கொண்டு செல்லவே முடியாத நிலை உருவாகிவிடும்.

பாதிக்கப்படும் சிங்கள வியாபாரிகள்:

முஸ்லிம்கள் பெரும்பாலும் மாடுகளை வளர்ப்பதில்லை. இறைச்சிக்கடை வியாபாரிகள் தாம் அறுப்பதற்கான மாடுகளை சிங்களவர்களிடமிருந்துதான் பெரும்பாலும் கொள்வனவு செய்கின்றனர். நாட்டில் ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுக்கப்பட்டால் ஆகக் குறைந்தது அதில் 2500 மாடுகள் சிங்களவர்களிடமிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றது. மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் சிங்கள மாட்டு வியாபாரிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என்பது உறுதியே!

உதாரணமாக, சிங்கள வியாபாரி களிடமிருந்து ஒரு மாடு 20,000 ரூபாவுக்கு வாங்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது மிகக் குறைந்த அளவிலான கணக்குத்தான். ஒரு நாளைக்கு 2500 மாடுகள் சிங்கள சகோதரர்களிடமிருந்து வாங்கப் படுகின்றது. இதனால் 2500 X 20000 = 5000000 வருமானத்தை சிங்கள மாட்டு வியாபாரிகள் இழப்பர். இது ஒரு மாத்தில் 5000000 X 30 = 15000000 இழப்பாக உயரும். வருடமாகும் போது இது 18000000000 ஆக உயர்ந்து செல்லும். இது சிங்கள சகோதர சமூகத்தைப் பொறுத்தவரை பெரும் இழப்பாகவே அமையும்.

அரசின் இழப்பு:

மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் அரசுக்கு அது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இலங்கையில் 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றது என்றால் குறைந்தது 2500 இறைச்சிக் கடைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு இறைச்சிக் கடை மூலம் அண்ணளவாக அரசுக்கு மாதம் 30000 வருமானம் கிடைக்கின்றது. அப்படியென்றால் (2500 X 30000 = 75000000) சுமார் ஏழரை கோடி ரூபாய் மாதாந்தம் நஷ்டமாக மாறும். இது வருடமாகும் போது 900000000 ஆக உயரும்.

இது மட்டுமன்றி மாடு அறுப்பதைத் தடை செய்யும் அரசு வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யப் போகின்றதாம். முஸ்லிம்கள் மாடு அறுப்பது பாவம், வெளிநாட்டுக் கம்பனிகள் அறுப்பது பாவம் இல்லை போலும். இந்த மாடு அறுப்பு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் வெளிநாட்டுக் கம்பனிகளிடம் இதற்காகக் கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.

உள்நாட்டில் மாடு தாராளமாக இருக்க வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வது என்பது நாட்டு நலனிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் ஆர்வம் உள்ள அரசு செய்யும் வேலையாக இருக்காது. முதலில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

இவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் பெரிதும் கொள்வனவு செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது ஹலால் முறையில் அறுக்கப்பட்டதா? அல்லது கொல்லப்பட்டதா? என்பதில் சந்தேகம் இருக்கின்றது. அந்த சந்தேகம் தீர வேண்டுமானால் இறக்குமதி செய்யப்படும்

நாட்டிலிருந்து ஹலால் சான்றிதழ் பெற நேரிடும். எனவே, இவர்கள் இலஞ்சம் வாங்கிய கம்பனிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப அதற்கு ஹலால் சான்றிதழை அங்கீகரிப்பார்கள் போலும்.

வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படும் போது அதை அதிகம் வாங்கப் போவது சிங்களமக்களேயாவர். இதனால் சிங்கள மக்களே பாதிப்படையப் போகின்றனர். விலையேற்றம், பி(க)ரஸ்ஸான மாமிசம் கிடைக்காமை போன்ற பல்வகையான பிரச்சினைகளுக்கு சிங்கள சமூகத்தை உள்ளாக்கப் போகின்றனர்.

பாதிக்கப்படும் கால்நடை வளர்ப்பாளர்கள்:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சிங்கள-தமிழ் மக்களே கால்நடை வளர்ப்பதில் அதிகம் ஈடுபடுகின்றனர். கால்நடைகளை வளர்ப்பவர்கள் வெறுமனே பாலுக்கு மட்டும் ஆடு, மாடுகளை வளர்ப்பதில்லை. மாமிசத்திற்கும் சேர்த்தே வளர்க்கின்றனர். மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் பசு பால் தரும். அதை வளர்ப்பதில் ஒரு வருவாய் இருக்கின்றது. மாறாக காளை மாட்டை வைத்து என்ன செய்வது?

ஆரம்ப காலத்தைப் போல் வண்டி இழுப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு, பொதி சுமப்பதற்கு மாடுகள் பயன்படுத்தப் படுவதில்லை. இவற்றை இன்று இயந்திரங்களே செய்கின்றன. காளை மாட்டில் பாலும் வராதுÉ அதை வைத்து வேலையும் வாங்க முடியாதுÉ அறுப்பதற்கு விற்கவும் முடியாது எனும்போது காளை மாட்டை தீணி போட்டு வளர்க்க மாடு வளர்க்கும் ஏழை விவசாயிக்கு என்ன தேவை இருக்கின்றது? எனவே, காளை மாடுகள் விரட்டிவிடப்படும். இவற்றைப் பராமரிக்க அரசு பெரிய செலவை ஏற்க நேரிடும்.

அடுத்து பசு பால் தரும். ஆனால், தொடர்ந்து தந்து கொண்டே இருக்காது. அது பால் தரும் பருவத்தைத் தாண்டிய பின்னர் அதை உரிமையாளர்கள் மாமிசத்திற்காக விற்று ஆதாயம் அடைகின்றனர். இதைத் தடுத்துவிட்டால் பால் தந்த பசு பால் தராத வயதை அடைந்துவிட்டால் சும்மா வைத்து அதை யாராவது வீணாக சிரமப்பட்டு உணவு கொடுத்து கவனித்துக் கொண்டிருப்பார்களா? எனவே, பசுக்கள் விரட்டிவிடப்படும். அவ்வாறு விரட்டப்படும் பசுக்களை அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மாடு அறுப்புத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் பெரிதும் நஷ்டமடைவார்கள். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது சிங்கள மக்களேயாவர்.

அழியப்போகும் மாட்டினம்:

மாடு அறுப்புத் தடை என்பது மாடுகளுக்கு எதிரான சட்டமாகும். இதனால் மாடுகள் அழியப் போகின்றன. எந்த இனம் அளவுக்கு மீறி வளர்கின்றதோ அந்த இனம் தானாகவே அழியும். மாடுகள் இலட்சக் கணக்கில் பெருக ஆரம்பித்துவிட்டால் உணவுக்கான போட்டி ஏற்படும். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனால் மாடுகள் பட்டினி கிடந்து சாகும் நிலை உருவாகும். இது நாமே சட்டமியற்றி அவற்றை கொலை செய்யும் மிருக வதைக்குள் அல்லவா அடங்குகின்றது?

அமெரிக்காவில் ஒரு மான்கள் சரணாலயம் இருந்தது. அங்கிருந்த வேட்டை மிருகங்கள் மான்கள் நலன் கருதி அப்புறப் படுத்தப்பட்டன. இதனால் மான்கள் பெருக ஆரம்பித்தன. பின்னர் மான்கள் ஒரு உச்சகட்டத்தை அடைந்து உணவுத் தட்டுப்பாட்டால் அழிய ஆரம்பித்தன. எனவே, மீண்டும் அந்தப் பகுதியில் வேட்டை மிருகங்களை விடவேண்டியேற்பட்டது. இதே நிலை இங்கும் ஏற்படும். இறைவன் படைப்பில் சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றால் இயற்கைத் தன்மை பேணப்பட வேண்டும்.

ஆடு, மாடு போன்றவற்றை இறைவன் மனிதனின் உணவுத் தேவைக்காகவே படைத்துள்ளான். மனிதன் உண்ணத்தக்க இந்தப் பிராணிகள் குறித்த காலம் இன்றி எல்லாக் காலங்களிலும் குட்டி ஈனும் தன்மை கொண்டதாகும். நாய் மாட்டை விட அதிக குட்டி போட்டாலும் உணவுக்காக நாய் கொல்லப்படா விட்டாலும் நாட்டில் நாய்களின் எண்ணிக்கையை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதுதான் இறைவனின் படைப்பின் இரகசியமாகும். மாடுகள் அறுக்கப் படாவிட்டால் தொடர்ந்து குட்டி போடும் இந்த இனம் பெருகி இறுதியில் தானாக அழிய ஆரம்பிக்கும். அப்போதாவது நாட்டு நலனில் அக்கறை இல்லாது மாட்டு நலனில் அக்கறை இருப்பது போல் மோட்டு வாதம் புரியும் குருட்டுக் கும்பலுக்கு உண்மை புரியுமா என்று பார்க்கலாம்.

ஆக்கம்
இஸ்மாயில் சலபி

http://www.ilakku.org/மாட்டுக்-கதை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

மாட்டுக் கதை…

இவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் பெரிதும் கொள்வனவு செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது ஹலால் முறையில் அறுக்கப்பட்டதா? அல்லது கொல்லப்பட்டதா? என்பதில் சந்தேகம் இருக்கின்றது. அந்த சந்தேகம் தீர வேண்டுமானால் இறக்குமதி செய்யப்படும்

நாட்டிலிருந்து ஹலால் சான்றிதழ் பெற நேரிடும். எனவே, இவர்கள் இலஞ்சம் வாங்கிய கம்பனிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப அதற்கு ஹலால் சான்றிதழை அங்கீகரிப்பார்கள் போலும்.

வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படும் போது அதை அதிகம் வாங்கப் போவது சிங்களமக்களேயாவர். இதனால் சிங்கள மக்களே பாதிப்படையப் போகின்றனர். விலையேற்றம், பி(க)ரஸ்ஸான மாமிசம் கிடைக்காமை போன்ற பல்வகையான பிரச்சினைகளுக்கு சிங்கள சமூகத்தை உள்ளாக்கப் போகின்றனர்.

ஆக்கம்
இஸ்மாயில் சலபி

மாடு... சாரி,  ஆடு  நனையுதெண்டு,  ஓநாய்... அழுத,   கதை இதுதான்.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.