Jump to content

குடி குடியை கூட்டும் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலை.... சம்பளம்...  பில் கட்டுதல்   என்று ஓடும் வாழ்க்கையில் அப்பப்போ 
ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாங்கி உண்டு உடலை கெடுத்து 
ஓடி களைத்து வீடு வந்து ஒரு குளிப்பு குளித்து விட்டு கண்ணாடியை பார்க்கும்போது 
என்ன வாழ்கையாடா? என்று ஒரு எண்ணம் தோன்றும். அந்த மனதை தேற்றுவதுக்கு 
ஒரு கிளாஸை கண்கள் தேடும் ....... அப்போது அந்த கிளாசில் என்ன ஊற்றுவது என்ற 
குழப்பம் எல்லோருக்கும் இருப்பதுதான் .... ஊற்றுவது தரம் மிக்கதாகவும் ... உழைத்த காசை 
கரைத்து விடாமலும் பார்க்க வேண்டும் என்றால் .............  அதற்கு உகந்தது இந்த ஓல்ட் பிட்ஸ்க்ரால்ட் 

இது முதன் முதலில் 1870இல் அறிமுகமானது ... இது ப்ரேமிமும் பார்போர்ன் வகையை சார்ந்தது 
மதுக்கடைகளின் கீழ் தட்டுகளில் விலை குறைந்த வரிசைகளில் காணாலாம் என்றாலும் 
உடலுக்கு எந்த உபாதைகளும் தாராது .. தலையிடி வயிற்று எரிச்சல் போன்ற உணர்வுகள் இருக்காது.

பழைய காலத்து கிளியோபாட்ராவின் அழகும் அறிவும் மிடுக்கும் எண்ணத்தில் தோன்றவைக்கும் 
ஜூலியஸ் சீசர் விரும்பினால் எந்த பெண்ணையும் அடையலாம் ... ஆனால் எத்தனை பெண்கள் வந்தாலும் 
இவளை போல் ஒருத்தி இந்த உலகில் இல்லை என்ற எண்ணம் அவனுக்கு வாராத மாதிரி எனது அழகை அவன் முன்  படைக்க வேண்டும் என்று கிளியோபெட்ரா எண்ணி ... அப்படி என்னதான் செய்தாள்? என்று மனம் ஜூலியஸ் சீரின்  காலத்துக்கு சென்றிருக்கும். 
Old Fitzgerald


அமெரிக்க கெண்டச்சி பார்போன் விஸ்க்கி 
நாக்கில் நிற்கும் போது தேன்னின் சுவையும் தொன்டைக்குள் இறங்கும்போது வனில்லாவின் சுவையும் 
கிளாஸை கீழே வைக்கும்போது அது அடைத்து வைத்திருந்த ஓக் மரத்தின் பீப்பாக்களின் மணமும் தோன்றும்

Link to comment
Share on other sites

11 minutes ago, Maruthankerny said:

வேலை.... சம்பளம்...  பில் கட்டுதல்   என்று ஓடும் வாழ்க்கையில் அப்பப்போ 
ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாங்கி உண்டு உடலை கெடுத்து 
ஓடி களைத்து வீடு வந்து ஒரு குளிப்பு குளித்து விட்டு கண்ணாடியை பார்க்கும்போது 
என்ன வாழ்கையாடா? என்று ஒரு எண்ணம் தோன்றும். அந்த மனதை தேற்றுவதுக்கு 
ஒரு கிளாஸை கண்கள் தேடும் ....... அப்போது அந்த கிளாசில் என்ன ஊற்றுவது என்ற 
குழப்பம் எல்லோருக்கும் இருப்பதுதான் .... ஊற்றுவது தரம் மிக்கதாகவும் ... உழைத்த காசை 
கரைத்து விடாமலும் பார்க்க வேண்டும் என்றால் .............  அதற்கு உகந்தது இந்த ஓல்ட் பிட்ஸ்க்ரால்ட் 

இது முதன் முதலில் 1870இல் அறிமுகமானது ... இது ப்ரேமிமும் பார்போர்ன் வகையை சார்ந்தது 
மதுக்கடைகளின் கீழ் தட்டுகளில் விலை குறைந்த வரிசைகளில் காணாலாம் என்றாலும் 
உடலுக்கு எந்த உபாதைகளும் தாராது .. தலையிடி வயிற்று எரிச்சல் போன்ற உணர்வுகள் இருக்காது.

பழைய காலத்து கிளியோபாட்ராவின் அழகும் அறிவும் மிடுக்கும் எண்ணத்தில் தோன்றவைக்கும் 
ஜூலியஸ் சீசர் விரும்பினால் எந்த பெண்ணையும் அடையலாம் ... ஆனால் எத்தனை பெண்கள் வந்தாலும் 
இவளை போல் ஒருத்தி இந்த உலகில் இல்லை என்ற எண்ணம் அவனுக்கு வாராத மாதிரி எனது அழகை அவன் முன்  படைக்க வேண்டும் என்று கிளியோபெட்ரா எண்ணி ... அப்படி என்னதான் செய்தாள்? என்று மனம் ஜூலியஸ் சீரின்  காலத்துக்கு சென்றிருக்கும். 
Old Fitzgerald


அமெரிக்க கெண்டச்சி பார்போன் விஸ்க்கி 
நாக்கில் நிற்கும் போது தேன்னின் சுவையும் தொன்டைக்குள் இறங்கும்போது வனில்லாவின் சுவையும் 
கிளாஸை கீழே வைக்கும்போது அது அடைத்து வைத்திருந்த ஓக் மரத்தின் பீப்பாக்களின் மணமும் தோன்றும்

அதற்காக இதை கிளாசில் ஊற்றிவிட்டு பில் கட்ட‍க்கூடாது.  இதை கிளாசில் ஊற்றி சற்று நேரத்தில் 200  பிராங் பில் 20 பிராங் பில் மாதிரி தெரியும்.   20 பிராங் என்று நினைத்து கொண்டு  ebank  ல் Payment order  கொடுத்து விட்டு அடுத்த நாள் கிளாசின் வீரியம் குறைந்த பின்( முறிந்தபின்)  வங்கி கூற்றை பார்க்க 200 பிராங்  வங்கியில் இருந்து கழிக்கபட்டிருக்கும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

அதற்காக இதை கிளாசில் ஊற்றிவிட்டு பில் கட்ட‍க்கூடாது.  இதை கிளாசில் ஊற்றி சற்று நேரத்தில் 200  பிராங் பில் 20 பிராங் பில் மாதிரி தெரியும்.   20 பிராங் என்று நினைத்து கொண்டு  ebank  ல் Payment order  கொடுத்து விட்டு அடுத்த நாள் கிளாசின் வீரியம் குறைந்த பின்( முறிந்தபின்)  வங்கி கூற்றை பார்க்க 200 பிராங்  வங்கியில் இருந்து கழிக்கபட்டிருக்கும். 😀

கிண்ணத்தை ஏந்தியதும் ....
எண்ணத்தில் நீந்தவேண்டும் ....

கிளியோபெட்ரா கற்பனைக்குள் வந்துவிட்டால் 
பில் என்ன பில் அனுப்புகிறவர்களே நினைவில் இருக்க கூடாது. 

Oil painting reproduction of Cleopatra before Caesar (Gerome)

Watch Cleopatra | Prime Video

Link to comment
Share on other sites

21 minutes ago, Maruthankerny said:

கிண்ணத்தை ஏந்தியதும் ....
எண்ணத்தில் நீந்தவேண்டும் ....

கிளியோபெட்ரா கற்பனைக்குள் வந்துவிட்டால் 
பில் என்ன பில் அனுப்புகிறவர்களே நினைவில் இருக்க கூடாது. 

Oil painting reproduction of Cleopatra before Caesar (Gerome)

Watch Cleopatra | Prime Video

இந்த கருத்துக்கு இருக்கிற எல்லா விருப்ப புள்ளியையும் சேர்த்து போடலாம். ஆனால் என்ன செய்ய போடக்கூடியதோ ஒன்று மட்டும் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 Things You Didn't Know about Pinnacle Vodka

எல்லோருமே சுவை கலந்த வோட்கவை எப்போதாவது அருந்தி இருப்பீர்கள். சுவை கலந்த வோட்கா எனும்போது பல நூற்று கணக்கான வொட்க்காக்கள் இன்று விற்பனையில் உண்டு  மாம்பழம் அன்னாசி பழத்தில் தொடங்கி கறுவா  கோப்பி போன்ற வாசனைகள் என்று அடுக்கிக்கொண்டே போகாலம். அதி விலை உயர்ந்த வொட்க்காக்கள் சில சுவைகளை மட்டுமே உள்ளடக்கி இருக்கும்போது. பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான இந்த பினகில் வோட்கா வேலை முடிந்து வீடு போகும்போது அடிப்படை சம்பளத்தில் வேலை செய்யும் ஆட்களும் ஒரு போத்தலை வாங்கி போக கூடிய கட்டுப்படியான விலையில் பல பல சுவையில் வோட்கவை தயாரிக்கிறது. அவர்களுடைய சுவை அற்ற வோட்கவும் அந்த அளவுக்கு ஒன்று தரம் தாழ்ந்ததில்லை. 2013 இல் சர்வதேச வைன் அண்ட் ஸ்ப்ரிட்  போட்டியில் முதலிடத்தை பெற்றது என்பதை குறிப்பிட்டு ஆகவே வேண்டும். 

Custom Trade Show Booth Design | Show & Event Management | Branding |  Reisigl Associates

இன்று குடும்ப சுமைகள் பிள்ளைகளின் பள்ளி படிப்புகள் விளையாட்டுக்கள் சமையல் உடுப்பு தோய்த்தல் வீடு சுத்தம் செய்தல் என்று பல தலையிடி வீட்டிலே என்று இருக்கும் பெண்கள் வேலைக்கு போனால் ..... அங்கும் இன்று பல பில்லியன் டாலர்களை கையாளும் கணக்குகளில் இருந்து உள்ளமே உறையும் கொலை வழக்குகள் வரை கையளவேண்டிய சுமைகளை சுமத்தி விடுகிறார்கள். வீட்டுக்கும் வேலைக்கும் இடையில் சிக்குண்டு ஓடி தெரியும் பெண்கள் அப்பாடா என்று வேலை முடிந்து வீடு செல்லும் வழியில் ஒரு பாருக்குள் புகுந்தால் ...... அவர்களை  இலக்கு வைத்து. அவர்களுடன் மென்மையாக மர்த்தினி காக்டைல் விதமாக ஒரு நட்ப்புறவை  இந்த பினகில் வோட்கா பேணி வருகிறது என்றாலும் அந்த பெண்களுடன் ஒரு அறிமுக உரையாடலை தொடக்குவதுக்கு  ஆண்களின் மனதிலும் ஒரு உந்து சக்தியை அது கொடுக்கிறது. அதாவது மென்மையையும்  வன்மையையும் இணைக்கும் ஒரு இழை நூலக இன்று ரெஸ்டூரண்ட் பார்கள் நடத்துவர்களுக்கு  லாபத்தை அள்ளி  கொடுக்கும் ஒரு வொட்க்காவாக  மும்பையில் இருந்து மேலைநாடுகள் வரை   எல்லா பார்களின் போத்தல்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறது. 

The Do's and Don'ts of Approaching a Woman at a Bar

https://www.prnewswire.com/news-releases/pinnacle-vodka-earns-top-vodka-award-in-prestigious-international-tasting-competition-217090141.html

Pinnacle® Vodka Earns Top Vodka Award in Prestigious International Tasting Competition

all girls gang! - Picture of Falani Mastani, Nagpur - Tripadvisor

Type

Size

Price

Proof

Pinnacle Original Vodka

750ml

$9.99 - $12.99

80

1L

$12.99 - $15.99

80

1.75L

$14.99 - $17.99

80

Pinnacle 100 Proof Vodka

750ml

$11.99 - $14.99

100

Pinnacle Cake

750ml

$9.99 - $12.99

70

Pinnacle Chocolate Whipped

750ml

$9.99 - $12.99

70

Pinnacle Cherry

750ml

$9.99 - $12.99

70

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

Custom Trade Show Booth Design | Show & Event Management | Branding |  Reisigl Associates

The Do's and Don'ts of Approaching a Woman at a Bar

all girls gang! - Picture of Falani Mastani, Nagpur - Tripadvisor

Type

Size

Price

Proof

Pinnacle Original Vodka

750ml

$9.99 - $12.99

80

1L

$12.99 - $15.99

80

1.75L

$14.99 - $17.99

80

Pinnacle 100 Proof Vodka

750ml

$11.99 - $14.99

100

Pinnacle Cake

750ml

$9.99 - $12.99

70

Pinnacle Chocolate Whipped

750ml

$9.99 - $12.99

70

Pinnacle Cherry

750ml

$9.99 - $12.99

70

 

 

இந்த வாழ்க்கையை 40 வருடங்களுக்கு முன்பே அனுபவித்து விட்டேன்.வாலிபத்தில் எதுவும் தெரியாது. பின் விளைவுகள் எக்கச்சக்கம். கண்டதையும் உள்வாங்காதீர்கள்.  அதற்கு மருந்துகளே இல்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொதுச்சாலை கடப்பவளை

மதுச்சோலை யூர்ந்து

மயற்குழறிய வண்டின் இறக்கையில்

பிள்ளை வண்ணம் கண் இடறித்

தள்ளாடியவளிடம் 'ஊன்றடி பிறப்பினும்'

என்ற புலவனுக்குச்

சொல்ல என்ன மிச்சம் இருக்கிறது

'தேரா மண்' என்பதைத் தவிர?

D-Club-Pattaya.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2020 at 15:51, குமாரசாமி said:

இந்த வாழ்க்கையை 40 வருடங்களுக்கு முன்பே அனுபவித்து விட்டேன்.வாலிபத்தில் எதுவும் தெரியாது. பின் விளைவுகள் எக்கச்சக்கம். கண்டதையும் உள்வாங்காதீர்கள்.  அதற்கு மருந்துகளே இல்லை.

தப்பு என்பது குடியில் இல்லை   தவறு ரசனை தவறுவதில்தான் இருக்கிறது 
எதை நீங்கள் செய்தாலும் அதில் ஒரு ஈடுபாடும் ரசனையும் இல்லையென்றால் 
எதுவுமே பாழ்தான். சாதரண உணவுகூட நஞ்சுதான் அளவுக்கு அதிகமா உண்ணும்போது.
ஐரோப்பா வரும்போதெல்லாம் திரும்பிவரும் பிளேனில் நான் எண்ணிக்கொண்டு வரும் 
ஒரு விடயம் ஏன் இப்படி குடிக்கிறார்கள் என்பதுதான்? 
நீங்கள் குடிக்கும் மாதுவை  மன்னிக்கவும் மதுவை ரசிக்க தொடங்கினால் அதனோடு உங்களுக்கு 
ஒரு உறவு உங்களை அறியாமலே வரும் ஆதலால் அதை அனாவசியமாகவோ அதிகமாகவோ 
ஒருபோதும் அருந்த மாட்டீர்கள். எங்கள் உடலில் ஆறுபோத்தல் இரத்தம்தான் உண்டு அதில் ஒவ்வாரு 
கிழமையும் 2 போத்தல் விஸ்கியை கலந்தால் அது எதோ ஒன்று செய்யத்தானே போகிறது?

பெண்களை ரசிக்க தெரியாதவர்களுக்கு எல்லாம் கலியாணம் செய்து கொடுப்பதால்தான் 
உலகில் குடும்ப பிரச்சனை விவாகரத்து அதுக்கொரு வக்கீல் நீதிமன்றம் என்று உலகமே 
ஒரு தேவையற்ற நாடகம் ஆடி விரக்தி அடைந்து வாழ்வை பாழாக்கி வாழ்கிறது. ரசனை இருக்கிறவன் 
வானத்தில் ஏதும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து பூமியிலேயே சொர்க்கம் கண்டு வாழ்கிறான். 

ஐந்து நாள் வேலை முடிய அதனால் வந்த களைப்பு இஸ்ரஸ் எல்லாம் நீங்க 
ஒரு கிளாஸாசை எடுத்து இளையராஜா இசையை கேட்டுக்கொண்டு ஒரு இரண்டு 
சுற்று அடித்துவிட்டு சாப்பிட்டு படுக்கும்போது கனவிலே காஜலிசம் தோன்றும் 
காலையில் எழும்போது 16 வயதில் பள்ளிக்கு சென்ற அதே உற்சாகம் தோன்றும் 
அதோடு முடித்துவிட வேண்டும் அதை விடுத்து போத்திலை சரிச்சு ஊத்திக்கொண்டு இருந்தால் 
அதில் எல்லாமே அருவெறுப்புதான் மிஞ்சும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 21:28, suvy said:

சரக்கு எப்படியோ தெரியாது.....ஆனால் வர்ணனைகள் சூப்பர்.....!

முடிஞ்சுதா இல்ல தொடருமா,  அப்பத்தான் இனி குடிக்கிறதா கூடாதா என்று ஒரு முடிவுக்கு வரலாம்.....!  😎

இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன..?

இன்றைக்குதான் தற்செயலாக இந்த திரியை பார்த்தேன்..  மதுவில் இவ்வளவு வகைகள் இருக்கா..?

Flash back:

ஒருமுறை தமிழகத்துக்கு விடுமுறைக்கு செல்லும்போது எனது கல்லூரி தோழர்கள், ஏதோ ஒரு பெயர் சொல்லி "இந்த வகை மதுவை வாங்கி வாடா.." என்றார்கள். எனக்கு மதுவை பற்றி ஒன்னும் தெரியாது என்பதால், அவர்கள் தொலைபேசியில் சொன்ன வார்தைகளை ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு, 'துபாய் டூட்டி ஃப்ரீ' கடைக்குள் நுழைந்தேன்.

அங்கே கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல உணர்வு..

எதை தேடுவது, எதை எடுப்பது..? என ஒரே குழப்பம்.

இங்கும் அங்குமாக திரிந்துவிட்டு முழிக்க, ஒரு பெண்மணி வந்து புன்னகைத்து "யெஸ், மே ஐ ஹெல்ப் யூ..?" என்றாள்.

நான் காகிதத்தில் எழுதியதை நீட்டினேன்..!

'ப்பூ.. இவ்வளவுதானா..?' என்றமாதிரி அந்தப் பெண், குறிப்பிட்ட மது வகைகள் இருக்குமிடத்தை காட்டி "தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்..!" என்று சிரித்தாள்..

ஆனால் அப்பெண் செல்லும்போது பார்த்த பார்வையில் 'இப்படியும் ஒரு ஆளா..?' என அந்த அம்மணிக்கு தோன்றியது போன்ற எனக்குள் ஒரு சங்கட உணர்வு.

அத்தோடு அந்தப் பக்கம் போவதே இல்லை..! :)

இதில் பெரிய கொடுமை என்னவெனில், வீட்டிற்கு சென்றவுடன், 'அப்பா ஊரிலிருந்து வந்திருக்கிறார் நமக்கு என்னென்ன பொருட்கள் வாங்கி வந்துள்ளார்..?' என தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட என் குழந்தைகள் "பார்சலை பிரியுங்களப்பா..!" என்னை நச்செரிக்க,

வேறு வழியில்லாமல் பொதிகளை பிரிக்க.. ரெண்டு மது பாட்டில் பார்சல்கள் வந்தன. குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியவில்லை..

ஆனால் மனைவி என்னை ஒரு மாதிரி வினோதமாக பார்க்க, திடீரென அங்கே எனது மாமனாரும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் 'மாப்பிள்ளை'யை பார்க்க வந்துவிட..

குப்பென வியர்த்து தர்ம சங்கடமாய் போனது.😜

இது நடந்தது 20 வருசத்துக்கு முன்னால்..!

தோழர்களிடம் இதை சொன்னவுடன், அதன் பின் அவர்கள் என்னிடம் மது வகைகளை வாங்கிவர சொல்வது இல்லை..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pure Spirits: Citadelle Gin de France & The Snyder Cocktail - Galumbi

ஜின் என்றாலே சிலருக்கு எச்சில் ஊறும் .. சிலருக்கோ இஞ்சியை பிழிஞ்சு குடித்தால்போல் இருக்கும்.
அதை குடித்து ருசி கண்டவர்கள் சுவை மாறாது மெல்லிய தேசிக்காய் சாறுபோன்று சுவெப் போன்ற கலவைகளுடன் கலந்து குடிக்கவே பிரியப்படுவார்கள். ஜின்னிலும் பல பல போத்தல்களை அடுக்கி வைத்திருந்தாலும்  அளவான கட்டுப்படியான விலையில் வெறும் $25 அமெரிக்க டாலரில் எமதாக்கி 
வீடு கொண்டுவந்து சேர்த்துவிடலாம். இதுவரை ஜின் குடிக்காதவர்களும் ஒரு முறை குடித்து பார்க்க 
எண்ணினால் பெரிய பொருளாதார சேதம் தரத்திலும் குறைவின்றி வீட்டுக்கு கூட்டி வர கூடியவள் 
இந்த பிரான்ஸ் நாட்டுகாரிதான். விலை என்ன குறைவாக இருக்கே  ஏதும் கசிப்பு ரகமோ என்று உங்களுக்கு எண்ண தோன்றும். இது லூயிஸ் XVI  காலத்து கலவை 1771இல் இருந்து Dunkirkஇல்   மிகவும்   தரமான முறையில் வடித்து வருகிறார்கள் என்பதை ..... நீங்கள் முதன் முதலில் குடிக்கும்போதே புரிந்து கொள்வீர்கள். 

Eva Hart » Citadelle Gin

 

ம் ஸ் விக்கு (MSV)  பிந்தி  ரஹிமானுக்கு(AR)  முந்தி இடைக்கால இளையராஜா காலத்து ரசனைக்கு ஒரு தரமான சோடி.இரண்டாவது சுற்றுக்கு கிளாசில் ஊற்றும் சத்தம் காதுக்கு வரும்போது .... பிரியா படத்தில் ஸ்ரீதேவி ஸ்விமிங் பூலில் குதிக்கும் காட்சி கற்பனைக்கு வந்தேறும் .........  மூன்றாவது கிளாஸ் எடுக்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றினாலே .......ஏய் பாடல் ஒன்று ... ராகம் ஒன்று என்று உங்கள் மனம் ரொமான்ஸ் ஆகிவிட்டது என்றுதான் பொருள் .... அப்பப்போ ஸ்ரீதேவி உங்கள் வீட்டில் நடப்பதுபோல இருக்கும்.  ஸ்ரீதேவியின் சிந்தனையும்  ..... சிற்ராடெல் ஜின்னும் சேரும்போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றும். 
மின்னல் உந்தன் பெண்மை 
என்னை தாக்கும் ஆயுதம் 
மேகம் உந்தன் கூந்தல் 
மலர் ஆடும் ஊஞ்சலாம் 
என் ஜோடி கிளியே ... கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்ஸை நீயே 
என்று ஒரு காவியம் உங்கள் வீட்டிலும் அரேங்கேறும் 
அடுத்த வாரவிடுமுறை வரும்போது உங்கள் கண்ணில் படும்படி 
உங்கள் மனைவியே அந்த குறைபோத்தலை தூக்கி எதோ சமையல் 
சாமான் எடுக்க அரக்கி வைத்ததுபோல எடுத்து கிச்சின் கவுண்டரில் வைத்திருப்பார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே......இதில் கருத்து ஒன்றும் போடாமல் ரகசியமா  ஒரு லைக் போட்டுவிட்டு போவோம் என்றால் தாலியக்கட்டின லைக் ஒன்றும் விழுகுதில்லை....."எட்டு லைக் இருந்தென்ன எடுத்தவுடன் கொட்ட ஒன்றில்லையே".....!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.