Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திராவிட இயக்க அரசியல் இல்லை என்றால் தமிழை மாற்று மொழிக்கு இரையாக்குகின்ற பணிகள்தான் நடந்திருக்கும்!-


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

“தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இந்தியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், 60 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சியில் இந்தியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்து இரட்டைக் கொலை செய்திருக்கிறார்கள்” - திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படிச் சொன்னார். இதை அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கடுமையாக மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய வைகைச்செல்வன், “கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியலில்தான் தமிழ் மொழியானது மிக உன்னதமான உயரத்தைத் தொட்டிருக்கிறது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இவை எல்லாமே திராவிட இயக்க அரசியல்தான்.

அதுபோல, மூன்று உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியது திராவிட இயக்க அரசியல்தான். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உலகத் தமிழ்ச் சங்கமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் உதித்தது. முதன்முதலில் மொழிக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவானது தமிழ்நாட்டில்தான். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது நான்காம் தமிழையும் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இப்படி எண்ணற்ற பணிகளைத் திராவிட இயக்க அரசியல் சாதித்திருக்கிறது.

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தது, தமிழாய்ந்த தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தது, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தது உள்ளிட்டவையும் திராவிட இயக்க அரசியலால் நாம் கண்ட பலன்தான். தமிழனுக்குச் சுயமரியாதையைத் தந்ததும், இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு நின்றவர்களை தோளில் துண்டுபோட வைத்ததும் திராவிட இயக்க அரசியல்தான். இவ்வளவு ஏன்... துணிச்சலுடன் கேள்விகளைக் கேட்கலாம், துணிச்சலுடன் எதிர்த்து நிற்கலாம் என்பதை இன்றைக்குக் கேள்வி எழுப்பி இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே பெற்றுத் தந்ததும் திராவிட இயக்க அரசியல்தான்.

ஒரு காலத்தில் அபேஷியர்கள், நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை வேட்பாளர்கள், வணக்கம் என்று சொல்ல வைத்ததும், கணவரை ஸ்வாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தலைவன் என்றும் தலைவி என்றும் சொல்ல வைத்ததும் திராவிட இயக்க அரசியல் தந்த மாற்றம்தான். தமிழுக்குச் செம்மொழி, இலக்கிய மொழி அங்கீகாரத்தைத் தந்ததும் திராவிட இயக்க அரசியலே.

இப்படி நமது சமூகப் பண்பாட்டுக்கும், மறுமலர்ச்சிக்கும் அடித்தளமிட்டதே 60 ஆண்டு காலத் திராவிட இயக்க அரசியல்தான். திராவிட இயக்க அரசியல் இல்லை என்று சொன்னால் தமிழை மாற்று மொழிக்கு இரையாக்குகின்ற பணிகள்தான் நடந்திருக்கும். அது மாத்திரமல்ல... பண்ணையார்கள், பிரபுக்கள், சட்டம் படித்த மேதைகள், பஸ் முதலாளிகள் என செல்வந்தர்கள் மாத்திரமே அரசியலுக்கு வரமுடியும், அவர்கள் மாத்திரமே சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்ல முடியும், அவர்கள் மட்டுமே அமைச்சர்களாக அதிகாரம் செலுத்த முடியும் என்ற நிலையே இன்னமும் தொடர்ந்திருக்கும்.

அந்த நிலையை மாற்றி, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பாமரரும், எளியவரும், சாமானியரும் மக்கள மன்றத்துக்குச் செல்லமுடியும், அவர்களும் அமைச்சராக வரமுடியும் என்ற நிலையை நமக்குத் தந்தது திராவிட இயக்க அரசியல்தான் என்பதைப் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது” என்றார்.

‘இந்தி தெரியாது போடா’என்ற டி-ஷர்ட் ட்ரெண்டிங் குறித்துக் கேட்டதற்கு, “அண்ணா இருந்தவரை திமுக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம், அவர் கொண்ட கொள்கையில், லட்சியத்தில் தடம் மாறாது பயணித்தார். அனைத்துக்கும் அப்பாற்பட்டவராக நேர்மைத் திறத்தோடு பணியாற்றினார். ஆனால், அவருக்குப் பிறகு தலைமைப் பதவிக்கு வந்த கருணாநிதி, சூழ்நிலைக்குத் தக்கவாறு முடிவுகளை எடுக்க ஆரம்பித்தார். அதனாலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தவறான முடிவுகளை எடுத்த காரணத்தாலும் திமுக தனது பாதையை விட்டு விலகி கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது.

‘தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கி இருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு, ‘அவருக்கு இந்தி தெரியும்’ என்று சொன்னவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர்கள்தான் இன்று பனியன் போட்டு பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் வைகைச்செல்வன்.https://www.hindutamil.in/news/tamilnadu/576599-if-it-was-not-for-the-politics-of-the-dravidian-movement-only-the-work-of-preying-on-tamil-as-an-alternative-language-would-have-taken-place-vaigai-selvan-1.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பெங்களூரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது ஐ.பி.எல். தொடரின்  48 ஆவது லீக் ஆட்டம்  நேற்றைய தினம் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே அபுதாபியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.  ஜோஸ் பிலிப் 33(24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9(14) ஓட்டங்களுடனும், டி வில்லியர்ஸ் 15(12) ஓட்டங்களுடனும், ஷிவம் டூப் 2(6) ஓட்டத்தையும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில், 74(45) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் மொரிஸ் 4(2) ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வொஷிங்டன் சுந்தர் 10(6) ஓட்டங்களுடனும், குர்கீரத் சிங் 14(11) ஓட்டங்களையும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சாஹர், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 165 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிகொக் 18(19) மற்றும் இஷான் கிஷன் 25(19) ஓட்டங்களையும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது.  இந்நிலையில் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். மறுமுனையில் சவுரப் திவாரி 5(8) ஓட்டம், குருனால் பாண்டியா 10(10) ஓட்டம், ஹர்திக் பாண்டியா 17(15)ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும்  சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 79 ஓட்டங்களை குவித்தார்.  இறுதியாக 19.1 ஓவர்களில் 166 ஓட்டங்களை குவித்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   https://www.virakesari.lk/article/93183
  • பிரான்ஸ், ஜேர்மனில் மீண்டும் முடக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் புதன்கிழமை தங்கள் நாடுகளை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளனர். பிரான்ஸ் பிரான்ஸில் முடக்கல் நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது.  இதன்போது மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அல்லது மருத்துவ காணரங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரேன் தெரிவித்துள்ளார். உணவகங்கள், மதுபானசாலைகள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும். எனினும் பாடசாலைகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும். பிரான்சில் கொவிட்-19 நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த மடத்தில் உள்ளன. செவ்வாயன்று 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடைாயளம் காணப்பட்டனர். பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 1,280,346 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 35,834 உயிரழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.   ஜேர்மனி ஐரோப்பாவின் பல பகுதிகளை விட ஜேர்மன் குறைந்த தொற்று வீதத்தைக் கொண்டிருந்தாலும், அண்மைய வாரங்களில் வைரஸ் பரவி வரும் வேகம் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் 16 மாநில தலைவர்களின் ஒப்புதலுடன் முடக்கல் விதிமுறைகளானது நவம்பர் 2 ஆம் திகதி அமுல்படுத்தப்படும் என்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா கூறியுள்ளார். இக் காலப் பகுதியில் பாடசாலைகள் திறந்திருக்கும், சுற்றுலா நடவடிக்கைகளானது நிறுத்தப்படும் சமூக தொடர்புகள் அதிகபட்சமாக 10 நபர்களை கொண்ட இரு வீடுகளுக்கு மட்டுப்படுத்தப்படும். மதுபானசாலைகள் மூடப்பட்டு உணவகங்களின் திறப்பு விகிதம் மட்டுப்படுத்தப்படும். டட்டு, மசாஜ் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஜேர்மனின் முடக்கல் நிலையை மறு பரிசீலனை செய்ய மேர்க்கெலும், மாநில தலைவர்களும் நவம்பர் 11 ஆம் திகதி காணொளி மூலம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் எடுப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனில் புதன்கிழமை 14,964 புதிய கொரோனா தொற்றாளர்களும், 85 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. ஜேர்மனின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 479,621 ஆகவும், உயிரழப்பு எண்ணிக்கை 10,218 ஆகவும் பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/93184
  • தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பாக் கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் பிறப்பிக்கப்பட்ட 17 ஆண்டுகால சிறைத் தண்டனையை தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சம்சுங் உள்ளிட்ட தென் கொரியாவின் பெரிய நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாக பெற்றமை, தனக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் பெருநிறுவன நிதியை மோசடி செய்தல் மற்றும் தென் கொரியாவின் உளவு அமைப்பின் உத்தியோகபூர்வ நிதியை தவறாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு லீ மியுங்-பாக் கிற்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லீ மியுங்-பாக் 2008-2013 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதியாக இருக்கும் முன்னரும், பின்னரும் இந்த குற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. லீக்கு ஆரம்பத்தில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பல மாதங்கள் கழித்து அவர் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் இந்த ஆண்டு பெப்ரவரியில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்தது. இந் நிலையில் லீ யின் பிணை இரத்து தொடர்பான உத்தரவு தொடர்பில் முறையிட ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆறு நாட்ககளின் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். 78 வயதான லீ, வணிக பின்னணியுடன் தென் கொரியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தார், ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார உயர்வை அடையாளப்படுத்தினார்.  அவர் 1960 களின் நடுப்பகுதியில் ஹூண்டாய் குழுமத்தின் கட்டுமானப் பிரிவில் நுழைவு நிலை வேலையுடன் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ஹூண்டாய் குழுமத்தின் கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்ததற்கு முன்பு, தென் கொரியாவின் பொருளாதாரம் வெடிக்கும் வகையில் வளர்ந்த நேரத்தில் குழுவின் விரைவான உயர்வுக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/93205  
  • ஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்… October 29, 2020 மேல் மாகாணத்திற்குள் வைபவங்களை நடத்துவதற்கும் தடை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். நேற்று மாலை காவற்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேரவோ முடியாது என்றும் கூறினார். இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மாகாணத்தில் 112 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதேபோன்று குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை 5.00 மணியுடன் நிறைவடைகின்றது. ஏனைய 68 காவற்துறை பிரிவுகளில் அதேபோன்று ஊரடங்கு சட்டம் இடம்பெறும். இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் எந்த வகையிலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கோ மேல் மாகாணத்திற்கு வருவதற்கோ யாருக்கும் வாய்ப்பில்லை. மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில் அமைந்துள்ள இடங்களில் காவற்துறை வீதி தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீதி தடைகள் நாளை முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மேல் மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்குகின்றது. இந்த வீதி உடாக மேல் மாகாணத்திற்கு வருவதற்கும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கும் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை. விபத்துக்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். விசேடமாக அத்தியவசிய சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு தமது கடமைகளை முன்னெடுக்க செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இதை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார். முன்னர் திட்டமிடப்பட்டிருந்த திருமண வைபவங்கள் அல்லது வேறு எந்த வைபவங்களையும் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுதல், மண்டபங்களில் மக்கள் ஒன்று கூடுதல் இந்த காலப்பகுதியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்த வைரஸ் தொற்று மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நாட்டில் பரவ ஆரம்பித்தது. அப்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும், பொறுப்புடனும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதனை மீண்டும் நினைவில் கொண்டு பொதுமக்கள் செயல்படுவது அவசியம். வைரஸ் தொற்று தொடர்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார். நேற்று (28.10.20) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.. நேற்று (28) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்று இனங்காணப்பட்ட 335 பேரில் 237 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 161 பேர் கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் 17 பேர் கொஸ்பேவ மற்றும் 21 பேர் மட்டக்குளிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில் இனங்காணப்பட்டவர்களின் முழு விபரங்களையும் மேலே உள்ள படத்தில் காணலாம். மத வழிபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் வேண்டுகோள் மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க அதிகரிகளுக்கான அறிவுறுத்தல் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும் என்று அரச சேவை, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற அமைசசின் செயலாளர் J.J. ரத்னசிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளயிட்டள்ள ஊடக அறிக்கையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி நடத்தி செல்லும் தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் கடமைகளை ஆக கூடிய வகையில் நிறைவேற்றுவதில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகின்றேன். கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் பிரதானிகளினால் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 2020 ஏப்ரல் 18 திகதி இலக்கம்அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் மற்றும் நிறுவனங்களை நடத்தி செல்வதுடன் அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிட்டபடி அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்காக கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா மரணம் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகின்றதா? சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடபடுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர். எனக்கு வைத்தியர்கள் கூறுவதை தான் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நெருக்கிய தொடர்பில் இருந்தவர்களினால் தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அதனால் தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என அவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். சாதாரண நோய் நிலமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இருப்பினும் இப்போது உயிரிழக்கும் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குறித்த இரு மரணங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். PCR பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் குறிப்பிடதக்க தாமதம் நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் இவ்வாறான தாமதம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று (29) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார். ´கடந்த 23 ஆம் திகதி முதல் குறிப்பிடதக்க தாமதம் உள்ளது. முன்பைப் போன்று ஒரே நாளில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியாது. இவ்வாறு சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.´ இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் இயந்திரம் சேதமடைந்துள்ளது. இதனை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களிலும் 24 மணித்தியாலமும் தொடர்ந்து இயங்கியதால் இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தை பழுது பார்க்க சீனாவில் இருந்து ஒருவரை அழைக்க வேண்டும். அவரை நாளைய தினத்திற்குள் நாட்டுக்கு அழைத்துவர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.´ இதேவேளை நாட்டில் சுகாதார பரிசோதகர்களுக்கு பாரியதொரு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். ´நாட்டில் மொத்தமாக 1817 சுகாதார பரிசோதகர்களே உள்ளனர். அவர்களில் 1400 பரிசோதகர்களே சிரேஸ்டதுவமிக்கவர்கள. இதனால் நாம் தொடர்ச்சியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். இருப்பினரும் அண்மையில் இரண்டு குழுக்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர்களின் பயிற்சியும் குறைவடைந்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டுமாயின் விரைவாக இரண்டு குழுக்களை பணியில் ஈடுப்படுத்த வேண்டியது அவசியம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்´     https://globaltamilnews.net/2020/152453/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.