Jump to content

திலீபனின் நினைவுதினம் அனுஸ்டிக்க அனுமதி மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 08:51, ரதி said:

ஓம் விக்கி அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி தான் ...அரசியல் செய்யும் போது மட்டும் தமிழ் கதைப்பார் ...அவற்ற வீட்டை போனால் பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளோட சிங்களத்தில கூடிக் குலாவுவார் .

அதெப்படி உங்களுக்கு தெரியும் ஐயா சொன்னாரா ஒட்டுகேடடீர்களா மூன்று மொழியும் பேசினால் குற்றமா அரசியலில் தான் பிரதிநிதுத்துவப் படுத்தும் மொழியைப் பேசினால் சரிதானே ஏன் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குடைகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அர்ச்சனை வேலை செய்ய தொடங்கிட்டுது .

நீங்கள் கோடிட்ட என் பதில் இடப்பட்ட திகதி 09/09/2020.

அர்ச்சனை நடந்தது 16/09/2020 அதிகாலையில்.

இதில் ஒரு சின்ன timeline பிரச்சனை இருக்கிறது.

போட 7 நாட்களுக்கு முன்பே அர்சனை எப்படி வேலை செய்யும்?

ஆனா உங்கள் தலதா மாளிகை, அமிர்தலிங்கம் தியரிகளோடு ஒப்பிடும் போது இது பெரிய மேட்டர் இல்லைதான்.

சிம்பிளா சொல்லுவீர்கள்.

கோஷான் time travel செய்தார். 

நான் சொல்வது இப்போ ஒருவருக்கும் விளங்காது 40 வருடத்தில் விளங்கும் என்று🤣

Link to comment
Share on other sites

ஜனநாயக மறுப்புக்கு எதிராக இணைந்து போராட முடிவு; அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டமைப்பு அழைப்பு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசு பொலிஸாரின் ஊடாகச் செயற்படுத்தும் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள் குறித்து நேற்று பிற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.


 
இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது, இந்தக் கலந்துரையாடலில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறீதரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், பா.கஜதீபன், எஸ்.ஈசன், விந்தன் கனகரட்ணம், எஸ்.வேந்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

http://thinakkural.lk/article/68926

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரில் புலிகள் தோற்றாலும் அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் எவராலும் நெருங்க்ககூட முடியாதளவில் உயரத்தில் உள்ளது, சாதாரண விளையாட்டில் கூட எதிரணியின் திறமைக்கு மதிப்பளிக்கத்தெரியாத இனம் சிங்கள இனம், முடித்த வரை அவர்களது தியாகங்களை அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தல் அல்லது அதனை வரலாற்றிலிருந்து அழித்து விடுவ்வதுதான் அவர்களது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

அதெப்படி உங்களுக்கு தெரியும் ஐயா சொன்னாரா ஒட்டுகேடடீர்களா மூன்று மொழியும் பேசினால் குற்றமா அரசியலில் தான் பிரதிநிதுத்துவப் படுத்தும் மொழியைப் பேசினால் சரிதானே ஏன் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குடைகிறீர்கள்

சாத்தான்,  ஒரு சில தீவிர  தமிழ் தமிழ் தேசியர்களாக இங்கு காட்டிக்கொள்ளும் சிலர் சில சில ஆண்டுகளுக்கு முதல் விக்கியர் பற்றி  கூறியதை தான் ரதி இப்போது கூறியுள்ளார். இதை  விட மோசமாக விக்கியரின் தனிப்பட்ட வாழ்வை குடைநத பல பதிவுகள் இங்கு  உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ‌ஞ்ச‌லி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு.!

Mavai-Senathirajah.jpg

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அ‌ஞ்ச‌லி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்கால சூழ்நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/84326/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.