Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் எவ்வித அச்சமும் இன்றி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வாருங்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

image_812ee6d962.jpg

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி
எம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“எமது அரசாங்கம், உங்களுக்ளுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன், உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால், நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாகத் தெரியப்படுத்தலாம்.

“வெயில் - பனி என்று பாராமல் உங்களை வருத்தி, நீங்கள் உழைக்கும் பணத்தை, உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு, எமது அரசாங்கம் என்றும் உங்களுக்குப் பக்கபலமாகச் செயற்படும்.

“எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை, உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய மற்றும் வளம் கொழிக்கும்; உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு, நாம் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம்” என, புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம், பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.madawalaenews.com/2020/09/blog-post_410.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நிபந்தனைக்கு உட்பட்டு, எங்கள் கண்காணிப்பில், அனுசரணையோடு எங்கள் பெயரில் முதலிடுங்கள். வரி அதிகம், இலாபத்தில் பங்கு நேரடியாக அறவிடப்படும். காலை விட்டிட்டு பிறகு உயிரை திருப்பித்தா என்று கேட்கக்கூடாது.

அபிவிருத்தி என்று புலுடா விட்டாச்சு, ஒரு நாடும் கடன் கொடாது, வாங்கிய கடனை கட்டியாக வேண்டும். புலம் பெயர்ந்தவர்களுக்கு  வலைவீசுகிறார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் முன்னர் பட்ட கடனை எல்லாம் திருப்பிக்கொடுக்கும் தவணை 2020ல் ஆரம்பமாகிறது அதற்கு வட்டியைத்தானும் கட்டித்தீரவேண்டும்.

கொரோணா தீவில் இருந்த கொஞ்சநஞ்ச உள்ளூர் உற்பத்தியையும் இல்லாதொழித்துவிட்டது அனைத்தையும் இறக்குமதி செய்யவேண்டும் தேயிலை ரப்பர் வாசனைத்திரவியங்கள் என நாம் மாணவர் சூழல் வாசகத்தில் படித்தவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தமட்டில் பழைய கதை அவைக்கான சந்தை வாய்ப்புகள் அனைத்தும் வேறுநாடுகள் பங்குபோட்டுவிட்டன. அப்படி இருந்தாலும் தேயிலைத் தோட்டம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் கைகளுக்கும் போய்விட்டன அவை கொண்டுபோனது போக மிஞ்சுவது யானைக்குச் சோளப்பொரிபோல்.

இனிமேல் மாட்டிறச்சியையும் இறக்குமதி செய்யவேண்டும் தமிழர்களில் அதுவும் சைவக்காரர்கள் யாழ் குடாநாட்டிலேயே அதிகமானவர்கள் மாடு சாப்பிடத்தொடங்கிவிட்டினம். அவர்களுக்கும் சேர்த்து இறக்குமதி செய்யவேணும்.

வெளிநாட்டு அபிவிருத்திநிதி உதவி மற்றும் கடஙள் எல்லாம் எதிர்காலத்தில் இறக்குமதிக்கே செலவுசெய்யவேண்டும் உள்ளூர் உற்பத்தி மற்றும் அந்நிய செலவாணிக் கையிருப்பு இவை இல்லாது கடதாசிக் காசை அளவுக்கு அதிகமாக அச்சடித்து அரசாங்க உதவித்திட்டம் புதிய அரச வேலைவாய்ப்பு இவைகளுக்கான கொடுப்பனவை நிறைவேற்றுகிறார்கள். சந்தையில் பொறுதளுக்கான கேள்வி அதிகம் வழங்கள் சமனானதாக இல்லை ஆதலால் பணவீக்கம் முன்னை விட இப்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இது குரோணா காலத்தினால் அதிகரித்துள்ளது என்பதில் உண்மையில்லை. 

ஆக அரசாங்கம் வங்குரோத்து நிலையில் உள்ளது  

புலம்பெயர் தமிழர்கள் உறவுகளுக்கு உதவும் வாழ்வாதார உதவியத் தவிர ஏனய பணக்கொடுக்கல்வாங்கல்களை ஓரிரு வருடம் நிறுத்தினால் இன்னமும் ஈடாடும்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

இனிமேல் மாட்டிறச்சியையும் இறக்குமதி செய்யவேண்டும் தமிழர்களில் அதுவும் சைவக்காரர்கள் யாழ் குடாநாட்டிலேயே அதிகமானவர்கள் மாடு சாப்பிடத்தொடங்கிவிட்டினம். அவர்களுக்கும் சேர்த்து இறக்குமதி செய்யவேணும்.

மாட்டிறைச்சி விலையெண்டால் கோழி உடன் பதுங்குவினம் .

மாடு சாப்பிடுவது குலத்துக்கு நாசம் எண்டு தெரிந்தும் யாழ் முழுக்க மாட்டு கறி  கடைகள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

மாடு சாப்பிடுவது குலத்துக்கு நாசம் எண்டு தெரிந்தும் யாழ் முழுக்க மாட்டு கறி  கடைகள் .

அண்ணை இது உங்கள் நம்பிக்கையோ ....?
மாட்டிறைச்சியை செம கட்டு கட்டியே  மூனாக்கள் குடித்தொகை பெருக்கத்தில் நம்மை விஞ்சிட்டினம் 
ஒரு குலமும் அழிந்ததாக தெரியவில்லையே 

 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

F9490906-DE0-F-4-A0-A-83-E8-20-CA1-FEB67

இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி
எம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வாங்கோ வந்து முதலை வாய்க்குள் தலையை விடுங்கோ 
தம்பி பசிலே மிஸ்டர் twenty பெர்சன்ட் என்று கமிசனடித்து பெயரெடுத்தவர் 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இதெல்லாம் பலமுறை பார்த்தாகிவிடுத்து  
  • நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை – கலையரசன். October 19, 2020 நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்  என தவராசா கலையரசன் தெரிவித்தார்.இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.மேலும் தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம். தற்காலத்தில் அரசாங்கம் எடுக்கும்   ஒவ்வொரு விடயமும் எங்களது மக்களின் கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்குகின்ற அடிப்படையில் விடையங்கள் அனைத்து கையாளப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து  எங்களுடைய கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்கின்ற விடையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்கள் இணைந்த தமிழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்றிணைந்து கூடிய கூட்டத்தில் சனாதிபதியின் தொல்பொருள் செயலணியின் செயற்பாடுகள் குறித்து அதிகம் பேசப்பட்டது .குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய சனாதிபதியின் தொல்பொருள் செயலணி அதன் செயற்பாடுகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் , திருக்கோவில் , மட்டக்களப்பு , திருகோணமலை போன்ற எமது பூர்வீக நிலங்களை அத்துமீறி பிரவேசித்து கபளீகரம் செய்வதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் சமத்துவமாக சமாதானமாக வாழ்வதற்கான முழு சிந்தனையோடு செயற்படுகின்றோம் . இந்த நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை. ஏனைய இனங்களோடு சமாதானமாக வாழ்வே விரும்புகின்றோம். அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு எமது அரசியல்வாதிளின் நடவடிக்கைகளாலும் , மட்டு மாவட்டநிருவாக ரீதியான அதிகாரிகளாலும் அத்துமீறிய குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதிரடியான இட மாற்றங்கள் இந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டதை காணமுடிகிறது என தெரிவித்தார் . பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பீ.பார்த்தீபன், அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்,கே.ஜெயராஜ் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் ,இந்து அமைப்பினரும் கலந்து கொண்டனர்.   https://www.meenagam.com/?p=15824
  • 1960'S அந்த நாளிலும் வெள்ளைக்கு மவுசு இருந்திருக்கு ..☺️..😊
  • நாம் தமிழர் கட்சி சாதி கட்சி / துரோகிகள் சத்தம் கொஞ்சம் அதிகம் / சீமான்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.