Jump to content

சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர்

இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.

தீவில் உள்ள பௌத்த சின்னங்கள், தமிழ் பவுத்தர்களுடையதா, சிங்கள பவுத்தர்களுடையதா என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படவேண்டும். சிங்கள மொழியின் வரலாறுக்கும், பௌத்தத்தின் வரலாறுக்கும் பாரிய இடைவெளி உள்ளதால், தமிழ் பௌத்தத்தினை வெறுமனே, சிங்கள பௌத்தமாக கூறி நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல.

சிங்கள மொழி தோன்றிய காலப்பகுதியும், தீவுக்கு பௌத்தம் வந்த காலப்பகுதியும் ஒன்றாக இல்லாததால், இது குறித்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். சிங்களமொழியின் ஆரம்பம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அதுகுறித்து தெளிவுகள் தரப்படவேண்டும். 

குறித்த இடத்தில், பண்டைய பொருட்கள் இருந்தால், அவை தமிழ் பௌத்தத்துக்கு உரியதாக இருந்தால், அதனை தமிழர்கள் தான் முன்னெடுக்கவேண்டும் அன்றி வேறு யாரும் அல்ல என்பதைனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வழமைபோல, அசந்து போன சிங்களவர்கள், கிளம்பி விட்டார்கள்.... 'அப்போதே சொன்னேன் பார்த்தாயா, இவர் இனவாதி, இவருக்கு வேண்டும் தமிழ் ஈழம்'.... தொடங்கி விட்டார்கள்.

மெதுவாக, ஆனால் உறுதியாக ஐயா வைக்கும் ஆப்பு, சிலரை சங்கடப்படுத்தவே செய்கிறது.

அவர் சொல்ல வருவது, கிறிஸ்துவுக்கு முன் மகிந்தவும், சங்கமித்தையும் ஊடாக பௌத்தம் வந்தது தமிழர்களிடம். கிறிஸ்துவுக்கு பின் 6ம் நூறாண்டில் சிங்கள மொழி உருவானது. ஆகவே வரலாறில் தெளிவு வேண்டும் என்கிறார். மேலும் சிங்கள மக்கள், மகாவம்சத்தினை நம்பாமல், தமது வரலாறு குறித்து ஆய்வு செய்து சரியான தகவல்களை எடுத்துக் கொள்ளவேண்டும், என்பதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்காவது தில்லு முதுகெலும்பு இருக்குது என்று சந்தோஷப்படுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ragaa said:

ஒருத்தருக்காவது தில்லு முதுகெலும்பு இருக்குது என்று சந்தோஷப்படுவோம்

அதுதான் விக்கி ஐயா, பார்ப்போம் பொறுத்திருந்து, இந்த கயிறு இழுந்தல் போட்டியை,

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அதுதான் விக்கி ஐயா, பார்ப்போம் பொறுத்திருந்து, இந்த கயிறு இழுந்தல் போட்டியை,

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

நியாயமான பயம். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 இல் இவர் வரவை ஆதரித்து எழுதிய போது விக்கியிடம் நான் எதிர்பார்த்தது

1. ஊழல் இன்மை ✔️

2. உண்மையை துணிந்து பேசல்✔️

3. தமிழ் தேசியத்தின் மீது பற்று✔️

4. 2009 போரின் பின்னான கையறு நிலையில் நின்ற எமது மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு கெளரவமான தீர்வை எடுக்கும் நயம் அல்லது இராசதந்திரம்

4ம் விடயமும் அவரிடம் இருக்கிறது என்பதை அவர் காட்ட இன்னும் கால அவகாசம் உண்டு.

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும். 

செய்வாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

கடந்த கால வரலாறு எமக்கு அந்தப் பயத்தை ஏற்படுத்தினாலும், சிங்களவன் இனியொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தன் தலையில்  தானே மண் அள்ளிக்கொட்ட மாட்டான். வேறுவழியில் செய்வான். விக்கினேஸ்வரன் ஐயாவைத் துலைக்கலாம், ரவிராஜுக்கு நடந்ததுபோல். அவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை இழப்பு செய்யலாம். அதற்காக வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதே.? பிறகு எதற்கு சர்தேசம் போக வேண்டும்? அறிக்கைகள் விடவேண்டும்? போராட்டம் நடத்த வேண்டும்? மேடை போட்டு பேச வேண்டும்? தேர்தல் நடத்த வேண்டும்? உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும்?  சும்மா இருக்கலாமே? அவர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு குடைச்சல் கொடுத்து, குற்றச் சாட்டுகளை அடுக்கி அரசாங்கமும் அதன் முகவர்களும் அவரை வெளியில் அனுப்பிய காரணமும் அதே. அவர் வாய்மூடி ஞானியாக இருக்க மாட்டார் என்பதே.

6 hours ago, goshan_che said:

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும்.

சுமந்திரன் ஒரு நேர் காணலில் கூறியிருந்தார் தமிழ்கட்சிகள் பல உள்ளன, விக்கினேஸ்வரன் தனித்து இயங்க முடியாது அவர்களுடன் இணைந்தே செயற்படவேண்டும். மனோ கணேசன் கூறியது விக்கினேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில்  தெரிவித்தது அவரது சொந்தக்கருத்து. ஆக இவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனாலேயே அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க முன்வரவில்லை. இவர்களோடு விக்கி ஐயா சேர்ந்தால் அவரால் இயல்பாக பேச முடியாது, முன் போல் ஓரங்கட்ட வாய்ப்புள்ளது. தனித்தும் செயற்பட முடியாது, மீண்டும் அவரை  குற்றவாளியாக்கி அவர் குரலை அடக்கவே சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

நீங்கள் சொல்வது யதார்தமாகவே படுகிறது.

வரலாற்றை பற்றி சொல்வது அவரவர் பிரச்சனை. ஆனால் எல்லாரும் 13ஐ தக்கவைக்க வேண்டும் என்பதில் ஒரே கொள்கை நேர் கோட்டில் வருபவர்கள்தானே.

இந்த ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தியாவது ஒரு குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் இணைந்து செயல்படவேண்டும். 

இது எனது ஆசை, நப்பாசை. வெகு விரைவில் ஆகக்கூடும் நிராசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

விக்கினேஸ்வரன் ஐயாவைத் துலைக்கலாம், ரவிராஜுக்கு நடந்ததுபோல். அவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை இழப்பு செய்யலாம். அதற்காக வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதே.? பிறகு எதற்கு சர்தேசம் போக வேண்டும்? அறிக்கைகள் விடவேண்டும்? போராட்டம் நடத்த வேண்டும்? மேடை போட்டு பேச வேண்டும்? தேர்தல் நடத்த வேண்டும்? உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும்?  சும்மா இருக்கலாமே? அவர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு குடைச்சல் கொடுத்து, குற்றச் சாட்டுகளை அடுக்கி அரசாங்கமும் அதன் முகவர்களும் அவரை வெளியில் அனுப்பிய காரணமும் அதே. அவர் வாய்மூடி ஞானியாக இருக்க மாட்டார் என்பதே.

தோழர்..

கூட்டணி கும்பல் சேர்த்தால் தனிபட்ட கருத்து/சொந்த கருத்து என்டு பஞ்சாயத்து பண்ணி பாதி நேரம் தாவு தீர்ந்துவிடும் ..👌

விக்கி ஐயா கூட்டணி என்டு கும்பல் சேர்க்காமல்  சொந்த கட்சியில் இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட தலைவர்களை , இளம் தலைமுறையினரை அவர்க்கு பின் கொள்கை பிடிப்புடன் வளர்த்தெடுக்க வேண்டும் .. செய்வாரா .. விடுவார்களா.? காலம் முடிவு செய்யும் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

2013 இல் இவர் வரவை ஆதரித்து எழுதிய போது விக்கியிடம் நான் எதிர்பார்த்தது

1. ஊழல் இன்மை ✔️

2. உண்மையை துணிந்து பேசல்✔️

3. தமிழ் தேசியத்தின் மீது பற்று✔️

4. 2009 போரின் பின்னான கையறு நிலையில் நின்ற எமது மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு கெளரவமான தீர்வை எடுக்கும் நயம் அல்லது இராசதந்திரம்

4ம் விடயமும் அவரிடம் இருக்கிறது என்பதை அவர் காட்ட இன்னும் கால அவகாசம் உண்டு.

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும். 

செய்வாரா?

கோசான் அண்ணை 
2ம் , 3ம் இருந்தால் 4 சரிவராது 
4 வது  இருந்தால் 2ம் ,3ம் செட் ஆகாது 
இரண்டும் எதிரெதிர் துருவங்கள், ரெண்டிற்கும் நடுவில் நிற்கப்போனால் ஐயா தனது தனித்தன்மையை இழக்கவேண்டிவரும் ,அத்துடன் செயல்படா நிலைக்கு போய் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து காணாமல் போவார், கூத்தமைப்பிற்கு நடந்ததும் இதுவே   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் சிங்கள பவுத்தர்களின் சரித்திரத்தையே கேள்விக்குறியாக்கி விக்கி ஐயா புதிய களமுனையை திறந்திருக்கிறார். இனி வரும் காலங்களில் நிச்சயம் தமிழினம் அவருக்கு பின்னால் அணிதிரண்டு பேராதரவை வழங்குவர். திராணியற்ற பெரும் பெரும் ஜாம்பவான் தமிழ் அரசில்வாதிகளுடன் எதிரணியில் நிற்பதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஐயாவின் கட்சியில் தனியாளாய் நாடாளுமன்றத்திற்கு தெரிவான பின்னரும் சளைகாமல் தனது கடமையை சரிவர செய்வதாகவே தெரிகிறது. வாழா வெட்டியாக நாடாளுமன்றம் சென்றுவரும் சம்சும் கோஷ்டிக்கு இவர் மிகபெரிய சவால். பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது யதார்தமாகவே படுகிறது.

வரலாற்றை பற்றி சொல்வது அவரவர் பிரச்சனை. ஆனால் எல்லாரும் 13ஐ தக்கவைக்க வேண்டும் என்பதில் ஒரே கொள்கை நேர் கோட்டில் வருபவர்கள்தானே.

இந்த ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தியாவது ஒரு குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் இணைந்து செயல்படவேண்டும். 

இது எனது ஆசை, நப்பாசை. வெகு விரைவில் ஆகக்கூடும் நிராசை.

நீங்க சொல்லுறத ஏத்துக்கறத்துக்கு மனசு அடிச்சுக்குது எசமான்... ஆனா பளச புறட்டிப்பாத்தா மனசு ஏத்துக்க மாட்டேங்குதெ எசமா ஏத்துக்க மாட்டேங்குதே....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கோசான் அண்ணை 
2ம் , 3ம் இருந்தால் 4 சரிவராது 
4 வது  இருந்தால் 2ம் ,3ம் செட் ஆகாது 
இரண்டும் எதிரெதிர் துருவங்கள், ரெண்டிற்கும் நடுவில் நிற்கப்போனால் ஐயா தனது தனித்தன்மையை இழக்கவேண்டிவரும் ,அத்துடன் செயல்படா நிலைக்கு போய் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து காணாமல் போவார், கூத்தமைப்பிற்கு நடந்ததும் இதுவே   

அக்னி,

நீங்கள் சொல்வது உண்மையே. 

2,3 ஐ 4 உடன் பலன்ஸ் பண்ணி போவதுதான் இலங்கை தமிழ் அரசியலில் மக்களை வெல்ல வைப்பதற்க்கான சூட்சுமம்.

ஆனால் இது ஒரு impossible எதிர்பார்ப்பா?

விக்கி மட்டும் அல்ல யாராலேயும் முடியாத விடயமா?

எனக்கும் பதில் தெரியவில்லை.

1 hour ago, Kapithan said:

நீங்க சொல்லுறத ஏத்துக்கறத்துக்கு மனசு அடிச்சுக்குது எசமான்... ஆனா பளச புறட்டிப்பாத்தா மனசு ஏத்துக்க மாட்டேங்குதெ எசமா ஏத்துக்க மாட்டேங்குதே....🤔

குத்துங்க எசமான், குத்துங்க.

இந்த தமிழங்களே இப்படித்தான் எசமான்😡.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

இதனால் தான் இவர்கள் எல்லா விடயங்களிலும் இணைய வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் துரும்பான 13 இற்கு மட்டும் இணைந்து வாக்களிக்கலாம். மற்றபடி போர்க்குற்ற விசாரணைக்கு ஒருவர், வரலாற்றிற்கு ஒருவர், அபிவிருத்திக்கு ஒரு தரப்பு என சமாந்தரமாகச் செல்லட்டும். இந்த முறையில் ஒரு இழப்பும் இருக்காது தமிழர்களுக்கு! இந்த 13 விடயத்தில் பிள்ளையான் குழுவையும் எப்படியாவது இணைக்க முயற்சித்தால் இன்னும் சிறப்பு!

(வெள்ளிக் கிழமை எங்கள் இருவருக்கும் கனவு கூடிப் போய்ச்சுது!😁)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, முதல்வன் said:

45 minutes ago, Justin said:

இதனால் தான் இவர்கள் எல்லா விடயங்களிலும் இணைய வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் துரும்பான 13 இற்கு மட்டும் இணைந்து வாக்களிக்கலாம். மற்றபடி போர்க்குற்ற விசாரணைக்கு ஒருவர், வரலாற்றிற்கு ஒருவர், அபிவிருத்திக்கு ஒரு தரப்பு என சமாந்தரமாகச் செல்லட்டும். இந்த முறையில் ஒரு இழப்பும் இருக்காது தமிழர்களுக்கு! இந்த 13 விடயத்தில் பிள்ளையான் குழுவையும் எப்படியாவது இணைக்க முயற்சித்தால் இன்னும் சிறப்பு!

(வெள்ளிக் கிழமை எங்கள் இருவருக்கும் கனவு கூடிப் போய்ச்சுது!😁)

முதல்வன்,

இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை ஆனால் நல்லாத்தான் இருக்கு.

கிட்டதட்ட 85-87 யாழ் குடாநாட்டை பல இயக்கங்கள் சேர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை போல.

ஜஸ்டின் சொல்வது போல் - தனி தனி specialism தை வைத்து கொண்டு - 13க்கான அழுத்தம் என்ற வகையில் அந்த ஒரு விடயத்தில் மட்டும் 3 கட்சியும் ஒன்றாய் பயணிக்கலாம்.

 அடுத்த கட்டமாக மனோ போன்றோரிடம் “வெளியில் இருந்து ஆதரவு” கோரலாம்.

அதற்கும் அடுத்த கட்டமாக பிள்ளயான் போன்றோரின் ஆதரவையும் கோரலாம். ஆனால் அவர் இணைவது உண்மையில் அவர் சுயமானவரா அல்லது அரசின் 100% பங்காளியா என்பதில் தங்கியுளது.

டக்லஸ், கருணா, அங்கயன், வியாழேந்திரன் இவர்களை இணைப்பது கடினம், இணையவும் மாட்டார்கள். ஆனால் அவர்கள் முடிந்தவை அபிவிருத்தியை செய்யலாம்.

#கனவு காணும் வாழ்கை யாவும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் சொன்ன "பல திசைகளில் வெடி கொழுத்திப் போட்டு காரியம் சாதிப்பது" என்பதை வாசித்த போது பிரெக்சிற் வெளியேற்றத்திற்கு உழைத்த டொமினிக் கம்மிங்ஸ் பற்றிய திரைப்படம் நினைவுக்கு வருகிறது! கம்மிங்ஸ் செய்தது அது தான், அங்கே ஒரு வெடி, ஊடகங்களும் எதிர் தரப்பும் அங்கே ஓடும், பிறகு இங்கே ஒரு கிரனைற் ஊடகங்களும் எதிர்தரப்பும் இங்கே ஓடி வரும்! 

A balding man in a blue jumper, his untidy shirt sticking out at the edges. He standings against a red background, with the word Brexit in large white letters.

டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வென்ற போது ஒரு ரஷ்ய பத்திரிகையாளர் பின்வருமாறு  எச்சரிந்திருந்தார்! "இவர் பல வெடிகளை மாறி மாறிப் போட்டு ஊடகங்களை மிக பிசியாக வைத்திருப்பார். திரைக்குப் பின் தனது கட்சியும் வாக்காளர்களும் எதிர்பார்த்த காரியங்களை சத்தமில்லாமல் முடித்து விடுவார். இந்த சத்தமில்லாத காரியங்களை நாம் கவனமாக அவதானித்து வெளிக்கொணர வேண்டும்". இதை பலர் கவனிக்கவில்லை. இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாரை தப்பட்டையோடு வந்தார்கள்! அவர்களுக்கு கீழ் இருக்கும் சமஷ்டி நீதிமன்றங்களில்  டசின் கணக்கில் இன்று ட்ரம்பின் பார்வை கொண்ட நீதிபதிகள் ஆரவாரமின்றி அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஒரு லிபரல் ஆதரவு தீர்ப்பைப் பெற வேண்டுமானால் கல்லில் நார் உரிக்க வேண்டும்! 

இது போலத் தான் தமிழர்கள் இனி நடந்து கொள்ள வேண்டும்! என்னைப் பொறுத்த வரை எங்கள் தாயக அரசியலில் diversity is a blessing!

Link to comment
Share on other sites

12 hours ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். 

கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும்.

அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும்.

இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. 

இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது.

இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. 

இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். 

அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். 

அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும்.

இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். 

இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன்.

அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

சீமானுக்கு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்களில் தீவிரமான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை யாழ் இணையத்திலேயே பார்க்கின்றோம். தாயகத்தில் அப்படி இல்லை என்பது உண்மை தான் அதற்காக பெருமைபடுகிறேன்.😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.