Jump to content

வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!


Recommended Posts

வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

 

கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார்.

எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை.

எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் உயிரிழந்துள்ளார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடிகர்......ஆழ்ந்த இரங்கல்கள்.......!

பகிர்வுக்கு நன்றி நுணா .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி. எம்மை அதிகம் சிரிக்கவைப்பவர். அது இது எது தொடரில் சிரிச்சா போச்சு பகுதி இவருக்காகவே பார்க்கலாம். மிக சிறந்த நகைச்சுவை கலைஞர். ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். நான் ரசிக்கும் கலைஞரில் இவரும் ஒருவர். இவரும் ராமரும் செய்யும் நகைச்சுவைக்கு அளவில்லை.

ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இயந்திர வாழ்வில் சிரிக்க வைக்கும் நல்ல கலைஞ்ர்களில்   ஒருவர் .ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.