Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்

LTTE-launches-three-pronged-attack-in-Vavuniya-scaled.jpg

 

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்)

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது.

திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென்புறமாக இருந்த மறைவிடங்களில் இருந்து புறப்படத் தயாரானது.

விமானப்படையின் சீருடை, தலையில் விசேட படைப்பிரிவு கொமாண்டோக்கள் கட்டுவது போன்று கறுப்புத்துணி கட்டிக் கொண்டு இலங்கை விமானப்படையின் ரோந்துக்காவல் அணி போன்று பதுங்கிப் பதுங்கி கரும்புலிக் கொமாண்டோக்கள் நகரத் தொடங்கினர்.

வன்னிப் படைத்தலைமையகமும், விமானப் படைத் தளமும் அருகருகாக ஒரே வேலியால் பிரிக்கப்பட்டு நடுவே ஒரு வீதி மட்டும் இருந்தது. அந்த வீதியும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. இந்தத் தளத்தின் தென்பகுதி ஈரற்பெரியகுளத்தை அண்டிய காடுகள் சார்ந்த பிரதேசமாகும்.

இந்த தென்புற வேலியைக் கடந்து வன்னிப்படைத் தலைமையகத்தினுன் கரும்புலிக் கொமாண்டோக்கள் இரகசியமாகப் பிரவேசித்தனர். அதிகாலை 3.05 மணியளவில் செய்மதித் தொலைபேசி ஊடாக வன்னியில் இருந்த புலிகளின் விசேட நடவடிக்கைப் பணியகம் ஒன்றிலிருந்து கிடைத்த கட்டளையை அடுத்து கரும்புலிக் கொமாண்டோக்கள் தாக்குதலை ஆரம்பித்தனர்.

வன்னிப் படைத் தலைமையக வளாகத்திலேயே விசேட படைப்பிரிவின் பிரிகேட் தலைமையகமும் அமைந்துள்ளது. அதைக் கடந்து சென்றே விமானப் படைத்தளத்தினுள் நுழைய வேண்டியிருந்தது. விசேட படைப்பிரிவுத் தலைமையகத்துக்கும் விமானப்படைத் தளத் துக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 200 மீற்றர் களேயாகும்.

உள்ளே நுழைந்த புலிகளின் பிரதான இலக்காக இருந்தது வன்னிப் படைத்தலைமையகத்தின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம், விமானப் படைத்தளத்தில் இருந்த “இந்திரா’ ரகத்தைச் சேர்ந்த இரு பரிமாண ராடர் கண்காணிப்பு நிலையம், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு நிலையம், விமான எதிர்ப்பு பீரங்கி நிலைகள் என்பனவேயாகும்.

வவுனியா விமானப்படைத்தளத்தில் இரவில் விமானங்கள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதில்லை.

அது புலிகளுக்கும் நன்குதெரிந்திருக்கும்.கரும்புலிஅணி விசேட படைப்பிவுத் தலைமையகத்தைக் கடந்தே விமானப்படைத் தளத்தினுள் பிரவேசிக்க வேண்டியிருந்தது. ஆனால் விசேட படைப் பிரிவு கொமாண்டோக்கள் உயர்ந்த பட்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சண்டையைத் தவிர்த்துக் கொண்டு விமானப் படைத்தளத்தினுள் செல்வது சாத்தியமான விடயமாக இருக்காததால் விசேட படைப்பிரிவு கொமாண்டோக்களுடன் கரும்புலிக் கொமாண்டோக்கள் சண்டைøய தொடக்கினர்.

விமானப்படைத்தளத்தின் எல்லை வேலியை சண்டையிட்டபடியே கரும்புலிகள் நெருங்கினர். அப்போது படையினரின் கவனத்தைத் திசை திருப்பி கரும்புலிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியும் தாக்குதலை ஆரம்பித்தது.

ஓமந்தைக்கு அப்பால் உள்ள புளியங்குளம், சேமமடுப் பகுதிகளில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்ட புலிகளின் 130மி.மீ ஆட்டிலறிகள் சரமாரியாகக் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கரும்புலிகளில் சிலர் விமானப்படைத்தளத்தை நெருங்கிச் சென்றனர்.

கரும்புலிக் கொமாண்டோக்களில் ஒருவர் எம்.பி. எம்.ஜி. ரக இயந்திரத் துப்பாக்கியையும், இருவர் ஆர்.பி.ஜி.களையும், ஒருவர் 40மி.மீ கிரனேட் லோஞ்சரையும், ஆறு பேர் T56 துப்பாக்கிகளையும் வைத்திருந்தனர். அதைவிட கண்ணிவெடிப் பிரதேசத்தைக் கடந்து செல்லவும் தடைகளை உடைக்கவும் பெங்களூர் டொபிடோக்களும் அவர்களிடம் இருந்தன.

விமானப்படைத் தளத்தின் எல்லையை அடைந்த கரும்புலிகளுக்கு அங்கிருந்து மேலும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதற்கிடையில் எல்லை வேலியில் இருந்தவாறே கரும்புலி ஒருவர் தொலைத்தொடர்பு கோபுரத்தை இலக்கு வைத்து ஆர்.பி.ஜியால் தாக்குதல் நடத்தினார். மற்றொருவர் விமானப்படையின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தைக் குறிவைத்து தாக்கினார். அதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுப் நிலையம், “இந்திரா’ ராடர் கண்காணிப்பு நிலையம் ஆகியவற்றின் மீதும் ஆர்.பி.ஜி, கிரனேட் லோஞ்சர்களால் கரும்புலிகள் தாக்குதலை நடத்தினர். அத்துடன் எம்.பி.எம்.ஜி. துப்பாக்கி முக்கிய இலக்குகளைக் குறிவைத்து அவ்வப்போது தாக்கியதுடன் விசேட படைப்பிரிவு மற்றும் விமானப் படையினரின் எதிர்ப்பையும் சமாளித்துக் கொண்டிருந்தது.

அப்போது வன்னிப் படைத் தலைமையகம் அதியுச்ச விழிப்பு நிலையில் இருந்ததுடன், சிறப்புப் பயிற்சி பெற்ற விசேட படைப்பிரிவு கொமாண்டோக்களே பாதுகாப்புக்காக நிறுத் தப்பட்டிருந்தனர். இந்த சண்டை ஆரம்பித்ததுமே குறைந்த எண்ணிக்கையான கரும்புலிகளை அவர்கள் சுற்றிவளைத்து மடக்க எத்தனித்தனர்.

அதேவேளை கிட்டு பீரங்கிப் படையணி தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த ஆட்டிலறித் தாக்குதல் உச்சமடையத் தொடங்கியது.

படையினரிடமுள்ள ஆட்டிலறிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவும் நோக்கில் புலிகள் தமது ஆட்டிலறிகளை அடிக்கடி இடம்மாற்றிக் கொண்டு தாக்குதலைத் தொடர்ந்தனர்.

இந்தநிலையில் புலிகளின் மூன்றாவது களம் திறக்கப்பட்டது. சரியாக 3.26 மணியளவில் முல்லைத்தீவு வான்பரப்பில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் பறப்பை வவுனியா ராடர் நிலையத்தின் கண்காணிப்புக் கருவி பதிவு செய்தது. அது புலிகளின் விமானம்தான் என்பதை ராடர் நிலைய அதிகாரிகள் உடனடியாகவே புரிந்து கொண்டனர். ஏற்கனவே அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலின் போதும் புலிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

வவுனியா விமானப் படைத்தளத்தின் நடவடிக்கை பணியகத்தில் அதன் பொறுப்பதிகாரியான ஸ்குவாட் ரன் லீடர் சஞ்சய அதிகாரி கடமையில் இருந்தார். ராடர் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் புலிகளின் விமானம் பறப்பது பற்றிய தகவலை அவருக்குத் தெரியப்படுத்தினர். அவர் உடனடியாக விமானப்படைத் தலைமையகத்தின் நடவடிக்கைத் தலைமையகத்தில் இருந்த பணிப்பாளர் எயர் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்கிரமவுக்கு அறிவித்தார்.

இந்தநிலையில் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை உசார்படுத்திய விமானப்படை நடவடிக்கை பணியகம், நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள கேந்திர நிலைகளை உசார்படுத்தியது. இந்த நிலையில் அதிகாலை 3.31 மணியளவில் மற்றொரு விமானத்தின் பறப்பும் வவுனியாவில் இருந்த ராடரில் பதிவானது.

அடுத்த 5 நிமிடங்களில் புலிகளின் விமானங்கள் வவுனியா வான்பரப்பைத் தொட்டன.

அப்போது வவுனியா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் இருந்த இராணுவ, விமானப்படைத் தளங்கள், முகாம்களில் இருந்த அனைத்துப் பீரங்கிகள், துப்பாக்கிகளும் வானை நோக்கி குண்டுகளைக் கக்கின.

படையினரின் குண்டுகள் புலிகளின் விமானங்களைத் தேடி, வானத்தில் கோடு கிழித்துக் கொண்டிருக்க, புலிகளின் விமானங்கள் தாக்க வேண்டிய படைநிலைகளை இனங்கண்டு அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன.

வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று வன்னிப் படைத் தலைமையகத்தின், விசேட படைப்பிரிவின் பிரிகேட் தளபதி கேணல் நிர்மல் தர்மரட்ணவின் வசிப்பிடத்தில் விழுந்தது. அப்போது அவர் விடுமுறையில் இருந்தார். அத்துடன் அந்தக் குண்டு ஈரமாகக் கிடந்த நிலத்தில் புதையுண்டு போனதால் வெடிக்கவில்லை.

புலிகள் விமானத்தில் இருந்து வீசிய குண்டுகள் அனைத்தும் வன்னிப்படைத் தலைமையகத்தின் மைய ப்பகுதிகளிலேயே விழுந்தன.

ஒரு குண்டு “இந்திரா’ ராடர் கண்காணிப்பு நிலையத்தை சேதப்படுத்தியது. மற்றொன்று அதிகாரிகள் விடுதியையும் உணவகப் பகுதியையும் சேதப்படுத்தியது. மற்றொன்று வன்னிப்படைத் தலைமையகக் கட்டடத்தில் விழுந்து வெடித்தது புலிகளின் விமானங்கள் 6 நிமிடங்கள் வவுனியா வைக் கலக்கிவிட்டு வேறு வேறு திசைகளில் பிரிந்து சென்றன. ஒன்று இரணைமடுப் பக்கமாகச் சென்றது. மற்றது முல்லைத்தீவுப் பக்கமாகச் சென்றது.

இந்தநிலையில் புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிக்கும் நோக்கில் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து, புலிகளின் விமானங்களை இடைமறித்துத் தாக்கும் விமானங்களை அனுப்பிவைக்குமாறு விமானப்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் எயார் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்கிரம 5 ஆவது ஸ்குவாட்ரனின் கட்டளை அதிகாரிக்குப் பணித்தார்.

விமானப்படையின் 5ஆவது ஸ்குவாட்ரனில் தான் சீனத்தயாரிப்பு (F-7-G) எவ்.7ஜி ரகத்தைச் சேர்ந்த இடைமறிப்பு போர் விமானங்கள் இருந்தன.

புலிகளின் விமானங்கள் ராடரில் தெரிந்த 8ஆவது நிமிடத்தில் அதிகாலை 3.34 மணியளவில (F-7-G) இடைமறிப்பு போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றன.

வன்னி வான்பரப்பை எட்டிய F-7 ஜெட் போர் விமானங்கள் சுற்றிச் சுழன்று வட்டமடித்து புலிகளின் விமானங்களைத் தேடின.

அதிகாலை 4 மணியளவில் இந்த விமானங்கள் புதுக்குடியிருப்புப் பகுதிகளிலும் இரணைமடுவிலும் தாக்குல்களை நடத்தின. கூடவே தரைத்தாக்குதலுக்கு 12ஆவது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த மிக்27  (MiG-27) ஜெட் போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

விமானப்படையின் எவ்7 விமானம் ஒன்றின் விமானி முல்லைத்தீவுக்கு மேற்காக முள்ளியவளையை அண்டிய வான்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் விமானத்தை அடையாளம் கண்டு, வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அதிகாலை 3.56 மணியளவில் புலிகளின் விமானம் தீப்பிளம்பாக முள்ளியவளைக் காட்டுப்பகுதியில் விழுந்ததை விமானி பார்த்தாகவும் படைத்தரப்பு கூறுகிறது.

அத்துடன் மணலாறு களமுனையில் உள்ள 59ஆவது டிவிசன் துருப்பினரும் சிவப்பும், மஞ்சளுமான தீப்பிளம்பு ஒன்று வானத்தில் இருந்து விழுவதை அவதானித்ததாக படத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் புலிகள் தமது விமானங்கள் தாக்குதல் நடத்தி விட்டுப் பாதுகாப்பாகத் தளம் திரும்பி விட்டதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தி முடித்த பின்னரும் வன்னிப்படைத் தலைமையகத்தின் மையப் பகுதிகளில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆட்டிலறி ஷெல்கள் தொடர்ச்சியாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பெரும்பாலான ஷெல்கள் வன்னிப்படைத் தலைமையகப் பிரதேசத்தில் உள்ள கட்டடங்கள், படைநிலைகளில் விழுந்து சேதங்களை ஏற்படுத்தின. விடிகாலை 5.30 மணி வரையிலும் இந்தத் தாக்குதல் நீடித்தது.

புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலை முறியடிக்க படையினரும் பல்குழல் பீரங்கிகள் மற்றும் 130மி.மீ, 122மி.மீ, 152மி.மீ ஆட்டிலறிகளைப் பயன்படுத்தி ஓமந்தைக்கு வடக்காக உள்ள பிரதேசத்தின் மீது செறிவான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

ஆறு கரும்புலிகள் படையினருடனான சண்டைகளின் போதும், நால்வர் தமது உடலில் பொருத்தியிருந்த “சார்ஜர்’ எனப்படும் குண்டுகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியும் உயிரிழந்த பின்னரே மோதல்கள் முடிவுக்கு வந்தன.

அத்துடன் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல்களும் முடிவுக்கு வர, வன்னிப் படைத்தலைமையகப் பிர தேசத்துக்குள் தேடுதல்களை ஆரம்பிக்க வன்னிப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெய சூரிய உத்தரவிட்டார்.

வவுனியா நகரில் எங்கும் பீதி தொற்றிக் கொண்டிருந்தது. பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு தாக்குதலுக்குச் சென்ற புலிகள் எவரும் தப்பிச் செல்லாத வகையில் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தேடுதல்களின் போது கரும்புலிகள் 10 பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவர்களின் ஆயுதங்களும் பெரும்பாலும் ரவைகள், குண்டுகள் தீர்ந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டன.

சில புலிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று படைத்தரப்பு சந்தேகிக்கிறது. முன்னர் 11 புலிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் படைத்தரப்பால் கூறப்பட்டது. ஆனால் பின்னர் 10 சடலங்களே புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்து கரும்புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அவர்கள் பற்றிய விபரங்களைப் புலிகள் அன்று நண்பகலே வெளியிட்டிருந்தனர்.

லெப். கேணல் மதியழகி தலைமையிலான 5 பெண் கரும்புலிகளும், லெப். கேணல் விநோதன் தலைமையிலான 5 ஆண் கரும்புலிகளும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருந்தனர்.

கரும்புலிகளுக்கு வழிகாட்டிச் சென்ற வேவுப் புலிகள் சிலர் தாக்குதலை அடுத்துத் தப்பியிருக்கும் வாய்ப்புகளை இராணுவத்தரப்பு நிராகரிக்கவில்லை. தாக்குதலின் பின்னர் மீட்கப்பட்ட பொருட்களில் 9 மி.மீ பிஸ்டல் ரவைகளும் அடங்கியிருந்தன. ஆனால் கரும்புலிகள் எவரிடத்தில் இருந்தும் பிஸ்டல் துப்பாக்கிகளோ அல்லது இந்த ரவைகள் பயன்படுத்தக் கூடிய வேறு எந்தத் துப்பாக் கிகளோ கைப்பற்றப்படவில்லை.

தாக்குதலுக்குப் பயன்படுத்தாத எந்த ஆயுதத்துக்கும் புலிகள் ரவைகளைக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள் என்பதால் சில வேவுப் புலிகள் தப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் விமானப்படையின் ராடர் கண்காணிப்பு நிலையம், தொலைத்தொடர்பு கோபுரம், விமான எதிர்ப்பு ஆயுதம், தொலைத்தொடர்பு தொழில் நுட்ப ஆய்வகம், வெடிபொருள் களஞ்சியங்கள் என்பன அழிக்கப்பட்டதாகவும், 20இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்திருப்ப தாகவும் புலிகள் அறிவித்தனர்.

அதேவேளை ராடர் நிலையம் சிறிய சேதத்துடன் தப்பிவிட்டதாக ஒரு சந்தர்ப்பத்திலும், எந்த சேதமும் அடையவில்லை என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் படைத்தரப்பு தகவல்களை வெளியிட்டது.

அதேவேளை புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலில் தலை மையகக் கட்டடங்கள் பலவும் சேதமுற்றதா கவும் 12 இராணுவத்தினரும், 1 பொலிஸ் கான்ஸ்டபிளும் கொல்லப்பட்டதுடன், 15 படையினரும், 9 பொலிஸாரும், 7 விமானப்படையினரும் காயமடைந்தனர் என்றும் படைத்தலைமை அறிவித்துள்ளது.

புலிகள் இந்தத் தாக்குதலின்போது 80இற்கும் அதிகமான 130மி.மீ ஆட்டிலறி ஷெல்களை ஏவியதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. புலிகள் 130மி.மீ ஆட்டிலறி ஷெல்களை பெருந்தொகையில் ஏவியிருப்பது அவர்களிடம் போதியளவு ஷெல்கள் கையிருப்பில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

10 கரும்புலிகளை இழந்து, இந்தத் தாக்குதலின் மூலம் படைத்தரப்புக்கு புலிகள் ஏற்படுத்திய பௌதிக சேதங்களின் அளவு குறித்து குறைத்தே மதிப்பிடப்படுகிறது. இருப்பினும் படைத்தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கின்ற நெருக்கடி மற்றும் அழுத்தங்களின் அளவு அதிகமானது.

புலிகள் வலுவிழந்து பலமிழந்து போய்விட்டனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி வந்தவர்களுக்கு மூன்று வழிகளில் புலிகள் நடத்திய தாக்குதல் பல்வேறு நெருக்கடிகளையும் கொடுத்திருக்கிறது.

“கிளிநொச்சியை நெருங்கிவிட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால் புலிகள் பீரங்கி மூலமும், தரைவழியாகவும், வான்வழியாகவும் வந்து வவுனியாவில் தாக்கி ராடரை அழித்துள்ளனர்.

படைத்தளத்தை நாசப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அன்றைய தினமே ஐ.தே.க.வினர் நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பும் அளவுக்குப் புலிகளின் தாக்குதல் தாக்கம் நிறைந்ததாக இருந்தது புலிகள் வவுனியாவுக்குள் வந்து எப்படித் தாக்குதல் நடத்தினர் என்ற விசாரணையும் ராடர் நிலையத்தின் இருப்பிடத்தை எப்படி அறிந்து கொண்டு உள்ளே வந்தனர் என்பது குறித்தும் இப்போது வெவ்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

நெடுங்கேணி வெடிவைத்தகல்லு வழியாக மணலாறின் யக்கவௌ பிரதேசத்துக்குள் ஊடுருவி வவுனியாவின் ஆசிக்குளம், ஈரப்பெரியகுளம், மூன்றுமுறிப்பு, சமளங்குளம் வழியாகப் புலிகள் வந்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. என்னதான் படைத்தரப்பு இந்தத் தாக்குதலை முறியடித்து விட்டதாகக் கூறினாலும், புலிகள் படைத்தளத்தினுள் நுழைந்த பின்னரே அது பற்றி அவர்களால் அறிந்து கொள்ள முடிந் திருக்கிறது. இது பாதுகாப்புக் குறைபாடுகளின் உச்சமாகும்.

வன்னியில் இருந்து அனுப்பப்பட்ட கரும்புலிகள் அணி எந்தப் பிரச்சினையும் இன்றி வன்னிப் படைத் தலைமையகத்தினுள் நுழைகின்ற அளவுக்குப் படைத் தரப்பின் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கிறது எனச் சொல்வதைவிட, புலிகள் மிகவும் துல்லியமான வேவுத்தகவல்களைத் திரட்டி பாதுகாப்பாக ஊடுருவியிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தம் வன்னிக் கட்டளை மையத் தாக்குதலில் ராடார் நிலையம், ஆயுதக் களஞ்சியம், தொலைத்தொடர்பு கோபுரம் தாக்கியழிப்பு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துளளனர்

வவுனியாவில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டளை மையத்தில் அமைந்துள்ள ராடார் நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் வவுனியா கட்டளைப் பீடத்தினுள் ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணி ஒன்று ராடர் நிலையத்தை தாக்கிய அழித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கரும்புலி சிறப்பு அணியினர் வவுனியாவில் அமைந்துள்ள வன்னிக் கட்டளை மையம் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். கரும்புலி அணியினருக்கு ஆதரவாக கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரால் செறிவான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகளின் வான்படையினர் கட்டளை மையம் மீது துல்லியமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

வன்னிக் கட்டளை மையத்தில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு கோபுரம், ஆயுதக்களஞ்சியம், தொழில்நுட்ப ஆய்வகம், வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட வானூர்திகள் பாதுகாப்பாக தளம்திரும்பியதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துளளனர். வன்னிக் கட்டளை மையம் மீது வான் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிய இரு வானூர்திகளும் பத்திரமாக தளம் திரும்பியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அன்றைய சமகால ஆய்விலிருந்து…
எழுத்துருவாக்கம்:சுபத்ரா.

 

https://thesakkatru.com/ltte-launches-three-pronged-attack-in-vavuniya/

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!  

Link to comment
Share on other sites

 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

spacer.png

கரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

v7eZLaN9flBtSmQu1rrW.jpg

 

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தேசப்புயல்களின் நினைவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்”

QlEw6WGF2fW6msf3olI4.jpg

 

 

RguXEjacYSGd25h3aMZb.jpg

 

“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் புயல்கள்”

 

5oqjY2DqKmcbMrITBULo.jpg

 

 

Wb6wRXLPpwCteCfHQ5AT.jpg

 

 

Wgy3Jkhle6sgfDAes4SB.jpg

 

 

qxBYks6JMBDFU2RzmCmq.jpg

 

 

zkvsEfObCAYWn9mjfaTa.jpg

 

nYYc3mMmwK1pRlLGBSTE.jpg

 

 

efGLmrcUPrTMtMCbLTzb.jpg

 

 

Tlo1ItECxfhNGP6IRMzM.jpg

 

 

K1XF0p6Fit5rc2u21PD3.jpg

 

 

mahtJGFdP4K8enQcOjBd.jpg

https://www.thaarakam.com/news/c29a5345-f250-40f8-a456-beea4b7acfe6

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அப்ப இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியனுக்கு என்ன வேலை?
  • பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது. October 13, 2021 தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார். இந்த காணொலியை மையமாக வைத்து அவர் பெரும் சர்ச்சையாக்குள் தள்ளப்பட்டார். பல்வேறு ஏச்சு-பேச்சுக்கள், ஆபாச நையாண்டிகள், கிண்டல்கள் என அவருக்கு கடுமையான தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இப்படி ஒரு காணொலி வெளியிட்டது ஒழுக்கக்கேடான செயல் என சமூக வலைத் தளங்களில் ’நல்லவர்கள்’ பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து தனது அடுத்த காணொலியில் மேலாடைக்குள் இரண்டு உள்ளாடை அணிந்து அதற்கான பதிலையும் தந்தார் பத்மா. “Let’s not police women’s bodies in 2020 – OK “. அதாவது “2020-ம் ஆண்டில் பெண்களின் உடலை கண்காணிக்காமல் இருக்கலாமே” என்று கூறியிருந்தார். இதைப் போன்றே பாலிவுட் நடிகை சாமிரா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதுகையில் பிரா, காண்டாக்ட் லென்ஸ் போன்றவை அழகின் குறியீடுயில்லை எனவும் அத்தகைய கண்ணோட்டத்திலிருந்து தான் வேறுபடுவதாகவும்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பலரும் அதனைப் பாராட்டினர். பலர் சாடினர். பெண்களின் ஆடையில் ஓரு அங்கமான பிரா, சமூகத்தின் மனப்போக்கில் எந்த மாதிரியாக இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் ஒரு ஆதாரம். கடந்த ஆண்டு முதல் நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று பிரச்சினை காரணமாக போடப்பட்டுள்ள லாக்-டவுன், வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை பார்க்கும் நிலைமையை ஏற்படுத்தியது. உண்மையில் இது பல பெண்களுக்கு ஒரு உடல்ரீதியான சுதந்திரத்தைக் கொடுத்தது எனலாம். அலுவலகத்திற்குச் செல்கையில் கண்டிப்பாக பிரா அணிந்து செல்வது அவசியம் என்ற சமூக நிர்பந்தம் இருக்கையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கையில் பெண்களுக்கு பிரா அணியும் கட்டாயத்திலிருந்து விடுதலை அளித்தது இந்த லாக்-டவுன் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆண்கள் வெளியே செல்கையில் பனியன் அணிந்து செல்வதோ, அணியாமல் செல்வதோ, சமூகத்தில் எவ்வித எதிர்ப்பையோ ஆதரவையோ பெறுவது இல்லை. ஆனால் ஒரு பெண் வெளியே செல்கையில் பிரா அணியாமல் சென்றால், அது இந்தச் சமூகத்தின் கண்களில், அவள் ஆபாசப் பண்டமாகவும், தவறான  நடத்தை கொண்டவளாகவும் தெரிகிறாள். இதன் காரணம் என்ன ? பலரும் பிரா அணிவது பெண்களுக்கு நலன் பயக்கக் கூடியது என்று கூறுகின்றனர். அதற்குப் பல மருத்துவக் காரணங்களைக் கூறுகின்றனர். பெண்கள் பிரா அணியாமல் இருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் என்கின்றனர். மேலும் பிரா அணியாவிட்டால், கூப்பர் தசைநார்கள் (Cooper Ligaments) பாதிக்கப்படும். மார்பகங்கள் தளர்வுற்று தொய்வடையும் என்கின்றனர். இவற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா ? கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 15 ஆண்டுகால ஆய்வு முடிவுகளில், பிரா அணிவதால் எந்த நன்மையும் இல்லை என்று கூறப்படுவதோடு கூடுதலாக, அவை மார்பகங்களை ஆதரிக்கும் தசைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளரும் விளையாட்டு அறிவியல் வல்லுநருமான ஜீன்-டெனிஸ் ரூலியன் பிரான்ஸ் இத்தகவலை பிரெஞ்சு வானொலி நெட்வொர்க்கிடம் நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், இளம் பெண்கள் பிரா அணிவதை நிறுத்தும்போது அவர்களின் மார்பகங்களின் தன்மை மோசமடையாது என்பதையும் ஆய்வு முடிவுகளில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறார், ரூலியன். அதே போல, பிரா என்பது பெண்களின் ஆடையில் ஒரு பகுதியே அன்றி அது மருத்துவ சாதனம் அல்ல என்று “ஜீன் ஹெய்ல்ஸ்” மகளிர் சுகாதார அமைப்பின் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார். அடுத்ததாக, பிரா அணியாமல் இருப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதாக சொல்லப்படுவதைப் பற்றி பார்க்கலாம். பிரா அணிவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று எந்த ஆய்வுகளும் இல்லை. இதற்கு எந்தவிதத்திலும் அறிவியலில் இன்றுவரை எந்தச் சான்றுகளும் இல்லை. பிரா அணிவது அல்லது அணியாமல் இருப்பது மற்றும் மார்பக புற்றுநோயை வளர்ப்பது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிரூபிக்கும் நம்பகமான ஆராய்ச்சி இல்லை. இதனை ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் கவுன்சில் தனது வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது. பிரா அணிவது மார்பக தொய்வைக் குறைப்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில். மார்பகங்கள் இயற்கையாக இருக்கின்ற விதம் அல்லது அதன் தளர்ச்சி போன்றவை மரபியல், ஹார்மோன்கள் மற்றும் எடையுடன் அதிக அளவில் தொடர்புடையதாக இருப்பதாகவும் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார். பிரா அணிந்தால் மார்பகங்களின் வளர்ச்சி குறைந்துவிடும் என்று நிலவும் சில கருத்துக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறார் மருத்துவர் அமண்டா நியூமன். இந்த ஆய்வு முடிவுகள் இப்படி இருக்க, பின் ஏன் அசௌகரியமான இந்த ஆடையை பெண்கள் அணிகின்றனர் அல்லது அணிய நிர்பந்திக்கப்படுகின்றனர், என்ற கேள்வி எழுகிறது. கற்பு (ஒழுக்கம்) என்ற பெயரிலும், ஃபேஷன் என்ற பெயரிலும் பெண்கள் மீது இந்த உடை எவ்வாறு திணிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்னர், பிராவின் சுருக்கமான வரலாறு குறித்துப் பார்ப்போம். பிரா வரலாறு பிரா என்றும் பிரெசியர்ஸ் என்றும் இன்னும் பலவிதமான பெயர்களில் பெண்களின் உடைகளில் ஒரு பிரிக்கமுடியாத ஒன்றாக நீடித்திருக்கிறது இந்த ஆடை. வரலாறு நெடுகிலும், பெண்கள் தங்கள் மார்பகங்களின் தோற்றத்தை பராமரிக்கவும், மறைக்கவும், கட்டுப்படுத்தவும், வெளிப்படுத்தவும் அல்லது மாற்றவும் பல்வேறு ஆடைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தியுள்ளனர். வரலாற்று ரீதியாக, பிரா அல்லது பிகினி போன்ற ஆடைகள் மினோவான் நாகரிகத்தின் பெண் விளையாட்டு வீரர்களின் கலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கி.மு.14 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க-ரோமன் நாகரிகங்களிலும் பெண்கள் மார்பகத்தை பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிராவை ஒத்த சிறப்பு ஆடைகளை உருவாக்கியுள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.   கிபி 14-ம் நூற்றாண்டில், பிராவின் முன்மாதிரி உடைகள் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தன. அதன் பின் ஏறக்குறைய கிபி 16-ம் நூற்றாண்டு முதல், மேற்கத்திய நாடுகளின் பணக்காரப் பெண்களின் உள்ளாடைகளில் கோர்செட் (corset) எனும் உடை ஆதிக்கம் செலுத்தியது. இது மார்பகங்களின் எடையை தாங்கி நிற்க உதவும் என்று கருதப்பட்டது. மேலும் அவர்களின் அழகு சாதனங்களின் ஓரு பகுதியாக அவ்வுடை பார்க்கப்பட்டது. உலகின் மிக பழமையான பிரா 1390 மற்றும் 1485 ஆண்டுகளுக்கு இடையில் ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் ஆஸ்திரிய லெம்பெர்க் கோட்டையின் தரைப் பலகைகளின் கீழ் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சரிகைகளால் நெய்யப்பட்ட பிரா கண்டுபிடிக்கப்பட்டது. கோர்செட்-டிலிருந்தே (corset) பிரா பிறந்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு மாற்றுகளைப் பரிசோதித்ததிலிருந்து தான் ப்ராவிற்கு வடிவம் கிடைத்தது. பின் காலப்போக்கில் இருவேறு பாகங்களாக பயன்படுத்தியதில் பிரா பெரும் வரவேற்பை பெற்றது.   20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், சமகால பிராக்களை ஒத்த உடைகள் தோன்றின, இருப்பினும் வணிக அளவிலான உற்பத்தி 1930-கள் வரை நடக்கவில்லை. அப்போதிருந்து ‘கோர்செட்’களின் காலம் முடிந்து பிராக்களின் காலம் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறை கோர்செட்டின் முடிவை ஊக்குவித்தது. பிரா வடிவமைப்பு அதன் எளிமையான தன்மையால் பிரபலமடைந்தது. போர் முடிவடைந்த நேரத்தில், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், ஃபேஷன்  ஆடை வடிவமைப்பு பரிணாமம் அடையத் துவங்கியது. மனிதர்களுக்கு வசதியான வகையில் உடைகளை வடிவமைக்கும் நோக்கம் கொண்டதாக நவீன ஆடை வடிவமைப்பு தோன்றினாலும், பெண்களை பாலியல் நுகர்வுப் பண்டமாக மாற்றும் வகையிலும் அது பரிணாமம் அடைந்ததும் அந்தக்காலத்தில் தான். ஃபேஷனின் இந்தப் பரிணாமம், பெண் உடலின் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது. ஃபேஷன் என்ற பெயரில், பெண்களின் மார்பளவை அதிகப்படுத்திக் காட்டுவது, பெண்களின் மார்பை வெளிப்படுத்திக் காட்டுவது போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்குள் தள்ளப்பட்டது பிரா. பெண்களின் அழகை மார்பகங்களின் அளவிலிருந்தும், அதனை வெளிப்படுத்துவதிலிருந்தும் நிர்ணயித்தது முதலாளித்துவம். அழகிற்கான நியதியையும் வரையறையையும் உருவாக்கியது. அதனை நோக்கி  தம்மை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தது முதலாளித்துவம். இதன் ஒரு அம்சமாக ‘ஃபேஷன் ஷோ’க்களும், அழகிப் போட்டிகளும் நடத்தப்பட்டன. பொருளாதார ரீதியான கட்டுப்பாடு ஆண்களின் கையில் இருக்கும் நிலையில், பெண்கள் தங்களை ‘அழகாக்கிக்’ கொண்டு ஆண்களை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உடைகளை ஃபேஷனாக களமிறக்கினர். இதற்கு எதிராக அமெரிக்காவில் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். பெண்களை ஆபாசப் பண்டங்களாக மாற்றுவதற்கு எதிரான முதல் போர்: 1968-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டிக்கு எதிரான முதல் போராட்டம் நடந்தது. அங்கு சுமார் 400 பெண்கள் வெளியே கூடி பிராக்கள், ஐ லேஷர்ஸ், ஹேர்ஸ்ப்ரே மற்றும் ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் என பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் பொருட்களை எல்லாம் ‘சுதந்திர குப்பைத் தொட்டியில்’ (Freedom Trash can ) இட்டனர். இது புகழ்பெற்ற “Burn the bra” இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. இது உலகெங்கிலும் இது குறித்த தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு. “சுதந்திர குப்பைத் தொட்டி போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு சிவில் உரிமைகள் அல்லது வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கங்களில் முந்தைய அனுபவம் இருந்தபோதிலும், பெண்கள் உரிமைகளுக்காக அவர்கள் பங்கேற்ற முதல் போராட்டம் அது” என போராட்டத்தில் பங்கேற்ற மார்கேன் என்பவர் கூறுகிறார். அமெரிக்காவில் அழகு போட்டிபோட்டி பங்கேற்பாளர்கள் நல்ல உடல் தகுதி, உடல் அமைப்பு, வெள்ளை நிறம் போன்றவைகளை அத்தியாவசிய தேவைகள் காரணிகள் என வரையறைத்திருந்தது. வெள்ளை இனத்தின் அடுக்குமுறை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்தாலும், இந்த போட்டிகளில் வெள்ளை நிறத்தவர் அல்லாத வெற்றியாளர்கள் அதுவரை தேர்வு செய்யப்படவில்லை. 1921-ல் அழகிப் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து, எந்தப் போட்டியிலும் ஒரு கருப்பின பெண் கூட இறுதிப் போட்டியாளராக இருந்தில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற “ஃப்ரீடம் ட்ராஷ் கேன்” போராட்டத்திற்கான செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. புவேர்ட்டோரிக்கன், அலாஸ்கன், ஹவாய், அமெரிக்க – மெக்சிகன், அமெரிக்க – இந்தியன் என வெள்ளை நிறத்தவரல்லாத எவரும் வெற்றியாளராக இருந்ததில்லை. அந்த அழகி போட்டிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் சுட்டிக்காட்டிய 10 அம்சங்களில் இனவாதமும் ஒன்று. பெண்களின் எழுச்சியாக சுமார் 50 வருடம் கடந்து பேசப்படும் போராட்டமாக அமெரிக்காவில் தோன்றிய இப்போராட்டம் இருக்கிறது. ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் மேலும் பல பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அதை அணிய பிறரை நிர்பந்திப்பதும் இழிவானது. சிந்துஜா சமூக செயற்பாட்டாளர்   https://www.vinavu.com/2021/10/13/problem-of-bra-a-historical-insight/
  • https://www.facebook.com/profile.php?id=100073156405565 சேரமானின் ஆவி வல்ல முனி என்னும் பெயரில்  மீண்டும் வருகிறது .......😀 நான் நலம் பையா. கிரிக்கற்றைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் போட்டியில் பங்குபற்றுவது நல்லதல்ல. கடந்த தடவை போல கேலிக்கூத்தாக்கிவிடும். 😀 எனக்கு அந்த விளையாட்டைக் கண்டாலே பிடிக்காது.  தமித் தேசியம் என்பது வேறு அதை மறுப்பவர் எதிர்ப்பவர் வேறு. இரண்டுக்கும் முடிசிச்சுப் போடக்கூடாது. மறுப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களை கடந்து போகும் துணிவு இருந்தால் மறுக்கலாம். அல்லது மௌனமாக இருப்பது தான் சிறந்தது.
  • தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்! மின்னம்பலம்2021-10-20 தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய மொழியான இந்தியை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல... நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்று தான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை. தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும். ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50% இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.   https://minnambalam.com/politics/2021/10/20/17/pmk-ramadoss-says-job-should-be-allocate-to-only-tamil-people
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.