Jump to content

மரணதண்டனை விதிக்கப்பட்ட குட்டி மணியை, பாராளுமன்றத்திற்கு அனுமதிக்காத பாகிர் மாகார் சிறந்த முன்னுதாரணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது,

“டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது பெயரை, தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமாணி அறிவித்தலில் வெளியிட்டிருந்ததோடு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பி வைத்திருந்தது.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், குட்டி மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்து. அவர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு  செய்திருந்தார். அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு நாடாளுமன்றில் இடமளிக்க முடியாதெனக் கூறி, அப்போதிருந்த சபாநாயகர் பாகிர் மாகார், சிறந்த முன்னுதாரணம் ஒன்றை வழங்கியிருந்தார்.

“ஆனால், அந்த முன்னுதாரணத்தை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள அனுமதியளித்திருந்தீர்கள். அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைகளை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்திருந்தீர்கள். ஏன் இப்படித் தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறீர்கள்? இதனூடாக நீங்கள் அரசமைப்பை மீறியிருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,  “இந்த விவகாரம் தொடர்பில், நீங்கள் நீதிமன்றிலேயே விவாதிக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பின் அடிப்படையிலேயே நான் செயற்பட்டிருக்கிறேன்” என்றார்.

நீதிமன்றம் தொடர்பிலும் நீதிபதிகள் தொடர்பிலும், தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாம் அதனைப் பற்றிக் கலந்துரையாடப் போவதில்லை. சபாநாயகர், அரசமைப்பை படிக்க வேண்டுமெனவும் தெரிவித்ததோடு, சபாநாயகருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியவர்கள், அரசமைப்பின் 89, 91 உறுப்புரிமைகளைப் படிக்காது ஆலோசனை வழங்கியுள்ளார்கள் எனவும் சாடினார்.

http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_750.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிமணி பாராளுமன்றுக்கு தெரிவானாரா?

எப்போ? 1977இல் தானே பாராளுமன்ற தேர்தல்?

1982இல் சர்வஜன வாக்கெடுப்பு அல்லவா நடந்தது?

தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

குட்டிமணி பாராளுமன்றுக்கு தெரிவானாரா?

எப்போ? 1977இல் தானே பாராளுமன்ற தேர்தல்?

1982இல் சர்வஜன வாக்கெடுப்பு அல்லவா நடந்தது?

தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் விளக்க முடியுமா?

Nomination to the parliament[edit]

Before his death, Kuttimani was officially nominated to the Vaddukoddai constituency in 15 October 1982, when the then sitting member of TULF party, T.Thirunavukkarau died on 1 August 1982. However the legal sources, then under the control of President J. R. Jayewardene, ruled that Kuttimani's nomination as a member of parliament was invalid.[4] The then Prisons Commissioner Priya Delgoda announced on 16 October 1982 that Kuttimani would not be released from prison to take his oaths at the parliament. Kuttimani's appointment was gazetted while he was under a sentence of death. In a statement issued to explain the reasons for nominating Kuttimani to the vacant parliamentary seat, the TULF officials included five. Among these are two prominent reasons: (1) Kuttimani's nomination is a token protest against the state terrorism perpetrated from time to time through the agencies of the police and military personnel especially on the young Tamils of the country. (2) It is a protest against the death penalty imposed on Kuttimani and Jegan. Subsequently, on 4 February 1983, Kuttimani's death sentence was commuted to life imprisonment under the general amnesty proclaimed by President Jayewardene. After this, Kuttimani resigned his Vaddukoddai seat in the parliament, to which he was nominated.[4]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றி எபொத.

இது எனக்கு இதுவரை தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எனக்கும் இது வரை தெரியாது ...மக்களது ஆதரவு இவருக்கு இருந்த படியால் தான் .....யால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எனக்கும் இது வரை தெரியாது ...மக்களது ஆதரவு இவருக்கு இருந்த படியால் தான் .....யால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா 

என்னடா வெள்ளிகிழமையும் அதுவுமா சுமூகமா போகுதேன்னு யோசிச்சன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

என்னடா வெள்ளிகிழமையும் அதுவுமா சுமூகமா போகுதேன்னு யோசிச்சன்🤣

நீங்களே சொல்லுங்கள் உண்மையில் குட்டிமணி பிடிபடாமல் இருந்திருந்தால் இந் நேரத்திற்கு  ஒரு தீர்வு கிடைத்திருக்குமா இல்லையா ?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்களே சொல்லுங்கள் உண்மையில் குட்டிமணி பிடிபடாமல் இருந்திருந்தால் இந் நேரத்திற்கு  ஒரு தீர்வு கிடைத்திருக்குமா இல்லையா ?
 
அக்காச்சி,

நானெல்லாம் அவர் பிடிபட்டேக்க நிசமாவே ஒரு குட்டிமணிதான்🤣.

ஆனபடியால் இதை தெளிவாக நம்ம குமாரசாமி அண்ணை போல் அப்போ களத்தில் நின்றவர்கள்தான் சொல்ல முடியும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அக்காச்சி,

நானெல்லாம் அவர் பிடிபட்டேக்க நிசமாவே ஒரு குட்டிமணிதான்🤣.

ஆனபடியால் இதை தெளிவாக நம்ம குமாரசாமி அண்ணை போல் அப்போ களத்தில் நின்றவர்கள்தான் சொல்ல முடியும்🤣

நம்பிட்டேன் ,நம்பிட்டேன் tw_lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

எனக்கும் இது வரை தெரியாது ...மக்களது ஆதரவு இவருக்கு இருந்த படியால் தான் .....யால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா 

தேர்தலில் நிற்கவில்லை  இறந்தவருக்கு பதிலாக இவரை நியமித்தார்கள் என நினைக்கிறேன்....மக்கள் ஆதரவு என சொல்ல முடியாது ...தற்பொழுது மகிந்தா சிறையில் இருக்கும் இருவரை (ஒருவரை தமிழர்களுக்கும் மற்றவரை சிங்கள் எதிர்க்ட்சிக்கும் )வாக்குகள் மூலம் வெற்றியடை செய்து கெத்து காட்டுவது போன்று
அன்று தமிழர்விடுதலை கூட்டணி குட்டிமணியை பா.உ வாக்கி ஒரு கெத்தை காட்டினார்கள்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1981 என நினைக்கின்றேன் வல்லிபுரக்கோவில்  மணல் காட்டு பகுதியில் படகில் வந்த சிலரை பருத்தித்துறை  போலீசார் கைது செய்து எந்த பரபரப்பும் இல்லாமல்  பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை தாம் கைது செய்திருப்பது குட்டிமணி என்று . பின்பு குற்ற புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததில் இவர்தான் குட்டிமணி என்று அறிந்தார்கள். பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கும் போது நீதிபதி குட்டிமணியை பார்த்து ஒரு வேளை ஜனாதிபதி ஜேயார், உங்கள் மரண தண்டனையை மாற்ற பரிசீலிக்கலாம் என்றார். அதை மறுத்த குட்டிமணி சொன்னார் உலகமே தமிழ் ஈழம் என்றோரு நாட்டின் விடிவுக்காக காத்திருக்கிறது என்று கூறி ,  என் மரணத்திற்கு பின் எனது இரு கண்களையும் பார்வை இழந்த தமிழருக்கு கொடுக்கவும். பிறக்க போகும் தமிழ் ஈழத்தை எனது இரு கண்கள் ஊடாகவும் பார்ப்பேன் என்றார்.  வரலாற்று சிறப்பு மிக்க குட்டிமணியின் நீதி மன்ற உரை அப்போது பல இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது. அதே போல் சிங்கள கொலை வெறியர்களும் குட்டிமணியை வெலிக்கடையில் கொலை செய்யும் போது அவரது கண்ணை முதலில்  தோண்டி எடுத்தார்கள் என்று வாசித்தது ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Ahasthiyan said:

பிறக்க போகும் தமிழ் ஈழத்தை எனது இரு கண்கள் ஊடாகவும் பார்ப்பேன் என்றார்.  

இந்த கண்ணால் தானே ஈழத்தை பார்க்கப்போகின்றாய் என கேட்டு கண்ணை தோண்டி எடுத்ததாக பத்திரிகைகளில் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார்.

அரசமைப்பை மீறியது என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள்

குட்டிமணி உட்பட 54 தமிழர்களை அடித்தே கொன்று 
குட்டிமணி உட்பட மூவரின் கண்களையும் தோண்டி எடுத்தது

ஐக்கிய தேசியக்கட்சி அரசில் தான்.

Link to comment
Share on other sites

1 minute ago, ஈழப்பிரியன் said:

அரசமைப்பை மீறியது என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள்

குட்டிமணி உட்பட 54 தமிழர்களை அடித்தே கொன்று 
குட்டிமணி உட்பட மூவரின் கண்களையும் தோண்டி எடுத்தது

ஐக்கிய தேசியக்கட்சி அரசில் தான்.

இதை விக்நேஸ்வரன் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

இதை விக்நேஸ்வரன் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும். 

எனக்கு சொல்லி நான் என்ன செய்வது?
முடிந்தால் அவருடன் தொடர்பு கொண்டு கதையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:
3 hours ago, ஈழப்பிரியன் said:

அரசமைப்பை மீறியது என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள்

குட்டிமணி உட்பட 54 தமிழர்களை அடித்தே கொன்று 
குட்டிமணி உட்பட மூவரின் கண்களையும் தோண்டி எடுத்தது

ஐக்கிய தேசியக்கட்சி அரசில் தான்.

இதை விக்நேஸ்வரன் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும்.

அவர் எங்கே தமிழர்கள் தான் இலங்கையின் ஆதிவாசிகள் என்பதை உறுதிபடுத்துவதில் தான் பிஸி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

1981 என நினைக்கின்றேன் வல்லிபுரக்கோவில்  மணல் காட்டு பகுதியில் படகில் வந்த சிலரை பருத்தித்துறை  போலீசார் கைது செய்து எந்த பரபரப்பும் இல்லாமல்  பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை தாம் கைது செய்திருப்பது குட்டிமணி என்று . பின்பு குற்ற புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததில் இவர்தான் குட்டிமணி என்று அறிந்தார்கள். பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கும் போது நீதிபதி குட்டிமணியை பார்த்து ஒரு வேளை ஜனாதிபதி ஜேயார், உங்கள் மரண தண்டனையை மாற்ற பரிசீலிக்கலாம் என்றார். அதை மறுத்த குட்டிமணி சொன்னார் உலகமே தமிழ் ஈழம் என்றோரு நாட்டின் விடிவுக்காக காத்திருக்கிறது என்று கூறி ,  என் மரணத்திற்கு பின் எனது இரு கண்களையும் பார்வை இழந்த தமிழருக்கு கொடுக்கவும். பிறக்க போகும் தமிழ் ஈழத்தை எனது இரு கண்கள் ஊடாகவும் பார்ப்பேன் என்றார்.  வரலாற்று சிறப்பு மிக்க குட்டிமணியின் நீதி மன்ற உரை அப்போது பல இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது. அதே போல் சிங்கள கொலை வெறியர்களும் குட்டிமணியை வெலிக்கடையில் கொலை செய்யும் போது அவரது கண்ணை முதலில்  தோண்டி எடுத்தார்கள் என்று வாசித்தது ஞாபகம்.

படகில் இந்தியா போவதற்காக அந்த இடத்தில் [கரையோரத்தில்[  காத்துக் கொண்டு இருந்ததாகவும், காட்டிக் கொடுக்கப்பட்டு தான் பிடிப்பட்டதாக சொல்லப்படுவது பொய்யா ?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தமிழ்நாட்டில் குட்டிமணி அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்போது எடுக்கப்பட்ட ஒர் அரிய புகைப்படம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.