Jump to content

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

வாங்கி வாசித்து போட்டு இங்கை வந்து சவாரி விடுறல்லை.

வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற கதையா.... சும்மா அலப்பறைகளை எல்லாம் வாசிக்க சொல்லக் கூடாது.

எங்களுக்கு தெரியாத எங்களது வரலாறை ஒரு வெள்ளையே சொல்ல வேண்டும்?

முதலில் எங்களது கறியின் நிலைமையினை பாருங்கள்.... 2000 வருசத்துக்கு முந்தின அகநாநூறில், அரபிக்கடலில் இருந்து பேராற்றினுள் நுரை பொங்க வரும் யவனர்களின் கலங்கள், மதுவுடன் வந்து 'கறியுடன்' போம் என்று சொல்லி இருக்கிறார்.

வெள்ளையளோ, தாங்கள் தான் இந்தியாவினுள் கறியினை அறிமுகப்படுத்தினார்களாம் என்று கதை விட்டு ரெசிபி புத்தகம் போடுகிறார்கள். மிளகுத்தண்ணி.... வெள்ளையர் கண்டுபிடிப்பாம்.... பின்ன என்னத்தை கதைக்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
6 hours ago, கிருபன் said:

சபா. நாவலன் உரையாடலில் நாம் தமிழர் கட்சி பொய்களால் கட்டி எழுப்பும் குறுந்தேசியவாதத்தை ஏன் இனவாத பாஸிஸம் என்றும் அதனை ஏன் எதிர்க்கவேண்டும் என்றும் சொல்கின்றார்.  வாக்குப்பொறுக்கும் அரசியலுக்காக திராவிடக் கட்சிகளை நாம் தமிழர் எதிர்ப்பது பாஸிச பிஜேபியை தமிழ்நாட்டில் உள்ளே விடத்தான் என்பது பலரது கருத்து. இதை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியாகக் கருதுவது உண்மையான தமிழ்த்தேசியத்தை அழிக்கும் செயலே.

உண்மையான தமிழ்த்தேசீயம் என்று எதை முனவைக்கின்றீர்கள்? யார் உண்மையான தமிழ்த்தேசீயத்தை வழிநடத்துகின்றார்? அல்லது எந்தக் கட்சி எந்த குழு அமைப்பு வழிநடத்துகின்றது ? நாம்தமிழரை பிழை என்று கத்துகின்றவர்கள் சரியென்று ஒரு எழுச்சியை சுட்டிக்காட்டுங்களேன். 

திராவிடக் கட்சிகளை தான் ஆதரிக்கவில்லை ஆனால் நாம் தமிழர் எதிர்ப்பது பாசிச பிஜேபி உள்ளே நுழைவதற்கு என்கின்றார். திராவிடக் கட்சிகள் காங்கிரஸ் பிஜேபியோடு மாறிமாறி கூடடணி போட்டுததான ஆடசியை செய்கின்றது. வரும் தேர்தலில் திமுக பிஜேபி யோடு கூட்டணி அமைத்தால் கூட அது சாதாரண விசயம் காரணம் ஏற்கனவே அவர்கள் கூட்டணி போட்டவர்கள் தான். தமிழ்நாட்டில் பிஜேபி உள்ளே நுழைய வழியை திறந்ததே திராவிடக் கட்சிகள் தான். திராவிடக் கட்சிகளுக்கும் பிஜேபிக்குமான கூட்டணி உறவில் இந்த பாசிசம் எங்கே போனது என்ற கேள்வியை ஏன் எழுப்பவில்லை ?

திராவிடத்தை ஆதரிக்கவில்லை ஆனால் திராவிடத்தை நாம்தமிழர் எதிர்துநின்றால் அது பாசிசம் ? இந்த கருத்தியலின் விழைவு என்ன ? மீளவும் திராவிட ஊழல் ஆட்சியை கொண்டுவருவது கருணாநிதியின் வாரிசோ அல்லது வாரிசின் வாரிசோ அரசியல் அதிகாரத்தில் மன்னராட்சிபோல் அமருவது. அவ் ஆட்சி பிஜேபியோடோ அல்லது காங்கிரசோடோ கூட்டணி வைக்கலாம் . இதுதானே இந்த நாம் தமிழர் எதிர்ப்பரசியலின் விழைவு !! 

இந்த விழைவை விட வேறு எதாவதை நாம் தமிழர் என்ற அரசியல் எழுச்சியை சிதைப்பதால் ஏற்படுத்தப் போகின்றீர்களா ? நாம் தமிழர் என்ற தேசீய எழுச்சிக்கு பதிலாக வேறு ஒரு திசையை அல்லது அமைப்பை , கட்சியை முன்வைக்கின்றீர்களா ? அவற்றை சொல்லுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

கிருபன் பதிவுகள் எப்போதுமே தமிழக இணைய தளங்களை மேல்கோள் காட்டியே இருக்கும்.

முதலாவது யார் இந்த சபா நாவலர், அவரது பின்புலம் என்ன என்று சொல்ல மாட்டார். யாராவது எதையாவது சீமானுக்கு எதிராக எழுதி வைத்தால், அது உண்மையாக இருக்கும் என்பார்.

நான் வெளியே வாங்க, புத்தி ஜீவிகள் உலகத்துக்கு வாங்க என்றதும், ரொபேர்ட் க்நோஸ் என்று கிளம்பி விட்டார். நீங்கள் வாசித்தீர்களா என்று கேட்டால், இனி மேல தான் என்பார். 😁

கிருபனிடமும், சீமானுக்கு அறிவுரை சொல்லும் பலரிடமும் கேட்டு விடை வராத கேள்வி.

தமிழகத்து தமிழ்த்தேசியம் = வெறுப்பரசியல் என்று பீத்துகிறீர்களே, சிங்களவனுடன் வாழமுடியாமல் வெறுப்பரசியல் செய்து, போர் செய்து, அகதியாக ஓடி வந்து.... இன்னும் தமிழ் ஈழம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, சீமானின் தமிழ்த்தேசியம் = வெறுப்பரசியல் என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

முதலாவது யார் இந்த சபா நாவலர், அவரது பின்புலம் என்ன என்று சொல்ல மாட்டார். யாராவது எதையாவது சீமானுக்கு எதிராக எழுதி வைத்தால், அது உண்மையாக இருக்கும் என்பார்.

அவரும் திராவிடத்துக்குள் நின்று தான் எழுதுகிறார்.
இப்படி தப்பான ஆய்வுகளை எழுதியா பிழைக்க வேண்டும்.
கிழமைக்கு கிழமை ஏதாவது எழுதி கொடுத்தால் தானே மடி நிரம்பும் என்று அகப்பட்டவனை எழுதி தள்ள வேண்டியது தான்.

1 hour ago, சண்டமாருதன் said:

உண்மையான தமிழ்த்தேசீயம் என்று எதை முனவைக்கின்றீர்கள்? யார் உண்மையான தமிழ்த்தேசீயத்தை வழிநடத்துகின்றார்? அல்லது எந்தக் கட்சி எந்த குழு அமைப்பு வழிநடத்துகின்றது ? நாம்தமிழரை பிழை என்று கத்துகின்றவர்கள் சரியென்று ஒரு எழுச்சியை சுட்டிக்காட்டுங்களேன். 

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.இப்போதும் சிறுசிறு குழுவாகவே இருக்கிறார்கள்.குறைந்தது 25 இயக்கம் என்றாலும் வரும்.
இத்தனைக்கும் நாம்தமிழர் தான் பெரிய எடுப்பில் தனியே தேர்தலில் போட்டி போடும் துணிவுடன் களமாடுகிறார்கள் வளர்ந்து கொண்டே போகிறார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

நாம்தமிழரை பிழை என்று கத்துகின்றவர்கள் சரியென்று ஒரு எழுச்சியை சுட்டிக்காட்டுங்களேன். 

இதைத் தானே திரும்ப திரும்ப கேட்கிறோம்.அந்தக் கோதாரியையும் சொல்லுறாங்கள் இல்லையே.
 
Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற கதையா.... சும்மா அலப்பறைகளை எல்லாம் வாசிக்க சொல்லக் கூடாது.

எங்களுக்கு தெரியாத எங்களது வரலாறை ஒரு வெள்ளையே சொல்ல வேண்டும்?

முதலில் எங்களது கறியின் நிலைமையினை பாருங்கள்.... 2000 வருசத்துக்கு முந்தின அகநாநூறில், அரபிக்கடலில் இருந்து பேராற்றினுள் நுரை பொங்க வரும் யவனர்களின் கலங்கள், மதுவுடன் வந்து 'கறியுடன்' போம் என்று சொல்லி இருக்கிறார்.

வெள்ளையளோ, தாங்கள் தான் இந்தியாவினுள் கறியினை அறிமுகப்படுத்தினார்களாம் என்று கதை விட்டு ரெசிபி புத்தகம் போடுகிறார்கள். மிளகுத்தண்ணி.... வெள்ளையர் கண்டுபிடிப்பாம்.... பின்ன என்னத்தை கதைக்கிறது.

பெருஞ்சோறு - ஊன் சோறு - இப்ப பிரியாணி. https://www.youtube.com/watch?v=7pxEXHxSQzU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கிருபன்.... இந்தப்பதிவுடன் கோபம் கொள்ளவது எப்படி என்றும் அறிந்து கொண்டு வந்திருக்கிறார் என தெரிகிறது.

அவருடன் நான் கடும் விவாதத்தில் ஈடு பட்டிருக்கிறேன். தமிழக இணைய குப்பைகளில் அதிகம் மினக்கடுபவர். வெளியே வந்து உலகத்தினை பாருங்கள் என்று கூட சொல்லி இருக்கிறேன். கோபப்படாத மனிதர் என்று கூட சொல்லி இருக்கிறேன்.

இந்த திரி அந்த எண்ணத்தினை மாற்றுகிறது. யார் மீது கோபம்? சுந்தரவள்ளி மீதோ?

தமிழக இணையக் குப்பைகளுக்குள் படுத்துக்கிடந்து வியாபாரம் செய்வதே நீங்கள்தான் நாதம்ஸ்😃

எனக்கு தமிழக அரசியலில் நாட்டமில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் பெயரில் ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்கின்றோம் என்று ஒரு மாயையைக் கிளப்பிக்கொண்டு வெறுப்பரசியல் செய்பவர்களை அம்பலப்படுத்தவேண்டும். 

8 hours ago, goshan_che said:

நன்றி கிருபன்.

ஒரு உதவி ( வேறு யாரும் தந்தாலும் நன்றி).

The temporal and spiritual conquest of Ceylon

Fernão de Queyroz

இந்த புத்தகம் அல்லது இணைப்பு கிடைத்தால் சொல்லவும்.

நூலகத்தில் pdf ஆக உள்ளது.

http://noolaham.net/project/46/4518/4518.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வாங்கி வாசித்து போட்டு இங்கை வந்து சவாரி விடுறல்லை.

அது இலவசமாகவே நான் தந்த இணைப்பில் உள்ளது. ஆனால் 17ஆம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் உள்ளது. படித்துப் பார்க்கலாம்.

5 hours ago, Nathamuni said:

வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற கதையா.... சும்மா அலப்பறைகளை எல்லாம் வாசிக்க சொல்லக் கூடாது.

எங்களுக்கு தெரியாத எங்களது வரலாறை ஒரு வெள்ளையே சொல்ல வேண்டும்?

ஒரு ஆதாரமும் இல்லாமல் “பீலா” விட்டு வரலாறு எழுதுபவர்கள் இப்படியான ஆதாரங்களையும் படிக்கவேண்டியதில்லை. பிறக்கும்போதே எல்லா அறிவையும் மூளையில் புரோக்கிராம் பண்ணப்பட்டுத்தான் பலர் இங்கு கருத்து எழுதுகின்றார்கள்😜 அதனால்தான் எதையும் மேலோட்டமாகக் கூடப் படிப்பதில்லை!

Robert Knox கண்டியில் 19 வருடங்கள் சிறையில் இருந்த பிரித்தானிய மாலுமி. 1681 இல் வெளிவந்த புத்தகம்.  அவர் தனது அனுபவங்களை எழுதியுள்ளார். இதன் மூலம் இரண்டாம் ராஜசிங்கன் காலவரலாற்றை நேரடியாக அறிய வாய்ப்புள்ளது. அவர் வடக்கிலும் கிழக்கிலும் நடமாடியுள்ளார் என்பதால் யாழ்ப்பாணப் பட்டினம், திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம் பற்றிய குறிப்புக்களும் உள்ளன. 

4 hours ago, Nathamuni said:

முதலாவது யார் இந்த சபா நாவலர், அவரது பின்புலம் என்ன என்று சொல்ல மாட்டார். யாராவது எதையாவது சீமானுக்கு எதிராக எழுதி வைத்தால், அது உண்மையாக இருக்கும் என்பார்.

அட உங்களுக்கு சபா நாவலனைத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். இனியொரு தளத்தை அவர்தான் நடாத்துகின்றார். இடதுசாரி சிந்தனையுள்ள அரசியல் விமர்சகர்.

4 hours ago, ஈழப்பிரியன் said:

அவரும் திராவிடத்துக்குள் நின்று தான் எழுதுகிறார்.
இப்படி தப்பான ஆய்வுகளை எழுதியா பிழைக்க வேண்டும்.
கிழமைக்கு கிழமை ஏதாவது எழுதி கொடுத்தால் தானே மடி நிரம்பும் என்று அகப்பட்டவனை எழுதி தள்ள வேண்டியது தான்.

குறைந்த பட்சம் சபா நாவலனது பேட்டியை (முதலாவது பதிவில் உள்ளது) பார்த்திருந்தால் இப்படித் தப்புத் தப்பாக எழுதியிருக்கமாட்டீர்கள்.

அவர் பேட்டியில் கருணாநிதியை அதிகமாக விமர்சித்தது தான் என்று சொல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சண்டமாருதன் said:

உண்மையான தமிழ்த்தேசீயம் என்று எதை முனவைக்கின்றீர்கள்? யார் உண்மையான தமிழ்த்தேசீயத்தை வழிநடத்துகின்றார்? அல்லது எந்தக் கட்சி எந்த குழு அமைப்பு வழிநடத்துகின்றது ? நாம்தமிழரை பிழை என்று கத்துகின்றவர்கள் சரியென்று ஒரு எழுச்சியை சுட்டிக்காட்டுங்களேன். 

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் ஒத்த உணர்வு அல்லது கூட்டுப்பிரக்ஞை. வெளியாரின் அச்சுறுத்தல்களின் போது தமது அடையாளத்தைப் பேண ஒரு மக்கள் திரளை உணர்வு ரீதியாக ஒன்றாக்குவது தேசியம்.

தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்கவேண்டும். தேசிய உணர்வை இன ரீதியாக பெருமிதத்துடன் போற்றும் அதே வேளை பிற இனங்களும் அப்படியான தேசிய உணர்வுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இத்தகைய ஜனநாயகப் பண்புள்ள தேசியம் விரிந்து வளரும்.

தேசிய உணர்வு பிற தேசியங்களின் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும். சீமானும் நாம் தமிழர் கட்சியும் தீவிர வலதுசாரிச் சிந்தனை மூலமும், பிற இனங்கள் மீதான வெறுப்பினை  விதைத்து அதனை தமிழ்த் தேசியம் என்று சொல்பவர்கள். இந்த நாஸிய, பாஸிச சிந்தனை உண்மையான ஜனநாயகத்தனமையுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தவறான பாதையில் நடத்தி இறுதியில் வலதுசாரி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே வழிவகுக்கும்.

4 hours ago, ஈழப்பிரியன் said:

இதைத் தானே திரும்ப திரும்ப கேட்கிறோம்.அந்தக் கோதாரியையும் சொல்லுறாங்கள் இல்லையே.
 
தவறான எழுச்சி மீளமுடியாத  பெரிய அழிவுகளைத் தரும் என்ற வரலாற்றுப் படிப்பினை தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

13 hours ago, சண்டமாருதன் said:

பதிலுக்கு நன்றி கிருபன்

ஒரு எழுச்சியை சிதைப்பது விமர்சனமாகாது. இங்கே நடப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிர்மூலமாக்கும் செயல். எப்படி புலிகளின் போராட்டகாலத்தில் பாசிசம் பயங்கரவாதம் ஒரு தரப்பு தொண்டை கிழியக் கத்தியதோ, லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சிங்களவர்களால் வருடக்கணக்கில் கொல்லப்படும்போது ராஜின திரணகமவுக்காக மட்டும் வர்க்க கண்ணீர்வடித்ததோ அதையேதான் இந்த விடயத்திலும் செய்யகின்றர்கள். இவ்வாறு தமது ஒட்டுமொத்த அறிவையும் பயன்படுத்தி கத்தியவர்கள் கதி போராட்டம் முடிவுக்கு வந்தபின் என்ன ஆச்சு ? பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

உதாரணத்திற்கு இங்கே கருத்தாடலில்  நாம் தமிழர் அரசியல் என்ற திரிகளை மூடிவிட்டு அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் ? புலிகளின் போராட்டம் முடிந்தபின் இக்களத்தில் ஒரு வெறுமை தோன்றியது. ஒரு சூனிய நிலை தோன்றியது. அதேதான் தமிழ்த்தேசீயம் என்ற உணர்வுசார் கருத்தாடலில் ஏற்படும். சூனியத்தை நோக்கி நகர்த்துவது விமர்சனமாகாது. 

ஒரு இடத்தில் மக்கள் எழுச்சி, போராட்டம், களப்பணிகள் நடைபெறும்போதே அதன் பிரதிபலிப்புகள் இங்கு நிகழும். அதை கருத்துக்களால் நிர்மூலமாககுவது ஏற்புடையதல்ல. அதற்கு பெயர் விமர்சனமும் கிடையாது. 

விமர்சனங்கள் எழுச்சியை ஒரு போதும் சிதைக்காது. மேலும் உரமூட்டும். தவறுகளை களைந்து சரியான பாதையில் செல்ல உதவும். விமர்சனங்களை கண்டு பயப்படுகின்றீர்கள் என்றால் அங்கே ஏதோ தப்பு நடப்பதாகவும் அதை  மறைக்க நினைப்பதாகவும் தான்  அர்த்தம். 

புலிகளை வசை பாடிய மாற்று இயக்கத்தால் புலிகளின் எழுச்சியை சிறிதளவு கூட தடுக்க முடியவில்லை. என்பதே உண்மை. ஆனால் புலிகள் தாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம் 100 வீதம் சரி என்ற நினைப்பில் புலிகள்மீதும் போராட்டத்தின்  மீதும்  அக்கறை கொண்டவர்கள் செய்த ஆக்கபூர்மான விமர்சனங்களைக் கூட  சந்தேக பார்வையை செலுத்தியதால் பல அரசியல் ஆய்வாளர்கள் அவர்களின் மனதுக்குள் இருப்பதை சொல்வதை தவிர்தது புலிகளின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரித்தனர். சிறிய சிறிய தவறுகளை சுட்டிக்காட கூட பயந்தனர்.  இது மெல்ல மெல்ல புலிகளின் அழிவுக்கு வித்திட்டது. (

உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறேன். சமாதான காலத்தில் புலிகளின் தலைமையின்  அறிவுறுத்தலின் படி  சுவிற்சர்லாந்தில் உள்ள புலிகளின் பிரதிநிதிகளால்  இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு படிவம் விநியோகிக்கப்பட்டது. விரைவில் அமைய இருக்கும் தமிழீழத்தின் திட்டமிடலுக்காக என்று கூறப்பட்டது. அந்த படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்ததால் தலை சுற்றும். அந்தளவுக்கு தனிநபர் உரிமையை ரகசியங்களை மீறும் முட்டாள்தனமான படிவம். ஒரு குடும்ப தலைவரின்   வருமானம், மாதாந்த பங்களிப்பு, தாயகத்தில் எங்கு கலவி கற்றார்கள், எப்போது வெளிநாடு வந்தார்கள், தாயக பங்களிப்பு தொடங்கிய ஆண்டு, எத்தனை சகோதர்ர்கள், அவர்களின் பெயர் விபரங்கள், அவர்களுன் பிள்ளைகளின் தனிப்பட்ட விபரங்கள்,  அவர்கள் வசிக்கும் நாடு, அவர்களின் பங்களிப்பு  விடயங்கள் என்று மிக மோசமாக தனி நபரின் privacy யை மீறும் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு கூட இப்படிப்பட்ட கேள்விகளை மக்களிடம் தனது  கேட்க முடியாது.   மக்களிடம் விநியோகிக்குமாறு மாநில பொறுப்பாளருக்கு அறிவுறுத்தல் விட்ட  கூட்டத்தில் ஒரு சில பொறுப்பாளர்களுக்கு இதன் பாரதூரம்  புரிந்திருந்தாலும் வன்னியில்  இருந்து பிரதிநிதிகள் அக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால்  அதை சொல்ல பயந்தனர். பின்னர் அந்த படிவம் சம்பந்தமான விடயம் சுவிஸ் ஊடகங்களின் கவனத்திற்கு செல்ல படிவத்தின் பிரதி சுவிஸ் ஊடகங்களில் வெளிவந்து புலிகள் மக்களை அச்சுறுத்துவதாக பல பத்திரிகைகளில் செய்து வந்து சுவிஸ அரசின் கவனத்திற்கு செல்ல இங்குள்ள பொறுப்பாளர்கள் அழைத்து விசாரிக்கப்பட்டு அந்த படிவம் சம்பந்தமான வேலைகள்  நிறுத்தப்பட்டது. இதுவெல்லாம் போராட்டத்தை பாதிக்காது இது சின்ன விடயம் என்று வாதிடும் நிலையில் இங்கு சிலர் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இவ்வாறு உலக சட்டங்கள் தெரியாதவர்கள் கூட புலிகளின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.  

ஆகவே தான  கூறுகிறேன் விமர்சனங்கள் கட்டாயம் தேவை. விமர்சனங்களுக்கு செவி சாய்ககாத போராட்டத்தால் பாரிய அழிவை சந்தித்த பின்னரும் விமர்சனங்கள் போராட்டத்தை பாதிக்கும் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம். 

விமர்சனங்கள் அற்ற நடைமுறை எழுச்சியை கூட பயன்றறதாக்கும். அதுவே எமது போராட்டத்தில் நடந்தது. 1977 ல் ஏற்பட்ட எழுச்சி விறுதியில் தனது தவறுகளாலேயே அழிந்து போனது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

Robert Knox கண்டியில் 19 வருடங்கள் சிறையில் இருந்த பிரித்தானிய மாலுமி. 1681 இல் வெளிவந்த புத்தகம்.  அவர் தனது அனுபவங்களை எழுதியுள்ளார். இதன் மூலம் இரண்டாம் ராஜசிங்கன் காலவரலாற்றை நேரடியாக அறிய வாய்ப்புள்ளது. அவர் வடக்கிலும் கிழக்கிலும் நடமாடியுள்ளார் என்பதால் யாழ்ப்பாணப் பட்டினம், திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம் பற்றிய குறிப்புக்களும் உள்ளன. 

http://www.dailymirror.lk/37294/we-still-celebrate-the-bravery-of-king-rajasinghe-ii-
 
ஒரு விசயத்தை இணைக்கும் போது, இப்படி விபரத்தையும் சேர்த்தால், நாமும் ஆர்வமாவோமே. சும்மா மொட்டையா இணைத்தால், தலையால தானே போகும்.
 
சபா நாவலன் பதிவு போடுவதாயின், அவரைப் பத்தியும் நாலு வரி போடுங்கள். நன்றி.

உங்களுக்கு நேரம் எப்படியோ தெரியவில்லை. எனக்கு தமிழக இணைய குப்பைகளுக்கு நேரமில்லை. புது மென்பொருள் கற்றுக்கொண்டு இருக்கிறேன். போரடித்தால், கோசனுடன் பேசுவது என்று போகுது.... ஆள், மோற்றிவேற் பண்ணி அனுப்பி விடுவார்.😁

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

தமிழகத்தில் எத்தனையோ அறிஞர்கள், வல்லுனர்களின் தளங்கள் உள்ளன.சாதாரணமாக கூகிளில் தேடினாலே கிடைக்கும்.  நீங்கள் நாம்  தமிழர் சீமானி  குப்பைத்தளங்களோடு நேரத்தை வீண்டிப்பதால்  நேரம் இல்லை என்பது நியாயம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ தெரியவில்லை.. விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பரசியலை செய்யும் சோபாசுந்தரி... பா நாவலு.. போன்றதுகள் எழுதுவது எல்லாம்.. சிலருக்கு வேதவாக்காகத் தெரிகிறது. 

ஆனால் சீமான் முன்னெடுக்கும்... ஈழத்தமிழர் சாவில் அழிவில் பதவி அதிகாரம் தேடித் திரிந்த.. திராவிட அரசியலை.. வெறுத்தொதுக்கு.. தமிழ் தேசிய அரசியல் மட்டும்.. சிலருக்கு கசக்கிறது.

உண்மையில்.. இவை சித்தாந்தக் கசப்பா.. தனிநபர் வெறுப்பா.

காரணம்.. சோபா சுந்தரி.. திருட்டுக்கதை எழுதி பிடிபட்ட போதும்.. இல்லை அது இருக்காது என்று வகுப்பெடுக்கும் அளவுக்கு அந்த ஈழத்தலித்தியன் என்ற பொய்யோடு உலா வந்தவனை தூக்கி தாலாட்டும் இலக்கியவாதியாக்கி ரசிக்கும் ஒரு மட்டமான குடி மகனை.. புகழும் வாய்கள்.... சீமானை.. திட்டுவதில் மட்டும் சீராக இருப்பதுவும் ஏனோ..?!

ஒருவேளை சீமான் முன்னெடுக்கும்.. தமிழ் தேசிய அரசியலுக்கு அப்பால்.. தமிழ் தேசிய தலைவர் முன்னிறுத்தப்படுவது.. பா.நாவலு.. சோபா சுந்தரி வரிசையில்.. இவர்களுக்கும் பிடிக்கவில்லைப் போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

தமிழகத்தில் எத்தனையோ அறிஞர்கள், வல்லுனர்களின் தளங்கள் உள்ளன.சாதாரணமாக கூகிளில் தேடினாலே கிடைக்கும்.  நீங்கள் நாம்  தமிழர் சீமானி  குப்பைத்தளங்களோடு நேரத்தை வீண்டிப்பதால்  நேரம் இல்லை என்பது நியாயம் தான். 

கேட்காமலும் வரும் அறிவுரைக்கு நன்றி. நீஙகள் பார்க்கமலா நியாயம் பிளக்கிறீர்கள்? 🤔
தமிழகத்தில், புலமையும் வறுமையும் சேர்ந்தே இருப்பதால், திறமையிருந்தாலும், சார்பாகவே எமுதுகிறார்கள்.

பணக்கார கவிஞரான வைரமுத்தரே, திமுக சார்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வெறுப்புக்காக.. கல்யாண சுந்தரம் அண்ணாவை ஆதரிப்பவர்கள்..

இதையும் ஆதரிப்பார்களா.. சித்தாந்த ரீதியில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

சீமான் வெறுப்புக்காக.. கல்யாண சுந்தரம் அண்ணாவை ஆதரிப்பவர்கள்..

இதையும் ஆதரிப்பார்களா.. சித்தாந்த ரீதியில்...

பேராசிரியர்களின் மறுபுறம்; நட்டுக்கழறவது... யாருடனும் சேரந்தியங்காத தன்மை, தலைக்கனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நூலகத்தில் pdf ஆக உள்ளது.

http://noolaham.net/project/46/4518/4518.pdf

நன்றி ஐயா,

நானும் நூலகத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.

இதுக்குத்தான் படிச்ச மனுசன் வேணுங்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற கதையா.... சும்மா அலப்பறைகளை எல்லாம் வாசிக்க சொல்லக் கூடாது.

எங்களுக்கு தெரியாத எங்களது வரலாறை ஒரு வெள்ளையே சொல்ல வேண்டும்?

முதலில் எங்களது கறியின் நிலைமையினை பாருங்கள்.... 2000 வருசத்துக்கு முந்தின அகநாநூறில், அரபிக்கடலில் இருந்து பேராற்றினுள் நுரை பொங்க வரும் யவனர்களின் கலங்கள், மதுவுடன் வந்து 'கறியுடன்' போம் என்று சொல்லி இருக்கிறார்.

வெள்ளையளோ, தாங்கள் தான் இந்தியாவினுள் கறியினை அறிமுகப்படுத்தினார்களாம் என்று கதை விட்டு ரெசிபி புத்தகம் போடுகிறார்கள். மிளகுத்தண்ணி.... வெள்ளையர் கண்டுபிடிப்பாம்.... பின்ன என்னத்தை கதைக்கிறது.

தயவு செய்து ரெசெப்பி புத்தகத்தில் எழுதுவதை எல்லாம் வரலாறு என எழுதாதீர்கள். ரெசிப்பி புத்தகம், காமிக்ஸ் இதுலயா போய் தேடுவீங்க?

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி - கறி தமிழ் சொல் என்பதையும் ஆங்கிலத்துக்கு அது 16ம் நூற்றாண்டில் வந்தது என்பதையும் ஏற்கிறது.

இது பற்றி BBCதிலும் கட்டுரை வந்தது.

நீங்கள் இப்படி எழுதுவது வழமைதான்.

இதை சண்டமாருதன் ஏன் லைக்கினார் என்பதுதான் விளங்கவில்லை.

large.C4E46A83-7353-43E7-8E34-3A586FB2ED62.jpeg.d67bd8a1594b8622d5b8cf2bf327b900.jpeg

https://www.bbc.co.uk/teach/class-clips-video/food-gcse-five-things-you-need-to-know-about-curry/zbbcxyc
 
இது பிரைமறி ஸ்கூல் பிள்ளையளுக்கு கறி பற்றிய விளக்கம் ☝️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உங்களுக்கு இது குறித்த விளக்கவேண்டுமாயின் திரி நீண்டு விடும். ஆனாலும் அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும்.

இது குறித்து நல்ல ஆய்வு செய்துள்ளேன்.

தமிழர் கறி ஆங்கிலத்தில் வந்தது போர்த்துக்கேயர் ஊடாக.... என்று போட்டிருப்பதை கவனியுங்கள்.

கறியின் பூர்வீகம் சரியாக தெரியாமல், கறி இன்டஸ்ரி பெரும் சிக்கலில் உள்ளது தெரியும் தானே. பங்களாதேஸ் ரெஸ்ரோரன்ற் காரர்களுக்கு செப் விசா கிடையாது என்று டேவிற் கமரான் அரசு அறிவித்தது தெரியும் தானே.

இது குறித்து பின்னர் விளக்கமாக ஆய்வோம். நேரமில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

தமிழகத்து தமிழ்த்தேசியம் = வெறுப்பரசியல் என்று பீத்துகிறீர்களே, சிங்களவனுடன் வாழமுடியாமல் வெறுப்பரசியல் செய்து, போர் செய்து, அகதியாக ஓடி வந்து.... இன்னும் தமிழ் ஈழம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, சீமானின் தமிழ்த்தேசியம் = வெறுப்பரசியல் என்று சொல்ல முடியுமா?

இந்த திரியின் விவாதத்தில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை.

ஆனால் 2/5 வரையான தமிழ் மட்டுமே பெரும்பாலும் அறிந்த (5% மட்டுமே தெலுங்கும் பேச கூடியவர்கள்) மக்களுக்கு எதிராக சீமான் செய்யும் அரசியலை எமது தாயக விடுதலை போரோடு சமன் படுத்தவே முடியாது.

விடுதலை புலிகள் செய்தது வெறுப்பரசியல் அல்ல. வன்னியில் குடியேறி இருந்த, யாழ்பாணத்தில் இருந்த எத்தனையோ சிங்கள குடும்பங்களை கூட தமிழராக அங்கீகரித்தார்கள். இந்த குடும்பங்களில் இருந்து பலர் மாவீரரும் ஆனார்கள்.

சொல்லப்போனால் இப்படி இப்படி தமிழ் பேசும் இந்து, கிறீஸ்தவர்களை நீ தமிழன் இல்லை என பிரபாகரன் காலத்தில் யாராவது சொல்லி இருந்தால் மின் கம்பத்தில் தொங்கி இருப்பார்கள்.

இதனால்தான் சீமான் பிரபா இருக்கும் வரை இந்த வெறுப்பு அரசியலை கையில் எடுக்கவில்லை.

பல ஆயிரம் மாவீரர்கள் உயிரை கொடுத்து போராடிய ஒரு போராட்டத்தை, விடுதலை போரை “இலங்கை மீது பேரபிமானம்” கொண்டவன் என ஏற்று கொள்ளும் நீங்கள் வெறுப்பரசியலா? என கேட்பதில் வியப்பில்லை.

ஆனால் இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கே எழுதும் பல தமிழ் தேசிய உணர்வாளர்களும் இருப்பதுதான் வேதனை.

11 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு இது குறித்த விளக்கவேண்டுமாயின் திரி நீண்டு விடும். ஆனாலும் அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும்.

இது குறித்து நல்ல ஆய்வு செய்துள்ளேன்.

தமிழர் கறி ஆங்கிலத்தில் வந்தது போர்த்துக்கேயர் ஊடாக.... என்று போட்டிருப்பதை கவனியுங்கள்.

கறியின் பூர்வீகம் சரியாக தெரியாமல், கறி இன்டஸ்ரி பெரும் சிக்கலில் உள்ளது தெரியும் தானே. பங்களாதேஸ் ரெஸ்ரோரன்ற் காரர்களுக்கு செப் விசா கிடையாது என்று டேவிற் கமரான் அரசு அறிவித்தது தெரியும் தானே.

இது குறித்து பின்னர் விளக்கமாக ஆய்வோம். நேரமில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.

உங்களுக்கு நேரம் இல்லை என்பதற்காக நீங்கள் அதையும் இதையும் தொட்டு எழுதுவது சரி என்றாகாது.

உலகில் மனிதன் எப்போது மாமிசத்தை நீரில் அவித்து அதில் திரவியங்களை தூவினானோ அன்றே கறி உருவாகிவிட்டது. ஆகவே கறி சமைத்த முதல் மனிதன் யார் என்பதை சொல்ல முடியாது.

ஆனால்,

கறி என்பது தமிழ் சொல். கறி in its current form தமிழர் தேசத்தில் இருந்து வந்தது என்பதை உலகமே ஏற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபா நாவலனின் காணொளியில் தேசிய இனங்கள் எப்படி பல இனங்களின் கலப்பினால் உருவாகின்றன என்பதை தெளிவாகச் சொல்லியுள்ளார்.  

தமிழர்களாக உணர்பவர்கள் எல்லோருமே தமிழர்கள். ஆனால் பல தலைமுறைகளாக தமிழர்களாக இருப்பவர்களை தமிழர் என்று கூறுவது அருவருக்கத்தக்க இனவாதம்.

சபா நாவலன் கூட பண்டாரநாயக்கா கண்டியை ஆண்ட தமிழர்களான நாயக்கர்களின் பரம்பரையில் வந்த சிங்கள இனவாதி என்று கூறுகின்றார். அப்படியான சிங்கள இனவாதியை அவரின் பூர்வீகம் காரணமாக தமிழர் என்று சொல்லமுடியாதுதானே. அவர் உணர்வால் சிங்களவர் என்பதும் தமிழரை ஒடுக்கும் சிங்களமொழியை அரசகரும மொழியாக மாற்றியவர் என்பதும்தான் வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

சபா நாலவன் யார்..??! வரலாற்று ஆராய்ச்சியாளரா..??! அல்லது தொல்பொருள் ஆராய்ச்சி ஆளரா..??! தன்னைத் தானே இலக்கியவாதி.. ஊடக அவியலாளர் என்று அறிவித்து இணையத்தில் எழுதித் திரியும்.. ஒருவர். இன்று யாரும் காணொளிகளை தங்கள் கற்பனைக்கு புது வடிவம் கொடுத்து வெளியிடலாம். 

நாம் தமிழர் கட்சி..

தமிழகத்தில் எல்லோரும் வரலாம் வாழலாம்.. ஆனால் தமிழர்கள் மட்டுமே ஆழ வேண்டும்.. என்கிறது. காரணம்.. தமிழகத்தை தமிழர் அல்லாதோர் ஆண்டு தமிழகம்.. தமிழை.. தமிழரை உணர முடியாத நிலைக்கு போய்விட்டதால்.

ஈழத்தில்.. தமிழீழம் கேட்டது.. தமிழர்கள் தானே தவிர.. திராவிடர்களோ.. சிங்களவர்களோ அல்ல. ஆனால்.. விடுதலைப்புலிகள் மீதும்.. இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தவர்களில்.. உந்த பா நாவலுவும் ஒன்று. இன்று அது முஸ்லீம் ஆக்கிரமிப்பு.. சிங்கள ஆக்கிரமிப்புப் பற்றி வாயும் திறப்பதில்லை. அவை குறித்து பேச பா நாவலுவுக்கு காணொளிகள் இட நேரமில்லைப் போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்த திரியின் விவாதத்தில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை.

ஆனால் 2/5 வரையான தமிழ் மட்டுமே பெரும்பாலும் அறிந்த (5% மட்டுமே தெலுங்கும் பேச கூடியவர்கள்) மக்களுக்கு எதிராக சீமான் செய்யும் அரசியலை எமது தாயக விடுதலை போரோடு சமன் படுத்தவே முடியாது.

விடுதலை புலிகள் செய்தது வெறுப்பரசியல் அல்ல. வன்னியில் குடியேறி இருந்த, யாழ்பாணத்தில் இருந்த எத்தனையோ சிங்கள குடும்பங்களை கூட தமிழராக அங்கீகரித்தார்கள். இந்த குடும்பங்களில் இருந்து பலர் மாவீரரும் ஆனார்கள்.

சொல்லப்போனால் இப்படி இப்படி தமிழ் பேசும் இந்து, கிறீஸ்தவர்களை நீ தமிழன் இல்லை என பிரபாகரன் காலத்தில் யாராவது சொல்லி இருந்தால் மின் கம்பத்தில் தொங்கி இருப்பார்கள்.

இதனால்தான் சீமான் பிரபா இருக்கும் வரை இந்த வெறுப்பு அரசியலை கையில் எடுக்கவில்லை.

பல ஆயிரம் மாவீரர்கள் உயிரை கொடுத்து போராடிய ஒரு போராட்டத்தை, விடுதலை போரை “இலங்கை மீது பேரபிமானம்” கொண்டவன் என ஏற்று கொள்ளும் நீங்கள் வெறுப்பரசியலா? என கேட்பதில் வியப்பில்லை.

ஆனால் இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கே எழுதும் பல தமிழ் தேசிய உணர்வாளர்களும் இருப்பதுதான் வேதனை.

இலங்கை மீது பேரபிமானம் 🤷‍♂️🤔

நேரத்தினை செலவழிக்க விரும்பவில்லை. அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக கக்கிய இனவாதத்துக்காக, எனது தாய்நாட்டை பழிப்பது தவறு என்பது எனது நிலைப்பாடு.

அந்த நாட்டின் தந்த, பிறப்பு, கல்வி சான்றிதலையும் தூக்கி வீச முடியாவிடில் வெறுப்பதிலோ, இங்கே சிலரை உசுப்பேத்த பேசுவதிலோ நம்பிக்கை இல்லை.

ஒரு நல்ல கணவன், குடிகார மணைவியிடம் மாட்டிக் கொண்டது போல், 🤪 எனது தாய் நாடு இருபக்க இனவாதிகளின் கையில் சிக்கி உள்ளது.

ஒரு வேளை, நான் பிறந்த மண் தனிநாடானால், எனது தாயகம் மாறும்.

கருணா அம்மானும், பால்ராஜ்ம், தமிழ்செல்வனும் ஈழ கடவுச்சீட்டுடன் வெளிநாடுகள் போகவில்லை. அரசின் எதிரிகளாக இருந்தாலும் அது அவர்களின் பிறப்புரிமை.

நீஙகள் எந்த நாடு, இந்தியாவா? என்று வேறு இனத்தவர்கள் வேலையில் கேட்கும் போது, பெருமையாக இலங்கை என்றே சொல்கிறேன். ஈழம் என்றா சொல்வது?

இலங்கை கடவுச்சீட்டும் வைத்திருப்பதால், அதற்கும் விசுவாசமாக இருக்கிறேன்.

இதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வெறுப்பு அரசியலின் தோற்றுவாய்களும் பெருக்கமும்.. உந்த மாற்றுக்கருத்து என்ற போர்வையில்.. தமக்குத் தெரிந்ததை எல்லாம் ஒரு இணைப்பின்றி எழுதி.. தங்களையும் குழப்பி.. ஊரையும் குழப்பி.. திரியும் உந்த பா நாவலு போன்ற அரைகுறைகளே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.