Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த வெறுப்பு..!

***************

தெளிந்தோடும்  

நீரோடை கூட

கழிவு நீர் 

சேறாகிப் போச்சு

அழகான.. 

மலர்த் தோட்டம் கூட

கருவேலம் 

முள்ளாகிப் போச்சு

 

மானுட இதயங்கள் கூட

மரத்துப் போய் 

கல்லாகிப் போச்சு

இயற்கையின் 

ரசனைகள் கூட

இருள் சூழ்ந்த 

புகையாகிப் போச்சு

 

இந்த..

வாழ்க்கையை ரசித்து

வாழத்தெரியாத 

போக்கினை

எவன் தான் புகுத்தியது.

 

நாக்கினில் நஞ்சையும்

பொய்யையும் கலந்து

இளையோர் மூளைக்குள்

யாரவன் செலுத்தியது.

 

வானிலே பறக்கின்ற

மகிழ்ச்சியின் எல்லையை

குறோதக்  கூட்டினில்

எவனோ குறுக்கியது.

 

உலகத்தில் அழியாத

காதலும் இப்போது

உயிர் கொல்லும்

ஊனமாய் ஆக்கியது.

 

மதங்களின் பெயராலே 

அடி படும் சுடுபடும்

மானுட இழி நிலை

பெருக்கியது.

 

அனைவற்கும் இனிமையை

அள்ளித் தருகின்ற-இந்த

பிரபஞ்ச வெளியிலே-நீண்ட

ஆயுள் வரைக்கும் 

அன்புடன் வாழ்தலே

அகிலத்தின் 

வெற்றியென்பேன்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்ச வெளியிலே-நீண்ட

ஆயுள் வரைக்கும் 

அன்புடன் வாழ்தலே

அகிலத்தின் 

வெற்றியென்பேன்.

 

நீண்ட ஆயுள் எல்லோருக்கும் ஆசை தான். ஆனால்  தண்ணீரை காசாக்கும் காலமாக
ஆகி போச்சு. . சுத்தமான காற்றும்  மாசு பட்டு போச்சு .நோய் நொடியும்  வந்து ஆயுளும் குறைஞ்சு போச்சு

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தனக்குத்தானே குழி தோண்டுவதை நறுக்குத் தெறித்தாற்போல் கவிதை சொல்கிறது.......!  😎

நன்றி கோபி ......! 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிலாமதி said:

பிரபஞ்ச வெளியிலே-நீண்ட

ஆயுள் வரைக்கும் 

அன்புடன் வாழ்தலே

அகிலத்தின் 

வெற்றியென்பேன்.

 

நீண்ட ஆயுள் எல்லோருக்கும் ஆசை தான். ஆனால்  தண்ணீரை காசாக்கும் காலமாக
ஆகி போச்சு. . சுத்தமான காற்றும்  மாசு பட்டு போச்சு .நோய் நொடியும்  வந்து ஆயுளும் குறைஞ்சு போச்சு

உண்மைதான். இயற்கையை அழித்து செயற்கையை நம்பி வாழ வெளிக்கிட்டதன் விழைவதான் என்று நினைக்கிறேன்.  கவிதை பார்த்து கருத்தெழுதியதற்கு நன்றிகள்

2 hours ago, suvy said:

மனிதன் தனக்குத்தானே குழி தோண்டுவதை நறுக்குத் தெறித்தாற்போல் கவிதை சொல்கிறது.......!  😎

நன்றி கோபி ......! 

உங்கள் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் suvy

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ மனிதர்கள் எல்லோருமே மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மாற்றம் நல்லதாக இல்லை என்பதுதான் வருத்தம். அழகான வரிகளால் அதை காட்டியிருக்கிறீர்கள்.நன்றி உங்கள் பகிர்வுக்கு

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nige said:

ஏனோ மனிதர்கள் எல்லோருமே மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மாற்றம் நல்லதாக இல்லை என்பதுதான் வருத்தம். அழகான வரிகளால் அதை காட்டியிருக்கிறீர்கள்.நன்றி உங்கள் பகிர்வுக்கு

உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.