Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.


 
இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3  விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி ரன்கள் எடுக்கத் திணறினர்.
முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 84 ரன்னில் வெளியேறினார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

சாம் பில்லிங்ஸ் தனி ஒருவராக போராடினார். கிடைத்த பந்துகளை ரன்களாக மாற்றினார். ஆனால் அவருக்கும் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை.

சிறப்பாக ஆடிய சாம் பில்லிங்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 100 பந்துகளில் 2 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 118 ரன்கள் குவித்து ஆட்டத்தின் இறுதி பந்தில் அவுட்டானார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜேசில்வுட் தேர்வு செய்யப்பட்டார்.

 

https://www.maalaimalar.com/news/sports/2020/09/12020025/1866657/Australia-won-by-19-runs-against-England-in-first.vpf

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கிளன் ம‌ஸ்வேல் அதிர‌டி ஆட்ட‌த்தால் அவுஸ்ரேலியா தொட‌ர‌ 2-1 வென்ற‌து 💪

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்".. தெறிக்க விட்ட சீமான்! "எந்த காலத்திலும், யாருடனும் நாங்கள் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம்... வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்" என்று சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதற்கான வேலைகளில் எல்லா கட்சிகளுமே இறங்கிவிட்டன.. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது? அல்லது தனித்து போட்டியிடுவதா? அல்லது யாருக்கு எத்தனை சீட் என்பன உட்பட விறுவிறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் சத்தமே இல்லாமல் இருந்தது.. கமல் தலைமையில் 3வது அணி உருவாக வாய்ப்பு என்று சொல்லப்பட்டபோதுகூட, அந்த லிஸ்ட்டில் நாம் தமிழர் கட்சி இல்லை. அதனால் இந்த கட்சி தேர்தலில் இந்த முறையாவது போட்டியிட போகிறதா என்ற டவுட் இருந்து கொண்டே இருந்தது. தமிழ் இதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே அறிவித்துவிட்டார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்... அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் நான் போட்டியிட உள்ளேன். தமிழின் பெருமை தமிழ் குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேசியவர்கள் அதற்கு எதிரான காட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் தமிழின் பெருமையை குறித்து தற்பொழுது பேச முடியாமல் இருக்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சியிலும் தொகுதி வேட்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.. எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது... தனித்தே நிற்கும்" என்றார். அதிமுக, திமுக அதிமுக, திமுக திராவிட கட்சிகளாகட்டும், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளாகட்டும், கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வரும் நிலையில், சீமான் மட்டும் தனியாகவே தேர்தல்களை சந்தித்து வருகிறார். இந்த முறையும், தனித்து போட்டியிடுவதுதான் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பமாகவும் இருக்கிறதாம். சலிப்பு எனினும், "ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுகிறோம்.. தொடர்ச்சியாக தோல்வி அடைந்தால், தொண்டர்கள் ஒருவித சலிப்பை சந்திப்பார்கள்.. அதனால் இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று சீமானுக்கு ஆலோசனைகளை சொன்னார்கள். ஆனால் சீமான், தன் நிலைப்பாட்டில் அப்போதிருந்தே உறுதியாக இருந்தாராம்.. அதன்படியே தற்போது தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர். பிரச்சாரம் எப்படியும் சீமான் தேர்தலில் இறங்குகிறார் என்றாலே தொகுதிகளில் பிரச்சாரம் களை கட்டும்.. சோயில் மீடியாவும் பரபரப்பாக இருக்கும்.. அந்த வகையில், வரப்போகிற தேர்தலிலும் நாம் தமிழர் பட்டைய கிளப்ப போகிறது என்பதில் சந்தேகமில்லை... ஆனால், இந்த முறை கட்சிக்குள் சில சலசலப்புகள், அதிருப்திகள், விலகல்கள் நடந்துள்ளன.. இவைகளுக்கு நடுவில் நாம் தமிழர் கட்சி எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்புதான். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-election-naam-tamilar-katchi-will-contest-alone-announces-seeman/articlecontent-pf490101-398796.html
    • ரஞ்சித், பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு?  கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம்.  MR ஸ்ராலின் எழுதிய நீண்ட விமர்சனம் நிலாந்தனின் கட்டுரைக்கானது. அதனால்தான் இணைத்திருந்தேன். ஸ்ராலினதும் பிள்ளையானினதும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை விரும்பாதற்கு தனிப்பட்ட காரணம் எனக்கு உள்ளது. அதை யாழில் சந்தர்ப்பம் வரும்போது அதற்குரிய திரியில் எழுதுகின்றேன். முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா? நான் சொல்ல வந்தது ஒரே திரியில் பக்கம் பக்கமாக வெட்டி ஒட்டுவதை. சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?
    • அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்..  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.