Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். 

அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான்.

தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம்.

பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. 

இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • Like 7
  • Thanks 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதல்வன்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.  அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒ

சண்டமாருதன்

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம்

goshan_che

தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், ப

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, முதல்வன் said:

தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம்.

 

நான் வாசித்த/வாசிக்கும் சில புத்தகங்களில் இருந்து சிலவற்றை பதிகின்றேன். அவை இணையத்தில் இல்லாததால் தட்டச்சு செய்துதான் பதியவேண்டும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

நான் வாசித்த/வாசிக்கும் சில புத்தகங்களில் இருந்து சிலவற்றை பதிகின்றேன். அவை இணையத்தில் இல்லாததால் தட்டச்சு செய்துதான் பதியவேண்டும்!

மிக்க நன்றி கிருபன் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அரசியல்
நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.
அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். #

நல்ல நோக்கம் பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

இவ்வாறான திரியை திறந்ததற்கு மிகவும் நன்றி முதல்வன்.

வெறும் தனி மனித  துதிபாடல்கள்கள், தனிமனித காழ்புணர்வுகளைத் தவிர்தது  சரிகளையும், தவறுகளையும் அறிவுபூர்வமாக திறந்த மனதுடன் விவாதிக்கும் சுயவிமர்சன கண்ணோட்டத்துடனான  திரியாக இது அமையவேண்டும் என்பதே எனது எதிர்பார்பபு. அதன் மூலம் எம்மை நாமே திருத்தி நெகிழ்வுத்தன்மையுடன் தமிழ் தேசியத்தை ஒளிர்விட செய்ய முயற்சி எடுக்க முடியும்.  

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எரிவது தமிழரின் கையில்.🙏

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2020 at 03:30, முதல்வன் said:

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். 

முதல்வன்
நீங்கள் இந்த திரி தொடங்கியநேரம் ஊரிலும் தமிழ்கட்சிகளை இணைக்கும் அலுவல்களையும் தொடங்கியிருக்கிறார்கள்.
எனவே ஒரு புள்ளியில் எல்லோரும் சேர்ந்தால் நல்லது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான திரியை திறந்ததற்கு மிகவும் நன்றி முதல்வன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆரோக்கியமான பக்கங்களை நாம் இங்கு ஆரம்பிக்க வேண்டும்.

முதல்வன்! உங்கள் சிந்தனைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்களுடன் என் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 👍🏽

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2020 at 12:49, tulpen said:

இவ்வாறான திரியை திறந்ததற்கு மிகவும் நன்றி முதல்வன்.

வெறும் தனி மனித  துதிபாடல்கள்கள், தனிமனித காழ்புணர்வுகளைத் தவிர்தது  சரிகளையும், தவறுகளையும் அறிவுபூர்வமாக திறந்த மனதுடன் விவாதிக்கும் சுயவிமர்சன கண்ணோட்டத்துடனான  திரியாக இது அமையவேண்டும் என்பதே எனது எதிர்பார்பபு. அதன் மூலம் எம்மை நாமே திருத்தி நெகிழ்வுத்தன்மையுடன் தமிழ் தேசியத்தை ஒளிர்விட செய்ய முயற்சி எடுக்க முடியும்.  

இதுக்கு நன்றியும் சொல்கிறீர்கள்.. வேறு திரியில் சிங்களவர் குறித்து கருத்தும் சொல்கிறீர்கள்.

உங்கள் நிலைப்பாடு புரியவில்லை ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து நான் இன்னொரு திரியில் எழுதிய கருத்தையும் அதற்கு சண்டமாருதன் வழங்கிய பதிலையும் இதில் இணைக்கிறேன்.

 

On 11/9/2020 at 15:32, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

Edited by முதல்வன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2020 at 04:43, சண்டமாருதன் said:

ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

 

நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். 

கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும்.

அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும்.

இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. 

இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது.

இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. 

இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். 

அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். 

அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும்.

இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். 

இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன்.

அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.

 

 

 

Edited by முதல்வன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது.

தேசிய இனம் என்றால் என்ன?

இனத் தேசியம் என்றால் என்ன?

அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன?

இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன?

இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம்.

பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக,  இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன்.

உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

 

 

யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அண்ணை இட்ட பணியைத்தொடரவேனும் ஆக்கபூர்வமாக தொடர வாரீர். 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 15/9/2020 at 06:18, goshan_che said:

யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? 

 

1 hour ago, முதல்வன் said:

திலீபன் அண்ணை இட்ட பணியைத்தொடரவேனும் ஆக்கபூர்வமாக தொடர வாரீர். 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும். 

திலீபண்ணாவின் கனவு நனவாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் 

ஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆனால், அவை பெருமைக்குரிய சொற்றொடர்கள் அல்ல. மாறாக தமிழ் மிதவாதத்தின் இயலாமையை தோல்வியைக் குறிக்கும் சொற்றொடர்களாகவே பயன்படுத்தப்பட்டன.

2009இற்குப் பின் மறுபடியும் அதே அப்புக்காத்து அரசியல் மேலெழத் தொடங்கி விட்டது. தற்பொழுது தமிழ் தேசியக் கட்சிகளில் முன்னணியில் நிற்கும் பலரும் சட்டத்தரணிகளே. தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அறிவியல் பாரம்பரியத்தில் சட்டத்தரணிகளாக பிரகாசித்த பலரும் ஒன்றில் தொழில்சார் சட்டத்தரணிகளாக மாறி நன்கு உழைத்தார்கள் அல்லது தாம் உழைத்த புகழையும் காசையும் அரசியலில் முதலீடு செய்து அரசியல் விலங்குகளாக மாறினார்கள்.

இந்த இரண்டுக்கும் இடையில் சட்டச் செயற்பாட்டாளர்களாக மாறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உதவி புரியும் சட்டச் செயற்பாட்டாளர்கள் மிகமிகக் குறைவு. சட்டச் செயற்பாடு இயக்கங்களும் மிகமிகக் குறைவு.

 

Link to comment
Share on other sites

On 14/9/2020 at 17:18, goshan_che said:

என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது.

தேசிய இனம் என்றால் என்ன?

இனத் தேசியம் என்றால் என்ன?

அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன?

இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன?

இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம்.

பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக,  இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன்.

உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

 

 

யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

 

உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். 

ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை  தமிழ் தேசீய இனமாக கருதி  அவர்கள் மீது ஒடுக்குமுறையை  செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். .

 

பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து.  கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன். 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சண்டமாருதன் said:

பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து.  கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன்

நன்றி சண்டமாருதன்.

ஜான் மாஸ்ரரின் கட்டுரையை pdf இல் இருந்து கொப்பி பண்ணி சுரதா converter மூலம் பாமினியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றி செம்மைப்படுத்தி இணைத்திருந்தேன். அண்மையில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை!

தோழர் ரகுமான் ஜானின் மூன்று தடிமனான புத்தகங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. அவற்றில் இருந்து சில பகுதிகளை தட்டச்சு செய்து இணைக்கும் நோக்கம் இருக்கின்றது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 00:18, goshan_che said:

என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது.

 

என்ன கோஷான் செய்யிறது, எண்களில் பலபேருக்கு மற்றவன் செய்யிறதில குற்றம் கண்டுபிடிக்கவும், நோட்டை சொல்லவும்தான் தெரியும். நீங்கள் திடுதிப்பென்று ஒரு திரியை திறந்து உங்கடை ஆலோசனைகளையும் ஆரோக்கியமான கருத்தாடல்களையும் பதிவிடுங்கள் என்றால் எங்கைபோறது. வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 00:18, goshan_che said:

 

தேசிய இனம் என்றால் என்ன?

இனத் தேசியம் என்றால் என்ன?

அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன?

இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன?

இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம்.

பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக,  இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன்.

உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

 

 

யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

கோஷான், யார் தமிழர், நாம் தமிழர் என்ற கதைகளையெல்லாம் வேறு திரிகளில்  வைத்து வாதாடி களைத்துவிட்டோம் . தயவுசெய்து இந்தத்திரியையாவது சரியான போக்கில் பயணிக்க விடலாமே??

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.