Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

போராட்டம் என்ற ஒன்று ஆரம்பித்ததே பிழை

ஆரம்பித்தது பிழையே இல்லை.

அடைய முடியா இலக்கை, எந்த இலக்கும் தொடங்கும் போது அடைய முடியாத இலக்குத்தான் என்று எண்ணியபடி, பெரிய வலுக்கள் எல்லாம், அடைய முயற்சித்தால் அழிக்கப்படுவீர்கள் என எச்சரித்த பின்னும் அடைய முயன்றதால் தோற்றுப்போனோம்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதல்வன்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.  அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒ

சண்டமாருதன்

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம்

goshan_che

தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், ப

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

முஸ்லீம் தரப்பு கையாளுகின்ற மாதிரி தமிழரும் கையாண்டு இருக்கலாம் என்பது தான் எனது ஆதங்கம்  

இதில் நியாயம் உண்டு. தமிழர்கள் பெரிய எடுப்பில் போராடாமல் (ஆயுதம் தூக்க முன்) ராஜதந்திர நகர்வுகளை செய்திருக்கலாம். தரப்படுத்தல், வளப்பகிர்வு போன்றவற்றில் சாதித்தும் இருக்கலாம் என்றே நானும் என்ணுகிறேன்.

ஆனால் மஹாவம்ச மனோநிலையை புரிந்து கொண்டால் - இது ஒரு அளவுக்கு மேல் பலன் தராது என்பது புரியும்.

48 இல் நாம்தான் முதல் குறி. மலையக தமிழரையும் சேர்த்தால் கணிசமான மக்கள். கல்வி, வேலை யில் முன்னிடம். 

பேரினவாதம் தனக்கான முதல் எதிரி என எம்மையே தீர்மானித்தது. முஸ்லீம்களை அல்ல.

48 இல் இருந்து எத்தனை கலவரங்கள் தமிழருக்கு எதிராக நடந்தது? எத்தனை முஸ்லீம்களுக்கு எதிராக நடந்தது?

2009 க்கு பின் இந்த கணக்கு எப்படி இருக்கிறது.

ஆகவே தமிழர்களை திட்டமிட்டு அழிக்கும் போது தேவை கருதி முஸ்லீம்கள் அணைக்கப்பட்டார்கள். அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். 

இப்போ role reversal. 48-2009 முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து, நாம் பாடம் படித்து, நடைமுறை படுத்த வேண்டிய காலம் -இப்போ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

எல்லாருக்கும் எந்த நேரமும் அடங்க மறுக்க கூடாது என்பதை நான் ஒரு பாடமாக கருதுகிறேன்.

அடங்கினாலும் அடங்காது விட்டாலும் அழிக்க படுவீர்கள் என்றால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அடங்கினாலும் அடங்காது விட்டாலும் அழிக்க படுவீர்கள் என்றால்?????

எமக்கு ஜென்ம வைரி ஒருவந்தான்.

அவன் மட்டுமே எம்மை அடங்கினாலும், அடங்காது விட்டாலும் அழிப்பேன் என்ற நிலைப்பாட்டில் இருப்பவன், இருந்தவன்.

ஆனால் அவனுக்கு எம்மை தனியே அழிக்கும் இயலுமை இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

எமக்கு ஜென்ம வைரி ஒருவந்தான்.

அவன் மட்டுமே எம்மை அடங்கினாலும், அடங்காது விட்டாலும் அழிப்பேன் என்ற நிலைப்பாட்டில் இருப்பவன், இருந்தவன்.

ஆனால் அவனுக்கு எம்மை தனியே அழிக்கும் இயலுமை இருக்கவில்லை.

இங்கே தான் நாம் தோற்றுப்போனோம் தோற்றுப் போவோம்.

எம்மிடம் அல்லது எமக்காக எந்த அரசும் இல்லாதவரை?!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே தான் நாம் தோற்றுப்போனோம் தோற்றுப் போவோம்.

எம்மிடம் அல்லது எமக்காக எந்த அரசும் இல்லாதவரை?!?

அப்படி பார்த்தால் இது ஒரு கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா கதை போல நீண்டு கொண்டே இருக்கும்.

பகிடியாக ஒரு வழக்கு சொல்வார்கள். கலியாணம் இலட்சியம், கறி சோறு நிச்சயம் என்று.

கலியாணம் கட்டினால்தான் கறி சோறு சாப்பிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தால் சில நேரம் கலியாணமே நடக்காது போகலாம், கறி சோறும் கிடைக்காமலே போகலாம்.

ஆனால் கலியாணம் கட்டுவது எங்கள் இலட்சியம்தான் ஆனால் கிடைக்கும் போது கறி சோற்றையும் சாப்பிடுவோம் என்ற கொள்கை நிலைய நாம் எடுத்தால் - கலியாணம் நடக்காமல் போனாலும், கறி சோறாவது உண்டிருப்போம்.

Politics is the art of the possible, the attainable — the art of the next best  என்கிறார் பிஸ்மார்க்.

அரசியல் என்பது அடைய கூடியதை அடையும் கலை. இயலுமானதை, அடுத்த சிறந்த தெரிவை வெல்லும் கலை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிச்சயம் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் இருக்கிறது.

நிச்சயம் இவர்கள் ஒரு டீலை போட்டு, திறைசேரி மேற்பார்வையிலாவது, வடக்கு மாகாணத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரும் ஒரு நிதியத்தை உருவாக்கில் பலதை செய்யலாம்.

இதற்கு எதிர்ப்பு தெற்கில் நிச்சயம் கிளம்பும் என்பதை ஊகித்து, அவ்வாறு எதிர்புகள் எழா வண்ணம் முன்னேற்பாடுகளை செய்யலாம்.

2013 இல் சீவி இப்படி ஒரு மாகாண நலன் சார்ந்த அரசியலை முன்னெடுப்பார் என எதிர்பார்த்தேன்.

கூட்டமைப்பின் எம் பிகள் அரசியல் தீர்வு குறித்து, விசாரணை குறித்து சம நேரத்தில் பேசுவார்கள்.

அவரவர் அவரவர் வேலை பகுப்பை சரியாக செய்தால் போதும்.

ஆனால் நடந்ததோ இதன் நேரெதிர். சிவி முழுக்க முழுக்க எம்பிகள் செய்ய வேண்டியதை செய்ய, எம்பிகளோ அவருடன் முறுகுவதை தவிர வேறெதையும் செய்யவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தமிழர்களை நசுக்குபவர்களுக்கே வாக்களிக்கும் நிலை சிங்கள மக்களிடம் இருக்கும் வரை தமிழரின் எந்த முயற்சியும் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியாது.

இதனால் தான் தலைவர் பறித்து எடுப்பது மட்டுமே தமிழருக்கு நிரந்தரம் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

தமிழர்களை நசுக்குபவர்களுக்கே வாக்களிக்கும் நிலை சிங்கள மக்களிடம் இருக்கும் வரை தமிழரின் எந்த முயற்சியும் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியாது.

இது நிச்சயமாக உண்மை.

83 க்கு முன்னரும், 2009 க்கு பின்னரும் தனியே தமிழர், அரசோடு இரு தரப்புக்கு மத்தியில் மட்டும் பேச்சு என்ற நிலையில் நீங்கள் சொல்வது உண்மைதான்.

47 minutes ago, விசுகு said:

இதனால் தான் தலைவர் பறித்து எடுப்பது மட்டுமே தமிழருக்கு நிரந்தரம் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்

தனியே சிங்கள அரசோடு மட்டுமே நாம் முழு நேரமும் டீல் பண்ணி இருந்தால் இந்த நிலைப்பாடும் சரியானதாகவே இருந்திருக்கும்.

பிகு:

அண்ணா இது நான் சொல்வது சரி என நிறுவும் போட்டி அல்ல என மேலே முதல்வன் கூறியதை மனதில் கொள்கிறேன்.

ஆகவே இத்தோடு அமைகிறேன்.

பார்ப்போம் மற்றையவர்கள் பார்வை எப்படி உள்ளது என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

போராட்டம் உணர்சி வசப்பட்டதால், படுத்தியதால் ஏற்பட்டது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன்.

1. உணர்சிவசப்படுதல் வேறு, உணர்வு உந்தல் வேறு.  உணர்வில்லாதவன் ஏன் போராடப்போகிறான்? ஆகவே எல்லா போராட்டமும் உணர்வின் அடிப்படையிலேயே எழுகிறது.

2. தொடர்சியான திட்டமிட்ட கலவரங்கள். இவற்றை கலவரங்கள் என்பதே பிழை. இரு குழுக்கள் அடிபட்டால்தான் கலவரம். ஒரு குழு இன்னொரு குழுவை அரச ஆதரவோடு தாக்குவது - வேட்டை. தொடர்ந்து ஆண்டுவிழா போல தமிழர்கள் வேட்டையாடப்படார்கள்.

3. திட்டமிட்ட குடியேற்றங்கள். தமிழர் நிலங்கள் கல்லோயா, மகாவலி என்று அபகரிக்கப்பட்டது.

4. மொழி வாரி அடக்குமுறை. சிங்களம் மட்டுமே தமிழர் பகுதிகளிலும் ஆட்சி மொழி என்பதன் மூலம், தமிழ் மட்டும் அல்லது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த பல்வேறு சமூக நிலைகளில் இருந்த தமிழரை ஒரிரவில் “எழுத்தறிவில்லாதவர்கள்” ஆக்கியது.

5. தமிழர் தாயகம் தவிர ஏனைய பகுதிகளில் தொழில் கூட செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியது.

6. ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சோல்பெரி யாப்பு தந்த சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு சரத்தை 1ம் குடியரசு யாப்பு அகற்றியது.

7. சத்தியாகிரகங்கள் வன்முறை மூலம் கேலிக்கூத்தாக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் மீள, மீள கிழிக்கப்பட்டது.

இப்படி தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக, கெளரவம் குறைவதாக, அழித்தொழிக்க படப்போகிறோம் என்று அச்ச உணர்வு வருவதாகவே வட்டு கோட்டை தீர்மானத்துக்கு முந்திய காலம் இருந்தது.

தரப்படுத்தல் ஒன்றை தவிர போராட்டம் ஆரம்பிக்க கால்கோலிய அத்தனை காரணங்களிலும் தமிழர் பக்கம் 100% நியாயம் இருந்தது.

Survival instinct என்பார்கள். திருப்பி அடி, அல்லது அழிக்கப்படுவாய் என்ற உணர்வே அப்போ இருந்தது. 

அழியப்போகிறோம் என்ற நிலையில், அகிம்சை வழியில் ஏதும் செய்யமுடியாது என்ற நிலை வந்த பின்பே போது போராட்டம் எழுந்தது. 

மேலே சொன்னது போல கூட்டணி உணர்சிவசப்படுத்தியது உண்மை.

ஆனால் இயக்க தலைவர்கள் எவரும் இந்த உணர்சி வசத்தால் போராட வரவில்லை. 

நான் அறிந்தவரை தலைவரோ, ஏனைய இயக்க தலைவர்களோ உணர்சி வசப்படும் பேர்வழிகள் அல்ல. தவிரவும் வெகு விரைவிலேயே எல்லா இயக்க தலைமகளும் கூட்டணி உசுப்பேத்துவதை தவிர எதையும் செய்யாது என்பதை கண்டு, கூட்டணியின் உண்ணாவிரதத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியும் விட்டார்கள்.

மாணவர் பேரவை, தலைவர், தியாகி சிவகுமாரன் போன்றோர் தனியாக அல்லது சிறு குழுவுடன், புரட்சிகர சிந்தனையாளர்கள் இன்னொரு புறம் - தீர்க்கமான பார்வையோடுதான் போராட்டத்தை தொடங்கினார்கள்.

உசுப்பேத்தல், உணர்சி வசப்படுத்தல் நிச்சயம் இருந்தது.

ஆனால் போராட்டம் உருவாக பெரிதும் காரணமானது, அநியாயம் நடக்கிறது, போராடாவிட்டால் அழிந்து போவோம் என்ற பய/எச்சரிக்கை உணர்வுதான்

இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது nothing less than genocide என்று பேசியுள்ளார்.

இந்தியா படைகளை அனுப்பியது.

இணை அனுசரனை நாடுகள் என ஜி7 இல் உள்ள பெரும்பாலான நாடுகள் கவனம் செலுத்தின. கொழும்பு வருபவர்கள் வன்னிக்கு போய் கை நனைக்காமல் திரும்பாத காலம் ஒன்று இருந்தது.

நோர்வே மத்தியஸ்தம் செய்தது.

தேவையான அளவு சர்வதேச கவனத்தை போராட்டம் ஈர்த்தது அதற்கு ஒரு காரணம் அதன் பின்னால் இருந்த நியாயம். 

ஓம்

எல்லாருக்கும் எந்த நேரமும் அடங்க மறுக்க கூடாது என்பதை நான் ஒரு பாடமாக கருதுகிறேன்.

1. அந்த காலத்தில் போராட போனதற்கு காரணம் அந்த காலங்களில் போராடப் போனவர்கள் ஹீரோவாக பார்க்கப்படடார்கள் ..தாங்களும் ஹீரோவாக பலர் ஆசைப்பட்ட்னர்.
வறுமை 
ஏதொருவகையில் வாழ்க்கையில் விரக்தி ,காதல் தோல்வி போன்ற ஏமாற்றங்கள் 
உண்மையிலேயே  மண்ணுக்காய் போராட  போனவர்கள் தலைவரோட சேர்த்து 10% வராது .
2.. கலவரங்கள் இது பற்றி எனக்கு தெளிவு இல்லை ....ஆரம்பத்தில் தமிழர்கள் தங்கட பாட்டில் இருந்த போதும்  சிங்களவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் செய்தார்களா ?....ஒரு காரணமுமின்றி சிங்களவர்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் செய்தார்களா ? தெளிவு படுத்துங்கள் 
3. இது பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன் ...அந்த காலத்திலேயே தமிழர்களும் அனுராதபுரம்,பொலநறுவை அடங்கலாய் சிலாபம் ,புத்தளம் ஏன் கொழும்பிலே இருந்தார்கள் தானே !...தமிழர்களிடம் கடுமையான உழைப்பும் ,வசதியும் இருந்தது விரும்பிய இடங்களில் குடியேறினார்கள் ...சிங்களவர்களிடம் அந்த நேரம் வசதி இல்லை ஆகவே அடார்த்தாய் குடியேற முயன்றார்கள் என நினைக்கிறன்.
4. இது விளங்கவில்லை எனக்கு தமிழர் பகுதிகளில் தமிழில் தானே தொழில் செய்கிறார்கள் 
5. அப்ப அந்த காலம் தொட்டு கொழும்பில் தமிழர்கள் வியாபாரம் செய்யவில்லையா?...என்னுடைய அப்பா போன்ற  பல அரச சேவையில் இருந்த அப்பாமார் சிங்கள பகுதிகளிலே வேலை செய்தார்கள்....என் அம்மப்பா உட்பட நிறைய தமிழர்கள் அந்த காலத்திலேயே அரச வேலையில் சிங்கள பகுதியில் வேலை செய்தார்கள்.
6. ஆங்கிலேயர்கள் ஏன் நாட்டை சிங்களவர்களிடம் கொடுத்திட்டு போனார்கள் ?

தலைவர் போன்றவர்கள் மற்றவர்களுக்கு அநியாயம் நடந்தால் அதை தட்டிக் கேட்க்கும் மனநிலை கொண்டவர்கள்...அவர்களிடம் எமக்கு அநியாயம் நடக்கிறது தட்டிக் கேட்க்க விட்டால்  அழிந்து போய் விடுவோம் என திரும்ப திரும்ப சொல்லப்பட தூண்டப்பட்ட அவர்கள் போராட்டத்தினை  ஆரம்பித்தார்கள் ..பிறகு அதில் இருந்து அவர்களால் விடுபட முடியவில்லை .
நான் மு.வாய்க்காலை ஏன் சர்வதேசம் வேடிக்கை பார்த்தது என்று கேட்க நினைத்தேன் ...நீங்கள் பதில் எழுதி விட்டீர்கள் ..கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாய் பயன்படுத்தவில்லை என்பதால் ஏதாவது ஒரு முடிவு வரட்டும் என்று சர்வதேசம் வேடிக்கை பார்த்திருக்கும் .

உங்கள் கடைசி வரிகளில் உங்களோடு முற்றாய் ஒத்து போகிறேன் ....எமக்கானதை பெற்றுக் கொள்ள வளைந்து கொள்ள  வேண்டிய  நேரத்தில் வளைந்து கொள்ள தான் வேண்டும் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணாவின் இந்த இரு பதிவுகளும் சில புரிதல்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இதில் நியாயம் உண்டு. தமிழர்கள் பெரிய எடுப்பில் போராடாமல் (ஆயுதம் தூக்க முன்) ராஜதந்திர நகர்வுகளை செய்திருக்கலாம். தரப்படுத்தல், வளப்பகிர்வு போன்றவற்றில் சாதித்தும் இருக்கலாம் என்றே நானும் என்ணுகிறேன்.

ஆனால் மஹாவம்ச மனோநிலையை புரிந்து கொண்டால் - இது ஒரு அளவுக்கு மேல் பலன் தராது என்பது புரியும்.

48 இல் நாம்தான் முதல் குறி. மலையக தமிழரையும் சேர்த்தால் கணிசமான மக்கள். கல்வி, வேலை யில் முன்னிடம். 

பேரினவாதம் தனக்கான முதல் எதிரி என எம்மையே தீர்மானித்தது. முஸ்லீம்களை அல்ல.

48 இல் இருந்து எத்தனை கலவரங்கள் தமிழருக்கு எதிராக நடந்தது? எத்தனை முஸ்லீம்களுக்கு எதிராக நடந்தது?

2009 க்கு பின் இந்த கணக்கு எப்படி இருக்கிறது.

ஆகவே தமிழர்களை திட்டமிட்டு அழிக்கும் போது தேவை கருதி முஸ்லீம்கள் அணைக்கப்பட்டார்கள். அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். 

இப்போ role reversal. 48-2009 முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து, நாம் பாடம் படித்து, நடைமுறை படுத்த வேண்டிய காலம் -இப்போ.

தமிழருக்கு எதிராய் கலவரங்கள் அதிகம் நடக்க காரணம் அவர்கள் திருப்பி அடித்தது தான் ...முஸ்லீம்கள், மலையக தமிழர் இந்த விடயத்தினை சுமுகமாய் கையாண்டனர் ..அதனால் அவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறைவு 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இது நிச்சயமாக உண்மை.

83 க்கு முன்னரும், 2009 க்கு பின்னரும் தனியே தமிழர், அரசோடு இரு தரப்புக்கு மத்தியில் மட்டும் பேச்சு என்ற நிலையில் நீங்கள் சொல்வது உண்மைதான்.

தனியே சிங்கள அரசோடு மட்டுமே நாம் முழு நேரமும் டீல் பண்ணி இருந்தால் இந்த நிலைப்பாடும் சரியானதாகவே இருந்திருக்கும்.

பிகு:

அண்ணா இது நான் சொல்வது சரி என நிறுவும் போட்டி அல்ல என மேலே முதல்வன் கூறியதை மனதில் கொள்கிறேன்.

ஆகவே இத்தோடு அமைகிறேன்.

பார்ப்போம் மற்றையவர்கள் பார்வை எப்படி உள்ளது என.

நானும் அதற்காக எழுதவில்லை  என்பது உங்களுக்குத்தெரியும்??

ஆனால்  மாற்றுவழிகளை தேடப்புறப்படும்போது 

அவை ஏற்கனவே  முயற்ச்சிக்காத பாதைகள்  அல்லது யுக்திகள் என  நாம் ஏமாறக்கூடாது

அது பாதையை விட முக்கியம்?

ஏனெனில்  தலைமை பொறுப்பிலுள்ளவர்களின் பல செயற்பாடுகள் மற்றும் முடிவுகளின் பிண்ணணி

முழுமையாக  எவருக்கும் தெரிவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

தமிழருக்கு எதிராய் கலவரங்கள் அதிகம் நடக்க காரணம் அவர்கள் திருப்பி அடித்தது தான் ...முஸ்லீம்கள், மலையக தமிழர் இந்த விடயத்தினை சுமுகமாய் கையாண்டனர் ..அதனால் அவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறைவு 
 
கலவரங்கள் ஆரம்பித்தது 1956இலிருந்து.....

அப்பொழுது  எவரும் திருப்பி அடிக்கவில்லை

ஆனால் பேச்சுவார்த்தை  அல்லது  முடிவு  எடுத்தல் என்று  வந்தால்  தமிழர்கள் (தலைவர்கள்) பலமாக  இருந்தனர்.  இதுவும் ஒரு  வகை அடி  தான்  சிங்களவர்களுக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலே எழுத நினைத்தது மறந்து விட்டது ...தமிழ் இளைஞ்ர்கள் முதலில் போராடியிருக்க வேண்டியது தமிழ் அரசியற் கட்சிகளுக்கு எதிராய் ...அவர்கள் உருப்படாதவர்கள் என்று தெரிந்தால் அவர்கள்  அந்த கட்சியில் சேர்ந்து அல்லது ஒரு புதிய கட்சி தொடங்கி தமிழ் மக்களுக்காய் சேவை செய்திருக்க வேண்டும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அந்த காலத்தில் போராட போனதற்கு காரணம் அந்த காலங்களில் போராடப் போனவர்கள் ஹீரோவாக பார்க்கப்படடார்கள் ..தாங்களும் ஹீரோவாக பலர் ஆசைப்பட்ட்னர்.

உணர்சி வசப்படுத்தியது போல இதுவும் ஓர் அங்கம்தான். தனியே ஆயுத கவர்சி மட்டும் அல்ல - எப்போதும் அநியாயத்துக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள் நிஜ ஹீரோக்கள். இந்த கிரேக்க சொல்லின் அர்த்தமே “பாதுகாப்பவன்”.  நாம் கூட மாவீரரை great warriors என்றல்லாமல் great heroes என்றே மொழிபெயர்கிறோம். ஆகவே போராடபோனவர்கள் ஹீரோக்கள்தான். 

1ம், 2ம் உலக யுத்தங்களில் போராட போனவர்களும் அவரவர் நாடுகளில் இன்றைக்கும் ஹீரோக்கள்தான்.  அதற்க்கா இந்த யுத்தங்கள் வந்ததே இந்த ஹீரோ கவர்சியால் என்று சொல்ல முடியாதல்லவா? அதே போல்தான் போராட்டமும். 

நிச்சயமாக போராட ஒரு அடிப்படை நியாயம் இருந்தது. அல்லது அரசுக்கு எதிராக துவக்கு தூக்குபவர்களை மக்கள் கொள்ளை கூட்டம் என்றே பார்த்திருக்கும். பின்னாநாளில் அரசுக்கு ஆதரவாக நின்ற ஆயுததாரிகளை அப்படி பார்க்கவும் செய்தது.

ஆகவே போராட்டத்தின் நியாயம்தான் போராளிகளை ஹீரோக்கள் ஆக்கியது.

மிகச்சிலர் ஆயுத கவர்சியில் சேர்ந்தது உண்மை. அப்படியானவர்கள் பெரும்பாலானோர் “கல்லிலும் முள்ளிலும் தூங்கினோம், பசி மூடவே போர்க்களம் ஆடினோம்” என்ற வாழ்க்கையை பார்த்து தலை தெறிக்க ஓடிவிட்டர்கள். 

5 hours ago, ரதி said:

வறுமை 
ஏதொருவகையில் வாழ்க்கையில் விரக்தி ,காதல் தோல்வி போன்ற ஏமாற்றங்கள் 
உண்மையிலேயே  மண்ணுக்காய் போராட  போனவர்கள் தலைவரோட சேர்த்து 10% வராது .

நிச்சயமாக இது தலைகீழ். இப்படி போனவர்கள் 5% கீழும் இல்லை. என்பதே எனது அனுபவம். (பின்னாளின் கட்டாய ஆட்சேர்ப்பை தவிர்த்து).

5 hours ago, ரதி said:

ஆரம்பத்தில் தமிழர்கள் தங்கட பாட்டில் இருந்த போதும்  சிங்களவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் செய்தார்களா

83, திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கவில்லை ( கலவரங்களில்). 83 இல் கூட ஒரு தாக்குதலுக்கு பதிலாக கலவரம் அவிழ்த்து விட பட்டதே ஒழிய - கலவரத்தில் தமிழர்கள் எதிர்த்து அடிக்கவில்லை.

5 hours ago, ரதி said:

ஒரு காரணமுமின்றி சிங்களவர்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் செய்தார்களா ? தெளிவு படுத்துங்கள்

ஓம், இப்போ முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட செய்யபடும் சீண்டல்கள், போலியான வாக்குவாதங்கள்  கூட இல்லை. அரசியல் காரணக்களுக்காக, தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கபட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

சிங்களவர்களிடம் அந்த நேரம் வசதி இல்லை ஆகவே அடார்த்தாய் குடியேற முயன்றார்கள் என நினைக்கிறன்

தமிழர்கள் சுய முயற்சியில் குடியேறினார்கள். வியாபாரம் செய்தார்கள். எந்த சிங்களவருடை எதையும் பறிக்கவில்லை. ஆனால் இப்போ தமிழ் நாட்டில் சேட்டுகளுக்கு இருப்பது போல, உகண்டாவில் இந்தியர்களுக்கு இருப்பதை போல,  சிங்களவர்களை உறிஞ்சி வாழ்கிறார்கள் என்ற குற்றசாட்டு இருந்தது. இது பெருமளவுக்கு உண்மையும் கூட.

ஆனால், தமிழர் காணிகளில் இருந்து மக்கள் படிபடியாக கலவரஙக்ளால் விரட்டப்படு அவை சிங்கள குடியேற்றமாக மாற்றப்பட்டது.  அம்பாறை பிள்ளையார் கோவில் போயிருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போ ஒரு முழு சிங்கள பகுதியில் இருக்கிறது. ஐயர் குடும்பம் மட்டும். ஒரு தலைமுறைக்கு முன்னர் கோவிலை சுற்றிலும் தமிழர்கள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இது விளங்கவில்லை எனக்கு தமிழர் பகுதிகளில் தமிழில் தானே தொழில் செய்கிறார்கள் 
 
அதை சொல்லவில்லை. ஊரில் முன்னம் பல செல்வந்தர்கள் சிங்கள ஊர் பெயருடன் இருந்தார்கள். கெக்கிராவை சுப்ரமணியம். கந்தானை கந்தையா. இப்படி. 48 க்கு முன் காலி, பாணதுற, அம்பலாங்கொடை இப்படி நாடு பூராவும் தமிழர்கள் தொழில் செய்தார்கள். இவை படிபடியாக அழிக்ககப்பட்டு 83 இல் கொழும்போடு முடக்கப்பட்டது. 83 இல் அதுவும் அழிக்கப்பட்டது. இப்போ கொழும்பில் இருக்கும் நிலை 90க்கு பின் மீள கட்டியது. ஏனைய இடங்கள் விட்டது விட்டதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஆங்கிலேயர்கள் ஏன் நாட்டை சிங்களவர்களிடம் கொடுத்திட்டு போனார்கள் ?

இது எனது பார்வை

இலங்கையில் கமெரன், மனிங், டொனமூர் சோல்பெரி என்று பல யாப்புகளை வைத்து ஆங்கியேயர்கள் படிபடியாக ஒரு அரசியலமைப்பு சோதனை களமாகவே இலங்கையை பார்த்தார்கள்.

இந்தியாவை போல் அன்றி இலங்கையில் மத, இன குழுக்கள் வன்முறையாக மோதவில்லை. வன்முறையான அல்ல மென்முறையான சுதந்திர போர் கூட நடக்கவில்லை.

இலங்கையை Asia’s oldest democracy என்பார்கள். காராணம் 21 வயதுக்கு மேலானா அனைவருக்கும் 1931, ஆசியாவிலே முதன் முறையாக இங்குதான் வாக்குரிமை கொடுக்கப்பட்டது.

கல்வியறிவும் மிகுந்து இருந்தது. 

சட்டம், ஒழுங்கு, நிர்வாக சேவை எல்லாம் தரமானதாக இருந்தது. 

இன அடிப்படையிலான அரசியல் இருந்தாலும் அது ஒரு கொலைவெறி அரசியலாக இருக்கவில்லை.

எந்த தமிழ்தலைவரும், போத்துகேயர் வரும் போது நாம் தனிநாடு, ஆகவே பிரித்து கொடுங்கள் என ஜின்னா போல் கேட்கவும் இல்லை.

ஆகவே, அவுஸ்ர்ரெலியா, நியூசிலாந்து போல ஒரு mature democracy யாக, இலங்கை இருக்கும் என அப்போ, ஆங்கிலேயரும், தமிழரும் எதிர்பார்த்தார்கள். அது நியாயமான எதிர்பார்ப்பும்தான்.

அப்படி இருந்தும் சோல்பெரி யாப்பில் சில இன ஒதுக்கலுக்கு எதிரான சரத்துகளை சேர்த்து, இராணியே நாட்டின் தலைவர் என்ற நிலையில், லண்டன் பிரிவீ கவுன்சிலே அரசியல் யாப்புக்கான நீதிமன்றம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்து விட்டே போனார்கள்.

பண்டரநாயகவுக்கு பிரதமர் ஆசை வரும் வரை எல்லாம் சுமூகமாகத்தான் (ஒப்பீட்டளவில்) போனது. 

இனவாதம் ஆட்சியை பெற்று தரும் என இலங்கையில் முதலில் நிறுவியவர் பண்டா. அதன் பின் நடந்தது race to the bottom தான். மாறி மாறி, யார் பெரிய இனவாதி என நிறுவ போட்டி போட, மக்களும் உள்ளதில் பெரிய இனவாதியை ஒவ்வொரு தேர்தலிலும் வெல்லவைத்தார்கள்.

சிங்களவர்கள் மட்டும் ஆங்கிலேயன் விட்டுப்போன சோல்பெரி யாப்பின் படி ஆட்சி செய்திருந்தால், நாடு இன்றைக்கும் சொர்க்கம்தான். 

ஆகவே 73 வருடங்களாக விடப்பட்ட பிழைகளுக்கு ஆங்கிலேயர்களையோ, 1948 இல் இருந்த தமிழ் தலைவர்களியோ நோவது நியாமில்லை.

48க்கு முன் பண்டாரநாயக்கவே இலங்கையை, கண்டி, கரையோரம், யாழ் என பிரித்து மூன்று சமஸ்டிகளின் ஒன்றியம் ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

எனவே 1948 இல் நாம் இருந்திருந்தாலும், தமிழருக்கு தனிநாடு கேட்டிருக்க மாட்டோம். பின்னாளில் இனவாதம் இப்படி கோரத்தாண்டவம் ஆடும் என்பதை அன்று யாரும் எதிர்வு கூற முடியாமலே இருந்திருக்கும்.

6 hours ago, ரதி said:

தமிழருக்கு எதிராய் கலவரங்கள் அதிகம் நடக்க காரணம் அவர்கள் திருப்பி அடித்தது தான் ...முஸ்லீம்கள், மலையக தமிழர் இந்த விடயத்தினை சுமுகமாய் கையாண்டனர் ..அதனால் அவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறைவு 
 
இல்லவே இல்லை. தமிழர்கள் அடிக்க தொடங்கியது 83 க்கு பிறகுதான்.

அதன் பிறகு கலவரமே நடக்கவில்லை.

4 hours ago, ரதி said:

நான் முதலே எழுத நினைத்தது மறந்து விட்டது ...தமிழ் இளைஞ்ர்கள் முதலில் போராடியிருக்க வேண்டியது தமிழ் அரசியற் கட்சிகளுக்கு எதிராய் ...அவர்கள் உருப்படாதவர்கள் என்று தெரிந்தால் அவர்கள்  அந்த கட்சியில் சேர்ந்து அல்லது ஒரு புதிய கட்சி தொடங்கி தமிழ் மக்களுக்காய் சேவை செய்திருக்க வேண்டும்   

அப்படி அவர்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு வாக்கு அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. 

ஆகவே அவர்கள் இவர்களின் பேச்சை (உணர்சி வசப்படுத்தல்) கவனத்தில் எடாமல், தம் வழியே பயணித்தர்கள்.

6 hours ago, விசுகு said:

நானும் அதற்காக எழுதவில்லை  என்பது உங்களுக்குத்தெரியும்??

ஓம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அவை ஏற்கனவே  முயற்ச்சிக்காத பாதைகள்  அல்லது யுக்திகள் என  நாம் ஏமாறக்கூடாது

அது பாதையை விட முக்கியம்?

ஏனெனில்  தலைமை பொறுப்பிலுள்ளவர்களின் பல செயற்பாடுகள் மற்றும் முடிவுகளின் பிண்ணணி

முழுமையாக  எவருக்கும் தெரிவதில்லை?

நிச்சயமாக. 

இதனால்தான் மீள் பார்வை அவசியமாகிறது. 

Finding fault (குற்றம் கண்டு பிடித்தல் ) இல்லாமல் lessons learnt (பாடம் கற்றல்) தேவைப்படுகிறது.

இப்படி முயற்சிகவில்கையே? எனும் போது இல்லை முயற்சிதோம். இப்படி அது முடிந்தது என்று சொல்லும் போது அடுத்த நிலைக்கு போகலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இது எனது பார்வை

இலங்கையில் கமெரன், மனிங், டொனமூர் சோல்பெரி என்று பல யாப்புகளை வைத்து ஆங்கியேயர்கள் படிபடியாக ஒரு அரசியலமைப்பு சோதனை களமாகவே இலங்கையை பார்த்தார்கள்.

இந்தியாவை போல் அன்றி இலங்கையில் மத, இன குழுக்கள் வன்முறையாக மோதவில்லை. வன்முறையான அல்ல மென்முறையான சுதந்திர போர் கூட நடக்கவில்லை.

இலங்கையை Asia’s oldest democracy என்பார்கள். காராணம் 21 வயதுக்கு மேலானா அனைவருக்கும் 1931, ஆசியாவிலே முதன் முறையாக இங்குதான் வாக்குரிமை கொடுக்கப்பட்டது.

கல்வியறிவும் மிகுந்து இருந்தது. 

சட்டம், ஒழுங்கு, நிர்வாக சேவை எல்லாம் தரமானதாக இருந்தது. 

இன அடிப்படையிலான அரசியல் இருந்தாலும் அது ஒரு கொலைவெறி அரசியலாக இருக்கவில்லை.

எந்த தமிழ்தலைவரும், போத்துகேயர் வரும் போது நாம் தனிநாடு, ஆகவே பிரித்து கொடுங்கள் என ஜின்னா போல் கேட்கவும் இல்லை.

ஆகவே, அவுஸ்ர்ரெலியா, நியூசிலாந்து போல ஒரு mature democracy யாக, இலங்கை இருக்கும் என அப்போ, ஆங்கிலேயரும், தமிழரும் எதிர்பார்த்தார்கள். அது நியாயமான எதிர்பார்ப்பும்தான்.

அப்படி இருந்தும் சோல்பெரி யாப்பில் சில இன ஒதுக்கலுக்கு எதிரான சரத்துகளை சேர்த்து, இராணியே நாட்டின் தலைவர் என்ற நிலையில், லண்டன் பிரிவீ கவுன்சிலே அரசியல் யாப்புக்கான நீதிமன்றம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்து விட்டே போனார்கள்.

பண்டரநாயகவுக்கு பிரதமர் ஆசை வரும் வரை எல்லாம் சுமூகமாகத்தான் (ஒப்பீட்டளவில்) போனது. 

இனவாதம் ஆட்சியை பெற்று தரும் என இலங்கையில் முதலில் நிறுவியவர் பண்டா. அதன் பின் நடந்தது race to the bottom தான். மாறி மாறி, யார் பெரிய இனவாதி என நிறுவ போட்டி போட, மக்களும் உள்ளதில் பெரிய இனவாதியை ஒவ்வொரு தேர்தலிலும் வெல்லவைத்தார்கள்.

சிங்களவர்கள் மட்டும் ஆங்கிலேயன் விட்டுப்போன சோல்பெரி யாப்பின் படி ஆட்சி செய்திருந்தால், நாடு இன்றைக்கும் சொர்க்கம்தான். 

ஆகவே 73 வருடங்களாக விடப்பட்ட பிழைகளுக்கு ஆங்கிலேயர்களையோ, 1948 இல் இருந்த தமிழ் தலைவர்களியோ நோவது நியாமில்லை.

48க்கு முன் பண்டாரநாயக்கவே இலங்கையை, கண்டி, கரையோரம், யாழ் என பிரித்து மூன்று சமஸ்டிகளின் ஒன்றியம் ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

எனவே 1948 இல் நாம் இருந்திருந்தாலும், தமிழருக்கு தனிநாடு கேட்டிருக்க மாட்டோம். பின்னாளில் இனவாதம் இப்படி கோரத்தாண்டவம் ஆடும் என்பதை அன்று யாரும் எதிர்வு கூற முடியாமலே இருந்திருக்கும்.

இல்லவே இல்லை. தமிழர்கள் அடிக்க தொடங்கியது 83 க்கு பிறகுதான்.

அதன் பிறகு கலவரமே நடக்கவில்லை.

அப்படி அவர்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு வாக்கு அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. 

ஆகவே அவர்கள் இவர்களின் பேச்சை (உணர்சி வசப்படுத்தல்) கவனத்தில் எடாமல், தம் வழியே பயணித்தர்கள்.

நன்றி சகோ நேரத்துக்கும் சரியான தகவல்கள் வரலாறுகளுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

உணர்சி வசப்படுத்தியது போல இதுவும் ஓர் அங்கம்தான். தனியே ஆயுத கவர்சி மட்டும் அல்ல - எப்போதும் அநியாயத்துக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள் நிஜ ஹீரோக்கள். இந்த கிரேக்க சொல்லின் அர்த்தமே “பாதுகாப்பவன்”.  நாம் கூட மாவீரரை great warriors என்றல்லாமல் great heroes என்றே மொழிபெயர்கிறோம். ஆகவே போராடபோனவர்கள் ஹீரோக்கள்தான். 

1ம், 2ம் உலக யுத்தங்களில் போராட போனவர்களும் அவரவர் நாடுகளில் இன்றைக்கும் ஹீரோக்கள்தான்.  அதற்க்கா இந்த யுத்தங்கள் வந்ததே இந்த ஹீரோ கவர்சியால் என்று சொல்ல முடியாதல்லவா? அதே போல்தான் போராட்டமும். 

நிச்சயமாக போராட ஒரு அடிப்படை நியாயம் இருந்தது. அல்லது அரசுக்கு எதிராக துவக்கு தூக்குபவர்களை மக்கள் கொள்ளை கூட்டம் என்றே பார்த்திருக்கும். பின்னாநாளில் அரசுக்கு ஆதரவாக நின்ற ஆயுததாரிகளை அப்படி பார்க்கவும் செய்தது.

ஆகவே போராட்டத்தின் நியாயம்தான் போராளிகளை ஹீரோக்கள் ஆக்கியது.

மிகச்சிலர் ஆயுத கவர்சியில் சேர்ந்தது உண்மை. அப்படியானவர்கள் பெரும்பாலானோர் “கல்லிலும் முள்ளிலும் தூங்கினோம், பசி மூடவே போர்க்களம் ஆடினோம்” என்ற வாழ்க்கையை பார்த்து தலை தெறிக்க ஓடிவிட்டர்கள். 

நிச்சயமாக இது தலைகீழ். இப்படி போனவர்கள் 5% கீழும் இல்லை. என்பதே எனது அனுபவம். (பின்னாளின் கட்டாய ஆட்சேர்ப்பை தவிர்த்து).

83, திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கவில்லை ( கலவரங்களில்). 83 இல் கூட ஒரு தாக்குதலுக்கு பதிலாக கலவரம் அவிழ்த்து விட பட்டதே ஒழிய - கலவரத்தில் தமிழர்கள் எதிர்த்து அடிக்கவில்லை.

ஓம், இப்போ முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட செய்யபடும் சீண்டல்கள், போலியான வாக்குவாதங்கள்  கூட இல்லை. அரசியல் காரணக்களுக்காக, தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கபட்டார்கள்.

என்னை பொறுத்த வரைக்கும்  இனத்திற்காக போராட போனவர்களை விட வேறு காரணங்களுக்காய் எதற்காய் போராட போகின்றோம் என்ற தெளிவு இன்மையால் போராட போனவர்களே அதிகம் 
 
முஸ்லீம்களுக்கு எதிராய்  சிங்களவர் கலவரத்தை தூண்ட காரணம் அவர்கள் நடந்து கொண்ட முறை ...அத்து மீறி போனதால்  அவர்களை அடக்க வேண்டிய  தேவை சிங்களவர்களுக்கு உண்டு .
அதே போல  அந்த காலத்திலும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சிங்களவர்களுக்கு சில ,பல காரணங்கள் இருந்திருக்க கூடும் ...தம்மை மீறி போய் விடுவார்கள் ,தமிழர்களின் அசுர வளர்ச்ச்சி , நாட்டை துண்டாக்கி விடுவார்கள் என்ற பயம் எல்லாவற்றையும் விட நீங்கள் சொன்ன பண்டாரநாயக்கா போன்ற அரசியல்வாதிகள் தங்கள் அரசியல்  சுயநலனுக்காய் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார்கள் 
 
9 hours ago, goshan_che said:

தமிழர்கள் சுய முயற்சியில் குடியேறினார்கள். வியாபாரம் செய்தார்கள். எந்த சிங்களவருடை எதையும் பறிக்கவில்லை. ஆனால் இப்போ தமிழ் நாட்டில் சேட்டுகளுக்கு இருப்பது போல, உகண்டாவில் இந்தியர்களுக்கு இருப்பதை போல,  சிங்களவர்களை உறிஞ்சி வாழ்கிறார்கள் என்ற குற்றசாட்டு இருந்தது. இது பெருமளவுக்கு உண்மையும் கூட.

ஆனால், தமிழர் காணிகளில் இருந்து மக்கள் படிபடியாக கலவரஙக்ளால் விரட்டப்படு அவை சிங்கள குடியேற்றமாக மாற்றப்பட்டது.  அம்பாறை பிள்ளையார் கோவில் போயிருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போ ஒரு முழு சிங்கள பகுதியில் இருக்கிறது. ஐயர் குடும்பம் மட்டும். ஒரு தலைமுறைக்கு முன்னர் கோவிலை சுற்றிலும் தமிழர்கள்தான். 

அதைத் தான் நானும் சொன்னேன்...தமிழர்களுக்கு முயற்சி இருகிறது ,வசதி இருக்கிறது சிங்களவர் பகுதியில் போய் குடியேறுகிறார்கள்.... சிங்களவர்களுக்கு அந்த வசதி இல்லை ...ஆகவே தமிழர்களிடம் இருந்து புடுங்கி எடுக்கிறார்கள் .
தமிழர்கள் பிழைப்புக்காய் தமிழர் பிரதேசங்களை விட்டு சிங்களவர் பகுதியில் போய் குடி இருப்பதால் தானே சிங்களவர்கள் தமிழர் பகுதிக்கு வருகிறார்கள் ...அடாத்தாய் பறிப்பதை தவிர்த்து பார்த்தால் சிங்களவர்களிலும் பிழை இல்லை 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அதை சொல்லவில்லை. ஊரில் முன்னம் பல செல்வந்தர்கள் சிங்கள ஊர் பெயருடன் இருந்தார்கள். கெக்கிராவை சுப்ரமணியம். கந்தானை கந்தையா. இப்படி. 48 க்கு முன் காலி, பாணதுற, அம்பலாங்கொடை இப்படி நாடு பூராவும் தமிழர்கள் தொழில் செய்தார்கள். இவை படிபடியாக அழிக்ககப்பட்டு 83 இல் கொழும்போடு முடக்கப்பட்டது. 83 இல் அதுவும் அழிக்கப்பட்டது. இப்போ கொழும்பில் இருக்கும் நிலை 90க்கு பின் மீள கட்டியது. ஏனைய இடங்கள் விட்டது விட்டதுதான்.

இப்பவும் அனுராதபுரம் போன்ற பகுதிகளில் தமிழ் வியாபாரிகள்  பேரும் புகழுடன் இருக்கின்றனர்....போய்ப் பாருங்கோ .

8 hours ago, goshan_che said:

இது எனது பார்வை

இலங்கையில் கமெரன், மனிங், டொனமூர் சோல்பெரி என்று பல யாப்புகளை வைத்து ஆங்கியேயர்கள் படிபடியாக ஒரு அரசியலமைப்பு சோதனை களமாகவே இலங்கையை பார்த்தார்கள்.

இந்தியாவை போல் அன்றி இலங்கையில் மத, இன குழுக்கள் வன்முறையாக மோதவில்லை. வன்முறையான அல்ல மென்முறையான சுதந்திர போர் கூட நடக்கவில்லை.

இலங்கையை Asia’s oldest democracy என்பார்கள். காராணம் 21 வயதுக்கு மேலானா அனைவருக்கும் 1931, ஆசியாவிலே முதன் முறையாக இங்குதான் வாக்குரிமை கொடுக்கப்பட்டது.

கல்வியறிவும் மிகுந்து இருந்தது. 

சட்டம், ஒழுங்கு, நிர்வாக சேவை எல்லாம் தரமானதாக இருந்தது. 

இன அடிப்படையிலான அரசியல் இருந்தாலும் அது ஒரு கொலைவெறி அரசியலாக இருக்கவில்லை.

எந்த தமிழ்தலைவரும், போத்துகேயர் வரும் போது நாம் தனிநாடு, ஆகவே பிரித்து கொடுங்கள் என ஜின்னா போல் கேட்கவும் இல்லை.

ஆகவே, அவுஸ்ர்ரெலியா, நியூசிலாந்து போல ஒரு mature democracy யாக, இலங்கை இருக்கும் என அப்போ, ஆங்கிலேயரும், தமிழரும் எதிர்பார்த்தார்கள். அது நியாயமான எதிர்பார்ப்பும்தான்.

அப்படி இருந்தும் சோல்பெரி யாப்பில் சில இன ஒதுக்கலுக்கு எதிரான சரத்துகளை சேர்த்து, இராணியே நாட்டின் தலைவர் என்ற நிலையில், லண்டன் பிரிவீ கவுன்சிலே அரசியல் யாப்புக்கான நீதிமன்றம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்து விட்டே போனார்கள்.

பண்டரநாயகவுக்கு பிரதமர் ஆசை வரும் வரை எல்லாம் சுமூகமாகத்தான் (ஒப்பீட்டளவில்) போனது. 

இனவாதம் ஆட்சியை பெற்று தரும் என இலங்கையில் முதலில் நிறுவியவர் பண்டா. அதன் பின் நடந்தது race to the bottom தான். மாறி மாறி, யார் பெரிய இனவாதி என நிறுவ போட்டி போட, மக்களும் உள்ளதில் பெரிய இனவாதியை ஒவ்வொரு தேர்தலிலும் வெல்லவைத்தார்கள்.

சிங்களவர்கள் மட்டும் ஆங்கிலேயன் விட்டுப்போன சோல்பெரி யாப்பின் படி ஆட்சி செய்திருந்தால், நாடு இன்றைக்கும் சொர்க்கம்தான். 

ஆகவே 73 வருடங்களாக விடப்பட்ட பிழைகளுக்கு ஆங்கிலேயர்களையோ, 1948 இல் இருந்த தமிழ் தலைவர்களியோ நோவது நியாமில்லை.

48க்கு முன் பண்டாரநாயக்கவே இலங்கையை, கண்டி, கரையோரம், யாழ் என பிரித்து மூன்று சமஸ்டிகளின் ஒன்றியம் ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

எனவே 1948 இல் நாம் இருந்திருந்தாலும், தமிழருக்கு தனிநாடு கேட்டிருக்க மாட்டோம். பின்னாளில் இனவாதம் இப்படி கோரத்தாண்டவம் ஆடும் என்பதை அன்று யாரும் எதிர்வு கூற முடியாமலே இருந்திருக்கும்.

இல்லவே இல்லை. தமிழர்கள் அடிக்க தொடங்கியது 83 க்கு பிறகுதான்.

அதன் பிறகு கலவரமே நடக்கவில்லை.

அப்படி அவர்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு வாக்கு அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. 

ஆகவே அவர்கள் இவர்களின் பேச்சை (உணர்சி வசப்படுத்தல்) கவனத்தில் எடாமல், தம் வழியே பயணித்தர்கள்.

ஓம்

எனது பார்வையில் நாட்டை தமிழனிடம் கொடுக்காததற்கு காரணம் ,கொடுத்திருந்தால் எந்த சிங்களவர்களும் இன்று நாட்டில் இருந்திருக்க முடியாது ...அன்றைய கால கட்டத்தில் சிங்களவரை விட ,தமிழர் தான் கல்வியறிவிலும், பெரிய பதவியிலும் இருந்தார்கள் ...அப்படியிருந்தும் சிங்களவர்களிடம்  நாட்டை கொடுக்க என்ன காரணம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்போது நம் இருவரது கருத்தும், அவரவர் பார்வை (opinion) என்ற நிலைக்கு வந்து விட்டது. இதற்கு மேல் அடுத்த கட்டம் ஆளை ஆள், ஒருவர் சொல்வது சரி அல்லது பிழை என நிறுவும் நிலை.

ஆனால் இந்த திரியின் நோக்கம் தரவுகளை கண்டறிதல் (fact finding) என்பதால் இத்தோடு அமைகிறேன்.

ஆனால் நீங்கள் மேலே சொன்னதை பற்றி எனது பார்வையை சொல்லி விடுகிறேன்.

ஆங்கிலேயர்கள் வடையை தனியே அப்புவிடம் மட்டும் கொடுக்கவில்லை. அப்பு, சுப்பு இருவரிடமும்தான் கொடுத்தார்கள். 

அதில் அப்புவும் சுப்புவும் வடை பஞ்சாயத்துக்கு எப்போதும் தம்மை நம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகத்தை ஸ்தாபித்த பின் தான் அகன்றார்கள். எந்த நாட்டையும் சர்வாதிகாரிகள் கையில் கொடுக்கவில்லை.

நிச்சயம் இதற்கு அவர்களுக்கு ஒரு சபாஷ்.

அப்படி ஜனநாயக மயப்பட்ட இலங்கையில் அவர்களால் சிறுபான்மை கையில் நாட்டை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

எனது பார்வையில் நாட்டை தமிழனிடம் கொடுக்காததற்கு காரணம் ,கொடுத்திருந்தால் எந்த சிங்களவர்களும் இன்று நாட்டில் இருந்திருக்க முடியாது ...அன்றைய கால கட்டத்தில் சிங்களவரை விட ,தமிழர் தான் கல்வியறிவிலும், பெரிய பதவியிலும் இருந்தார்கள் ...அப்படியிருந்தும் சிங்களவர்களிடம்  நாட்டை கொடுக்க என்ன காரணம் ?

ஐனநாயகம்  என்று சொல்லிவிட்ட

தமழிரிடம்  கொடுப்பது  சாத்தியமில்லை

ஆனால்  ஐனநாயகத்தின் அதி  உயர் பலிகள்  சிறுபான்மையினர் என்பதை  அப்பொழுது  அவர்கள்  புரிந்திருக்க  வைய்ப்பில்லை

புரிந்தபோது???😭

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.