ஈழத்தமிழர் அரசியல்
-
Tell a friend
-
Similar Content
-
By திரு
அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..?
முடியாது மகனே..
ஏன் முடியாது..?
வந்தால் கொன்று விடுவார்கள்
ஏன் கொன்று விடுவார்கள்...?
நான் என் மக்களுக்காகப் பேசினேன்
ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..?
பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக,
ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..?
சமமாக வாழ நினைத்தபோது
ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..?
நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை
ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..?
அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக,
அவர்கள் பிழைத்தார்களா..?
பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள்
என்னவோ பிழைத்தார்கள் தானே..?
இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே..
சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..?
இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்..
ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..?
ஆம் மகனே
ஒவ்வொரு மகனும் உன் போலவே
ஆயிரமாயிரம் கேள்விகளுடன்..
விடை கிடைக்குமா அப்பா..?
என்ன சொல்ல மகனே..!
விடுதலைப் போராட்டம் நெடிது தான்
ஆயினும்
என்னுடைய பிராத்தனை என்னவெனில்
உன்னுடைய காலத்திலும்
எங்கோ ஓர் மூலைக்குள்
என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க
உன் மகனும்
விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும்
வளர்ந்து விடக்கூடாது என்பதே.. திரு.திருக்குமரன்
-
By திரு
ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்
ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்
அன்று நீ காணாமற் போனாய்..
சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்
சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்தது
நீ இறந்திருக்கலாமென
பலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்
காலமும் ஓடிப்போயிற்று
வழமை போலவே தியாகங்களும்
நினைவுகளும் எமக்குள்
மங்கிப்போயின..
சுரணை அற்ற வாழ்வுக்காக
தொலை தேசத்திற்கு நான்
வந்திருந்தபோது
பனிப் பொழிவினிடையே
உன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!
அது நிச்சயமாக நீதான்
அதே கூர் மூக்கு,தெத்திப்பல்
ஆயின்..
நீ இறக்கவில்லை..!
ஆனால் இறந்திருந்தாய்
நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்
காலைச் சவட்டியபடி,
கல்லூரிக் காலங்களில்
எப்படி எல்லாம் கலகலப்பாய்
இருந்தாய்..! இப்போதோ
பேச்சுக் கொடுத்தாலும்
பெரும் மெளனம் காக்கின்றாய்..
முட்கம்பிகள் உன் குதத்தைக்
கிழித்த போதும்
மின்சாரம் உன் குறியை
எரித்த போதும்
கேள்விகளாலும் கம்பிகளாலும் நீ
துளையிடப்பட்ட போதும்
நீ காட்டிய அதே மெளனம்
இது கூட நல்லது தான் நண்பனே
ஒருவேளை
வதையின் போது நீ
வாய் திறந்திருந்தால்
ஐம்பது குடும்பமாவது
அலறி இருக்காதா..?
தேவை அற்ற இடங்களில்
நீ அதிகம் பேசி இருந்தாலும்
தேவையான இடத்தில் நீ
மெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்
நல்லது
போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!
இனி நீ காணப்போகிற உலகும்
கடக்கப்போகிற மனிதர்களும்
ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்
இப்போது
பேசத்தொடங்கி இருப்பதைப் போலவே
உன்னைக் கடந்து செல்கின்ற போதும்
அவர்கள் பேசிக்கொள்வார்கள்
இவன்
வேறு வேலை அற்றவன்
வாழத் தெரியாதவன்
என்றும்..
- திரு.திருக்குமரன்
-
By கற்பகதரு
பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!
Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி Published: 09 July 2014 Hits: 2585 எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.
அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...
மேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....?
முதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும்.
எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்.
யார் அந்தத் தோழர்கள்...?
எனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள்.
பின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம்.
அன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....?
இனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.
காலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன. எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது.
அதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது. அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான்.
நிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா.......? என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
பதிலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்....,? என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன்.
இல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன.
தமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.
இன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.
முதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான்.
இரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது.
அடுத்ததாக தமிழீழ இயக்கங்களின் வளர்ச்சி. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான்.
இந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....?
இயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது.
அவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா.
அதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு சிலர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும்.
நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....?
ஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது.
சில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது.
வேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன்.
முற்றும்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320&Itemid=238
-
By இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!
கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!
பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
படம்: நன்றி மாவீரம்.
-
-
Topics
-
Posts
-
நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று நானே நம்பவில்லை! பிறகெப்படி நான் எழுதியதில் அந்த அர்த்தம் உங்களுக்கு விளங்கியது? உங்களுக்கே வெளிச்சம்! உங்கள் முதல் கருத்து: "தமிழ் மக்கள் தான் புலிகளையே வழி நடத்தினர்!" இந்த வசனத்தில் உள்ள நகைச்சுவை உங்களுக்கு உறைக்கவேயில்லையா? ஐயா , எந்தக் காலத்தில் எந்த ஆண்டில் புலிகள் தமிழ் மக்களிடம் இது சரியா , விருப்பமா என்று கருத்துக் கேட்டு தங்கள் செயல்களைத் தொடர்ந்தனர்? இது போன்ற கருத்து யாரிடமிருந்து வரும்? ஒன்று உங்களுக்கு ஊரில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்தும் வெளிப்படையாக பேச விருப்பமில்லாமல் இருக்க வேண்டும்! இதில் எது உங்கள் பிரச்சினை என்று எனக்கு அறிய ஆர்வமில்லை! ஆனால், உங்கள் மேல் கருத்தும், போராட்டம் குறித்த வேறு பல கருத்துகளும் ஊரில் இருந்த எனக்கு புதுமையாகத் தெரிவதால் , நான் சுட்டிக் காட்டினேன்! இதன் அர்த்தம் நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்ய இயலும்?
-
By தனிக்காட்டு ராஜா · Posted
இதை வேறு யாரும் அரசியல் வாதி சொன்னால் எப்படி இருந்திருக்கும் உதாரணம் கர்ணா ( அவர் எப்போதே சொல்லிவிட்டார் , பிள்ளையான் , அமல் , டக்ளஸ், அங்கசன் ) பெரிய சீனா இருந்திருக்கும் இந்த திரி -
நான் நினைக்கிறேன், ஆவணத்தில் "எல்லாத் தமிழர்களும்" கையெழுத்து வைக்காமல் ஐ.நாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது! அது தானே பூரண ஜனநாயகம்? பிரதிநிதித்துவ ஜனநாயகம், கட்சிக் கூட்டமைப்பு இவையெல்லாம் ஏன் என்று தெரியா விட்டால் இது போன்ற கையெழுத்துப் பிரச்சினைகள் எல்லாம் கட்சியை உடைக்கிற பிரச்சினைகளாக உருப்பெறுவது தவிர்க்க இயலாதது!
-
By தனிக்காட்டு ராஜா · Posted
நான் மீனவர்கள் பிரச்சினை பற்றி எழுதினால் நீங்கள் அதை தாண்டி வேறோங்கோ போகிறீர்கள் -
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்று எண்ணும் போது வந்த சோகம் நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல புனிதமானது கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே ... உண்மைக் காதல் .💖
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.