Jump to content

இன்றைய பார்வையில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பார்வையில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை

-கேணல்.ஆர்.ஹரிகரன்-

இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது.

அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில்  மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெருமளவு மாற்றங்களை செய்வதற்கு அல்லது முற்றுமுழுதாக நீக்குவதற்கு ராஜபக்சாக்களின் அரசாங்கம் முயற்சிகளில் இறங்கக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஒற்றையாட்சியை கொண்ட இலங்கையில் இருக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்களுக்கான ஒரேயொரு ஏற்பாடாக விளங்கும் மாகாண சபைகளை அரசாங்கம் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் வலியுறுத்தல்களுக்கு இணங்கி, இல்லாமல் செய்துவிடக்கூடும் என்று தமிழர்கள் மத்தியிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் அச்சம் தோன்றியிருக்கிறது.

மாகாண சபைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த 33வருடங்களுக்கு முன்னரான 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் தற்போதைய நிலை குறித்து குறிப்பாக இந்தியா அது பற்றி கொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலைப்பாடு குறித்து பரவலான கருத்துகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை காணும் நோக்கில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காரணத்தினால் 13ஆவது திருத்தத்தில் ஏற்கனவே இருக்கும் அதிகாரங்கள் பலவற்றை குறைப்பதற்கு அல்லது அதை முற்றுமுழுதாக நீக்கிவிடுவதற்கு ராஜபக்சாக்களினால் முன்வைக்கப்படக்கூடிய முயற்சிகளை புதுடெல்லி தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இலங்கை பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு இது விடயத்தில் தார்மீகக் கடப்பாடு இருப்பதாக வாதாடுகின்ற அந்தக் கட்சிகள், தமிழர்களுக்கு பாதகமான முறையில் ராஜபக்சாக்களின் அரசாங்கம் இது விடயத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்காது என்றும் நம்புகின்றனர்.

spacer.png

அதனால், ராஜீவ் காந்தியினால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுடன் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தொடர்பில் இன்றைய இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை அறிவது முக்கியமான ஒன்றாகும்.

ஈழத்தமிழர் இனப்பிரச்சினையில் இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் அன்றைய - இன்றைய வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அண்மையில் கனேடிய தமிழர் மாமன்றம் இணையத்தளம் வழியாக நடத்திய கலந்துரையாடலில் பிரமுகர்களினால் வெளியிடப்பட்ட கருத்துகள் கவனத்தை ஈர்ப்பவையாக இருந்தன.

இலங்கையின் வடக்கு – கிழக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் நிலைகொண்டிருந்த வேளையில், இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கேணல் ரமணி ஹரிகரனும் அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார். அந்த கருத்துகள் கீழே தரப்படுகின்றன.

தெற்காசியாவில் காலனி ஆதிக்கம் முடிந்த பிறகு வளர்ந்து வரும் இந்திய-இலங்கை நாடுகளின் உறவில், 1987 ஜூலை 29ஆம் திகதி கையெழுத்தான இந்திய - இலங்கை உடன்பாடு (ஆங்கிலச் சொல்லான Accord தமிழாக்கம் ஒப்பந்தம் அல்ல என்பது என் கருத்து), மிகப் பெரிய திருப்பு முனை என்று கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டு இந்த கலந்துரையாடலே ஆகும். ஏனெனில், அந்த உடன்பாடு கையொப்பமிட்ட  33 ஆண்டுகளுக்கு பிறகு, அது  ஈழத் தமிழர் இனப் பிரச்சினையில் ஏற்படுத்திய தாக்கத்தை, இன்று நாம் கலந்துரையாட இருக்கிறோம். 

இதில் பேச, நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பது எனக்கு புரியாத கேள்வியாய் இருக்கிறது. ஏற்கனவே கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை - இந்திய உறவை பல கோணங்களில் விமர்சித்து வருகிறேன். அவற்றை 750விட அதிகமான பதிவுகள் கொண்ட எனது வலைதளத்தில் காணலாம். அவை, பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. ஏனெனில், என் தமிழ்க் கட்டுரைகளை பிரசுரிக்க தமிழ் ஊடகங்கள் காட்டிய தயக்கமே காரணம்.

இந்திய - இலங்கை உடன்பாடு கையொப்பமானபோது, உலக சூழ்நிலை சோவியத் - அமெரிக்க பனிப்போரின் முடிவை நெருங்கி இருந்தது. ஆகவே, பன்னாட்டு அரசியல், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையின் அழுத்தத்தையும், இலங்கை தமிழ் மக்களுக்கும், ஈழப் போராளிகளுக்கும் இந்தியா அளித்த உதவியின் தாக்கத்தையும்  அந்த உடன்பாட்டில் காணலாம்.

அந்த உடன்பாடு நீர்த்துப் போனதாக பலர் நினைக்கின்றனர். அதில் ஓரளவு உண்மை உள்ளது. ஏனெனில் கடந்த 33 ஆண்டுகளில், பசுபிக் - இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் வலிமை,  பாதுகாப்பு சூழ்நிலையில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த பின்னணியில் நாம் அந்த உடன்பாட்டை இன்று  விமர்சிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேணும்.

மேலும் உடன்பாட்டுக்குப் பின்னர், சென்ற 33 ஆண்டுகளில் நமக்கு  ஏற்பட்ட அனுபவங்களின் பின்னணியில் நாம் அந்த உடன்பாட்டை மதிப்பீடு செய்கிறோம். அந்த உடன்பாடு வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா என்று பல மேடைகளில் என்னிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  வெளியுறவு உடன்பாடுகள் ஒரு கிரிக்கெட் விளையாட்டல்ல. அவற்றின்  வெற்றியும் தோல்வியும் அந்நாட்டு மக்கள் அந்த உடன்பாட்டை தங்களது குறிக்கோள்களை அடைய எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதைப் பொருத்ததாகும். 

நல்லதும் கெட்டதும் 

இந்திய-இலங்கை உடன்பாடு கையொப்பமானதின் பின்னணி யாவருக்கும் தெரிந்ததே. இலங்கைத் தமிழர் தமது அடிப்படை கலாசார, மொழி, நெடுங்காலமாக வசித்துவந்த பிரதேசங்கள் மற்றும் குடியுரிமை ஆகியவற்றை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசு நெறிப்படுத்த ஒப்புக் கொண்டதற்கு அந்த உடன்பாடே காரணமாகும்.

அவற்றில் சிலவற்றை, இலங்கை அரசு, 13ஆவது அரசியல் சாசனத் திருத்தப்படி நிறுவப்பட்ட மாகாண சபைகள் மூலம் நிறைவேற்றியது. ஆனால், அவை இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு உடன்பாட்டின் குறைபாடுகளை விட அதை வழி நடத்திய அரசியல் ஆளுமையே காரணமாகும்.  ஆகவே, இன்றுவரை 13ஆவது அரசியல் சாசனத்திருத்தம் ஒன்றே, ஈழத் தமிழருக்கு ஓரளவு சுய ஆட்சி உரிமையை அளித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு, 1990இல் இருந்து செயல் அளவில் மாறுதல் அடைந்துள்ளது. அதற்கு இலங்கையில் இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதலின் பின்பு இருநாட்டு உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் இந்திய - இலங்கை உடன்பாட்டை நிறைவேற்றிய ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்ததும் முக்கிய  காரணங்களாகும். அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இருநாடுகளின் இடையே இருந்த அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தின.

உடன்பாட்டிலும் அதன் செயலாக்கத்திலும் பல குறைகள் எல்லோர் தரப்பிலும் இருந்தன. அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசியல் கட்சிகள் எடுத்த முடிவுகள் விடுதலைப் புலிகள் கை தவறவிட்ட சமரச முயற்சிகள் ஆகியவை அடங்கும். அவற்றைப் பற்றி நானும் மேலும் பலரும் விமர்சித்துள்ளோம்.  ஆகவே, உடன்பாட்டின் குறைபாடுகளை இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

இன்று நாம் தொடரும் கலந்துரையாடல் பொருள் பொதிந்ததாக மக்களின் அடிப்படை அபிலாஷைகளை அடைய வழி காணுமானால், இது கலந்தாய்வாக மாறவேண்டும். அத்தகைய ஆய்வுக்கு  நடுநிலையான புரிதல் வேண்டும். ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த உடன்பாட்டை, பலரும் இந்தியா என்ன செய்ய தவறியது என்ற பிரசாரத்துக்கு ஒரு பகடைக் காயாகவே உபயோகிக்கிறார்கள்.

அந்த உடன்பாட்டின் அடிப்படையே இந்தியா ஒருங்கிணைந்த இலங்கையை உறுதிப்படுத்தி பிரிவினைக்கு எதிராக எடுத்த நிலைப்பாடாகும். இன்று  பேசவரும் அறிஞர்கள் சிலர், தனி ஈழ கோரிக்கையை கைவிடாமல், இந்த உடன்படிக்கையை விமர்சிப்பதிலோ அல்லது இந்தியாவுக்கு அறிவுரை கூறுவதிலோ என்ன பயன் என்பது எனக்கு விளங்கவில்லை.  

இலங்கையில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இரு நாடுகளிலும் உள்ள நல்ல உள்ளங்கள் உதவியோடு ஆக்கப்பூர்வமான திட்டம் வகுக்க வேண்டும் என்று நான் பலமுறை  தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் தலைவர்களுடன் பங்குபெற்ற கலந்துரையாடல்களில் கூறிவந்துள்ளேன்.

ஆனால் தமிழ் தலைவர்களோ, அரசியல் காரணங்களால் அத்தகைய கூட்டு முயற்சிக்கு இன்று வரை ஈடுபடவில்லை. இதற்கு இருநாட்டு அரசுகளை குறை சொல்லி பயனில்லை. ஈழப் போரில் இரண்டு தலைமுறைகளை இழந்து நிற்கும் போது, நான் தமிழன் என்று மார்தட்டி வீரம் பேசினால் போதாது. விவேகத்துடன் செயல்பட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே ஈழத்தமிழரின் வருங்காலத்தை நிர்ணயிக்கும்.  

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தேரவாத பௌத்த கலாசார அடிப்படையில் ஆட்சி புரிவோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவர் கூட்டணி வரும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினர் வெற்றிப் பெற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போதுதான் கோத்தாபயவின் ஒரு புதிய அரசியல் சாசனத்தை வரையவேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற முடியும். அந்த புதிய சாசானத்தில் 19ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை விலக்கி, ஜனாதிபதியின் செயலாக்க உரிமைகள் முழுமையாக்கப்படும். மாகாண சபைகளை உருவாக்கிய 13ஆவது சாசனத் திருத்தத்தை விலக்க, அல்லது அதில் காணும் மாகாண சபையின் அதிகாரப் பகிர்வுகளை குறைப்பதில் ஜனாதிபதி ஈடுபடுவார் என்பது என் கணிப்பு.  ஆகவே தமிழ் அரசியலின் தற்போதைய மிகப்பெரிய சவால் கோத்தாபயவின் சிங்கள பெரும்பான்மை அரசுடன் தமிழர்  இனப்பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதாகும்.

தற்போதைய, தெற்காசிய பாதுகாப்பு சூழ்நிலையில் இலங்கையுடன் நல்லுறவை வளர்ப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரும் ஈடுபாடு காட்டிவருகிறார். அவருக்கு ஜனாதிபதி கோத்தாபய மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோருடன் சுமுகமான உறவு நிலவுகிறது.  வடமாகாணம் சென்ற முதல் இந்திய பிரதமரான மோடி, தமிழர்கள் பிரச்சினைகளை 13ஆவது சாசனத் திருத்தத்தின் அனுசரணையுடன்  தீர்க்கத் தயார் என்பதில் தெளிவாய் இருக்கிறார்.  அதே சமயத்தில், தமிழ் தேசிய முன்னணி வட மாகாணத்தில் ஆட்சி புரிய கிடைத்த வாய்ப்பை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் தவறியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆகவே, ஈழத்தமிழர் பிரச்சினையை இன்று மாறி வரும் இலங்கை அரசியல் சூழ்நிலையின் ஒரு அங்கமாக நாம் கருதவேண்டும். அதற்கு இந்தியா எவ்வாறு உதவலாம் என்ற கேள்விக்கு இலங்கையில் வாழும் தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்காமல் நாம் எப்படி முடிவெடுக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை.

சுருங்கச் சொன்னால், இந்திய - இலங்கை உடன்பாட்டின் விளைவாக தமிழர்களுக்கு ஓரளவு சுயஉரிமை அளிக்கும் 13ஆவது சாசனத்திருத்தமே பறிபோகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே பழையன கழித்து, புதியன புகுத்தல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கடந்த காலத்து விவகாரங்களை விமர்சித்து அங்கலாய்க்கும் வழிமுறையை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட அரசியல்வாதிகளுக்கு நாம் வழிமுறை காண வேண்டும். அதன் முதல் கட்டாமாக 13ஆவது சாசனத் திருத்தத்தை பாதுகாக்க இந்தியா எவ்வாறு உதவலாம் என்பதை யோசிக்க வேண்டும்.  

 

https://www.virakesari.lk/article/89711

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.