Jump to content

இலங்கை வரலாற்றில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்த ஒருவரே இருக்கின்றார் அவர் திலீபன் ஆவார். - பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் இன்றைய தினம் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

“பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்கைகள் அநீதியானவை அவற்றை நிறைவேற்ற முடியாது. தங்களது சட்டத்தரணிகள் சார்பிலும் போராடுகின்றனர். சட்டத்தரணிகளையும் சோதனையிடக் கூடாது என கோரியிருந்தனர். அந்த விடயம் அவர்களுக்கு தேவையற்றது.”

நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர். நான் பூசா சிறைச்சாலைக்கு சென்றாலும் என்னையும் சோதனையிடுவார்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சென்றாலும் சோதனையிடுவார்கள். இந்தச் சிறைச்சாலை அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையாகும்.”

“இலங்கை வரலாற்றில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்த ஒருவரே இருக்கின்றார் அவர் திலீபன் ஆவார், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உயிரிழக்கவில்லை, திலீபன் ஓர் நோயாளி, நோயுற்றிருந்த திலீபனை பிரபாகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தார்.”

“இது தவிர ஏனையவர்கள் இரண்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பின்னர் தங்களது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள், ஏதேனும் ஓர் காரணத்திற்காக இவ்வாறு உண்ணாவிரதம் கைவிடப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பூசாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளுக்கு உணவு காணப்படுகின்றது தேவையென்றால் அவர்கள் உணவு உட்கொள்ள முடியும். சிலர் சாப்பிட மாட்டோம் என்று போராடி வருகின்றனர் இன்னும் சில நாட்களில் அவர்கள் சாப்பிடுவார்கள், அது ஒரு பிரச்சினையல்ல.”

“குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் தராதரம் அவர்கள் சீருடை அணிபவர்களா என்பது பற்றியெல்லாம் நாம் கரிசனை கொள்ளப் போவதில்லை, அனைவருக்கும் ஒரே விதமாகவே சட்டம் அமுல்படுத்தப்படும்” என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/255882?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் செய்தியை இணைக்க இதை ஒருசிலர் சரியென்றும் ஒருசிலர் பிழையென்றும் வாதிட களம் நல்லாப் போகும். ஆனால் திலீபனை அவமானம் செய்து முகத்தில் காறித்துப்புவதற்கு சமன். 

சிங்களமோடயா என்றத்தையும் சொல்லட்டும் ஆனால் கள நிரவாகம் இந்த செய்தியை எடுத்து விடவும். 

 

Link to comment
Share on other sites

கமால் உளறுகிறார்; உண்ணாவிரதத்திற்கு முதல்நாளும் திலீபனை நேரில் சந்தித்தேன்: நடந்ததை சொன்னார் சீ.வீ.கே!

 

CVKS.jpg
 

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை, நோயின் காரணமாகவே மரணமடைந்ததாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ட அண்மையில் தெரிவித்த கருத்து உளறல் பேச்சு என்பதை, இன்று யாழ்ப்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வி.கே.சிவஞானம்  வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கருத்து ஒரு ஆச்சரியமான கருத்து.  திலீபன் போராட்ட வேள்வியிலே ஆகுதியாகி 32 வருடத்திற்கு பிறகு கமால் குணரட்ன அவர்கள் பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல் சொல்லியது ஆச்சரியமானது.

துரதிஸ்ட வசமாக எங்கள் மத்தியிலும், திலீபனை தெரியாதவர்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு நேரடியாக தெரியாதவர்கள் பல கருத்துக்களை சொல்லுவதை துன்பியலாகவே நான் பார்க்கின்றேன்.

1987 செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த பிரச்சினைகள் தீவிரமடைந்த நாளில் காலையில் சென்று உயர்ஸ்தானிகர் திக்சிட்டை சந்தித்த பிறகு, யாழ் தேவியிலே வந்து என்னுடைய நண்பனாக இருக்கக் கூடிய சிவசுப்ரமணியத்தை அழைத்துக்கொண்டு திலீபனது அலுவலகத்திற்கு சென்று அவருடன் நள்ளிரவு வரை பேசியவன் நான்.

அவன் மிக தெளிவான சுகதேகியாக இருந்தான். தன்னுடைய தீர்மானத்திலே மிக தெளிவானவனாக இருந்தான்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக இன்னும் பேசலாம் என்ற போது, இல்லை நான் தெளிவாக இருக்கின்றேன் என்று சொல்லி அடுத்தநாள் உண்ணாவிரதம் இருந்தவன் அவன்.

தீர்மானமாக இருந்தவன். அவர் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. ஏன் என்றால் அவனுடைய அரசியல் செயல்பாடு முழுமையாக ஓர் அளவுக்கு எனக்கு தெரிந்திருந்தது.

அவன் மக்களோடு பழகிய விதம் தெரிந்திருந்து, ஆகவே நோய்வாய்பட்ட அவனை தேசியத்தலைவர் உண்ணாவிரம் இருக்க சொன்னார் என்று சொல்வது தவறானது.

இயக்க வரலாற்றிலே எத்தனையோ பேர் தாங்கள் இந்த போராட்டத்திலே, விடுதலை வேள்வியிலே ஆகுதியாக ஆயத்தமாக இருக்கின்றவர்களிலே இவனும் ஒருத்தனாக இருந்தான்.

ஆகவேதான் அவன் தெரிவுசெய்யப்பட்டான். அவன் நோய்வாய் பட்டதாலேதான் தலைவர் தெரிவு செய்ததாக அர்த்தமில்லை.

அப்படியானால் கரும்புலிகள். அப்படியான வாய்ப்பே இல்லை. ஆகவே இது தவறான ஒரு கருத்து. அதிலும் கமால் குணரட்ன போன்ற பொறுப்பான பதவிகளிலே, இருப்பவர்கள் 32 வருடத்திற்கு பிறகு இப்படியான ஒரு கருத்தை சொல்வது மிகவும் கவலைக்குரியது.

அவருடைய தரத்துக்கும், அவர் இருக்கின்ற நிலைக்கும் இவ்வாறாக பேசுவது பொருத்தமில்லை என தெரிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/145501/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முதல்வன் said:

அவருடைய தரத்துக்கும், அவர் இருக்கின்ற நிலைக்கும் இவ்வாறாக பேசுவது பொருத்தமில்லை என தெரிவித்துள்ளார்.

பொருத்தமற்றவர்கள் அரசிலும், பொறுப்புகளிலும் இருப்பதே நாட்டின் இன்றைய பிரச்சனை. கொள்ளைக்கூட்டத்தை நாடாள தெரிந்த,  அல்லது வந்து குந்தியவர்கள்   நாட்டை  கொள்ளை அடிக்குமட்டும்  உப்பிடி பல கதைகளை உருவாக்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்லை ..

-- ஐங்கரநேசன் தெரிவிப்பு .!

Ayngaranesan-01-720x450-1.jpg

திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல என தெரிவித்த ஐங்கரநேசன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார் என்றும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக அவர் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன், மலையகத்தில் தமிழ் உறவுகளுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாகத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டதோடு, சிங்களக் குடியேற்றங்களும் நிகழத் தொடங்கின. அத்தோடு நிராயுத பாணிகளாக உலாவிய புலிகள் மீதுபிற ஆயுதக் குழுக்கள் தாக்குதலையும் தொடங்கினர்.

இவற்றைத் தடுக்கும் முகமாகவே திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் என ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தரப்பினர்களாலும் பேரினவாதிகளாலும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு ஊகங்களும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டுவருகின்றன.

அவற்றில் ஒன்றே திலீபன் உண்ணாவிரதத்தால் உயிரிழக்கவில்லை அவர் நோயாளி என்பதால் பிரபாகரன் உண்ணாவிரதம் இருக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரட்ண கூறியிருக்கும் நயவஞ்சகக் கருத்து என்றும் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் பற்றிய உண்மைகள் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது என்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை ஏற்பட்டாலும் மக்கள் மனங்களில் குடியேறியிருக்கும் திலீபன் பற்றிய எழுச்சி நினைவுகளுக்கு ஒருபோதும் தடைபோட முடியாது என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/84329/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.