Jump to content

வீரவேங்கை அப்பன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கை அப்பன்

Veeravengai-Appan-Puthiya-Sagaptham.jpg

புதிய சகாப்தம்: முதல் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை அப்பன்.

“உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில உங்களையோ?”

“என் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குதானே போறன். சண்டையில செத்தா துயிலுமில்லம்தான்?”

உங்கட உந்த எல்லைப்படையை நம்பி சண்டையில் அதுவும் முன்பொயின்ரில விடுவாங்களே?”

நீ என்ன வேணுமெண்டாலும் சொல்லு. போயிட்டு திரும்பி வருவன் அல்லது துயிலுமில்லத்தில புதைகிற மாதிரி மாவீரனா வருவான்.”

“சரி சரி உந்தக் கதைகளை விடுவம். வெளிநாட்டுக்குப் போறதக்குக் தேவையான அலுவல்கள் இன்னமிருக்கு ஞாபமிருந்தா சரி”

“நான் சுவிக்குப் போனாலும் சரி ஜேர்மனிக்குப் போனாலும் சரி, ஐஞ்சு வருசமோ ஆறுவருசமோ நிண்டு உழசை;சுக்கொண்டு வந்திடுவன். பிள்ளையளை விட்டிட்டு என்னால அங்கினை இருக்கலேது. ஆனா வெளிக்கிறதுக்கிடையில் அஞ்சாறு தரமாவது எல்லைக்குப் போயிட்டு வந்திடவேணும். பின்னுக்கு விட்டிச்சினமெண்டால் நான் எப்படியும் சண்டை நடக்கிற இடத்துக்குப் போயிடுவன் பிறகு வெளிநாட்டால வந்து நிக்க நீ இந்த நாட்டிற்கு என்ன செய்தனி என்று மற்றவை என்னைப் பார்த்துக் கேட்டக்கூடாது உமா”

“நான் ஒன்றுக்கும் மறுப்பில்லை. கொழும்புக்கு வெளிக்கிட்டு வாங்கோ என்று மறுமொழி வாறதுக்கிடையில் போகவேண்டிய இடங்களெல்லாம் போயிட்டு வந்திடுந்கோ”

இப்போது அப்பன் எந்த ஜரோப்பிய நாட்டிலும் இல்லை. புனிதமான எங்கள் மாவீர உறவுகளின் உறங்குமிடமான துயிலும் இல்லத்தில். தாயக மீட்புப்போரின் புதிய அத்தியாயம் வன்னி மண்ணில் வேர் கொண்ட போது முன்னெழுந்து ஓடிவந்து முதல் வித்தான பெருமையை தனதாக்கிக் கொண்ட அப்பன் “காலங்கள் தாண்டியும் வாழும்” வல்லமை பெற்றவனாய் தமிழர் வரலாற்றில் என்றென்றும் உச்சரிக்கப்பட்ட, உச்சரிக்கப்படப் போகும் பெயராகி ஆண்டுகள்; ஜந்து.

நான்கு மாத கர்ப்பிணியான உமாவிடம் “தற்செயலாக எனக்கேதாலும் நடந்தா பிள்ளையளை கவனாமாக பார்” என்ற அப்பன் மைத்தனிடம் “ நான் கெதியில் வந்திடுவன். அக்காவைக் கவனாமாய் பாருங்கோ” என்றுவிட்டுப் பணிக்கெனப் புறப்பட்டபோது அந்தத் தமிழ் மகனிடம் சொல்லமுடியாத பெருமை. குடும்பக் கடமைக்காக ஏர் பிடித்து சேற்றுவயல் உழுத அந்தத் தொழிலாளி, போர்க்கருவி தூக்கி, பகைக்களம் நுழைந்தது, தேசக்கடமைக்காய், ஏழு நாட்கள் களமுனையில் எதிரியின் அரண்களும், எதிரியும் தெளிவாக தெரியும் தூரத்தில் ஓர் போராளியாய் அந்த வீரன், அன்று வரைக்கும் தமக்காய் தனித்தே பாரம் சுமந்த, தம் விடுதலைப்படையின் வீரர்களுடன் ஒன்று கலந்த அவர்களின் உணவோடு, உணர்வோடு என அனைத்திலுமே பங்கு கொண்டு பணி செய்த திருப்தியான நாட்களுக்குள் அந்தத் தமிழன். அவர்களுக்கான ஆறு நாட்கள் முடிந்து அவர்கள் அனைவரும் ஊர் திரும்பும் ஏழாம் நாள், அதுநாள் வரை கேட்கும், படித்தும், மேலோட்டமான பழக்கத்தில் அறிந்தும் கொண்ட உறவுகளை, உதிரம் ஊற்றி ஊற்றி எல்லையில் விழுந்து தம்மையுருக்கிய இனியவர்களை, இளையவர்களை அருகிருந்து ஒன்றாகி கலந்திருந்து பார்த்த அவர்களுக்கு அந்த ஏழாம் நாள் சொல்ல முடியாத வெப்பியாரம். புரிய முடியாத தவிப்பு. ஆனாலும் என்ன? போய்தானே ஆகவேண்டும். அவர்களுக்கென மனைவி, பிள்ளைகள், தாய் என உறவுகள் பார்த்திருக்குமபோது, மறுபடியும் வரத்தானே போகின்றோம் என்ற தேற்றுதலுடன் அவர்கள் புறப்பட்ட போது தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. எங்கோ தொலைவில் உருமறைப்பில் இருந்து குறிபார்த்துச் சுடும் எதிரியின் ரவை அப்பனை ஊடுருவி….

ஏழாம் நாள் தந்தையின், கணவனின் மைத்துனனின் வரவை அவர் வந்து சொல்லப்போகும் ஆர்ப்பாட்மான கதைகளை, சந்தோசத்தை, பெருமையைக் காணக் காத்திருந்த அந்தக் குடும்பத்திற்கு உயிர் அடங்கிப்போன அப்பனின் வித்துடலே ஈகமும் வீரமும் நிறைந்த பல கதைகளை மௌனமாக சொல்லியபடி…

தந்தையை அறியாத அந்த நான்கு மாத கரு இப்போது மிதுஷா, ஜந்து வயது துருதுரு வால். தந்தை பற்றிய கேள்விகளால் தாயைத் திணறடிக்கும் வாண்டு. படத்தில் இருக்கும் தந்தையை

“இவர் இவ்வளவு சின்னனா இருக்கிறார். எப்ப வளர்ந்து வந்து சோலரும், கட்டிலும் வாங்கி தரப்போகிறார்? அம்மா இவர் வந்தவுடன் இரண்டையும் கேட்டு வாங்கித் தந்திடுங்கோ”

என்பதும் நினைத்தவுடன் துயிலுமில்லம் போய் அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் தந்தையுடன் கதைத்துவிட்டு வருவதும் மட்டும் தான் மிதுஷாவுக்கு கிடைத்தது.

“அம்மா அப்பாவுக்கு பேரீச்சம்பழம் குடுத்திட்டு வருவமா”

“சரி போவம்”

“ஒன்று, இரண்டு. சரி அம்மா குடுத்தாச்சு போவம்”

“இவ்வளவு வச்சிருக்கிறீங்கள் ரெண்டுதான் வைக்கிறதா?”

“அவருக்கு காணும் மிச்சம் எனக்கு”

இப்படிதான் உமாவின் குழந்தைகளின் நாட்கள் இப்போதெல்லாம், “மோட்டார் சைக்கிள் எடுத்து நீங்கள் ஒவ்வொரு ஞாயிறும் அப்பாட்டக் கூட்டிக்கொண்டு போக வேணும்” என்ற குழந்தைகளின் வேண்டுகளுக்கு இணக்கம் தெரிவித்து, “அவைக்கு அதுதானே கோயில் கிழமைக்குக் கிழமை கூட்டிட்டிப்போறதில் எனக்கும் திருப்தி, நிறைவு” என்கின்ற உமா ஓர் எழுத்துனராக தன் வாழ்நாளைத் தொடர்ந்தபடி…

நினைவுப்பகிர்வு: தமிழவள்.
நன்றி: எல்லைக்காக்கும் இல்லங்கள்.

 

https://thesakkatru.com/veeravengai-appan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.