Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இலங்கை இந்திய ஒப்பந்தம் பின்னால் இருந்த ரகசியம் என்ன?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுக்கு நன்றி குணா.
ஒப்பந்தம் தூசி தட்டப்படுகிறது என்கிறீர்கள்.
எமக்கு எந்த நலனும் இல்லை என்கிறீர்கள்.
அப்புறம் என்ன வேணுமானாலும் நடக்கட்டும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

ஒப்பந்தம் தூசி தட்டப்படுகிறது என்கிறீர்கள்.
எமக்கு எந்த நலனும் இல்லை என்கிறீர்கள்.
அப்புறம் என்ன வேணுமானாலும் நடக்கட்டும்.

ஒரு வாய்ப்பு  இருக்கிறது. நாமாக உருவாக்கி கொள்ள.

கிந்தியவை குழையடிப்பது. 

கிந்தியாவின் இந்த நிலைமை, மலையாளிகள், நம்புதிரிகள், தெலுங்கு பிராமணர் ஆன கூட்டத்தினால் உருவாக்கியது என்ற பிரச்சாரத்தை ஹிந்தியை பத்திரிகைகள் ஊடக செய்வது.

உடனடியான விளைவுக்கு அல்ல. உரிய நேரம் வரும் போது, இவர்களின் (மலையாளிகள், நம்புதிரிகள், தெலுங்கு பிராமணர்) சிந்தனைகள் கிந்திய அரச இயந்திரத்தில் இருக்க கூடாது என்பதற்கு.  

தொடங்கும் போது, கிந்திய மண்டலத்தில், ஒப்பந்தம் இருந்தும், எவ்வாறு  சீனா இவ்வளவு தூரம் காலூன்றியது எனபதில் ஆரம்பித்து பின்பு விடயத்திற்கு நகர்த்தலாம்.

இதில் சிங்களம் கிந்தியவை ஏமாற்றியது இவர்கள் ஊடாக என்பதும் ,முன்வைக்கப்படலாம். 

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தந்திரசாலிகள் இல்லை. எதையும் தர்மப்படி வெல்லலாம் என்பது இந்த உலகில் நடக்காது என்ற படிப்பினையை புரிந்துகொள்ளும்போது முழு இலங்கைத் தீவும் சிங்கள மயமாகிவிடும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பார்வையில் 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை; – கேணல்.ஆர்.ஹரிகரன்

 

லங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது.

அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெருமளவு மாற்றங்களை செய்வதற்கு அல்லது முற்றுமுழுதாக நீக்குவதற்கு ராஜபக்சாக்களின் அரசாங்கம் முயற்சிகளில் இறங்கக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஒற்றையாட்சியை கொண்ட இலங்கையில் இருக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்களுக்கான ஒரேயொரு ஏற்பாடாக விளங்கும் மாகாண சபைகளை அரசாங்கம் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் வலியுறுத்தல்களுக்கு இணங்கி, இல்லாமல் செய்துவிடக்கூடும் என்று தமிழர்கள் மத்தியிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் அச்சம் தோன்றியிருக்கிறது.

மாகாண சபைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த 33வருடங்களுக்கு முன்னரான 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் தற்போதைய நிலை குறித்து குறிப்பாக இந்தியா அது பற்றி கொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலைப்பாடு குறித்து பரவலான கருத்துகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை காணும் நோக்கில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காரணத்தினால் 13ஆவது திருத்தத்தில் ஏற்கனவே இருக்கும் அதிகாரங்கள் பலவற்றை குறைப்பதற்கு அல்லது அதை முற்றுமுழுதாக நீக்கிவிடுவதற்கு ராஜபக்சாக்களினால் முன்வைக்கப்படக்கூடிய முயற்சிகளை புதுடெல்லி தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இலங்கை பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு இது விடயத்தில் தார்மீகக் கடப்பாடு இருப்பதாக வாதாடுகின்ற அந்தக் கட்சிகள், தமிழர்களுக்கு பாதகமான முறையில் ராஜபக்சாக்களின் அரசாங்கம் இது விடயத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்காது என்றும் நம்புகின்றனர்.

அதனால், ராஜீவ் காந்தியினால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுடன் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தொடர்பில் இன்றைய இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை அறிவது முக்கியமான ஒன்றாகும்.

ஈழத்தமிழர் இனப்பிரச்சினையில் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் அன்றைய – இன்றைய வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அண்மையில் கனேடிய தமிழர் மாமன்றம் இணையத்தளம் வழியாக நடத்திய கலந்துரையாடலில் பிரமுகர்களினால் வெளியிடப்பட்ட கருத்துகள் கவனத்தை ஈர்ப்பவையாக இருந்தன.

இலங்கையின் வடக்கு – கிழக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் நிலைகொண்டிருந்த வேளையில், இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கேணல் ரமணி ஹரிகரனும் அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார். அந்த கருத்துகள் கீழே தரப்படுகின்றன.

தெற்காசியாவில் காலனி ஆதிக்கம் முடிந்த பிறகு வளர்ந்து வரும் இந்திய-இலங்கை நாடுகளின் உறவில், 1987 ஜூலை 29ஆம் திகதி கையெழுத்தான இந்திய – இலங்கை உடன்பாடு (ஆங்கிலச் சொல்லான Accord தமிழாக்கம் ஒப்பந்தம் அல்ல என்பது என் கருத்து), மிகப் பெரிய திருப்பு முனை என்று கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டு இந்த கலந்துரையாடலே ஆகும். ஏனெனில், அந்த உடன்பாடு கையொப்பமிட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு, அது ஈழத் தமிழர் இனப் பிரச்சினையில் ஏற்படுத்திய தாக்கத்தை, இன்று நாம் கலந்துரையாட இருக்கிறோம்.

இதில் பேச, நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பது எனக்கு புரியாத கேள்வியாய் இருக்கிறது. ஏற்கனவே கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை – இந்திய உறவை பல கோணங்களில் விமர்சித்து வருகிறேன். அவற்றை 750விட அதிகமான பதிவுகள் கொண்ட எனது வலைதளத்தில் காணலாம். அவை, பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. ஏனெனில், என் தமிழ்க் கட்டுரைகளை பிரசுரிக்க தமிழ் ஊடகங்கள் காட்டிய தயக்கமே காரணம்.

இந்திய – இலங்கை உடன்பாடு கையொப்பமானபோது, உலக சூழ்நிலை சோவியத் – அமெரிக்க பனிப்போரின் முடிவை நெருங்கி இருந்தது. ஆகவே, பன்னாட்டு அரசியல், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையின் அழுத்தத்தையும், இலங்கை தமிழ் மக்களுக்கும், ஈழப் போராளிகளுக்கும் இந்தியா அளித்த உதவியின் தாக்கத்தையும் அந்த உடன்பாட்டில் காணலாம்.

அந்த உடன்பாடு நீர்த்துப் போனதாக பலர் நினைக்கின்றனர். அதில் ஓரளவு உண்மை உள்ளது. ஏனெனில் கடந்த 33 ஆண்டுகளில், பசுபிக் – இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் வலிமை, பாதுகாப்பு சூழ்நிலையில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த பின்னணியில் நாம் அந்த உடன்பாட்டை இன்று விமர்சிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேணும்.

மேலும் உடன்பாட்டுக்குப் பின்னர், சென்ற 33 ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பின்னணியில் நாம் அந்த உடன்பாட்டை மதிப்பீடு செய்கிறோம். அந்த உடன்பாடு வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா என்று பல மேடைகளில் என்னிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. வெளியுறவு உடன்பாடுகள் ஒரு கிரிக்கெட் விளையாட்டல்ல. அவற்றின் வெற்றியும் தோல்வியும் அந்நாட்டு மக்கள் அந்த உடன்பாட்டை தங்களது குறிக்கோள்களை அடைய எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதைப் பொருத்ததாகும்.

நல்லதும்
கெட்டதும்

இந்திய-இலங்கை உடன்பாடு கையொப்பமானதின் பின்னணி யாவருக்கும் தெரிந்ததே. இலங்கைத் தமிழர் தமது அடிப்படை கலாசார, மொழி, நெடுங்காலமாக வசித்துவந்த பிரதேசங்கள் மற்றும் குடியுரிமை ஆகியவற்றை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசு நெறிப்படுத்த ஒப்புக் கொண்டதற்கு அந்த உடன்பாடே காரணமாகும்.

அவற்றில் சிலவற்றை, இலங்கை அரசு, 13ஆவது அரசியல் சாசனத் திருத்தப்படி நிறுவப்பட்ட மாகாண சபைகள் மூலம் நிறைவேற்றியது. ஆனால், அவை இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு உடன்பாட்டின் குறைபாடுகளை விட அதை வழி நடத்திய அரசியல் ஆளுமையே காரணமாகும். ஆகவே, இன்றுவரை 13ஆவது அரசியல் சாசனத்திருத்தம் ஒன்றே, ஈழத் தமிழருக்கு ஓரளவு சுய ஆட்சி உரிமையை அளித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு, 1990இல் இருந்து செயல் அளவில் மாறுதல் அடைந்துள்ளது. அதற்கு இலங்கையில் இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதலின் பின்பு இருநாட்டு உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் இந்திய – இலங்கை உடன்பாட்டை நிறைவேற்றிய ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்ததும் முக்கிய காரணங்களாகும். அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இருநாடுகளின் இடையே இருந்த அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தின.

உடன்பாட்டிலும் அதன் செயலாக்கத்திலும் பல குறைகள் எல்லோர் தரப்பிலும் இருந்தன. அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசியல் கட்சிகள் எடுத்த முடிவுகள் விடுதலைப் புலிகள் கை தவறவிட்ட சமரச முயற்சிகள் ஆகியவை அடங்கும். அவற்றைப் பற்றி நானும் மேலும் பலரும் விமர்சித்துள்ளோம். ஆகவே, உடன்பாட்டின் குறைபாடுகளை இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

இன்று நாம் தொடரும் கலந்துரையாடல் பொருள் பொதிந்ததாக மக்களின் அடிப்படை அபிலாஷைகளை அடைய வழி காணுமானால், இது கலந்தாய்வாக மாறவேண்டும். அத்தகைய ஆய்வுக்கு நடுநிலையான புரிதல் வேண்டும். ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த உடன்பாட்டை, பலரும் இந்தியா என்ன செய்ய தவறியது என்ற பிரசாரத்துக்கு ஒரு பகடைக் காயாகவே உபயோகிக்கிறார்கள்.

அந்த உடன்பாட்டின் அடிப்படையே இந்தியா ஒருங்கிணைந்த இலங்கையை உறுதிப்படுத்தி பிரிவினைக்கு எதிராக எடுத்த நிலைப்பாடாகும். இன்று பேசவரும் அறிஞர்கள் சிலர், தனி ஈழ கோரிக்கையை கைவிடாமல், இந்த உடன்படிக்கையை விமர்சிப்பதிலோ அல்லது இந்தியாவுக்கு அறிவுரை கூறுவதிலோ என்ன பயன் என்பது எனக்கு விளங்கவில்லை.

இலங்கையில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இரு நாடுகளிலும் உள்ள நல்ல உள்ளங்கள் உதவியோடு ஆக்கப்பூர்வமான திட்டம் வகுக்க வேண்டும் என்று நான் பலமுறை தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் தலைவர்களுடன் பங்குபெற்ற கலந்துரையாடல்களில் கூறிவந்துள்ளேன்.

ஆனால் தமிழ் தலைவர்களோ, அரசியல் காரணங்களால் அத்தகைய கூட்டு முயற்சிக்கு இன்று வரை ஈடுபடவில்லை. இதற்கு இருநாட்டு அரசுகளை குறை சொல்லி பயனில்லை. ஈழப் போரில் இரண்டு தலைமுறைகளை இழந்து நிற்கும் போது, நான் தமிழன் என்று மார்தட்டி வீரம் பேசினால் போதாது. விவேகத்துடன் செயல்பட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே ஈழத்தமிழரின் வருங்காலத்தை நிர்ணயிக்கும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தேரவாத பௌத்த கலாசார அடிப்படையில் ஆட்சி புரிவோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவர் கூட்டணி வரும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினர் வெற்றிப் பெற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போதுதான் கோத்தாபயவின் ஒரு புதிய அரசியல் சாசனத்தை வரையவேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற முடியும். அந்த புதிய சாசானத்தில் 19ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை விலக்கி, ஜனாதிபதியின் செயலாக்க உரிமைகள் முழுமையாக்கப்படும்.

மாகாண சபைகளை உருவாக்கிய 13ஆவது சாசனத் திருத்தத்தை விலக்க, அல்லது அதில் காணும் மாகாண சபையின் அதிகாரப் பகிர்வுகளை குறைப்பதில் ஜனாதிபதி ஈடுபடுவார் என்பது என் கணிப்பு. ஆகவே தமிழ் அரசியலின் தற்போதைய மிகப்பெரிய சவால் கோத்தாபயவின் சிங்கள பெரும்பான்மை அரசுடன் தமிழர் இனப்பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதாகும்.

தற்போதைய, தெற்காசிய பாதுகாப்பு சூழ்நிலையில் இலங்கையுடன் நல்லுறவை வளர்ப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரும் ஈடுபாடு காட்டிவருகிறார். அவருக்கு ஜனாதிபதி கோத்தாபய மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோருடன் சுமுகமான உறவு நிலவுகிறது. வடமாகாணம் சென்ற முதல் இந்திய பிரதமரான மோடி, தமிழர்கள் பிரச்சினைகளை 13ஆவது சாசனத் திருத்தத்தின் அனுசரணையுடன் தீர்க்கத் தயார் என்பதில் தெளிவாய் இருக்கிறார். அதே சமயத்தில், தமிழ் தேசிய முன்னணி வட மாகாணத்தில் ஆட்சி புரிய கிடைத்த வாய்ப்பை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் தவறியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆகவே, ஈழத்தமிழர் பிரச்சினையை இன்று மாறி வரும் இலங்கை அரசியல் சூழ்நிலையின் ஒரு அங்கமாக நாம் கருதவேண்டும். அதற்கு இந்தியா எவ்வாறு உதவலாம் என்ற கேள்விக்கு இலங்கையில் வாழும் தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்காமல் நாம் எப்படி முடிவெடுக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை.

சுருங்கச் சொன்னால், இந்திய – இலங்கை உடன்பாட்டின் விளைவாக தமிழர்களுக்கு ஓரளவு சுயஉரிமை அளிக்கும் 13ஆவது சாசனத்திருத்தமே பறிபோகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே பழையன கழித்து, புதியன புகுத்தல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கடந்த காலத்து விவகாரங்களை விமர்சித்து அங்கலாய்க்கும் வழிமுறையை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட அரசியல்வாதிகளுக்கு நாம் வழிமுறை காண வேண்டும். அதன் முதல் கட்டாமாக 13ஆவது சாசனத் திருத்தத்தை பாதுகாக்க இந்தியா எவ்வாறு உதவலாம் என்பதை யோசிக்க வேண்டும்.

 

http://thinakkural.lk/article/69184

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தத்தை பலவந்தமாக திணித்தது இந்தியா -கோட்டாபய அரசாங்கம் தெரிவிப்பு

13 ஆவது திருத்தச் சட்டத்தை இந்தியா எமக்கு பலவந்தமாக திணித்தது. இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நீண்ட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு

13 ஆவது திருத்தமே எங்களுடைய நாட்டை ஒன்பது மாகாணங்களாக பிரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. சிறிய நாட்டை பிரிப்பதற்கு அவசியமல்ல. அதனை மீறியும் பிரிக்கப்பட்டுள்ளதென்றால் அது இந்த நாட்டை சமஷ்டி ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த சமஷ்டி பொருத்தமானது.

வட, கிழக்கை தனி இராஜ்ஜியமாக பிரித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே பாரிய அச்சுறுத்தலாக அமையும். இந்தியாவின் பாதுகாப்பானது இலங்கையின் தங்கியுள்ளதென இந்தியாவிலுள்ள சிரேஷ்ட வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆகவே, வட, கிழக்கு தனி இராஜ்ஜியமாக உருவெடுத்தால் தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்காது. தமிழ் நாடும் தனியாக்கப்படும்.

இலங்கை ஒற்றையாட்சியாக இருப்பது இந்தியாவிற்கும் நல்லது. வட, கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டால் இலங்கை சீர்குலையும். வடக்கிற்கு சிங்கள மக்கள் செல்ல முடியாது போனால் தெற்கிலுள்ள தமிழ் மக்களுக்கு என்னவாகும். அது இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/150780?ref=home-imp-flag

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.