Jump to content

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - டக்ளஸ் உறுதி!


Recommended Posts

இவரால் மக்களுக்கு நல்லது நடக்கின்றதென்றால் பாராட்டுவேமே

செய்த தை மறக்க முடியாதுதான்😡 இன்னும் எவ்வளவு காலத்திற்கு பொம்மைபோல் ஆடுகின்றார் என்று பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

எல்லாத்தையும் யதார்த்தத்தின் பெயரால் நல்லா சமாளிக்கிறீங்கள்.

அது சரி.. சிங்களப் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் மருத்துவம் படிப்பதையிட்டு பெருமைப்படுகிறீர்கள். தென்னிலங்கையில்... எத்தனை யாழ்ப்பாணப் பிள்ளைகள்.. மட்டக்களப்பு பிள்ளைகள் மருத்துவம் படிக்கினம்..??! இதுவும் ஒரு யதார்த்தமான கேள்வி தானே.. தெரிஞ்சா பதில் சொல்லுங்கோ..?!

மொத்த வட மாகாணத்திற்கே ஒரு மருத்துவ பீடம் தான். அதிலும் சிங்கள மாணவர்களை உள்வாங்கினால்.. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை என்னாவது..???!

யுத்தகாலத்தில் இருந்த படிப்பு தற்போது இல்லை காரணம் என்னவாக இருக்கும் 

இதையும் சிங்களவர்கள் கொடுத்தார்கள் என்று சொல்வீர்கள் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்தகாலத்தில் இருந்த படிப்பு தற்போது இல்லை காரணம் என்னவாக இருக்கும் 

இதையும் சிங்களவர்கள் கொடுத்தார்கள் என்று சொல்வீர்கள் போல 

சிங்களவன் கெடுக்கவில்லை. எல்லாம் புலம்பெயர் ஆட்கள் அளவுக்கதிகமாக அனுப்பிய காசும், மது, போதைப்பொருள் பாவனையும்தான் படிப்பை கெடுக்கிது. ஆனால் போதைப்பொருளை அங்கு தாராளமாக  கிடைக்கச்செய்வது யார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

சிங்களவன் கெடுக்கவில்லை. எல்லாம் புலம்பெயர் ஆட்கள் அளவுக்கதிகமாக அனுப்பிய காசும், மது, போதைப்பொருள் பாவனையும்தான் படிப்பை கெடுக்கிது. ஆனால் போதைப்பொருளை அங்கு தாராளமாக  கிடைக்கச்செய்வது யார்??

இடைத்தரகர்கள்தான் இன்று கேரளா கஞ்சா வருகிறது கடலால் ஒருவரை காட்டி இன்னொருவர் நடத்துகிறார்கள் எல்லாம் பணம் தானே தவிர இனம் பற்று என்று எதுவும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்தகாலத்தில் இருந்த படிப்பு தற்போது இல்லை காரணம் என்னவாக இருக்கும் 

இதையும் சிங்களவர்கள் கொடுத்தார்கள் என்று சொல்வீர்கள் போல 

யுத்த காலத்தில் தமிழர் பகுதிகளில்.. போதைவஸ்து பாவனை அறவே இருக்கவில்லை. மதுபான விற்பனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இதே காலத்தில் விபச்சாரம் பெருமளவு ஒடுக்கப்பட்டிருந்தது.

ஹிந்திய சினிமா தேர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தது.

களியாட்ட நிகழ்வுகள்.. இளையோர்.. அநாவசியமாக.. பெண்களை கேலி செய்யும் நோக்கில்.. வீதிகளில்.. தெருக்களில்.. சந்திகளில் கூடுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஒரு பெண் நள்ளிரவில் கூட தனித்துப் பயணிக்கக் கூடிய சூழல் இருந்தது.

மக்கள் ஆள் அடையாள அட்டை இன்றி.. தடுப்பரண்கள்.. காவலரண்கள் இன்றி.. சர்வசாதாரணமாக போக்குவரத்துச் செய்யும் சூழல் இருந்தது.

சிங்கள அரச பொருண்மிய தடைகள் தவிர பொருண்மியத் தடைகள் இல்லை. சுதேச உற்பத்திகளில் தன்னிறைவிருந்தது. 

கட்டடப்பொருட்களுக்கு தடை போட்டிருந்தும்.. புதிய கட்டடங்கள் அமைக்கும் பணி நின்று போகவே இல்லை.. மட்டுப்படுத்திய அளவில் என்றாலும். 

இப்போ.. இவை எதுவுமே இல்லையே...

இதற்கு யார் காரணம்.. உங்களைப் பொறுத்த வரை.. தமிழர்களோ...??!

இன்று எல்லாத்துக்கும் சிங்கள அரசையும்.. இராணுவ இயந்திரத்தையும்.. சிங்கள அடிவருடி அமைச்சர்களையும் ஆக்களையுமே நம்பி இருக்க வேண்டிய சூழல். இதுக்கும் யார் காரணம்..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

போதைப்பொருளை அங்கு தாராளமாக  கிடைக்கச்செய்வது யார்??

இதை தடுக்க வேண்டியது யார் கடமை? அதை சரியாக செய்ய முடியவில்லையென்றால் வகை தொகையில்லாமல் வடக்கில் குந்திக்கொண்டும், தொங்கிக்கொண்டும் இருக்கும்  இராணுவமும், போலீசும் என்ன வெட்டி விழுத்துகினம்? இடத்தை காலி செய்து விட்டு, வந்த வழியே திரும்ப வேண்டியதுதானே? தங்கள் ஆக்கிரமிப்பை தட்டிகேட்காதபடி இளைஞர்களை மது போதை, வாள்வெட்டு குழு, ஈட்டிக்குழு இப்படி பல குழுக்களை உருவாக்கி பொருத விட்டு ரசிப்பதோடு தன் வேலையையும் கச்சிதமாக செய்கிறான். நீங்கள் சிங்களவன் நல்லவன் நாங்கள்தான் அழிகிறோம் என்று குறை கூறுங்கள். புலிகள் காலத்தில் ஏன் இந்த இடைத் தரகர்களால் கஞ்சா கடத்தி காசு பார்க்க முடியவில்லை? குறைந்தளவு வசதிகளோடு எப்படி ஒரு பண்பான, கட்டுக்கோப்பான சமுதாயத்தை கட்டியெழுப்பி காக்க முடிந்தது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.