Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - டக்ளஸ் உறுதி!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இவரால் மக்களுக்கு நல்லது நடக்கின்றதென்றால் பாராட்டுவேமே

செய்த தை மறக்க முடியாதுதான்😡 இன்னும் எவ்வளவு காலத்திற்கு பொம்மைபோல் ஆடுகின்றார் என்று பார்ப்போம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

எல்லாத்தையும் யதார்த்தத்தின் பெயரால் நல்லா சமாளிக்கிறீங்கள்.

அது சரி.. சிங்களப் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் மருத்துவம் படிப்பதையிட்டு பெருமைப்படுகிறீர்கள். தென்னிலங்கையில்... எத்தனை யாழ்ப்பாணப் பிள்ளைகள்.. மட்டக்களப்பு பிள்ளைகள் மருத்துவம் படிக்கினம்..??! இதுவும் ஒரு யதார்த்தமான கேள்வி தானே.. தெரிஞ்சா பதில் சொல்லுங்கோ..?!

மொத்த வட மாகாணத்திற்கே ஒரு மருத்துவ பீடம் தான். அதிலும் சிங்கள மாணவர்களை உள்வாங்கினால்.. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை என்னாவது..???!

யுத்தகாலத்தில் இருந்த படிப்பு தற்போது இல்லை காரணம் என்னவாக இருக்கும் 

இதையும் சிங்களவர்கள் கொடுத்தார்கள் என்று சொல்வீர்கள் போல 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்தகாலத்தில் இருந்த படிப்பு தற்போது இல்லை காரணம் என்னவாக இருக்கும் 

இதையும் சிங்களவர்கள் கொடுத்தார்கள் என்று சொல்வீர்கள் போல 

சிங்களவன் கெடுக்கவில்லை. எல்லாம் புலம்பெயர் ஆட்கள் அளவுக்கதிகமாக அனுப்பிய காசும், மது, போதைப்பொருள் பாவனையும்தான் படிப்பை கெடுக்கிது. ஆனால் போதைப்பொருளை அங்கு தாராளமாக  கிடைக்கச்செய்வது யார்??

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

சிங்களவன் கெடுக்கவில்லை. எல்லாம் புலம்பெயர் ஆட்கள் அளவுக்கதிகமாக அனுப்பிய காசும், மது, போதைப்பொருள் பாவனையும்தான் படிப்பை கெடுக்கிது. ஆனால் போதைப்பொருளை அங்கு தாராளமாக  கிடைக்கச்செய்வது யார்??

இடைத்தரகர்கள்தான் இன்று கேரளா கஞ்சா வருகிறது கடலால் ஒருவரை காட்டி இன்னொருவர் நடத்துகிறார்கள் எல்லாம் பணம் தானே தவிர இனம் பற்று என்று எதுவும் இல்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்தகாலத்தில் இருந்த படிப்பு தற்போது இல்லை காரணம் என்னவாக இருக்கும் 

இதையும் சிங்களவர்கள் கொடுத்தார்கள் என்று சொல்வீர்கள் போல 

யுத்த காலத்தில் தமிழர் பகுதிகளில்.. போதைவஸ்து பாவனை அறவே இருக்கவில்லை. மதுபான விற்பனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இதே காலத்தில் விபச்சாரம் பெருமளவு ஒடுக்கப்பட்டிருந்தது.

ஹிந்திய சினிமா தேர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தது.

களியாட்ட நிகழ்வுகள்.. இளையோர்.. அநாவசியமாக.. பெண்களை கேலி செய்யும் நோக்கில்.. வீதிகளில்.. தெருக்களில்.. சந்திகளில் கூடுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஒரு பெண் நள்ளிரவில் கூட தனித்துப் பயணிக்கக் கூடிய சூழல் இருந்தது.

மக்கள் ஆள் அடையாள அட்டை இன்றி.. தடுப்பரண்கள்.. காவலரண்கள் இன்றி.. சர்வசாதாரணமாக போக்குவரத்துச் செய்யும் சூழல் இருந்தது.

சிங்கள அரச பொருண்மிய தடைகள் தவிர பொருண்மியத் தடைகள் இல்லை. சுதேச உற்பத்திகளில் தன்னிறைவிருந்தது. 

கட்டடப்பொருட்களுக்கு தடை போட்டிருந்தும்.. புதிய கட்டடங்கள் அமைக்கும் பணி நின்று போகவே இல்லை.. மட்டுப்படுத்திய அளவில் என்றாலும். 

இப்போ.. இவை எதுவுமே இல்லையே...

இதற்கு யார் காரணம்.. உங்களைப் பொறுத்த வரை.. தமிழர்களோ...??!

இன்று எல்லாத்துக்கும் சிங்கள அரசையும்.. இராணுவ இயந்திரத்தையும்.. சிங்கள அடிவருடி அமைச்சர்களையும் ஆக்களையுமே நம்பி இருக்க வேண்டிய சூழல். இதுக்கும் யார் காரணம்..??!

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

போதைப்பொருளை அங்கு தாராளமாக  கிடைக்கச்செய்வது யார்??

இதை தடுக்க வேண்டியது யார் கடமை? அதை சரியாக செய்ய முடியவில்லையென்றால் வகை தொகையில்லாமல் வடக்கில் குந்திக்கொண்டும், தொங்கிக்கொண்டும் இருக்கும்  இராணுவமும், போலீசும் என்ன வெட்டி விழுத்துகினம்? இடத்தை காலி செய்து விட்டு, வந்த வழியே திரும்ப வேண்டியதுதானே? தங்கள் ஆக்கிரமிப்பை தட்டிகேட்காதபடி இளைஞர்களை மது போதை, வாள்வெட்டு குழு, ஈட்டிக்குழு இப்படி பல குழுக்களை உருவாக்கி பொருத விட்டு ரசிப்பதோடு தன் வேலையையும் கச்சிதமாக செய்கிறான். நீங்கள் சிங்களவன் நல்லவன் நாங்கள்தான் அழிகிறோம் என்று குறை கூறுங்கள். புலிகள் காலத்தில் ஏன் இந்த இடைத் தரகர்களால் கஞ்சா கடத்தி காசு பார்க்க முடியவில்லை? குறைந்தளவு வசதிகளோடு எப்படி ஒரு பண்பான, கட்டுக்கோப்பான சமுதாயத்தை கட்டியெழுப்பி காக்க முடிந்தது?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதூஷ் உயிரிழப்பு By Sayan   மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார்.மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.இந்தச் சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   http://www.battinews.com/2020/10/drug-kingpin-makandure-madush-shot-dead-in-maligawatta.html
  • கோபத்தால் பறிபோன மூன்று உயிர்கள் ! நடந்தது என்ன ? முழு விபரம் By Sayan   கோபத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் விபரீதத்தையே தரும் என்பார்கள். அதுபோலவே நவராத்திரி தினத்தின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.   வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை - இலுப்பைக்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட் கூலி வேலை, காடுகளுக்குச் சென்று வருமானம் தேடல் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது.   அத்தகையதொரு போராட்டத்திற்கு மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டுநடத்திக் கொண்டிருக்கும் அக் கிராமத்தில் இரட்டைக் கொலை சம்பவம் காயமடைந்த மற்றைய நபரும் நேற்று உயிரிழந்த நிலையில் முக்கொலையாக பதிவாகியுள்ளது.   சந்தேகநபரான அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அலசலே இது.   வவுனியா, ஓமந்தை - மாணிக்களவுப் பகுதியில் உள்ள மாணிக்கர் இலுப்பைக்குளம் என்ற பகுதியில் தம்பா என்றழைக்கப்படும் கோபால் குகதாசன் (வயது 42) தனது நான்கு பிள்ளைகளுடனான குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.   கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியின் 9 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள மேலியாவனம் என்ற கிராமத்தில் வசிக்கும் மச்சான் முறை உறவினரான சிவனு மகேந்திரன் (வயது 34) என்வரும், அவரது நண்பரான சு.சிவகரன் (வயது 41 ) என்பவரும் தம்பாவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.   வருகைதந்த அவர்கள் தம்பாவின் அயலவர்களிடம் உழவு இயந்திரம் ஒன்றை விரைவில் அனுராதபுரத்தில் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், இன்று தம்பாவைப் பார்த்து விட்டு போவோம் என வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.   வந்தோரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டை பின்பற்றிய தம்பாவும் தனது மச்சானுக்கும், அவரது நண்பருக்கும் விருந்து கொடுக்க தீர்மானித்தார். கோழி சமைத்து சாப்பாடு வழங்கியதுடன், மதுப்பாட்டி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தார்.   மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதியில் தம்பா கட்டிய புதிய வீடு எவரும் இன்றி இருந்தது. அந்த வீட்டில் மது விருந்துக்கும் ஏற்படாகியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய மதுப் பாட்டி சனிக்கிழமை அதிகாலை 2 மணி தாண்டியும் நீடித்துள்ளது.   குறித்த பாட்டி நடந்த வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் 30 வயதுடைய கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகின்றார். 1995 ஆம் ஆண்டு நாட்டு யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு தாய், தந்தையுடன் சென்று அங்கு படித்து வந்த கண்ணன் 2015 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கடல் மூலம் அவுஸ்ரேலியா சென்றபோது கைது செய்யப்பட்டார்.   கிறிஸ்மஸ் தீவில் 2 வருடம் தடுத்து வைக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதன் பின் தாய், தந்தையரின் தொடர்பின்றி தாயாரின் காணியில் உள்ள மாணிக்கர் இலுப்பைக்குளம் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.   கூலி வேலைக்கு செல்வதும், கூலி வேலை இல்லாதபோது புதூர் காட்டுப் பகுதிக்கு சென்று தேன் எடுப்பதும் என இவரது நாளாந்த வாழ்க்கை பயணம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு கண்ணன் வீட்டில் உறங்கியுள்ளார்.   இதன்போது, தம்பாவின் புதிய வீட்டில் இருந்து சண்டை போடுவது போன்று எழுந்த அதிக சத்தத்தையடுத்து அதிகாலை 2.00 - 2.30 மணியளவில் கண்ணன் அங்கு சென்றுள்ளார். அப்போது தம்பாவும், மச்சானும், மச்சானின் நண்பரும் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். கண்ணனைக் கண்டதும் தம்பாவின் மச்சானின் நண்பர் கதைத்தபோது முன்பின் அறியாத இருவருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.   இதனையடுத்து தம்பாவும் மற்றைய இருவரும் கண்ணனை அறைக்குள் இழுத்து சென்று தாக்கியுள்ளனர். அங்கிருந்து 2.45 மணியளவில் தப்பிச் சென்ற கண்ணன் தனது வீட்டில் படுத்துள்ளார். வெறியில் இருந்த கண்ணனுக்கு அவர்கள் தாக்கியது கோபத்திற்கு மேல் கோபத்தை ஏற்படுத்தியது. தூக்கம் வரவில்லை. கோபத்திற்கு பழி தீர்க்க முற்பட்டான். விபரீத முடிவெடுத்தான்.   நாளாந்தம் அவனது வாழ்க்கையுடன் பழக்கப்பட்ட கோடரியையும், பக்கத்து வீட்டில் சில தினங்களுக்கு முன் கைமாறாக வேண்டிய காட்டுக் கத்தியையும் எடுத்துக்கொண்டு அதிகாலை 4 மணியளவில் தம்பாவின் வீட்டிற்கு சென்றான். காட்டுக் கத்தியை வேலியில் சார்த்திவிட்டு உள்ளே சென்றபோது அங்கு மூவரும் நிறைவெறியில் உறங்கிக் கொண்டிருந்தனர்.   எந்த சத்தமும் இல்லை; அமைதியாக இருந்தது. மெல்ல நடந்து சென்ற கண்ணன் தம்பாவுக்கும், தம்பாவின் மச்சானுக்கும் நடுவில் நின்று கொண்டு தம்பாவின் உச்சந் தலையில் கோடரியால் கொத்தினான். தம்பா எந்த அசைவும் இன்றி அந்த இடத்திலேயே சடலமானார்.   மறுபுறம் திரும்பி தம்பாவின் மச்சானுக்கும் கோடரியால் கொத்தினான். அவரும் எந்த அசைவும் இன்றி அந்த இடத்திலேயே பலியானார்; இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. நின்ற இடத்தில் இருந்து தம்பாவின் மச்சானின் நண்பருக்கு கொத்திய போது நெற்றியில் பிளவு ஏற்பட்டது.   இதனையடுத்து கண்ணன் அங்கிருந்து வெளியேறி வேலியில் சாத்தி வைத்திருந்த காட்டுக் கத்தியையும் எடுத்து கொண்டு, கத்தியை யாரிடம் வாங்கினானோ அவர்களிடமே கத்தியை கொண்டு சென்று கொடுத்துவிட்டு, நான் மூன்று பேரையும் போட்டுள்ளேன் எனத் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.   கண்ணன் பகிடியாக கூறினான் என அவர்கள் நினைத்தார்கள். இருப்பினும் சந்தேகத்தில் அயலில் உள்ள பிறிதொரு நபரையும் அழைத்துக் கொண்டு சென்று பார்த்த போது மூவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக ஓடிச் சென்ற அவர்கள் ஓமந்தைப் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.   ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா வழிகாட்டலில், ஓமந்தை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியுமான எஸ்.சுகந் தலைமையில் பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இருவர் உயிரிழந்திருந்தனர்.   தம்பாவின் மச்சானின் நண்பர் துடித்துக் கொண்டு இருந்துள்ளார். உடனடியாக பொலிசார் 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு குறித்த நபரை அனுப்பி வைத்தனர். அதன்பின் சம்பவ இடத்தில் காணப்பட்ட இரு சடலங்கள் அங்குள்ள தடயப் பொருட்களை வைத்து ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். வவுனியா மாவட்ட நீதிபதி றியால் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் விசாரணைகளுக்கும் உத்தரவிட்டார்.   இந்நிலையில், அக் கிராமத்திலிருந்து செல்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சந்தேகத்தில் கைது செய்து விசாரணை செய்தபோது குறித்த இளைஞனே (கண்ணன்) இவ் இரட்டை கொலையை செய்தவன் என்பதனை கண்டறிந்தனர்.   மாத்தளையில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட போதே அவன் கைது செய்யப்பட்டிருந்தான். குறித்த நபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கோடரியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்குள்ள சான்றுப் பொருட்களும், சாட்சியங்களும் கண்ணனுக்கு இக் கொலையில் தொடர்பிருந்ததை வெளிப்படுத்துகின்றன. இதனையடுத்து கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   இரட்டை கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை முடிவும் வெளியாகியுள்ளது. தலையில் கூரிய கோடரி போன்ற ஆயுதத்தால் கொத்தியதால் தலை பிளவடைந்து மூளை இரண்டாக பிளந்தமையால் இவ் இறப்பு இடம்பெற்றது என அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.   அத்துடன் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தம்பாவின் மச்சானின் நண்பரான சு.சிவகரனும் வவுனியா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.   http://www.battinews.com/2020/10/crime.html  
  • இதெல்லாம் பலமுறை பார்த்தாகிவிடுத்து  
  • நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை – கலையரசன். October 19, 2020 நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்  என தவராசா கலையரசன் தெரிவித்தார்.இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.மேலும் தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம். தற்காலத்தில் அரசாங்கம் எடுக்கும்   ஒவ்வொரு விடயமும் எங்களது மக்களின் கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்குகின்ற அடிப்படையில் விடையங்கள் அனைத்து கையாளப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து  எங்களுடைய கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்கின்ற விடையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்கள் இணைந்த தமிழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்றிணைந்து கூடிய கூட்டத்தில் சனாதிபதியின் தொல்பொருள் செயலணியின் செயற்பாடுகள் குறித்து அதிகம் பேசப்பட்டது .குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய சனாதிபதியின் தொல்பொருள் செயலணி அதன் செயற்பாடுகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் , திருக்கோவில் , மட்டக்களப்பு , திருகோணமலை போன்ற எமது பூர்வீக நிலங்களை அத்துமீறி பிரவேசித்து கபளீகரம் செய்வதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் சமத்துவமாக சமாதானமாக வாழ்வதற்கான முழு சிந்தனையோடு செயற்படுகின்றோம் . இந்த நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை. ஏனைய இனங்களோடு சமாதானமாக வாழ்வே விரும்புகின்றோம். அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு எமது அரசியல்வாதிளின் நடவடிக்கைகளாலும் , மட்டு மாவட்டநிருவாக ரீதியான அதிகாரிகளாலும் அத்துமீறிய குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதிரடியான இட மாற்றங்கள் இந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டதை காணமுடிகிறது என தெரிவித்தார் . பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பீ.பார்த்தீபன், அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்,கே.ஜெயராஜ் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் ,இந்து அமைப்பினரும் கலந்து கொண்டனர்.   https://www.meenagam.com/?p=15824
  • 1960'S அந்த நாளிலும் வெள்ளைக்கு மவுசு இருந்திருக்கு ..☺️..😊
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.