Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
 • ஜொனாதன் அமோஸ்
 • பிபிசி அறிவியல் செய்தியாளர்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை.

பூமியுடன் ஒப்பிடும் பொழுது இதை ஒரு நரகக்குழி என்றே கூறலாம்.

வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயுதான் நிறைந்திருக்கிறது; பசுமை இல்ல வாயுக்கள் விளைவால் இதன் வெப்பநிலையும் மிகவும் அதிகமாக உள்ளது.

வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ் அளவைவிட அதிகம்.

வெள்ளிக்கு அனுப்பப்பட்ட விண்கலன்கள் தரையிறங்கிய சில நிமிடங்களே அங்கு தாக்குப்பிடித்துள்ளன. அதன்பின்பு அவை செயலிழந்து விட்டன.

ஆனால் அந்த மேற்பரப்பில் இருந்து 50 கிலோமீட்டர் உயரத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது.

வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் வாயு

வெள்ளியின் வளி மண்டலத்தில் நுண்ணுயிர்கள் வாழ உதவும் வாயு ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

பாஸ்பீன் எனப்படும் அந்த வாயுவின் மூலக்கூறு ஒரு பாஸ்பரஸ் மற்றும் மூன்று ஹைட்ரஜன் அணு ஆகியவற்றால் ஆனது.

பென்குயின் போன்ற உயிரினங்களின் குடல் நாளத்தில் வசிக்கும் நுண்ணுயிர்கள், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும் உயிர்ச்சூழல் ஆகியவற்றில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றால் இந்த பாஸ்பீன் வாயு உருவாக்கப்படும்.

இந்த வாயுவை செயற்கையாகவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் வெள்ளி கோளில் பென்குயின்களும் இல்லை தொழிற்சாலைகளும் இல்லை.

Artwork of Venus

பட மூலாதாரம், DETLEV VAN RAVENSWAAY/SPL

 
படக்குறிப்பு,

வெள்ளியின் சூழலை சித்தரிக்கும் படம்

இப்படிப்பட்ட சூழலில் வெள்ளியின் மேல் பரப்பில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் பாஸ்பீன் வாயு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் கிரீவ்ஸ் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தங்கள் ஆய்வின் முடிவுகளை நேச்சர் அஸ்ட்ரானமி எனும் அறிவியல் சஞ்சிகையிலும் அவர்கள் பதிப்பித்துள்ளனர்.

வெள்ளி கோளின் மேற்பரப்பில் மிகவும் கணிசமான அளவில் பாஸ்பீன் வாயு கண்டறியப்பட்டுள்ளது.

உயிரினங்கள் அல்லாத ஒரு மூலத்திலிருந்து இந்த வாயு உருவாகி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால் உயிருள்ள ஏதாவது ஓர் உயிரினத்தில் இருந்து அந்த வாயு உருவாகி இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது இதன் பொருள்.

"என் தொழில்முறை வாழ்க்கை முழுதும் இந்த பேரண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் உள்ளதா என்பதை அறியும் நோக்கிலேயே நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதற்கு வாய்ப்புள்ளது என்பது மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது," என்கிறார் பேராசிரியர் கிரீவ்ஸ்.

"ஒருவேளை நாங்கள் தவறான முடிவுக்கும் வந்து இருக்கலாம்; அப்படி இருந்தால் எங்கள் ஆய்வில் என்ன குறை உள்ளது என்பதை சுட்டி காட்டுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எங்கள் ஆய்வு முடிவுகள் மற்றும் தரவுகள் ஆகியவற்றை அனைவரும் அணுக முடியும்; ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்; அறிவியல் அப்படித்தான் இயங்குகிறது," என்கிறார் அவர்.

இந்தப் பேராசிரியர் மற்றும் அவரது குழுவினர் ஹவாயில் உள்ள ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொலைநோக்கி மூலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் பாஸ்பீன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அட்டக்காமா, சிலி

பட மூலாதாரம், ESO

 
படக்குறிப்பு,

அட்டக்காமா, சிலி

சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் உள்ள தொலைநோக்கிகளை வைத்தும் இதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள் - ஆய்வு முடிவு மீது சந்தேகம்

இந்த அனுமானத்தின் மீதான சந்தேகங்களும் எழாமலில்லை. அந்த ஆய்வுக் குழுவினர் தங்கள் ஆய்வுகள் குறித்து முடிவுகளை தெரிவிப்பதில் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கின்றனர்.

வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதாக தாங்கள் கண்டறிந்து விட்டோம் என்று அவர்கள் கூறவில்லை. வாய்ப்பு உள்ளது என்றே கூறுகின்றனர்.

வெள்ளியின் மேற்பரப்பிலுள்ள மேகங்கள் மிகவும் அடர்த்தியானவை. அந்த மேகங்களில் 75 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை சல்ஃபூரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற உயிரியலாளர் முனைவர் வில்லியம் பெய்ன்ஸ், அமெரிக்காவில் உள்ள மசாச்சூட்டஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பணியாற்றுகிறார்.

எரிமலைகள், மின்னல், விண்கற்கள் ஆகியவை வெள்ளி கிரகத்தில் பாஸ்பீன் வாயு உருவாக காரணமாக இருந்திருக்கலாம் எனும் நோக்கில் இவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆனால் மேற்கண்ட வற்றின் மூலம் நிகழும் வேதியியல் மாற்றங்கள் வெள்ளியின் வளிமண்டலத்தில் உள்ள பாஸ்பீன் வாயுவை உருவாக்க 10,000 மடங்கு வலிமை குறைந்தவையாக இருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

வெள்ளி கிரகத்தில் ஒருவேளை நுண்ணுயிர்கள் இருந்தால் அவை சல்ஃபூரிக் அமிலத்தின் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக மிகவும் மாறுபட்ட ஒரு உயிர்வேதியியல் கோட்பாட்டை பின்பற்றலாம் அல்லது அதில் இருந்து தப்புவதற்கான கவசம் எதையேனும் பரிமாணம் அடைந்திருக்கலாம் என்கிறார் பெய்ன்ஸ்.

பூமிக்கு வெளியே உயிர்கள் சாத்தியமா?

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்? - நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதிய கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், NASA-JPL/CALTECH

 

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் காலின் வில்சன் ஐரோப்பிய விண்வெளி முகமை 'வீனஸ் எக்ஸ்பிரஸ்' எனும் வெள்ளி ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றினார்.

பேராசிரியர் கிரீவ்ஸ்-இன் கண்டுபிடிப்பு அந்தக் கோள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் புதிய அலையை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார்.

"இது மிகவும் வியப்பாக உள்ளது; ஒருவேளை தொலைநோக்கிகளின் தவறான கணிப்பால் அங்கு பாஸ்பீன் இருப்பதாகக் கருதப்பட்டாலும் இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும். ஆனால் அப்படி தவறு நிகழ்ந்து இருக்க வாய்ப்பில்லை," என்று அவர் கூறுகிறார்.

வெள்ளியின் மேகங்களின் மேல் அடுக்குகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்தால் அது ஓர் ஒளிமயமான கண்டுபிடிப்பு. உயிர்கள் வாழ்வதற்கு பூமி போன்ற ஒன்று வேண்டும் என்று அவசியமில்லை. நமது பால் வெளியிலிருக்கும் வெள்ளி போன்ற அதீத வெப்பம் வாய்ந்த கோள்களில் கூட உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கிறார் பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லெவிஸ் டார்ட்னெல்.

https://www.bbc.com/tamil/science-54159378

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொலைகளை யார் நியாயப்படுத்துகிறார்கள்? ஓர் இலக்கை அடைவாதத்திற்கு, கொலைகள் மட்டுமே தெரிவாகவும், கொள்கையாகவும் இருந்தது இல்லை என்பதே  நான் சொல்வது. அப்படி இருந்து இருந்தால், ஓர் எச்சரிக்கையா அல்லது அறிவித்தலுமின்றி, கொலைசெய்யப்பட்டவர்கள் தட்டுத்தடுமாறி சுதாகரிப்பதற்குள் கொலை செய்வதே நடைபெற்று இருக்கும், கொலையே ஓர் தெரிவாகவும் கொள்கையாகவும் இருக்கும் பொது. புலிகள் எவரின் மீதோ அப்படி நடந்து இருந்தால், சுட்டிக் காட்டவும். துரையப்பாவை பிரபாகரன் சுட்ட போது, தமிழ் புதிய புலிகள்  என்ற அமைப்பே இருந்தது. ஆயினும், அது செய்யப்பட்ட முறை தவறு. துரையப்பாக்கு எச்சரிக்காய்கள் விடுக்க பட்டு இருக்க வேண்டும்.   அனால், தர்மலிங்கம், ஆலால சுந்தரம் போன்றவர்களை, அமைப்பு அடிப்படையில் நாராக ஊன்றி விட்டு இருந்த போதும், டெலோ தனது RAW எசமானாரின் விசுவாசத்துக்காக சகோதர படு கொலை செய்தது, ஓர் அறிவித்தாலும் இன்றி. அதே   ஆலால சுந்தரம், புலிகளால் காலில் மட்டுமே சுடப்பட்டார், பல எச்சரிக்கைகளின்  பின்பு. இங்கே சுட்டது சரியா அல்லது பிழையா என்பது கேள்வி அல்ல. அதே போல, புலி உறுப்பினரின் சகோதரம் ஒருவர் சிறு திருட்டுகள் தொடர்ச்சியாக செய்த பொது, அந்த புலி உறுப்பினரே, ஓர் எச்சரிக்கையும் இன்றி, மிகவும் உக்கிரமாக அடித்து தண்டனை வழங்குமாறு பணிக்கப்பட்டார். அந்த புலி உறுப்பினர், அவரின் தம்பியை வீட்டிலேயே பூட்டி வைத்து விட்டு,  ஓலம் கேட்கும் வரையிலும் அடித்தார். தம்பி 10-11 மாதமாக எழும்ப முடியவில்லை. இதுவே ஓர் உதாரணம், புலிகள் இலக்கை அடைவதற்கு கொலை முதல் தெரிவு அல்ல. ஜனநாய நாடுகளிலும், இதுவே law fully administering death என்ற சட்டக் கோட்பாடு  இந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. அடிப்படையாக, ஓர் இலக்கை அடைவதற்கு, அதை நடைமுறைப்படுத்தும் தெரிவுகளை (கொலையோ அல்லது வேறு எதுவோ) மேற்கொள்வதற்கு விதிகள் விதிக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட வேண்டும்.          நான் முன்பே சொல்லி இருக்கிறேன், புலிகள் அவர்களை அறியாமலேயே நியாயாதிக்கத்தையும் (legitimacy), இயற்கை நீதியையும் (natural justice) பல படிகளில், மிகவும் சீரியஸ் ஆக எடுத்து கொண்டார்கள்.  
  • இன்று உண்மையான கல்வியின் அதிபதிக்கு பிறந்தநாள் !  ஆம் இந்தியர்களின் கல்விக்கு அதிபதியான லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள். அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள். “இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம். அப்புறம் நானே யோசித்தேன்.  என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்? என் குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகையும் நான் கவனிக்கிறேன்.... மோதிலால் நேரு எங்கு படித்தார்? வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்? இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....? கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான்: லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்கலே. அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர். இந்தியாவிற்கு வந்த போதும் அதே செக்யூலர் மனப்பாண்மையை இங்கும் பரப்பியவர்.  அது வரை இந்தியாவில் கல்வி என்றால்: 1) வேத பாட சாலை 2) இஸ்லாமிய மதராசா 3) கிறுஸ்வ மிஷினரி இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பிக்கின்றன. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...... என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்து வித பாடங்களை உள்ளடக்கிய பொது கல்வியை கொண்டு வந்தவர் மெக்கலே. இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது. அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுச்மிருத்தி என்று இருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தியன் பீனல் கோடு” IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான். லார்டு மெக்கலே திருமணம் ஆகாதவர். அவருக்கு genetic சந்ததியினர் இல்லை. ஆனால் நாம் எல்லாம் அவருடைய memetic வாரிசுகள்! நமக்கெல்லாம் கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன்,  ஆம்பிளை சரஸ்வதி,  மாமனிதர் மெக்கலே! டாக்டர் ஷாலினி....
  • படித்தத்தைப் பகிர்தல் - வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்  
  • 2020 முட்டாள் ஓட்டுனர்கள்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.