Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனேடிய தூதுவரிடம் சாணக்கியன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தூதுவரிடம் சாணக்கியன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

BharatiSeptember 15, 2020

spacer.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் இடம் மூன்று முக்கிய கோரிக் முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு மூன்று கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

 

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான சர்வதேச பார்வையினை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சனைகளைக் கருத்திற் கொண்டு அவற்றுக்கான தீர்வுகள் உள்வாங்கப்படுவதற்காக சர்வேதேச ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.

 

மற்றும் எமது பிரதேசங்களில் காணப்படும் பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

அத்துடன், பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான திட்ட ஆவணங்களும் இதன்போது இலங்கைக்கான கனேடிய தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கையளித்தார்.

 

http://thinakkural.lk/article/68814

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே, இன்னும் சுதி மாறாமல்  பேசுகிறார். பதவிக்கு வந்தவுடன் கட்சி மாறுவார் என்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். 

Edited by ரஞ்சித்
மாறாமல்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ! இப்பதானே தோணியில காலடி வைச்சிருக்கிறார், அதற்குள் அவசரப்பட்டால் ட் எப்படி?  தோணி நகர,  பேரம் பேசல் தொடங்கும்.அதற்கு பின்னும் இதே தோணியில் நிலைத்து  இருந்தால் தொடர்ந்து  பேசுவோம். கால ஒட்டத்தில் கரைஞ்சு போனவர்கள் வரலாற்றை கொண்டது எமது வரலாறு. "புது துடைப்பம் நல்லாய்ப் பெருக்கும்." சாணக்கியனை குறை சொல்வது எனது நோக்கமல்ல, சுற்றியிருப்பவர், சுத்த வருபவர் அப்படி. மனித மனம்  பாயக்கூடியது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.