Jump to content

டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல் கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்....


Recommended Posts

டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்....
#ஞாபகங்கள் - சுதந்திர இலங்கையினதும், ஐக்கியதேசியக் கட்சியினதும் பிதாமகர், டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை , இலாவகமாகப் பற்றிக்கொண்டு ஓடிய, முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தினேந்திர ருவான் விஜேவர்தனவிடம் (Dinendra Ruwan Wijewardene) கையளித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்கா, டட்லிசேனநாயக்கா, ஜே.ஆர் ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க – வழிவந்த ஐக்கியதேசியக் கட்சியின் தலமைத்துவம் இப்போ ருவான் விஜேவர்தனவின் கையில் வீழ்ந்திருக்கிறது.
இடைப்பட்ட சிறிது காலத்தில் றணசிங்க பிரேமதாஸ, டீ.பி விஜயதுங்க, ஆகியோரிடம் இருந்த அஞ்சல் கோலை கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க 26 வருடங்கள் சளைக்காது ஓடி தனது அரசியல் சாணக்கியத்தால், டீ.எஸ். சேனநாயக்க பரம்பரையிடமே மீண்டும் ஐக்கியதேசியக் கட்சியை ஒப்படைத்திருக்கிறார்.
1993, May 1ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்படாவிட்டால், ஐக்கியதேசியக் கட்சியின் தலமைத்துவம் சிலவேளை சஜித் பிரேமதாஸவிடம் கைமாறியிருக்கும்.
முன்னாள் ஐக்கியதேசியக் கட்சியின் சிரேஸ்ட்ட தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான, லலித் அத்துலத்முதலி, காமினி திஸ்ஸநாயக்க உள்ளிட்டவர்களால், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக, கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனை வெற்றி அடைந்திருந்தால், அல்லது புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்படாவிட்டால், சிலவேளை காமினி திஸ்ஸ நாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கவிடம் கட்சியின் தலமைத்துவம் சென்றிருக்கும்.
ஆனால் இவை எதுவுமே நடைபெறாத நிலையில் டீ.பீ விஜயதுங்கவின் பின் சிரேஸ்ட தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கியதேசியக் கட்சியின் தலமைத்துவம் கைமாறியது. அதனை இறுகப் பிடித்த ரணில் மிக நுணுக்கமான தனது அரசியல் காய் நகர்த்தல்களின் ஊடாக, தனது இரும்புப்பிடியில் கட்சியை கட்டுப்பாட்டுள் வைத்திருந்து கட்சியில் முன்னிருந்தவர்களை பின்தள்ளி மிகச் சரியான நேரத்தில், தனக்கு மிகச் சரியானவரை கட்சியின் பிரதித் தலைவராக நியதித்து டீ.எஸ். சேனநாயக்கவின் பேரன் ருவான் விஜேவர்தனவிடம் கட்சியை ஒப்படைத்திருக்கிறார்.
யார் இந்த ருவான் விஜேவர்தன?
1975ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ரஞ்சனி சேனநாயக்க - ரஞ்சித் விஜயவர்த்தன தம்பதிகளுக்கு இளைய மகனாக பிறந்தவரே ருவான் விஜேவர்தன. ரஞ்சித் விஜயவர்த்தன விஜய ஊடக நிறுவனத்தை உருவாக்கியவர்.
இவரது தாய்வழி தாத்தாவே இலங்கையின் முதல் பிரதமர் டீ.எஸ்.சேனனாயக்கா. ருவான் விஜேவர்தனவின் மாமனாரே இலங்கையின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனநாயக்கா. ருவான் விஜேவர்தனவின் தந்தைவழி தாத்தாவே டி. ஆர். விஜேவர்தன. இவர் இலங்கையின் சுதந்திர இயக்கத்தின் தலைவராக இருந்த ஒரு பத்திரிகையாளர். ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராகி லேக் ஹவுஸ் செய்தி நிறுவனத்தை நிறுவி சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த அரசியல் குடும்ப பாரம்பரியத்தில் வந்த ருவான் விஜேவர்தன, இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் தந்தையும், ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜே.ஆர் ஜெயவர்தனவின் மருமகனான ரணில் விக்கிரமசிங்கவினதும் நெருங்கிய உறவினர். இவரே ஐக்கியதேசியக் கட்சியின் பிரதித் தலைவராகி நாடாளுமன்றில் நுழையப் போகிறார்.
சஜித் பிரேமதாஸ, கரு ஜெயசூரிய, ரவி கருணநாயக்கா, நவீன் திஸ்நாயக்கா, வஜிர அபயலர்த்தன, அர்சுணா ரணதுங்க என ஐக்கியதேசியக் கட்சியின் தலமைக்கு தயாராக இருந்த பலரை வலுவிளக்கச்செய்து, தன் மதிநுட்பத்தால் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவை ரணில் விக்கிரமசிங்க நியமித்திருக்கிறார். இவரே கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்படவுள்ளார்.
2021 வரை கட்சியின் தலமைப்பதவியை தன்வசம் வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, அதன் பின் கட்சியின் தமைப்பொறுப்பையும் தன் குடும்ப வாரிசான ருவான் விஜேவர்தனவிடமே கையளிப்பார்.
இதுவரை டீ. எஸ் சேனநாயக்கா வழிவந்த ஐக்கியதேசியக் கட்சியினதும், எஸ். டபிள்யு பண்டாரநாயக்கா வழிவந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும், அரசியல் யுகங்களாக தொடர்நந்த இலங்கையின் ஆட்சிமுறை வரலாறு - 2019ல் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானதன் பின், ராஜபக்ஸ யுகத்தில் கால்பதித்திருக்கிறது.
இனிவரும் அரசியல் யுகங்கள் ராஜபக்ஸ – பிரேமதாஸ யுகங்களாக தொடருமா? இல்லை ராஜபக்ஸ - சேனநாயக்க அரசியல் யுகங்களாக தொடருமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு 2029 வரை ராஜபக்ஸ குடும்ப அரசியலில் இருந்து இலங்கை விடுபடுமா என்பது சந்தேகமே...
மறுபுறம் சஜித் பிரேமதாஸ தலமையிலான ஐக்கிய மக்கள் சக்த்தியும், மைத்திரிபால சிரிசேன தலமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ருவான் தலமையிலான தேசியக் கட்சியும், ராஜபக்ஸ அரசியல் யுகத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது...
119702397_374939750575321_19611134942745
 
 
119583538_374939740575322_31172971435674
 
 
119576921_374939733908656_54476262830647
 
 
119559165_374939747241988_15373546157656
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.