Jump to content

சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை

பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்ளூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தண்டனை காலம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

எனினும் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பெங்ளூர் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி சசிகலா விடுதலையாகிறார் என தெரிவித்துள்ளது.

மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்றும் 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம், அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

http://athavannews.com/சொத்து-குவிப்பு-வழக்கு-அ/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சுதாகரன், இளவரசிக்கான அபராத தொகையை செலுத்தி விட்டனர்.

சசிகலாவிற்கு அபராத தொகையை செலுத்த அனுமதி கிடைக்காமல் இருந்ததால், பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மூலமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓரிரு நாளில் அதற்கான முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.

http://athavannews.com/அபராத-தொகை-செலுத்த-அனுமத/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ரஸ்யாவின் டாங்கிகளை இலக்குவைப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட ஜவலின் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கியது அமெரிக்கா       உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள டாங்கிஎதிர்ப்பு ஏவுகணைகள் உக்ரைனை சென்றடைந்துள்ளன- புட்டினின் படைகள் உக்ரைன்மீது படையெடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தால் அவர்களிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது – இறுதியாக இந்த ஏவுகணைகளை வழங்கியுள்ளது. 50மில்லியன் டொலர் பெறுமதியான 300 ஜவலின் ஏவுகணைகளுடன் விமானமொன்று உக்ரைன் தலைநகரை சென்றடைந்துள்ளது-   File written by Adobe Photoshop? 5.2     எவ்ஜிஎம் – 148 ஜவலின் என்பது டாங்கிகளை அழிப்பதற்காக கேர்வ்போல் தாக்குதலை இணைத்து உருவாக்கப்பட்ட ஏவுகணை அதாவது இது இலக்குகளின் மீது மேலே இருந்து இறங்கி தாக்ககூடியது ஜவலின் ஏவுகணைகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 175.000 அமெரிக்க டொலர்கள்- 1990இல் உருவாக்கப்பட்ட ஜவலின்கள் 1996 முதல் பயன்பாட்டில் உள்ளன. இரண்டாவது ஈராக் யுத்தத்தின் போது ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட ரி-72 டாங்கிகளிற்கு எதிராக இதனை அமெரிக்க படையினர் பயன்படுத்தியிருந்தனர் – அவ்வேளை ஜவலின்கள் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளன. ரஸ்யா தற்போதும் ரி72 டாங்கிகளை பயன்படுத்துகின்றது- உக்ரைன் எல்லையில் அந்த டாங்கிகளை ரஸ்யா பெருமளவில் குவித்துள்ளது.சதாமின் காலத்தின் பின்னர் இவை பல மாற்றங்களிற்கு உட்பட்டிருந்தாலும் இந்த வகை டாங்கிகள் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவையாகவே காணப்படுகின்றன என்ற கருத்து நிலவுகின்றது. ஜவலின்கள் அகச்சிவப்பு அமைப்புகளை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை குறிவைக்கின்றன. இதன் காரணமாகபடையினர் டிரிகெரை அழுத்திய பின்னர் தொடர்ந்தும் இலக்கினை குறிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டியதில்லை. ஏவுகணை ஏவப்பட்டவுடன் அது சிறிய மின்னூட்டத்தை பயன்படுத்தி வெளியேறுகின்றது-இதன் காரணமாக முக்கிய ரொக்கட் வெடிப்பதற்கு முன்னர் அதனை வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் ஏவலாம். ஜவலின்கள் மேல்நோக்கி 490 அடி சென்று பி;ன்னர் இலக்கை நோக்கி கீழே இறங்கிவருகின்றன.இதனை கேர்வ்போல் சொட் என்கின்றனர். ரஸ்யாவின் ரி72 டாங்கிகளில் 850மில்லிமீற்றர் கவசம் பொருத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.ஜவலினால் 800 மில்லிமீற்றர் வரையே உள்ளே ஊடுருவ முடியும்.எனினும் ரஸ்ய டாங்கிகளின் கவசம் மெல்லியது என்பதால் ஜவலினால் அதனை இலகுவாக உடைத்துக்கொண்டு செல்ல முடியும். புட்டினின் ஜெனரல்கள் பொதுவாக இது குறித்து கவலை கொண்டுள்ளனர்- கடந்த நவம்பர் மாதம் ஜவலினை முறியடிப்பதற்கான வித்தியாசமான குடைபோன்ற அமைப்புடன் டாங்கிகள் உக்ரைன் எல்லையில் காணப்பட்டன. இந்த கவசம் பயனளிக்க கூடியதா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.மேலும் இதன் இயங்கும் திறன் மற்றும் சுடும்திறனில் என்னை தாக்கம் இதனால் ஏற்படும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைன் எல்லையில் காணப்பட்ட இந்த டாங்கிகள் இந்த வகை கவசம் பொருத்தப்பட்டவையாக காணப்படவில்லை இதனால் அவற்றின் பலவீனம் தொடர்ந்து நீடிக்கின்றதுஎன கருத முடியும். ஜவலின்களை இரண்டரை மைல் தூரத்திற்கு மரபுவழி ஆயுதங்களை போல பயன்படுத்தலாம் – இதன் அர்த்தம் என்னவென்றால் அவற்றை கட்டிடங்களை தகர்ப்பதற்கும் பதுங்குழிகள் சுரங்கப்பாதைகளிற்குள் உள்ள படையினரை தாக்குவதற்கும் பயன்படுத்தலாம். குறைந்த உயரத்தில்பறக்கும் ஹெலிக்கொப்டர்களை தாக்குவதற்கும் அவற்றை பயன்படுத்தலாம். இவை சிறியவை பாரம் குறைந்தவை என்பதால் தோளில் சுமந்துசெல்ல முடியும் Thinakkural.lk
  • பணம் திருடப்பட்ட சம்பவம்: பிரதமரின் ஊடக செயலாளர் பதில்       பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். பிரதமரின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றிய ஒருவர்,  பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகக்கூடிய ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. மேலும், பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஹான் வெலிவிட்ட , இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை என்றார்.   Tamilmirror Online || பணம் திருடப்பட்ட சம்பவம்: பிரதமரின் ஊடக செயலாளர் பதில்
  • இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.       இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள்குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரிட்டன்தெரிவித்துள்ளது. வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சர்வதேச மனிதஉரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது எனதெரிவித்துள்ள அவர் எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை பின்பற்றி இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக யுத்தகுற்ற தடைகளை விதிப்பதற்கு பிரிட்டனிற்கு மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பியவேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜெனீவாவில்இலங்கை தொடர்பான முதன்மை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டன் மனிதஉரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரிட்டன்திட்டமிட்டுள்ளது என இலங்கைஇராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. Thinakkural.lk
  • அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு     தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னால் ஆளுநருமான அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து அஸாத் சாலி அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளான மாட்டின் கெலி, ரூபி வூட் சேட், அரசியல் பொறுப்பாளர் நஸ்ரின் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   -மன்னார் நிருபர் லெம்பட்-   அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு (adaderana.lk)
  • நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சி சமைக்கலாம், மீன் சமைக்கலாம், கணவாய் & றால் பிரட்டலாம், கூழ் காச்சலாம்  ஆனால் யாராவது தொதல் , மஸ்கட் செய்வார்களா......அகப்பையால கிளற கிளற அகப் பையில் ஏறினதெல்லாம் இறங்கியிருக்குமே........!  😂 தொதல் நன்றாக வந்திருக்கு சகோதரி......பாராட்டுக்கள்.....!  👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.