Jump to content

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!

ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.

இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.

அது முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் முழுமையாக என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை.

குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.

இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

http://athavannews.com/வெடுக்குநாரி-ஆதிலிங்கேஸ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ரொம்ப நாள் இந்த கோவில் பெயர் அடிபடலயே என்டு பார்த்தன்..😢

394.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் பாராட்டு தெரிவிக்க இரண்டு விவஸ்தை கெட்டதுகள் கொடியோட தெருவில நிக்குங்கள். 

Link to comment
Share on other sites

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி!

 

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி,  வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ விடுக்க கூடாது எனவும் பொலிசாருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.

இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.

அது முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் முழுமையாக என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை.

குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.

இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் ஆலயத்திற்கு செல்வதற்கும் வழிபடுவதற்கும் தடை விதிக்க முடியாது என கூறி வழக்கினை மன்று தள்ளுபடி செய்துள்ளது.

     by : Benitlas

http://athavannews.com/வெடுக்குநாரி-செல்ல-அனுமத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நீதிபதி பீற்றர் போல் என்று வவுனியா நீதிபதியை நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.  இனி பீற்றர் போலை  வவுனியாவுக்கு அனுப்பி வைப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொல்லியல் திணைக்களத்தின் தடைகளைத் தாண்டி திருவிழா காணும் வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர்

 

மூன்று வருடங்களுக்கு மேலாக தொல்லியல் திணைக்களமும் பொலிஸாரும்  இணைந்து வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய நிர்வாகத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக அழுத்தத்தைக் கொடுத்து வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், நாளை இந்த ஆலயத்தில் நடைபெற இருக்கின்ற திருவிழாவினை தடைசெய்யும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில்,நேற்றைய தினம் புதிதாக ஒரு வழக்கொன்றை பொலிஸார் பதிவு செய்திருந்தார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் ஆலய நிர்வாகத்தினர் நீதி மன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

வெடுக்குநாரி ஆலய ஏணிப்படி விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை - Crime News - தமிழ் செய்திகள்

இந்நிலையில், ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் உட்பட 17க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இன்று மன்றிலே முன்னிலையாகி பொலிஸாரால் கொண்டு வரப்பட்ட தடை உத்தரவை நீக்கி திருவிழாவை சுதந்திரமாக மேற்கொள்ளலாம், எந்த சிக்கலும் இல்லை என்றவொரு கூற்றை  முன்வைத்திருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90-1-4.jpg

இந்நிலையில், திட்டமிட்டபடி திருவிழா நடைபெறும் என்றும் எனவே எந்த வித அச்சமும் இன்றி அடியவர்கள் ஆலயத்திற்கு வரலாம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளர்.

 

http://www.ilakku.org/vavuniyaadi-ilingeswarar-case/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ புதுசு புதுசாய் தொடர்பில்லாமல் விகாரைகளை எழுப்பி எங்கேயோ இருந்து வந்து  கும்புடுகினம். இங்கு கால காலமாய் இருந்ததுகளை தடை செய்யச் சொல்லி அச்சுறுத்துகினம். இந்த லட்ஷணத்தில இது ஒரு ஜனநாயக நாடு என்று கொக்கரிப்பு. எல்லாத்துறையிலும்  மூளை பழுது பட்டதுகள், நிஞாயம் தெரியாமல் அடிச்சுப் பிடுங்குறதுகள் அமர்த்தப்பட்டதால் வந்த வினை. "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி." தெரியாமலே முன்னோர்கள் சொன்னார்கள்? 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

 ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை! – மறியலில் வைக்க அடம்பிடித்த பொலிஸார்!

October 9, 202000
SHARE0
Vavuniya-Vedukkunari-Temple-Issue.jpg?18
 

வவுனியா – வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

எனினும், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கும் பூசை வழிபாடுகளை முன்னெடுப்பதற்கும் நெடுங்கேணி பொலிஸாரால் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டு வந்தது.

கடந்தவாரம் ஆலயத்தின் பூசகரை நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்காக அழைத்து ஆலய வளாகத்திற்குள் சென்று பூசை நிகழ்வுகளை மேற்கொண்டால் கைது செய்வோம் என தெரிவித்திருந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று (09) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் தொல்பொருள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனவும் நீதிவானிடம் கோரினர்.

இதற்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன. தெற்கிலும் ருவன் வெலிசாய போன்ற பல்வேறு பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழேயே இருக்கிறது. எனினும், அங்கும் வழிபாடுகள் இடம்பெறுகின்றமை நீதிவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் நிமித்தம் 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன் வரும் நவம்பர் 23ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயங்களுக்கு நீதிமன்றங்களின் ஊடாக தீர்வினைப் பெறுவது என்பது கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானது எனவும் இவற்றிற்கு அரசியல் ரீதியாகவே முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் ஆலய நிர்வாகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் 15 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர் .

https://newuthayan.com/வெடுக்குநாரி-ஆலய-நிர்வாக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.