Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

திலீபனின் தியாகத்தைப் பின்பற்றுகிறோமா.?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் தியாகத்தைப் பின்பற்றுகிறோமா.?

Aasiriyar-paarvai-scaled.jpg

அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண, தியாக தீபம் திலீபன் அவர்கள், உண்ணா நோன்பிருந்து உயிரிழக்கவில்லை என்றும் நோயினாலேயே உண்ணா விரதத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும் வரலாற்றுப் பொய் ஒன்றைக் கூறி தமிழ் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மையில் 2009இற்குப் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளை முறியடித்துவிட்டோம் என இலங்கை அரசு சொல்லி வரும் நிலையில், திலீபன் போன்ற உன்னதப் போராளிகளின் பெயர்களை கண்டும் அச்சப்படும் நிலையின் வெளிப்பாடாகவே இத்தகைய பேச்சுக்கள் வெளிவருகின்றன.

எமது நிலத்தின் பெறுமதியை அதன் அடையாளத்தை அதன் உன்னதத்தை நாம் உணர்ந்துதான் வாழ்கிறோமா என்பதை குறித்து ஒரு சுய விசாரணை செய்யவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஈழ விடுதலை வரலாற்றில் கிளிநொச்சி மண்ணுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. அதற்கு இருக்கும் அடையாளம் உலகப் பிரசித்தமானது. கிளிநொச்சியில் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில், மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு, மாணவர் ஒருவரின் கழுத்தில் காயம் ஏற்பட்ட செய்தியானது, கமால் குணரட்ணவின் பேச்சை விடவும் இந்த மண்ணுக்கு இழுக்கு தரக்கூடியது. நமது மண்ணில் பொறுப்பற்ற கூட்டுச் செயற்பாடுகளின் விளைவாகவே இந்த விடயத்தைக் கருதிக்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் யுவதிகள், சிறுவர்கள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும். நீங்கள் பாடப் புத்தகங்களில் படித்திராத வியப்பும் சாதனையும் உன்னதமும் நிறைந்த வரலாறு நீங்கள் வாழ்கின்ற மண்ணில் நிகழ்ந்திருக்கிறது  என்பதை உணர வேண்டும். அதனை எடுத்துரைக்கிற நிலையில் பெரியவர்களும் அதிகாரிகளும் ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இந்த மண்ணில் இன்றைக்கு பிறக்கிற, வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஒரு மதிப்பும் பணியும் இருக்கிறது. அதற்காக நீங்கள் மலைகளைச் சரிக்க வேண்டியதில்லை. வலிமை மிகுந்த எந்த அம்பையும் வளைக்க வேண்டியதில்லை. வரலாற்றுக்கும் அதன் உன்னதத்திற்கும் ஒத்திசைவான வாழ்க்கையை வாழ வேண்டியது உங்கள் பணி.

33 வருடங்களின் முன்னர், திலீபன் அவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடருகின்ற இளைஞன். அப்போது அவருக்கு 23 வயதுதான். அந்த இளம் வயதில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருக்கிறார் திலீபன். அந்த தருணத்தில்தான் இந்திய இராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்தும் உண்ணா விரதப் போராட்டத்தை தான் மேற்கொள்ள தீர்மானிக்கிறார். ஈழ மக்களின் விடுதலைக்காக தனது உயிரை பணயம் வைத்தவொரு  போராட்டத்திற்கு துணிகிறார்.

இந்த உலகத்தில் உண்ணா விரதப் போராட்டம் என்பது எப்போதும் கேலி நிறைந்த ஒரு முறையாகத்தான் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் இந்த வழிமுறையை ஒரு நாடகமாகவே மேற்கொண்டு வந்தார்கள். உண்ணா விரதப் போராட்டம் இருப்பதும், பின்னர் பழப்பானங்களை குடித்து விட்டு அன்றே மதிய உணவு எடுப்பதும்தான் உண்ணா விரதப் போராட்டம் பற்றிய அனுபவங்கள். தொழிலாளர்கள்கூட ஒரு சில நாள்களில் தமது போராட்டத்தை தீர்வின்றி முடித்த அனுபங்கள் பலவுமுண்டு. ஆனால் திலீபன் அவர்கள், உண்ணா விரதப் போராட்டத்திற்கு உலக அளவில் ஒரு அர்த்தம் உணர்த்திய போராளி.

 இந்திய அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் திலீபன். அவையாவன,

01. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

02. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

03. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

04. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

உண்மையில் இந்தக் கோரிக்கைகள் இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. திலீபன் உயிர் கொடுத்த போராட்டக் கோரிக்கைகளாக இருப்பதனாலும், இன்றுவரை தமிழர்களின் தீரக்கப்படாத பிரச்சினையாக இருப்பதனாலும் இக் கோரிக்கைகள் இன்றும் இலங்கை அரசின் முன்பாகவும் உயிர்ப்புடன் நிற்கின்றன. திலீபன் அவர்கள் பன்னிரு நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, இலங்கை இந்திய அரசுகளினால் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் மெல்ல மெல்ல உருகி தன் உயிரை நீத்தார்.

உலகில் தன் இன உரிமைக்காக உணவருந்த மறுத்து உயிர் நீத்த உன்னதமான தியாகி என அவர் பெயர் பொறிக்கப்பட்டது வரலாற்றில். பசி எவ்வளவு கொடியது என்பதை நமக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. ஒரு பொழுது பசியைக் கூட கடக்க முடியாது. அதன் பின் ஒவ்வொரு நொடியும் அனல் கனக்கும் பெரும் யுகங்கள். ஆனால் அந்தப் பசி வேள்வியை ஒரு இலட்சியத் தீயாக முட்டிய திலீபன், சாதாரண மனிதர்களைப் போன்றவரல்ல என்பதை தன் உன்னத வழியினாலும் போராட்டத்தினாலும் உணர்த்தியவர்.

திலீபன் என்ற வரலாற்று சிறப்புமிக்க பாத்திரம் பற்றி எவர் எப்படி பேசினாலும் அதன் வெளிச்சத்தை நெருங்கவே முடியாது. வரலாற்றின் பிரகாசம் மிக்க தீபமாக அவர் நிலைத்திருக்கிறார். இந்த சூழலில் திலீபன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு மதிப்பளிக்கும் தியாகங்களை உணர்ந்து அதற்கு மதிப்பளித்து, இம் மண்ணின் மனிதர்களாக நாம் வாழ வேண்டும். நடைபவனிகளுக்கும் நினைவு நாட்களுக்கும் அப்பால் நடைமுறை நிஜ வாழ்வில் அவர் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

அத்தகைய புரிதல் உள்ள தலைமுறையை இந்த மண்ணில் வளர்த்தெடுப்பதே நம் ஒவ்வொருவரின் முன்னாலும் இருக்கின்ற கடமை. வரலாற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுவதே எதிர்கால தலைமுறையை ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்ட சமூகமாக வளர்க்கும் கருவியாகும். உண்மையில் தியாக தீபம் திலீபனின்  தியாகத்தை நாம் நினைவுகூர்வது என்பது, அவருடைய தியாகத்தை ஒரு துளியேனும் பின்பற்றுகின்ற மதிப்பளித்தலிலேயே தங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுவோம்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்

https://thamilkural.net/thesathinkural/editorial/70341/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • London stock exchange ல் வேலை செய்திருக்கின்றேன். இந்த பங்கு சந்தை யாவாரத்தில் இரு பக்கமும் கமிசன் பணம் பார்க்கும், traders மற்றும் trading floor கொண்டு இயங்கும் பெரும் வங்கிகளே பணம் பார்க்கின்றன. ஏனெனில், அவர்கள் கணிதவியலில் (actuarial) புலிகள்.  (நம்மவர்கள் பலர், இந்த துறையில் கணிதம், Warwick பல்கலை போய் படித்து வருகிறார்கள். படிப்பு என்பதிலும் பார்க்க, இயற்கையான விவேகம், வேகமான மன கணக்கியல் என்பதே கைகொடுக்கும் என்பது எனது அபிப்பிராயம்) கண்ணால் பார்த்துக்கொண்டே, மனம் கணக்கு போட வேண்டும். அதுவும் மிக துல்லியமாக. தவறு, பெரும் பண நட்டத்தில் முடியும்.  எனக்கு தெரிந்து, இந்த பங்கு சந்தையில் பெரும் பணம் ஈட்டிய Sobers, buffet போன்றோர், தாமே சிறந்த traders களை சம்பளத்துக்கு வைத்து இயங்குகிறார்கள்.  மேலும், அவர்களின் செல்வத்தின் ஒரு பகுதி, asset striping மூலமும் வருகிறது. அதனை சாதாரண பங்கு சந்தையில் பணம் பண்ண முயல்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஒருவர், இழக்க, ஒருவர் லாபம் அடைவதே பங்கு சந்தை. அதில் பணம் பண்ணுவது, ஒரு முழு நேர வேலை. ஒரு சக வேலை நண்பர், £6,000 னை மதிய உணவு நேரம் EGG bank என்று முன்னர் இருந்த ஒன்றில் போட்டார். மாலை போகும் போது, அவ்வளவும் காலி. பெரும் சோகத்தில் இருந்த அவரை தேத்தி அனுப்ப பெரும் பாடகியது. அடுத்த நாள் வருவாரோ என்று கவலைப்பட்டேன். அன்று தான் நினைத்தேன், இந்த பக்கமே தலை வைத்தும் படுக்க கூடாது என்று. விசயம் தெரிந்தாலும், உங்களுக்கு சொல்லி தர மாட்டார்கள். சொல்லி தருவதாக காட்டினாலும், நீங்கள் இழப்பதை உள்ளூர விரும்புவார்கள். ஏனெனில் அதனூடாக லாபம் பெறுவார்கள். நீங்களாக அதனை அறிய, பெரும் பணத்தினை இழக்க வேண்டி இருக்கும். விரக்தி தான் அடைவீர்கள். மேலே சொன்ன traders உடன் பேசி இருக்கிறேன். அவர்கள் சொன்னது இதுதான்: வித்தை தெரியாவிடில், withdraw பண்ணி விடுங்கள். If you don't know the game, then withdraw. Don't gamble! 🙄
  • தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கருணாவின் நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் வீ ஆனந்தசங்கரி இத்தாக்குதல் குறித்துப் பேசும்போது, இது நிச்சயமாகப் புலிகளால் மமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் என்று தான் உறுதியாகக் கூறியிருந்தார். அத்துடன், அரசும் ராணுவமும் கூறுவதுபோல, இது தமிழ் மக்கள் மீது சிங்களவர்களைக் கோபம் கொண்டு இனரீதியிலான வன்முறைகளைத் தூண்டிவிட்டு, சர்வதேச அனுதாபத்தினை உருவாக்கி தமது தனிநாட்டுக் கனவை நிறைவாக்க புலிகள் முயல்வதாகக் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர் மீது அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையினையும், இப்பேரூந்து மீதான தாக்குதலையும் ஒன்றாகக் கணிப்பிட்டு, 83' கலவரத்திற்கும் புலிகளே காரணம் என்றும், சர்வதேச அனுதாபத்தினைப் பெறுவதற்கே அப்பாவிச் சிங்கள ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறியிருந்தார். ஆகவே, 83 ஆம் ஆண்டு, ஜே ஆர் ஜெயவர்த்தனாவினாலும், அவரது அமைச்சர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட தமிழர் மீதான படுகொலைகளை புலிகளே ஆரம்பித்துவைத்தார்கள் என்று கூறும் எவருக்கும், நாட்டில் நடக்கும் எந்த இனரீதியிலான வன்முறைக்கும் புலிகளே காரணம் என்று கூறுவது அவ்வளவு கடிணமாக இருக்கப்போவதில்லை. இன்று ஆனந்தசங்கரி செய்வதும் அதைத்தான்.  ஆகவே, இங்கு ஒரு இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை நடக்கின்றனவோ இல்லையோ, இலங்கை அரசாங்கமே இந்த சம்பவத்தின்மூலம் பாரிய நலன்களைச் சம்பாதித்திருக்கிறது. ஏனென்றால், இவர்கள் கூறுவது போல தமிழர் மீதான இனரீதியிலான வன்முறைகள் நிகழ்ந்திருந்தால், அதற்குப் புலிகளே முழு பொறுப்பாக இருக்கவேண்டும். அப்படி வன்முறைகள் நடக்கவில்லையென்றால்க்கூட, அதனைத் தடுத்து சமாதானத்தினை நிலைநாட்டிய பெருமை அரசுக்கே சேரும். அதுமட்டுமல்லாமல், புலிகளின் வெறுப்பேற்றும் பேரூந்து மீதான தாக்குதலின்பின்னரும் கூட, நாட்டில் அமைதியினை நிலைநாட்டிய அரசு மீது சர்வதேசத்தில் நம்பிக்கை ஏற்படுவதோடு, அப்படியான அரசின் கீழ் தமிழர்கள் அமைதியாகவும், பிரிவினை கோராமலும் வாழ முடியும் என்னும் நிலைப்பாட்டிற்கு சர்வதேசம் வரும் சந்தர்ப்பமும் இருக்கிறது.  சரி, இலங்கை அரசோ, தெற்கின் இனவாதிகளோ, அமெரிக்கர்களோ  அல்லது தமிழர் விரோதப் போக்கினைக் கொண்ட ஆனந்த சங்கரி போன்றவர்களோ கூறுவதுபோல இத்தாக்குதல் புலிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர் மீதான வன்முறைகளை ஏவிவிடும் நோக்கிலும் இருந்திருக்குமானால், நிச்சயமாக அவர்களின் நோக்கம் ஈடேறப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இவை அனைத்திலுமே அரசுதான் பாரிய நண்மைகளை அடைந்திருக்கிறது.   அப்படியானால், புலிகள் இத்தாக்குதலைச் செய்யவேண்டிய தேவை என்ன? அரசால் புலிகளை இத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது, இத்தாக்குதலின் மூலம் புலிகள் பாரிய தோல்வியினையும், அரசு பாரிய பிரச்சார வெற்றியினையும், அனுதாபத்தினையும் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. சிலவேளை, புலிகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது பற்றி அரசுக்கு தெளிவான புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அரசு புலிகளே இதனைச் செய்தார்கள் என்று கூறும் காரணங்களைக் காட்டிலும் இன்னும் வேறு காரணங்களும் இத்தாக்குதலின் பின்னால் இருக்கலாம், அக்காரணங்கள் உண்மையாக புலிகளுக்குச் சாதகமாகவும், அரசுக்குப் பாரிய நெருக்கடியினையும் ஏற்படுத்துவதாக இருக்கலாம், அல்லது அரசு இந்தக் காரணங்கள் பற்றி பேச விரும்பாமல்க் கூட  இருக்கலாம் !  
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்       https://eelapparavaikal.com/maveerar-veparam-tamileelam-september-21/  
  • முஸ்லிம் மதம் சொன்னதிற்காக பூமிக்கே தீங்கு விளைவித்து பயமுறுத்தும் அவர்களது இந்த செயலை யாழ்களத்திலேயே கண்டித்திருக்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.