Jump to content

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 11ம் நாள்

11th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

 

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.

‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம்@ அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.

அதேபோல் திருக்கோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்;;த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல, கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ‘டொலர் பாம்’, ‘கென்ற் பாம்’ ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல@ நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் ‘தமிழர் நலம் காப்பது’ என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?

ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமிழீழத்தைப் பிரித்துத் தா” என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு: இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!

நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா….? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்ய10னிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்.” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் – கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயப10ர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.

அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

ஒ! மரணித்த வீரனே!
உன்ஆயுதங்களை எனக்குத் தா
உன்சீருடைகளை எனக்குத் தா
உன்பாதணிகளை எனக்குத் தா
(ஓ?. மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

– தியாக வேள்வி தொடரும்…

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.

https://thesakkatru.com/11th-day-with-lieutenant-colonel-thilipan/

 

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எம்மைக் கட்டிப்போட்ட திலீபன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் 11ம் நாள் நினைவுகளைப் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள்,

இன்று திலீபனின் உண்ணா நோன்பின் 11ம் நாள், அவரின் உடல் முற்றாக செயலிழந்து, இதய துடிப்பும் மூச்சும் பலவீனமாகி அசாதாரண நிலையை எட்டி விட்டது. அவரின் சாவு எப்போதும் நிகழலாம் எனும் நிலை. எம் முன்னே கிடக்கும் தோழனை ஒருசொட்டு நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தவோ, எம்மிடம் உள்ள மருத்துவ வளங்களைப் பயன்படுத்தவோ முடியாத திலீபனின் கண்டிப்பான உத்தரவு, போராட்டத்தின் உறுதி, என்றும் எம் உறுதியிலிருந்து விலகக்கூடாது என்ற எம் தலைமையின் வளர்ப்பு என்று பல்வேறு காரணங்கள் எம்மை கட்டிப்போட்டிருந்தன.

தொண்டைமானாற்றில் நடைபெற்ற சண்டையில் திலீபனின் வயிற்றில் வெடி பட்டு யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு, துப்பாக்கி சூட்டு காயத்தால் சிதைவடைந்த சிறுகுடலின் இரண்டு அங்குலம் வரையான சிறு பகுதி அகற்றப்பட்டு சிகிச்சையளிக்க பட்ட போது, மூன்றே நாட்களில் மருத்துவ முகாமுக்கு வந்து தொடர் சிகிச்சையும் ஓய்வும் பெற்று சில வாரங்களிலேயே களப்பணிக்கு திரும்பிய தோழன்.

மருத்துவ பிரிவின் வளர்ச்சியை ஏற்படுத்தியவன், மருத்துவ பீடத்தை உதறி தள்ளி போராட்டத்தில் இணைந்தவன். இன்று மருத்துவ வசதிகளை புறக்கணித்து தன் இனமான எழுச்சியின் அடையாளமாய், தமிழன் தன் இனத்திற்காய் எவ்வகையான உச்சம் தொடும் தியாகத்தையும் செய்ய தயங்காதவன் எனும் கருத்தை மெய்ப்பிக்க எம்மை கணங்களை எண்ண வைத்து காலத்தையும் கடவுளையும் சபிக்கவைத்து கண்மூடி கிடக்கிறான்.

யாழ். மாவட்ட குச்சொழுங்கை எங்கும் பம்பரமாய் திரிந்த திலீபன், இன்று நினைவிழந்து கிடக்கின்ற வேளையில்,  33ஆண்டுகளின்பின் அவனோடு சுற்றித் திரிந்து அரசியல் பணி செய்த அவரது நண்பர்களினதும், தாக்குதல் நடத்திய அவனது நண்பர்களும் நினைவுகளாய் என் மனதில் நிழலாடுகிறது.

ஓர் குடும்பமாய் நாங்கள் வாழ்ந்ததும் , ஒன்றாக கூடி இராணுவ பொலிஸ் நிலையங்களை சுற்றி காவலரண்களை அமைத்து காவல் காத்ததும், யாழ். குடாநாட்டு வீதிகளில் சைக்கிளில் திரிந்து அரசியல் பணி செய்து அமைப்பை வளர்ப்பதற்காக இளைஞர்களையும், யுவதிகளையும் இணைத்துக் கொள்வதற்காக பாடசாலைகள், கோயில்கள், வாசிகசாலைகள் எல்லாம் மக்களைக் கூட்டி, இளைஞர்கள், யுவதிகளைக் கூட்டி கலந்துரையாடல் செய்ததும், அந்தக் கலந்துரையாடலுக்கு திலீபனை அழைத்து, திலீபனும் வந்து மக்களோடு மக்களாக கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றங்கள், கேள்வி பதில்கள் நடத்தியதும் இன்று நெஞ்சில் நிழலாடுகிறது.

இந்த வகையில் 33ஆண்டுகள் பின்னும் திலீபனுடன் சேர்ந்து பழகியவர்களில் என் மனதில் இன்று நினைவிற்கு வருபவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும். அந்த வகையில் இந்த நினைவுகளை பகிர்ந்து கொள்வதை சில நண்பர்கள் விரும்புவார்கள். சில நண்பர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் வரலாறு பதிவுகளை பதிந்தே செல்லும் என்பதை அவர்கள் விரும்பியோ விரும்பா விட்டாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் சில பதிவுகளை நான் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

1987ஆம் ஆண்டிற்கு முன் யாழ். மாவட்டத்தில் திலீபன் அரசியல் பணி செய்யத் தொடங்கிய காலத்தில் திலீபனுடன், திலீபனுக்கு முன் அரசியல் பணி செய்தவர்களான கந்தையா அண்ணன், திலீபனுக்கு முந்தைய யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். அதற்கு முன்னர் திலீபனை இயக்கத்திற்கு இணைத்த சுகந்தன் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாக இருந்தவர். பார்த்திபன் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். சுகந்தன் சாவடைந்தார், பார்த்திபன், கந்தையா அண்ணன் ஆகியோர் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

சுகந்தனுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் அரசியல் பணி செய்தவர்கள் பண்டிதர் அண்ணா, மாத்தையா அண்ணா, காக்கா அண்ணா. காக்கா அண்ணா நாட்டில் இருக்கின்றார். மாத்தையா அண்ணா சாவடைந்தார். பண்டிதர் அண்ணா வீரச்சாவடைந்தார்.  இவ்வாறு செயற்பட்ட ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பும் பணிகளுமே பிற்காலத்தில் பெரும் முப்படைகளைக் கொண்ட இயக்கமாக வளர்வதற்கு அடித்தளமாக இருந்ததென்றால், அது மிகையாகாது. அந்த வகையில் யாழ். நகர பிரதேசத்திற்கு வேலை செய்தவர்கள் காண்டீபன், விதுரன், கிரி, டானியல். இவர்களில் காண்டீபன், விதுரன், கிரி, ஆகியோர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். டானியல் வெளிநாட்டிற்கு வந்து சாவடைந்தார். குருநகர் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த வாசன் வீரமரணம். தேவதாஸ் வீரமரணம், கலிஸ்டர் வெளிநாட்டிலிருக்கின்றார்.

அரியாலைப் பிரதேசம் றிச்சட், மலரவன் ஆகியோர் வெளிநாட்டிலிருக்கின்றனர். அகிலன் வீரமரணமடைந்தார். கோப்பாய் பிரதேசம் செய்தவர்கள். முரளி, காந்தி.  முரளி யாழ். மாவட்ட மாணவர் அமைப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். இவர்களுடன் நிரஞ்சன் இருந்தார். இவர்களில் முரளி, காந்தி வீரமரணம், நிரஞ்சன் வெளிநாட்டிலிருக்கின்றார்.

அச்சுவேலி பிறேம் அண்ணா, அமுதன் வெளிநாட்டில் இருக்கின்றனர். திருநெல்வேலி அரசியல் வேலைகள் செய்தவர்கள் சரா, நிஸாம். இருவரும் வீரமரணம்.  புன்னாலைக்கட்டுவன் ராஜன் வெளிநாட்டிலிருக்கின்றார். சூட் வீரமரணம். சுண்ணாகம் சுதன் வெளிநாட்டிலிருக்கின்றார். கஜன் நாட்டுப்பற்றாளராகினார். மானிப்பாய் மயூரன் வெளிநாட்டில் சாவடைந்தார். பாரத் வீரமரணமடைந்தார். அன்பு வீரமரணம்.

காங்கேசன்துறைப் பிரதேசத்தில் அரசியல் பணியாற்றிய கபிலன் வெளிநாட்டிலிருக்கின்றார். தெல்லிப்பளைப் பிரதேசத்தில் பணியாற்றிய மதி வீரமரணம். மல்லாகம் பிரதேசம் செய்த ரஞ்சன் வெளிநாடு வந்து சாவடைந்தார். வட்டுக்கோட்டை பிரதேசம் செய்த பிரசாத் வீரமரணம். ரசாத் வெளிநாட்டிலிருக்க வேண்டும். முஸ்லிம் பிரதேசம் செய்த பாரூக் வீரமரணம். தீவகம் எழிலன் வெளிநாட்டிலிருக்கின்றார். காரைநகர் அகிலன் வெளிநாட்டிலிருக்கின்றார்.

இவர்கள் எல்லோரும் வலிகாமப் பிரதேசத்தில்  திலீபனுடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர்கள்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் திலீபனுடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர்கள் கேடில்ஸ், பாப்பா, தினேஸ் வீரமரணம். பாக்கி குஞ்சு, மேத்தா ஆகியோர் வெளிநாட்டிலிருக்கின்றனர்.

வடமராட்சிப் பிரதேசத்தில் அரசியல் பணி செய்தவர்களில் குணம் அண்ணா, ஜெயா, ரவி, தங்கச்சி, சுக்கிளா ஆகியோர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். மேஜர் செங்கதிர், வீரமரணம்.

இப்படி பலர் திலீபனுடன் இருந்தவர்களில் வீரமரணம் அடைந்தவர்களும், சாவடைந்தவர்களும், வெளிநாட்டில் வாழும் நண்பர்களும் இருக்கின்றார்கள். இந்தப் பதிவுகள் மூலம் அந்த நண்பர்கள் திலீபனின் நினைவுகளை குறிப்புகளாக ஒவ்வொருவரும் பதிவு செய்ய வேண்டும் என்று இந்த வேளையிலே நான் கேட்டுக் கொள்கிறேன்.

அவருடன் பழகிய நண்பர்கள், ஜொனி அண்ணா, கிட்டண்ணா, மேஜர் அல்பேட், சங்கர், கண்ணாடி ராஜன், பைப், தீபன், நீர்வேலிப் பிரதேச அக்காச்சி ஆகியோர் வீரமரணமெய்தி விட்டனர். பப்பா, நந்தி அண்ணா, சிறி அண்ணா, ரவி அண்ணா, சண்முகம் அண்ணா, மதன் அண்ணா, சாந்தன் அண்ணா, பிரபா அண்ணா, சாஜகான் அண்ணா, முத்தண்ணா, சுப்பண்ணா, சுபாஸ் அண்ணா, ஜெகன், கொடி குப்பண்ணா, டிஸ்கோ ஆகியோர் வெளிநாட்டில் இருக்கின்றனர். ஊத்தை ரவி சாவடைந்தார்.

திலீபனை மிகவும் உலுப்பிய ஒரு நினைவு என் மனதில் தோன்றுகின்றது அந்நிகழ்வு 1984 நவம்பர் மாதத்தில் நடந்தது. அன்றையதினம் சுழிபுரம் பகுதியில் எமது சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அரசியல் பிரிவு போராளிகள் ஆறு பேர் புளொட் அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டு புதைக்கப் பட்டிருந்தனர். அப்புதைகுழியை தோண்டி அவர்களின் உடலை பரிசோதனைக்காக வெளியே எடுத்த போது திலீபன் அந்த உடம்பில் செய்யப்பட்டிருந்த சித்திரவதைகளைப் பார்த்து திலீபன் கண்ணீர் சிந்தியதையும், அதி உச்ச கோபத்தில் கதறியதையும் மறக்க முடியாது.

யாழ். பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு, யாழ். குடாநாடு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட போது, அதன் பின்பு தேசியத் தலைவர் இந்தியாவிலிருந்து யாழ் வந்து இறங்கி, அரசியல் வேலை செய்பவர்கள் அனைவரையும் இன்று சந்திக்க வருகின்றார் என்று சொல்லி, திருநெல்வேலியில் ஒரு வீட்டில் பத்து பதினைந்து பேர், முதன்முதலாக தலைவரைச் சந்திக்கப் போகின்றோம் என்ற  ஆவலோடும், ஆரவாரத்தோடும், அமர்ந்திருந்து எல்லோரும் சந்தோசப்பட்டோம். தலைவர் திலீபன், கிட்டண்ணா இரண்டு பேருடனும் வந்து நாங்கள் இருந்த மண்டபத்திற்குள் நுழைந்தார்.

கிட்டண்ணா ஒரு மாணவன் போல் கைகட்டி அமைதியாக, பயந்த சுபாவத்துடன் நின்றதை அன்று தான் நான், பார்த்தேன்.  என்னுடன் நின்றவர்களும் பார்த்தார்கள். திலீபன் அண்ணாவும், கிட்டண்ணாவும் எங்களை ஒவ்வொருவரையும் எந்த  பிரதேசங்களில் பணியாற்றுகிறோம் என்று தலைவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  தலைவர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்முறுவலுடன் முதலாவதாக கேட்ட கேள்வி இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கின்றது. “சரி நீங்கள் எல்லாரும் அரசியல் வேலை செய்கிறனீங்கள், இன்று காலை பேப்பரில் வந்த தலையங்கங்களை சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.

அந்தக் காலத்தில் நாங்கள் எல்லோரும் பேப்பர் படிப்பதனால் தப்பித்தோம். எல்லோரும் சொன்னோம். எனவே அந்தக் கலந்துரையாடல் சந்தோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டு, நிறைவடைந்தது. அந்த நேரத்தில் திலீபனும் கிட்டண்ணாவும், சந்தோசமாக இருந்ததை மறக்க முடியாது.

முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தாலும், இவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை என்பது எங்கள் வரலாறாகி, இன்றும் இவர்களின் நினைவுகள் புதைகுழியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுகள் என்பனவும் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது. அவரது கனவை மக்கள் புரட்சி மூலம் ஏற்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழலில் நாங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் உணரக்கூடியதாக இருக்கின்றது.

இந்த மக்கள் புரட்சி என்றால் என்ன, அந்தப் புரட்சி எப்படி உருவாகப் போகின்றது. அதற்குரிய காலம் தான் எங்களுக்கு எப்பொழுது பிறக்கப் போகின்றது என்பது எல்லோரின் மனங்களிலும் எழுகின்ற ஒரு கேள்வியாகவும் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு இல்லை என்பதையும்  இன்றைய யதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது.

அந்த வகையில், “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகளை நாங்கள் எல்லோரும் நிதர்சனமாக்க வேண்டிய ஒரு சூழலில், ஒரு கட்டாயத்தில், புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை  அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றால், மாவீரர்கள், எங்கள் நாட்டிற்காக தியாகம் செய்த நாட்டுப் பற்றாளர்கள், மக்கள் எல்லோருடைய தியாகத்திற்கும் தீர்வாக “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று எங்கள் சொந்த மண்ணை நாங்கள் உரிமைகளுடன் ஆளக்கூடிய ஒரு சூழலை களத்திலும் புலத்திலும் உருவாக்கி நம் தாயகம் நோக்கிய பயணத்தை தொடர்வதன் மூலமே சாத்தியமாகும்.

 

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-11/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

20200926-101554.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200926-103729.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120182459_188129432718458_8601021977153619939_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=0LjD3b3b2dMAX8qw47m&_nc_ht=scontent-lht6-1.xx&oh=a1bd5123509049491161f963bd83a857&oe=5F92F6E1

120040916_1458208701042638_1764701868292166072_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=EdmdRZCYVvcAX8_N8kN&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=6612f0ecf9cb84e2d5ab8940f67d44ab&oe=5F94516E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் இறுதி உரையிலிருந்து…

From-Lieutenant-Colonel-Thilipans-final-speech-scaled.jpg

 

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால், நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழ வைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

 

https://thesakkatru.com/from-lieutenant-colonel-thilipans-final-speech/

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 12ம் நாள்

12th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது.

பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல். “நவீனன்……” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ‘ஜில்’ லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.

மனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது… மீண்டும் ‘நவீனன்” என்று அழைத்தேன். நவீனன் எழும்பி விட்டான். ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது… மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது… ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது….. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது… திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது… நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை…. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது…. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன்… அது மிகவும் குறைவாக இருக்கிறது… 50ஃ? என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது.

திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி… சுய நினைவில்லை என்றாலும் சரி…. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ…” என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி;த்தார் அவர். அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் – அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?……. எது? ஆம்@ “சத்தியம்!” என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ” அகிம்சை” என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், ‘கட்டுப்பாடு’ என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே ‘பலி’ கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை. என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

“புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள்… ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம்… இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை…” இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, “புலிகள் பொய்யர்கள்” என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.

எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம்…. ஆனால்…… முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான். உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்? 265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09. 1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.

ஆம்! தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்;த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்… எங்கும் அழுகைச் சத்தம்…. விம்மல் ஒலி… சோக இசை…. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு! காலை 11 மணிக்கு ‘என்பார்ம்’ செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் – கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, ‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும்…….

ஆனால், என்ன செய்ய முடியும்? அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் “ஓ…” என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.

திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்… அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்… ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு… அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.

https://thesakkatru.com/12th-day-with-lieutenant-colonel-thilipan/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம்.

பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழுப்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.

கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,
“நவீனன்” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.

மனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது?
மீண்டும் ‘நவீனன்’ என்று அழைத்தேன்.
நவீனன் எழும்பி விட்டான்.

ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.

பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.

உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

‘வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ’
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.

அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் – அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?…….
எது?
ஆம்.
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ?அகிம்சை? என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை ? கண்ணியம் – கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், ‘கட்டுப்பாடு’ என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.

என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.

திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

‘புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை’

இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.

எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.

உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?

265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.

ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்!

எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!

காலை 11 மணிக்கு “என்பார்ம்” செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.

பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் – கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, ‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?

அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் ‘ஓ’ என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.

ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.

திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்?

அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

நன்றி : மு.வே.யோ. வாஞ்சிநாதன்

 

http://www.ilakku.org/தியாக-தீபத்தின்-இலட்சியங/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200926-131424.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்லூர் வீதி சொல்லுன் அண்ண‌ன் திலீப‌னின் தியாக‌த்தை புக‌ழை  ,

அகிம்சைக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200926-133640.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மாவை கொன்ற காந்திதேசம் | தியாகத்தின் எல்லை லெப்.கேணல் திலீபனுக்கு வீரவணக்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Link to comment
Share on other sites

 உடலுறுப்பு ஒவ்வொன்றும்

உள்நோக்கிக் குறுகிவர,

உடலுறுப்பின் குறுகல்வலி

உயிரின்மீது அழுத்தம்தர,

உடல்வலியும் உயிர்வலியும்

உணர்வு மீது வலியைத் தர,

தான் இறக்கும் நிலை தெரிந்தும்

அதை தான் விரும்பி ஏற்கும் தீரம்,

யார்க்கு வரும் இப்புவியில் ?

ஆகுதிக்கு தன்னை ஈயும்

ஆற்றல் அல்லோ உயர் தியாகம் !

தியாகம் என்ற சொல் உள்ளமட்டும்

திலீபன் அண்ணா பெயரும் வாழும்.

Link to comment
Share on other sites

ஜெயதிலக பண்டாரவின் திலீபனுக்கான பாடல்

 

 

வெலிகடை படுகொலை பற்றிய பாடல் தமிழில்

 

 பாடல் ஆசிரியர் கீழே உள்ள முகப்புத்தகத்தில்

https://www.facebook.com/baskey.raj?comment_id=Y29tbWVudDoxMDE1NzMxODczNTk2NjgyMl8xMDE1NzMxODc1ODE3MTgyMg%3D%3D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சிய நெருப்பு

The-ideal-fire-of-liberation-is-Thilipan-scaled.jpg

 

இலட்சிய நெருப்பு: லெப். கேணல் திலீபன்.

14.09.1987 தனது தியாக வேள்விக்கு புறப்படுமுன் தலைவனிடம் விடைபெற திலீபன் வந்திருந்தான். ஏற்கனவே நீண்ட வாதங்களின் பின்னர் தானே அந்த வேள்வியை நடத்தவேண்டும் என்ற விடாப்பிடியான தன் முடிவில் திலீபன் வெற்றிபெற்றிருந்தான். விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் என்ற முறையில் தானே அதை செய்து முடிக்கப்போவதாக கூறி அதற்கான அனுமதியையும் இறுதியில் அவன் பெற்றிருந்தான்.

“திலீபன் நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன்” எனத்தெம்பூட்டிய தலைவனிடம் விடைபெற்று வந்தான்.

1987 செப்ரம்பர் 15 தனது தியாகப் பயணத்திற்கு புறப்படுவதற்காக திலீபனின் தன் தோழர்கள், தோழியருடன் நல்லூரின் வீதியில் அமைந்த விசேட உண்ணாவிரத மேடைக்கு வந்து கொண்டிருந்தான். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மூதாட்டி ஒருத்தி நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வதிக்க லெப். கேணல் திலீபன் காலை நேரம் 9.55 மணிக்கு நீராகாரம் இன்றிய சாகுவரையான தன் உண்ணா நோன்பை ஆரம்பத்தான்.

அந்த நாட்கள் தமிழீழத்தின் எல்லாத் திசைகளும் சோகத்தில் மூழ்கிய நாட்கள்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மண்ணில் கால்வைத்திறங்கிய இந்தியப்படைகள், தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதற்கு பதிலாக பாராமுகமாக இருந்தது. ஆயுதங்களற்ற புலிகளின் பாதுகாப்பை மீறி சிங்களக் குடியேற்றங்கள் எல்லைப் புறங்களில் வேகமாக உருவாக்கப்பட்டன. இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் சாத்தியமற்றுப் போனது. சமூக விரோதக் குழுக்களின் அடாவடிகள் பெருகின. மொத்தத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய எழுச்சி போராட்டமும் விடுதலைத் தடமும் இலங்கை – இந்திய ஒப்பந்த சூழ்நிலையில் சீர் குலைக்கப்பட்டன. மக்களின் அடிப்படையுரிமைகள் பறிக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் அம்சங்களாக இருக்கின்ற

1) பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் சிறைகளில் அல்லது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்ககொள்ளப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

3) இடைக்கால அரசு அமைக்கப்படும்வரை புனர்வாழ்வு எனும் பெயரில் நடாதத்தப்படும்; சகல வேலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படல் உனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5) ஊர்காவல் படைகளின் ஆயுதங்கள் மீளப் பெறப்படல் வேண்டும். பாடசாலை கட்டடடங்களில் உள்ள இராணுவம் வாபஸ் பெறவேண்டும்.

என்ற ஜந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.

தேசம் தழுவிய ரீதியில் அகிம்சை போராட்டங்கள் பரவலடைந்தன. இரண்டாம் நாள் மறியல் போராட்டங்களும் மகளிர் அமைப்புக்களின் பாத யாத்திரிகைகளும் இடம்பெற்றன.

உண்ணாவிரத மேடையை சூழவிருந்த பல்லாயிரம் மக்கள் கண்ணீருடன் தேம்பியழ தன் மக்களின் முன் திலீபன் எழுந்து நிற்க வலுவற்று நா தளுதளுக்க “மக்கள் விடுதலை நிச்சயம்; அதை வானிலிருந்து பார்த்து மகிழ்வேன்.” என்ற வரலாற்றுச் சிறப்பான உரையை திலீபன் ஆற்றனான்.

அந்த உணர்வின் வரிகள்……

“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனோ தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும். என்று விரும்பினேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். அறுநூற்று ஜம்பது பேர் இன்றுவரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாக போகும் போது என்னிடம் ஒருவரி கூறினான். இறுதிவரை நான் அவனுடன் இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான்.

இறந்த அறுநூற்று ஜம்பது பேரும் அனேகமாக எனக்கத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தலைவரின் அனுமதியினைக் கேட்டேன். அப்போது தலைவர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன. “திலிபன் நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன்” என்று அவர் கூறினார்.

இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

அந்த மாபெரும் வீரனின் தமையில் ஒரு மக்கள் புரட்சி வெடிக்கட்டும் அது நிச்சயமாக தமிழீழத்தை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும்.

இதனை வானத்தில் இருந்து இறந்த அறுநூற்று ஜம்பது போராளிகளுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.

விடுதலைப்புலிக்ள தமது உயிரிலும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தைமார்களை நினைக்கின்றார்கள்.

உண்மையான உறுதியான இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது இறுதி விருப்பமும் இதுதான்”

மூன்றாம் நாள் திலிபனின் உடல்நிலை மேலும் மோசமடைகின்றது. மேடையில் தனது தோழர்களின் அணைப்பில் எழுந்திருந்தவாறு சிரம்பட்டு கதைத்துக் கொண்டிருந்தான். பகல் மணி இரண்டு, படுக்கையிலிருந்தவாறே தனது கைகளை மெல்ல அசைத்து மக்களிற்கு உற்றசாகமூட்டினான். அன்றே திலீபன் தனது இறுதி உரையை நிகழ்த்தினான்.

“என்னால பேச முடியவில்லை ஆயினும் என்மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது.

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்ப்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம் தான் என்னை இப்போதும் வாழவைத்துக்கொண்டுள்ளது.

நேற்றும் இன்றும் மறியல் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்ததென அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பூரண திருப்தி அடைகிறேன்.

நாம் நேசித்த தமிழ் ஈழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொர் மக்களும் இந்த பெரும் புரட்சிக்கு தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்கு சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் வெகு பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள்; என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அப்புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் மக்களுக்குக்கு கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டாலும் நாளை எங்களைப்போலதான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும். வருத்தப்படும்.

எனவே இறுதியாக நான் உயிராக நேசித்த என் தோழர்க்ள; என் இயக்கம்; என் சகோதரிகள்; நான் உயிருக்கு மேலாக நேசித்த மக்கள் அனைவருக்கும் நான் பேசியவை தொகுப்படவில்லை. என் மூளை அதை நன்றாக கிரகிக்கவில்லை. என்பது விளங்குகின்றது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் நன்றி.”

மாலை தமிழீழத் தேசியத் தலைவர் உண்ணாவிரத மேடைக்கு வந்து திலிபனை பார்த்திருந்தார். உணர்வுகள் மாத்திரமே அவர்களிடம் அதிகம் பேசிக்கொண்டன. சோர்வடைந்த நிலையில் படுத்திருந்தவாறே தலையை உணர்த்தி கைகளில் தாங்கியவாறு திலிபன் தன் தேசத்தலைவனுடன் உரையாடினான். அந்த உன்னத தியாகியின் தலையை கோதிய தலைவர் சோகம் தழும்ப திலினிடமிருந்து விடைபெற்றார்.

நான்காம் நாள் திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூன்றாம் நாளே தனது முகத்தை யாரும் நீர்கொண்டு கழுவ வேண்டாம். என திலீபனின் கேட்டிருந்தான். முகம் கழுவும் போது கூட தன் உதடுகள் ஈரலிப்பை உணர்ந்துவிடக்கூடாது என்பதில் அவன் மிகவும் உறுதியாக இருந்தான்.

திலீபன் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தேசமெங்கும் தீவிரமடைந்தன். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிழக்கு என உண்ணாவிரதப் போரட்டங்கள் பரவலடைந்தன. நாட்கள் ஒவ்வொன்றாய் நகர்ந்தன. ஜந்தாம் நாள் திலீபன் பேசும் கதியை இழந்தான். ஆறாம் நாள் தனது உடலை யாழ். பல்கழைக்கழக மருத்துவபீடத்திடம் ஒப்படைக்குமாறு திலீபன் தன் தோழரிடம் கேட்டுக்கொண்டான்.

உண்ணாவிரத்தின் ஒன்பதாவது நாள் இந்தியத் தூதுவர் டிக்சிற் யாழ். வந்து தேசியத் தலைவருடன் பேச்சுகளில் ஈடுபட்டார். ஆனால் உருப்படியான உறுதிமொழிகள் எதுவும் வழங்கப்படதா நிலையில் திலீபனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. வாய் மொழிமூலம் தன்னும் திலீபனின் கோரிக்கைள் நிறைவேற்றப்படும் என உண்ணாவிரத மேடையில் வந்து கூற இந்தியத்தூதுவர் மறுத்தார்.

பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மோசமாக பாதிப்டைந்தது. பூரண மயக்க நிலையை திலீபன் அடைந்தான். மக்கள் இரவுபகலாய் கண்ணீருடன் அவனை சூழ்ந்திருந்தனர். இந்திய அரசிடமிருந்து கோரிக்கைகளை நிறைவு செய்வதாக கூறி எந்தவொரு உறுதி மொழியும் வாராதுபோனது. இந்திய அரசின் கபடமுகம் திலீபனின் உயிர் அனுபவித்த வேதனைகளில் ஒவ்வொரு கணங்களிலும் மக்களின் முன்னர் கிழிக்கப்பட்டது. பன்னிண்டாம் நாள், கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் தேம்பியழ தேசத்தின் வீதிகள் எல்லாம் சோகத்தில் திணற, பகல் 10.48 மணிக்கு இந்திய அரசின் நயவஞ்சகத்தை தோலுரித்தவாறு திலீபனின் ஆவி பிரிந்தது.

“நான் திலீபனின் ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு; அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாக பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

நினைவுப்பகிர்வு: மாறன்.
நன்றி – வெள்ளிநாதம் இதழ் (19 – 25.09.2003).

 

https://thesakkatru.com/the-ideal-fire-of-liberation-is-thilipan/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.